07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Monday, May 5, 2008

வலைச்சரத்தில் நான்

ஆலிஸ் கால் இடறி விழும் அற்புத உலகைப்போல, விபத்துகள் மற்றும் தவறுதல்கள் சிலநேரம் நம்மை ஆச்சர்யமான உலகிற்குள் இட்டுச் சென்றுவிடக்கூடும். அப்படி தட்டச்சில் விரல் இடறி ஒரு விபத்தாக நான் வந்தடைந்த உலகம்தான் வலைப்பதிவுகள் அல்லது வலைப்பூக்கள் எனப்படும் பதிவுலகம். 1994-ல் விண்டோஸ் 3.0 காலத்திலிருந்தே தமிழில் டைமண்ட் மற்றும் ஜெம்ஸ் எனகிற TTF எழுத்துருக்களால் தட்டச்சு செய்து கொண்டிருந்தாலும், “வித்யா“ எனக்கு பரிச்சயமானது 2000-த்தில் பிரான்ஸில் இருந்து வெளிவந்த ”எக்ஸில்” நண்பர்களான ஞானம் மற்றும் விஜி ஆகியோர்களால். அந்த இதழில்தான் எனது உடலரசியல் என்கிற கட்டுரைத் தொடராக வெளிவந்ததது. அதன்பின் வந்த ”உயிர்நிழல்” இதழில் எழுதும்படியும் நண்பர்களான அசோக், லஷ்மி மற்றும் புஷ்பராஜன் போன்றவர்கள் கேட்டபோது அறிமுகமானதுதான் பாமிணி. எ-கலப்பையில் பாமிணி இல்லாததால் எனக்கு அதனை பயன்படுத்த வாய்க்கவில்லை. தவிரவும், அகலப்பட்டை இணைப்பை எனது நிறுவனம் 2007-ல்தான் துவக்கியது. 2007-ல் ஒருநாள் கூகுலில் அலைந்துக் கொண்டிருந்தபோதுதான் எ-கலப்பையை பாமிணியுடன் கண்டடைந்தேன். அதி்ல் எதையோ சோதனையாக தட்ட ஒரு விபத்தாக வந்து விழுந்த தமிழ சொற்களால் பதிவுலகம் அறிமுகமானது.


அறிமுகமான அன்றே பல பதிவுகளை இணைப்பு சுட்டிகள் வழியாக அலைந்து தமிழ்மணத்தை வந்தடைந்தபோது அலுவலக முடிவு நேரம் நெருங்கிவிட்டது. அன்றே வீட்டிற்குப் போகாமல் பிளாக்கரை நொண்டி ஒரு பிளாக் ”ஜமாலன் பக்கம்” என்று எனது பெயரில் சோதனையாக போட்டு ஒரு
அறிமுகம் எழுதி அதைப்பார்த்தபோது. உடனடியாக ஒரு பொதுப் பெயரிடலாம் என்று எண்ணி எனது நூலின் தலைப்பே “மொழியும் நிலமும்“ என்று வைத்துவிட்டேன். நான் என்னை ஒரு கலை இலக்கியம் மற்றும் அரசியல் சார்ந்த எழத்தாளனாகக் கருதிக் கொள்வதால் இலக்கியம், அரசியல், தத்தவம், கோட்பாடு போன்றவற்றிற்கு அழுத்தம் தரும் பதிவாக எழுதுவதும் தொகுப்பதுமாக போய்கொண்டிருக்கிறது. அதற்காக உடலரசியல் பற்றிப் பேச எனத் தனிப்பதிவும் நாங்கள் நடத்திய காலக்குறி என்கிற பத்திரிக்கையை மீள் பிரசுரம் செய்யவென ஒரு பதிவும், ஆக எண்ணிக்கை என்னவோ 3 என்றாலும் எழதியது என்னவோ 100 கூட தேறாது இந்த 10-மாதங்களில்.


சிவாஜி படத்திற்கு அடிக்கப்பட்ட கும்மி தாங்க முடியாமல் எனது குறிப்புடன் திருவாளர் தினாவின்
ரஜனி பிம்பமும் உண்மையும் கட்டுரை மறுபிரசுரம், நண்பர் ராமானுஜத்தின் நகிஸா ஒஷிமாவின் இரண்டு திரைப்படங்கள் பற்றிய கட்டுரையும் மறுபிரசுரம் இப்படியாக துவங்கியது சோதனைப் பதிவுகள். முதலில் எழுதிய பதிவு புதிய குடியரசுத்தலைவர் பற்றியது. கீற்றில் வந்த அம்பேத்கரின் கட்டுரை ஒன்றை முன்வைத்து சமத்துவமின்மை பற்றிய ஒரு பதிவு எழுதினேன். இப்பதிவு எனக்கே சில முக்கிய அரசியல் நிலைகளைப் புரிந்துகொள்ள உதவியது. எனது பதிவுகளில் எனக்கு பிடித்ததாக எழுதியதில் பிடித்தது என்கிற வலைப்பதிவு விளையாட்டில் ஜனவரி 2008-வரையில் எழுதப்பட்டவற்றில் உள்ளவற்றைத் தொகுத்துள்ளேன்.



அம்பேத்கர், மாவோ மற்றும் பெரியார் போன்ற முக்கிய சிந்தனைபோக்குகள் துவங்கி பின்நவீனத்துவம், வளைகுடா பொருளியல் நிலமை, மருத்துவத்துறை, பெண் என்கிற பாலின கட்டமைப்பு, பெண் பாலியல், திருமணம் குறித்து சில கோட்பாடுகள், புதுமைபித்தனின் காஞ்சனை மற்றும் ஆற்றங்கரைப் பிள்ளளையார், தமிழின் திணைக்கோட்பாடு, கோபி கிருஷணனின் கதையுலகம், ஆபிதினின் நையாண்டி என பதிவுகள் பல புள்ளிகளில் தொடர்பற்றதாக எழுதப்பட்டிருப்பதை காணமுடிகிறது. பந்து மற்றும் ஈழம் குறித்த பதிவுகள் உடனடித்தன்மைகொண்டு ஒரு எதிர்விளைவாக எழுதப்பட்டவை. இவை தவிர்த்து திரைப்படங்கள் குறித்து ஹே ராம், கற்றது தமிழ், கல்லூரி மற்றும் அந்நியன் குறித்த பதிவுகளில் ஒரு சில மாற்றுப் பார்வைகளை பகிர்ந்துகொள்ள முடிந்தது்.
பதிவுகளில் எழுதியவற்றில் எனக்கு பிடித்தது "பெண் ஆண்களுக்கு கலவரம் ஊட்டக்கூடியவளாக இருக்கிறாள்" - ஒரு சொல்லாடல் ஆய்வு." என்கிற இப்பதிவே. எனது பதிவுகளில் எழுதப்பட்டவை எல்லாம் எனக்கு பிடித்தே எழுதப்படுகிறது என்றாலும் இதனை தனித்துக் குறிப்பிடக்காரணம் இதில் பெண்ணியம் மார்க்சியம் ஆகிய இரண்டு துறைகளின் சொல்லாடலை ஒருங்கிணைக்கும் அதே வேளையில் பெண் குறித்த இந்திய தத்துவ கருத்தாக்கம் துவங்கி தேசிய விடுதலை வழியாக இவ்வாய்வு நீண்டு செல்வதும் ஒரு காரணம்.



பெண்ணியபாலியல் பற்றிய
ஒரு உரையாடலும், பாலினமாதலின் அரசியல் என்கிற ஈரானிய படங்களை முன்வைத்து எழுதப்பட்ட உரையாடலும், பதிவுலகப் பின்னோட்டங்கள் பற்றிய ஒரு உரையாடலும் சில புரிதல்களைத் தரக்கூடியவை. என்னை கைப்பிடித்து அழைத்து வந்தவர்களை குறித்த ஒரு அனுபவப்பதிவு என எழுதியவற்றை இங்கு தந்துள்ளேன். ஆனந்தவிகடன் எனது பதிவை அறிமுகப்படுத்திய பக்கம் இது. இதைதவிர மறுபிரசுரம் செய்யப்பட்ட பதிவுகள் சில உண்டு. அவை சூழல் முக்கியத்துவம் குறித்து மறுபதிவு செய்யப்பட்டவை.



உடலரசியல் குறித்த பதிவுகளில் திருமணம் எனும் உடல் ஒடுக்க எந்திரம் என்கிற பதிவு திருமணமுறை பற்றிய ஒரு உரையாடல். பெண் என்கிற கட்டமைவு குறித்தும் பாலியல் அரசியல் பற்றியும் பேசிய பதிவுகள் சில புதிய கருதுகோள்களைக் கொண்டவை. நீலப்படங்கள் குறித்த 8 பகுதிகளைக் கொண்ட தொடர் ஒன்றும் இப்பதிவில் எழுதப்பட்டுள்ளது. 20-க்கு20 கிரிக்கெட் கண்காட்சியை ஒட்டி நடந்த "சியர்ஸ் லீடர்" ஆட்டத்தின் விவாதம் இங்கு தொகுக்கப்பட்டுள்ளது.


யோசித்துப் பார்க்கும்போது 10-மாதக்காலங்களில் வலைப் பதிவுலகம் எனக்கு நிறைய தொடர்புகளை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது. நண்பர்களை புதிதாக கண்டடைந்தது பழைய நண்பர்களான நாகார்ஜீனன், பிரேம் போன்றவர்களை மீண்டும் தொடர வாய்ப்பு தந்தது என்ற வகையில் இது பெரும் திருப்புமுனையாக மட்டுமின்றி திறப்பமுனையாகவும் அமைந்துள்ளது.
திடிரென என்னை திரும்பி பார்க்கவும், வருட இறுதி இருப்புச் சோதனைக்கும் ஆட்படுத்தும் வண்ணம் எனது பதிவை மீள வாசிக்கவும் நான் சந்தித்த, ஆச்சர்யப்பட்ட, அவசியமானதாக எண்ணக்கூடிய வலைப்பதிவுகளை அறிமுகப்படுத்தவும் வாய்ப்பு நல்கிய நண்பர் கயல்விழி முத்துலெட்சமி அவர்களுக்கம் நண்பர் சீனாவிற்கும் நன்றிகள்.


நல்ல பதிவு, கெட்ட பதிவு என்பதில் எனக்கு நம்பிக்கை இல்லை. பிடித்தது, பிடிக்காதது என்பது வேண்டுமானால் உண்டு. இந்த ஒருவாரம் நான் அறிமுகப்படுத்தப்போவது பதிவுகளை மட்டும் அல்ல, அவற்றை தேர்ந்து தொகுத்து தந்த எனது விறுப்ப வெறுப்பை உள்ளடக்கிய அரசியலையே.
நன்றி.
அன்புடன்
ஜமாலன்.

12 comments:

  1. நல்வரவு ஜமாலன் ஐயா,

    பெரியவங்க நீங்க சின்ன பசங்க இங்க கும்மியடிக்கலாமா!?!?

    அதாவது ஒன்றுக்கு மேற்பட்ட கமெண்ட் போட்டு ஊக்க 'படுத்தலாமா'???

    ReplyDelete
  2. நன்றி சிவா.

    பெரியவங்க என்றால் எப்படி வயசிலா?

    கும்மி அடிப்பதில் எனக்க பிரச்சனையில்லை. தொியாது என்பதுதான் பிரச்சனை.

    ReplyDelete
  3. நல்ல அறிமுகக் கட்டுரை. இதில் சுட்டியுள்ள கிட்டத்தட்ட எல்லா கட்டுரைகளையும் ஏற்கனவே வாசித்தது தான் என்றாலும் நேரம் கிடைக்கையில் இன்னொரு முறை படிக்கணும்.

    ReplyDelete
  4. சுட்டிகளைப் படிக்கவே ஒரு வாரம் ஆகிவிடும் போலிருக்கே.. :P

    வேண்டுமென்றால், முத்தக்காவிடம் சொல்லி, இரண்டு வாரம் ஆக்கி விட்டுறலாமா.. :))))

    சூடா போட்டுத் தாக்குங்க..

    ReplyDelete
  5. நன்றி சுந்தர்.

    டிபிசிடி அண்ணா? இந்தவாரமே ஒத்துக்கொண்டதால் ஏற்றுக்கொள்ளப்பட்ட பல வேலைகளுக்கு மத்தியில்தான் இப்பொறுப்பை ஏற்றுக் கொண்டேன். காரணம்.. எதிர்பாராத இரண்டு பணிகள் உடனடியாக முடிக்க வேண்டியநிலை. அதனால் ஓரளவாவது இதனை சிறப்புடன் முடித்து வெளியேறினால் போதும். போட்டுக் கொடுக்காதீங்க..

    ReplyDelete
  6. நண்பர் ஜமாலன்,

    அறிமுகப் பதிவினில் அழகான 30க்கும் மேற்பட்ட பதிவுகளைத் தொகுத்து வழங்கி இருக்கிறீர்கள். நன்றி. அனைத்தையும் படித்திட ஆசை தான். முயற்சி செய்வோம். பலனடைவோம்.

    ReplyDelete
  7. வணக்கம் ஜமாலன்,

    நீங்கதானா இந்த வார வலைச்சர ஆசிரியர்? இந்த வாரம் முழுக்க படிப்பு வாரமா இருக்கப் போகுதுன்னு எனக்குப் பட்சி சொல்லுது :-)..

    நிறைய கொடுங்க!

    ReplyDelete
  8. வாழ்த்துகள் ஜமாலன்...

    எப்போதும் நீங்கள் மட்டுமே தனியாக பயணம் செய்வதில்லை. உங்களுடன் பயணப்பட விரும்பும் அல்லது உங்களை போலவே பயணம் செய்பவர்களையும் உடன் அழைத்து செல்வதுதான் உங்கள் சிறப்பு.

    அந்த வகையில் வலைச்சரம் வழியே நீங்கள் அறிமுகப்படுத்தப் போகும் சக பயணிகளை அறிந்து கொள்ள அவ்வப்போது இளைப்பாறினாலும் பயணத்தின் மீது தீராத மோகம் கொண்ட நான் ஆவலாக இருக்கிறேன்.

    தோழமையுடன்
    பைத்தியக்காரன்

    ReplyDelete
  9. நண்பர்கள் சீனா, தெக்கிக்காட்டான் மற்றும் பைத்தியக்காரனுக்கு நன்றி.

    //அந்த வகையில் வலைச்சரம் வழியே நீங்கள் அறிமுகப்படுத்தப் போகும் சக பயணிகளை அறிந்து கொள்ள அவ்வப்போது இளைப்பாறினாலும் பயணத்தின் மீது தீராத மோகம் கொண்ட நான் ஆவலாக இருக்கிறேன்.//

    உங்கள் எதிர்பார்ப்பை நிறைவேற்ற முயல்கிறேன்.

    ReplyDelete
  10. ஜமா,

    வலைச்சரத்தில் உங்கள் சரம் தனித்துவம் தான்.

    ReplyDelete
  11. //ஜமாலன் said...
    நன்றி சுந்தர்.

    டிபிசிடி அண்ணா? இந்தவாரமே ஒத்துக்கொண்டதால் ஏற்றுக்கொள்ளப்பட்ட பல வேலைகளுக்கு மத்தியில்தான் இப்பொறுப்பை ஏற்றுக் கொண்டேன். காரணம்.. எதிர்பாராத இரண்டு பணிகள் உடனடியாக முடிக்க வேண்டியநிலை. அதனால் ஓரளவாவது இதனை சிறப்புடன் முடித்து வெளியேறினால் போதும். போட்டுக் கொடுக்காதீங்க..

    May 5, 2008 12:58:00 PM IST
    //

    ஜமா,
    டிபிசிடி அண்ணா இல்லை, வேண்டுமானால் 'பெரிய' தம்பி என்று சொல்லலாம்.

    ReplyDelete
  12. நன்றி கோவியண்ணா?

    பெரியதம்பி டிபிசிடிதான் சரி. இருந்தாலும் அந்த அண்ணா “சரிங்கலாண்ணா” என்கிற விஜய் ஸ்டைல் உச்சரிப்பு.

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது