07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Saturday, June 7, 2008

இப்படிக்கு இந்த வார ஆசிரியர்

“வாங்க அண்ணாச்சி” என்று வந்த அண்ணாச்சியை வரவேற்ற ஐயர்! பாய் பார்த்து ஒரு சைகை செய்தார் பாய் ஆரம்பிப்பதற்க்குள் அண்ணாச்சி “என்ன நாயரே! இன்னிக்கு எப்படி கட தொறந்தீங்க! ஓ! நீர் ஆளுங்கட்சிக்கு சப்போர்ட்டா?” என்று நாயரை பதில் சொல்ல விடாமல் பாய் அருகில் போய் இடம்பிடித்தார், அண்ணாச்சி தோள் மீது கைபோட்டபடி பாய் ஆரம்பித்தார் “ஒரு வாரம் போனதே தெரியலையாம்பா! அதுக்குள்ள “இப்படிக்கு இந்த வார ஆசிரியர்” ஆகிறார்பா நம்ம பதிவர்!” “ஆமாம் பாய் என்னமோ 'சஸ்பென்ஸ்' ன்னு சொன்னீங்க அதென்னது” என தன் ஞாபக சக்தியை காட்டினார் அண்ணா. “அத கொஞ்ச நேரத்துல சொல்றேன்பா” என சூடு கிளப்பினார் தன் டீக்ளாசை ஆற்றியவர், பின்னர் தொடர்ந்தார். “இன்னிக்கி தன்னை உருவாக்கிய தாயுள்ளம் கொண்ட அனைவருக்கும் வணக்கம் சொல்ல போறார்பா!” “அதென்னவே, ஏதோ ஆரம்பிக்கறப்போ வணக்கம் சொல்லுவா! முடிக்கும் போது நன்றி தானேவே சொல்லுவா இவரென்ன வழக்கத்த மாத்துறார்!.” என்று ஐயர் தன் பங்கிற்க்கு சூடாக்கினார். “அதொன்னும் இல்லபா கொஞ்ச நாள் பதிவுபக்கமே வராம இருந்தவர், இப்போ இந்த தொடர்ல எழுதினதுக்கப்பறம் தன்னால இப்படியும் எழுத முடியுதேன்னு நினைச்சாராம்” என்று நிறுத்த, “சரிய்யா ஒத்துக்குறேன் சரத்துக்கு வர்ரீங்களா?” என்று அண்ணா ஆவலாய் கேட்டார்.

முதல் வணக்கம்) “அதாவது வலைக்கு வர்ரதுக்கு முன்னாடி தமிழ் எழுதக்கற்றுத்தந்தது இவரோட இரண்டாம் வகுப்பு ஆசிரியராம் அதுவரைக்கும் தமிழ்ன்னு கூட சரியா எழுதமாட்டாராம்! அப்பறம் மூன்றாவது படிக்கும் போது ஆசிரியர் பவாணிங்கரவங்க நல்ல சுழி வச்சு எழுத சொல்லித் தந்தாங்களாம், அப்பறம் ஆறாம் வகுப்புல வகுப்பாசிரியர் பூங்கோதை மூக்கு உள்ள எழுத்துக்களை தனிவிதத்துல வரும்னு சொல்லி தந்தாங்களாம், கடைசியா பத்தாம் வகுப்பு படிக்கும் போது தனியியல் ஆசிரியர் சுரேஷ் கொஞ்சம் நெளிவு சுளிவுகளை சொல்லித்தந்தாராம், பல தமிழ் செய்திகளை சூத்திரப்படுத்தி அதை எப்படி ஞாபக வைத்துக்கொள்வதுன்னு சொல்லி தருவாராம், இவங்க யாரும் தமிழை தனி பாடமா எடுத்து படிக்காதவங்க. அதே போல பல செய்திகளை கதைகளாக சொல்லி தரும் எட்டாம் வகுப்பு ஆசிரியர் பாக்கியம், அதோட கணக்கையும், ஆங்கிலத்தையும், படிக்கும் நெளிவுகளையும் கற்றுத்தந்த ஒன்பதாம் வகுப்பாசிரியர் இராதா கிருஷ்ணன் அவர்கள்ன்னு இவரோட மொழி வகுப்பு ஆசிரியர் எல்லாருக்கும் மொதல்ல ஒரு வணக்கம்ன்னு சொல்லுவார், கரெக்டா பாய்” என்று சாமி கேட்க! பாய் அமோதித்தார்.

(இரண்டாவது வணக்கம்) “எங்கோ இருந்த இவரை எதையோ படித்து கொண்டிருந்தவனை இங்கே பார் என்று திசை திருப்பிய அந்த ஆன்மீக வின்மீனுக்கும், எப்படி எழுதினா என்ன அதையெல்லாம் நாங்க வந்து படிக்கிறோம்ன்னு சொன்ன, ஞானவெட்டியான், தி.ரா.ச. , என்னார், அப்பறம் தன்னை இப்படி எழுதுங்கன்னு சொன்ன ஜீ.ரா., எப்போதும் ஆசியோட தர்ர வலைபதிவர்களின் டீச்சர் மற்றும் வலையுலகில் நல்லமுதை மட்டுமே பதிக்கும் (மதுரையம்பதி) , தன் சமூகத்தை வேறுஒரு விதகோணத்தில் காணவைக்கும் ’மழை’ பிரதீபுக்கும், எல்லா நகைச்சுவையையும் ஒரு ஆன்மீகத்தோடு இணைக்கும் கே.ஆர்.எஸ். , பல அரிய செய்திகளை சொல்லும் ‘என் எண்ணங்கள்’ கீதா சாம்பசிவம் அவர்களுக்கும் , அரசியலையும் மற்ற அனைத்தையும் விமர்சிக்கும் கால்காரி சிவா அண்ணாவுக்கும், ‘வஜ்ரா ’ சங்கருக்கும், என்னாலும் இவ்ளோ பதிவுகள வித்யாசமாய் எழுத முடியும்ன்னு வலைசர குழுவினர், பொறுப்பாசிரியர் சீனா, லிஸ்ட்ல புதுஸ்ஸா சேர்ந்திருக்கும் கைலாஷி, என அனவருக்கும் நன்றியுடன் வணக்கம்ன்னு சொல்லுர்பா” என பாய் முடிக்க! “ஆசையா ஆரம்பித்த வலைபூக்கள் எல்லாம் அப்படியே நிக்குதுன்னு நெனைக்குறாரா என்ன?” ன்னு அண்ணா அரட்டையின் போக்கை சற்று திசை மாற்ற, அதற்க்குள் பொறுமை தாங்காத அண்ணாச்சி “பாய்! மொதல்ல சஸ்பென்ஸ் தாங்கலை சிக்கிரம் சொல்லுங்க” என மற்றவர்களை தன்பக்கம் சேர்த்துக் கொண்டார்.

“அதாவதுபா ரெண்டு வருசத்துக்கு முன்னாடி மூத்த பதிவரோட 32வது திருமணநாள் வந்தது! அப்போ இவர் வாழ்த்தை சொன்னதோட ரெண்டு நாளைக்கப்புறம் தன்னோட அம்மாவின் பிறந்தநாள்ன்னு சொன்னார்பா! இப்போ முந்தாநேத்து அந்த மூத்த பதிவரு கல்யாண நாள் பதிவு பதிச்சிருக்காராம், அப்போ நீங்களே தெரிஞ்சிக்கோங்கபா!”. “அதாவது இவரோட அம்மாவுக்கு இன்னிக்கி பொறந்த நாள் அதானே பாய்” என்று அண்ணாச்சி விஷயத்தை உடைக்க, பாய் ஆமோதித்தபடி “அதுவும் அவங்க அம்மா இன்னியோட தமிழ் வருஷத்துல வர்ர எல்லா வருஷத்துலையும் பொறந்த நாள் கொண்டாடிட்டாங்களாம்” என்று விஷயத்தை முடித்தார் “அட அப்போ இது மணிவிழா” என அண்ணா சொல்ல! பாய் தொடர்ந்தார் “இவர் ஆரம்பிச்ச எல்லா பதிவுகளும் கொஞ்சம் நாளைக்கு இப்படியே இருக்கட்டும், வீட்ல ஒரு மடிகணினியும் இணைய இணைப்பும் வாங்கிட்டா எல்லாத்தையும் முடிச்"சுடலாம்"ன்னு நினைக்கிறாராம்”.

“இன்றைய சரத்தை உலகத்தில் தன் சேய்யை சான்றோன் எனக்கேட்க துடிக்கும் அனைத்து தாயுள்ளம் கொண்டவர்களுக்கும் சமர்பணம்ன்னு சொல்லுவார்பா!”. என்றபடி எழ முயர்ச்சித்த பாய்யை அண்ணாச்சி பற்றி இழுத்து நிறுத்தினார், “என்ன பாய் அப்பறம் என்ன சங்கதி” என்று கேட்க, “அதான் முடிட்ச்சிட்டாரேபா, அடுத்த வாரம் இவரோட நட்சதிரக்காரர் தொடருவார்பா” என்று பாய் நிறுத்த ஐயர் தொடர்ந்தார், “முடிஞ்சிருச்சேன்னு கவலைப்படாதேள் நல்ல படியா ஆச்சுதே சந்தோஷபடுங்கோ” என ஐயர் முடித்தார். பெஞ்ச் அமைதியானது.

13 comments:

  1. மணிவிழா கொண்டாடும் அன்னைக்கு
    எங்கள் அன்பான வாழ்த்து(க்)களை 'மகனிடம்' கொடுத்து அனுப்புகின்றோம்.

    அருமை மகனைப் பெற்ற அம்மா வாழ்க பல்லாண்டு.

    ReplyDelete
  2. அம்மா,

    சொல்லிட்டேன். சும்மாவா நியூசில இருந்து வந்த வாழ்த்தாச்சே (அதுவரை சொல்ல என்னாலேயே சொல்ல முடியவில்லை).

    ReplyDelete
  3. அன்னைக்கு ஆயிரம் நமஸ்காரங்கள் பிறந்த நாளன்று.

    அன்பு மகனுக்கு வாழ்த்துக்கள், அருமையான பதிவுகளை வாரம் முழுவதும் படைத்ததற்கு.

    அந்த அங்கயற்கண்ணியும், ஆலவாயண்ணலும் எல்லா நலங்களும் வழங்க வேண்டுகிறேன்.

    ReplyDelete
  4. வாழ்த்துகள் வணக்கங்களுடன் & வாழ்த்துகள் சிவமுருகன்.

    மொ:ட்டானு ஆசிர்வாத் மைலியஸ் மெனி சங்குவோ.

    ReplyDelete
  5. சிவா,

    நேற்று நான் வலைப்பக்கம் வந்தபோது இந்த பதிவினை காணவில்லை...

    அம்மாவுக்கு எனது நமஸ்காரங்களைக் கூறி ஆசிர்வதிக்க வேண்டினேன் என்று சொல்லுங்கள்....

    ReplyDelete
  6. மணி விழாக்காணும் அன்னைக்கு மகிழ்வான வாழ்த்துகள் !

    அய்ங்கரனை வணங்கி அன்புடனே வாழ்த்துகிறோம் !

    நலமே வளர்க !!

    சீனா மற்றும் செல்வி ஷங்கர்

    ReplyDelete
  7. சிவகுமரன்,

    அருமையான முடிவுரை. அன்னையின் மணிவிழா நாளில் ஒரு சிறந்த செயலைச் செம்மையாகச் செய்து மனநிறைவுடன் விடை பெறும் உங்களூக்கு நல்வாழ்த்துகள்.

    நன்றி சொல்ல நல்ல உள்ளம் வேண்டும். ஆரம்பப் பள்ளி ஆசிரியை முதல் அனைத்து ஆசிரியர்களுக்கும் நன்றி கூறியது நல்ல செயல்.


    26 வலைப்பூக்கள் வைத்திருக்கும் நண்பர் குமரன், ஞானவெட்டியான், திராச என்னார் மற்றும் பலப்பல பதிவர்களுக்கும் ஆதரவுக்கு நன்றி கூறியது ( நினைவில் நிறுத்தி) பாராட்டுக்குரிய செயல்.

    விரைவினிலேயே இணைய இணய இணைப்புடன் கூடிய மடிக்கணினி வீட்டிலேயே வாங்க வாழ்த்துகள்

    ReplyDelete
  8. //அன்னைக்கு ஆயிரம் நமஸ்காரங்கள் பிறந்த நாளன்று.//

    தெரிவித்துவிட்டேன் கைலாஷ்!

    //அன்பு மகனுக்கு வாழ்த்துக்கள், அருமையான பதிவுகளை வாரம் முழுவதும் படைத்ததற்கு.
    அந்த அங்கயற்கண்ணியும், ஆலவாயண்ணலும் எல்லா நலங்களும் வழங்க வேண்டுகிறேன்.//

    மிக்க நன்றி

    ReplyDelete
  9. //வாழ்த்துகள் வணக்கங்களுடன் & வாழ்த்துகள் சிவமுருகன். //

    //மொ:ட்டானு ஆசிர்வாத் மைலியஸ் மெனி சங்குவோ.//

    களடுஸ்!

    (பெரியவர்கள் ஆசியை கேட்டதாக சொல்லுங்கள் - தெரிவிக்கிறேன்).

    ReplyDelete
  10. //சிவா,

    நேற்று நான் வலைப்பக்கம் வந்தபோது இந்த பதிவினை காணவில்லை...

    அம்மாவுக்கு எனது நமஸ்காரங்களைக் கூறி ஆசிர்வதிக்க வேண்டினேன் என்று சொல்லுங்கள்....

    //

    தெரிவிக்கிறேன்!

    ReplyDelete
  11. //மணி விழாக்காணும் அன்னைக்கு மகிழ்வான வாழ்த்துகள் !

    அய்ங்கரனை வணங்கி அன்புடனே வாழ்த்துகிறோம் !

    நலமே வளர்க !!

    சீனா மற்றும் செல்வி ஷங்கர்//

    மிக்க நன்றி. வாழ்த்துக்களை தெரிவிக்கிறேன்

    ReplyDelete
  12. //மணி விழாக்காணும் அன்னைக்கு மகிழ்வான வாழ்த்துகள் !

    அய்ங்கரனை வணங்கி அன்புடனே வாழ்த்துகிறோம் !

    நலமே வளர்க !!

    சீனா மற்றும் செல்வி ஷங்கர்//

    மிக்க நன்றி. வாழ்த்துக்களை தெரிவிக்கிறேன்

    ReplyDelete
  13. //சிவகுமரன்,

    அருமையான முடிவுரை. அன்னையின் மணிவிழா நாளில் ஒரு சிறந்த செயலைச் செம்மையாகச் செய்து மனநிறைவுடன் விடை பெறும் உங்களூக்கு நல்வாழ்த்துகள். //

    வாய்பளித்த உங்களுக்கும், வலைச் சரகுழுவினருக்கும் நன்றி.

    //நன்றி சொல்ல நல்ல உள்ளம் வேண்டும். ஆரம்பப் பள்ளி ஆசிரியை முதல் அனைத்து ஆசிரியர்களுக்கும் நன்றி கூறியது நல்ல செயல்.//

    நன்றி.

    //26 வலைப்பூக்கள் வைத்திருக்கும் நண்பர் குமரன், ஞானவெட்டியான், திராச, என்னார் மற்றும் பலப்பல பதிவர்களுக்கும் ஆதரவுக்கு நன்றி கூறியது ( நினைவில் நிறுத்தி) பாராட்டுக்குரிய செயல்.

    விரைவினிலேயே இணைய இணய இணைப்புடன் கூடிய மடிக்கணினி வீட்டிலேயே வாங்க வாழ்த்துகள்//

    உங்கள் வாழ்த்து உற்சாகமளிக்கிறது! விரைவில் வாங்க திட்டமிட்டுள்ளேன்.

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது