07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Sunday, May 18, 2008

விடை கொடுத்தலும் ...... வரவேற்பும் !!

செல்வி ஷங்கர் ஒரு அவசர அழைப்பின் பெயரில் ஆசிரியராக ஆனவர். தன் கடமையைச் சரிவர செய்ய நேரமில்லையே-இயலவில்லையே என்ற வருத்தத்தின் இடையேயும் அழகாக சிலபதிவுகளைச் செம்மையாகக் கொடுத்திருக்கின்றார். அடுத்து ஒரு வாய்ப்பு கிடைத்தால் இன்னும் சிறப்பாகச் செய்யலாம் எனக் கூறுகிறார். நன்றியுடன் கூடிய நல்வாழ்த்துகள் செல்வி ஷங்கர்.
--------------------------
அடுத்து இந்த வாரம் 19 - ஆம் நாள் முதல் ஒரு வார காலத்திற்கு ஆசிரியராக அருமை நண்பர் சதங்கா வலைச்சரம் புதுமையாகப் படைக்க வருகிறார். ஆறு வலைப்பூக்களை ஆரம்பிக்க ஆசைப்பட்டு, மூன்று வலைப்பூக்களை ஆரம்பித்து அழகாக கையாள்கிறார். விரைவிலேயே மற்ற மூன்று பூக்களும் மலர நல்வாழ்த்துகள். ஓராண்டு காலமாக இணையத்தில் எழுதி வருகிறார். அமெரிக்க நாட்டில் வாழ்கிறார். கதை கவிதை என கலக்கும் இவர் சமையலிலும் வல்லவர். அருமையான செய்முறைகளை அள்ளித் தருகிறார். சமையல் மட்டுமா - சித்திரம் பேசுதடி - ஓவியக் கலையிலும் வல்லவர். ரிச்மண்ட் தமிழ்ச் சங்கம் என்ற குழுவிலும் எழுதி வருகிறார்.

வருக வருக சதங்கா - தருக தருக புதுமைப் படைப்புகளை

நன்றி - நல்வாழ்த்துகள்
cheena (சீனா)

3 comments:

  1. வாழ்த்துக்கள் செல்வி ஷங்கர்...

    வாழ்த்துக்கள் சதங்கா...!

    வாத்துக்கள் நண்பர் சீனா!!

    ReplyDelete
  2. வாழ்த்துக்களுக்கு நன்றி சாம் தாத்தா !

    ReplyDelete
  3. நண்பரே சாம் - நீண்ட நாட்களுக்குப் பிறகு சந்திக்கிறேந் வருகிறேன் வலைப்பூவினிற்கு -நன்றி

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது