07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Monday, May 26, 2008

ஒரு வெளம்பரம்தேன்!

விளம்பரத்தை விரும்பாதவர்கள் யாரேனும் உண்டோ? நாமே எத்தனை பேர் பின்னூட்டமே வேணாம்னு சொல்லி பதிவு போடறோம்?
நாம எழுதினத யாரேனும் படித்து சூப்பர்! பிச்சுடீங்க! அட ஒன்னுமில்லைனா ரீப்பீட்டேய்னு ஒரு பின்னூட்டம் வரலைனா நமக்கு சாதம் செமிக்கிறதா?

இதே மாதிரி தானே, ஒரு நுகர்வோர் பொருளை தயாரித்து விட்டு எந்த மாங்காயாவது தம் பொருளை வாங்க மாட்டானா?னு பன்னாட்டு நிறுவனங்கள் தவியா தவிச்சுட்டு இருக்கும்?

பெயிண்டை விக்க ஒரு முதலாளி தலைல கலர் பூச வேண்டி இருக்கு, ப்ரீபெய்டு கார்டு விக்க ஒரு குழந்தையின் அப்பா நடு ராத்திரியில் நட்சத்திரம் வெச்சு படம் வரைய வேண்டி இருக்கு.
அட, ஒரு குட்டி நாய் டைய தூக்கிண்டு பஸ் பின்னாடி ஓட வேண்டி இருக்கே.

இத்தகைய விளம்பரங்களை எடுக்க எவ்ளோ பிரயத்தனபடனும் தெரியுமா? எவ்ளோ பேர் இதுல ஈடுபடறாஙகனு தெரியுமா? மொக்கை படத்து (குருவினு வாசிக்கபடாது) ஹீரோ பெயர் எல்லாம் தெரிஞ்சு வெச்சுக்கற நாம ஏதேனும் ஒரு விளம்பரத்தை பாத்து அட! அவரு தான் இதை இயக்கினாரா?னு என்னிக்காவது சொல்லி இருக்கோமா?

ஏன்னா நம்மை பொறுத்தவரை விளம்பரங்கள் என்பது ஐபிஎல், கோலங்கள் இடையே வரும் ஒரு சத்ரு. நிறைய ரங்கமணிகளுக்கு இந்த விளம்பர இடைவேளையில் தான் சாப்பாடே போட படுகிறது.

இத்தகைய விளம்பரங்களை பத்தி அந்த துறையில் இருக்கும் நம் பிளாகேஸ்வரி அக்கா தெளிவா, புரியும்படி எழுதி இருக்காங்க இங்க.

இபாங்க்! உபாங்க்! சப்பாங்க்! இதுக்கு பின்னாடி இவ்ளோ கதை இருக்கா? அடுத்த தடவை நீங்க ஹார்லிக்ஸ் குடிக்கும் போது இந்த பதிவையும் நினைவில் வையுங்க.


அதுமட்டுமல்ல, ஒரு விளம்பர விளையாட்டு கூட நடத்திட்டு வராங்க. கொஞ்சம் நியாபகம் இருந்தா நீங்களும் இந்த விளையாட்டில் ஒரு கலக்கு கலக்கலாம். நிறைய பதிவுகள் ஆங்கிலத்திலும் இருக்கு, அதனால் என்ன நம் ஆர்வம் தான் முக்யம் இல்லையா?

விளம்பரங்கள் மக்கள் மனதை எப்படியெல்லாம் பாதிக்குது?னு லக்கி சொல்லி இருக்காரு பாருங்க.


டாக்குமெண்ட்ரி என்றாலே நம்ம ஆட்கள் தலை தெறிக்க ஓடுவாங்க. ஏன்னா அது ஒரு வரண்ட சப்ஜக்ட்டா தான் இருக்கும்னு நமக்கு ஒரு அசைக்க முடியாத நம்பிக்கை. ஆனா நம்ம k4கார்த்திக் தான் பார்த்த ஒரு டாக்குமெண்டரி பத்தி இங்க சொல்லி இருக்கார் பாருங்க.

கும்தலக்கடி கும்மாவா? பிபிசினா சும்மாவா?

கொஞ்சம் கற்பனை வளம், மக்கள் மனதை பல்ஸ் புடிச்சு பாக்கற திறன் இருந்தா இந்த துறைய ரொம்பவே எஞ்சாய் பண்ணாலாம். நாம வேலை செய்யறோம் என்ற உணர்வே ஏற்படாது.

இவ்ளோ பேசறீயே அம்பி? நீ என்னத்த கிழிக்கற?னு நீங்க கேக்கறது என் காதுல விழுது. என்ன செய்யறது,


"ஆசை இருக்கு தாசில் பண்ண!
அதிருஷ்டம் இருக்கு பதிவு எழுத!"

(நைசா சைடு கேப்பில் என் பதிவுகளை சுட்டி இருக்கேன், சீனா சார் கண்டுகாதீங்க, ஏன்னா இது விளம்பர பதிவு. ஹிஹி).

அடுத்த பதிவு நம்ம எல்லோருக்கும் பரிச்சயமான ஒன்னை பத்தியது தான். என்னனு யோசிச்சுட்டே இருங்க. சரியா?

27 comments:

  1. அம்பி, சூப்பர் - கலக்கல்

    விளம்பரந்தேன் - அருமைஇ - அழகான சுட்டிகள்

    பிளாகேஸ்வரியின் அருமையான விளம்பரம் பற்றிய பதிவுகள் -சூயிங்கம் - லைட் போல பளிச்சிடுமாம் - N for நூடுல்ஸ் - ஜூனியர் ஹார்லிக்ஸ் - அடடா அடடா - எத்தனை செய்திகள் - விமர்சனக்கட்டுரைகள் - அனுபவித்து எழுதி இருக்கிறார்கள்.

    இதுல குயிஸ் வேற - ம்ம்ம் - பிளாகேஸ்வரிக்கு வாழ்த்துகள் ( 83 வயதாமில்ல)

    லக்கியாரின் பதிவு அருமை அருமை - வோடபோன் நாய் சூப்பர் - லக்கியாரின் ஆதங்கம் உரியவர்களைப் போய்ச் சேர வேண்டும்.

    கார்த்திக் பிபிச் பற்றி பொரு உபயோகமான தகவல் சொல்லி இருக்கிறார்

    அம்பி கூட உருப்படியா ஒரு பதிவு போட்டிருக்கிறார். நாகை சிவாவின் பதிவும் சூப்பர் - தேசிய கீதத்தினைப் பற்றிய விளமபரம் எனக்கு மிகவும் பிடித்த விளம்பரம், ( நான் இப்ப் நின்னுகிட்டு தான் இதே எழுதுறேன்)

    நல்வாழ்த்துகள் அம்பி

    ReplyDelete
  2. விளம்பரத்துக்கு விளம்பரம் அளித்து விளம்பியது விளாம்பழம்போல் இனிக்கிறது!! விலாவலிக்க சிரிக்கவும் வைத்தன சில வரிகள்//
    ( நம்மை பொறுத்தவரை விளம்பரங்கள் என்பது ஐபிஎல், கோலங்கள் இடையே வரும் ஒரு சத்ரு. நிறைய ரங்கமணிகளுக்கு இந்த விளம்பர இடைவேளையில் தான் சாப்பாடே போட படுகிறது.)//

    பாராட்டுக்கள் அம்பி!
    அன்புடன்
    ஷைலஜா

    ReplyDelete
  3. என் வலைப்பதிவினை இணைத்ததற்கு நன்றி அம்பி.

    இன்னொரு விளம்பரப் பதிவு ஒன்றையும் சும்மா இங்கே விளம்பரப்படுத்திக் கொள்கிறேன் :-)

    http://madippakkam.blogspot.com/2007/03/3.html

    ReplyDelete
  4. Hutch adnala antha kambeni famous aacho ilayao..antha nai kutti padu famous..sila adlam semma creative...recent example..diamond jewelery ad..wife kaalula husband vizhara daily mattera (ambina..nan ungala solaleenganna) semma cutea solirupanga :D backgrndla anubavam pudumai songnu nenakren..

    ReplyDelete
  5. //பிளாகேஸ்வரிக்கு வாழ்த்துகள் ( 83 வயதாமில்ல)
    //

    :))))
    எஅன்க்கு சிரிப்பு சிரிப்பா வருது. சீனா சார், நீங்க இவ்ளோ அப்பாவியா? :p

    //அம்பி கூட உருப்படியா ஒரு பதிவு போட்டிருக்கிறார்.//

    இதானே வேணாம்ங்கிறது. :p

    //நான் இப்ப் நின்னுகிட்டு தான் இதே எழுதுறேன்)
    //
    நானும் இந்துக்கு பதிலை நின்னுட்டே தான் டைப் அடிக்கிறேன். :)

    உங்கள் பாராட்டுக்கு மிக்க நன்னி சீனா சார். :)

    ReplyDelete
  6. //விளம்பரத்துக்கு விளம்பரம் அளித்து விளம்பியது விளாம்பழம்போல் இனிக்கிறது!! விலாவலிக்க சிரிக்கவும் வைத்தன சில வரிகள்//
    //

    யப்பா! தமிழ் தலைய விரிச்சு போட்டு தாண்டவமாடுது போலிருக்கு! :p

    வில்லிலிருந்து புறப்பட்ட அம்பு போல நீங்க விலாவரியா விளம்பியதுக்கு ஒரு விழா எடுத்துடுவோமா அக்கா? :))

    ReplyDelete
  7. //நிறைய ரங்கமணிகளுக்கு இந்த விளம்பர இடைவேளையில் தான் சாப்பாடே போட படுகிறது//

    @shylaja, சிரிப்பு வருதா? உங்க வீட்டு கதையை தான் நான் இங்க எடுத்து விட்டேன். :))

    ReplyDelete
  8. //இன்னொரு விளம்பரப் பதிவு ஒன்றையும் சும்மா இங்கே விளம்பரப்படுத்திக் கொள்கிறேன் //

    @lucky, ஆஹா, ஆரம்பிச்சுட்டாங்கயா! :))

    ReplyDelete
  9. //diamond jewelery ad..wife kaalula husband vizhara daily mattera //

    @gils, இந்த குசும்பு தானே வேணாம்ங்கிறது.

    நல்லா பாத்து வெச்சுக்கோ! உனக்கும் அதே தான்! நான் நகையை சொன்னேன். நீ எதை நினைச்சே? :p

    ReplyDelete
  10. நன்றி அம்பி. என்னுடைய இன்னொரு தமிழ்ப்பதிவு இதோ

    http://blogeswari.blogspot.com/2008/05/9.html

    ReplyDelete
  11. ambi said...

    //

    @shylaja, சிரிப்பு வருதா? உங்க வீட்டு கதையை தான் நான் இங்க எடுத்து விட்டேன். //

    அம்பிக்கு கேசரி 'கட்':):):)

    ReplyDelete
  12. @blogeswari, இன்னிக்கு பதிவா போட்டீங்களோ? ரொம்ப நன்னி.

    ReplyDelete
  13. //அம்பிக்கு கேசரி 'கட்':):):)//

    ஷைலஜா அக்கா நல்லவங்க, வல்லவங்க, நாலும் தெரிஞ்சவங்க. :p

    ReplyDelete
  14. ambi said...
    //அம்பிக்கு கேசரி 'கட்':):):)//

    ஷைலஜா அக்கா நல்லவங்க, வல்லவங்க, நாலும் தெரிஞ்சவங்க//


    >>>:):) GOod Boy Ambi!ஆமா இந்த நாலு என்னது? அடிக்கடி நாலும் தெரிஞ்சவங்கங்கறாங்க அது என்னவா இருக்கும்? சீரியசாத்தாதான் கேக்கறேன் அம்பி:):)

    ReplyDelete
  15. //ஆமா இந்த நாலு என்னது? அடிக்கடி நாலும் தெரிஞ்சவங்கங்கறாங்க அது என்னவா இருக்கும்? //

    சரி தான்! கேஆரெஸ் தான் இதுக்கு விளக்கம் சொல்லனும். :p

    அச்சம், மடம், நாணம், பயிர்ப்பா இருக்குமோ? (பயிர்ப்புன்னா என்ன? நானும் சீரியசா தான் கேக்கறேன்) :))

    ReplyDelete
  16. கலக்கல் பதிவு தான் :)

    ReplyDelete
  17. //கலக்கல் பதிவு தான் //

    @thooya, நன்றி. நிஜமாவே பதிவை படிச்சீங்களா? :p

    ReplyDelete
  18. சூப்பர்! பிச்சுடீங்க!!!!

    ReplyDelete
  19. //சூப்பர்! பிச்சுடீங்க!!!!

    //

    @c-payan, எதை தலைவா?
    :p

    ரிப்பீட்டேய்க்கு இது இவ்வளவோ பரவாயில்லை. :))

    ReplyDelete
  20. வட்டமா இருபது. பி.க 20 :))

    ReplyDelete
  21. பிளாகேஸ்வரி இப்பதான் பாக்கறேன் அறிமுகத்திற்கு நன்றி ...

    ReplyDelete
  22. மற்றயவர்களைப்பற்றி நான் சொல்லத்தேவையில்லை...

    நல்ல விளம்பரம்தான்...
    (இது உங்களுக்கு...:)

    ReplyDelete
  23. //விளம்பரத்தை விரும்பாதவர்கள் யாரேனும் உண்டோ?//

    கீதாம்மா! :-)

    //நாமே எத்தனை பேர் பின்னூட்டமே வேணாம்னு சொல்லி பதிவு போடறோம்?//

    கீதாம்மா :-)

    சரி தானே அம்பி? :-)

    ReplyDelete
  24. மிக்க நன்னி தமிழன். உண்மை தமிழன் தெரியும்..
    நீங்க இப்ப தான் கடை தொறந்து இருக்கீகளா?

    ReplyDelete
  25. //சரி தானே அம்பி? //

    @KRS, நாரதர் வேலை அதுவும் எங்கிட்டேயேவா? :p

    ReplyDelete
  26. ப்ளாகேஸ்வரி பதிவு தெரிந்த ஒன்றாக இருந்தாலும் அருமை மிக அருமை.

    கார்த்திக் சுட்டி பாக்கணும்.

    ReplyDelete
  27. ungalai minja aal undoo ambi..ungal thiramaigalukku vilambaramae thevai illai...

    attagaasamana post...ethai ezudhinaalum eppadi ippadi round katti kalakki adikareenga..

    ambikku oru O podu :) -- siriya vilambaram dhaan

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது