07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Thursday, June 5, 2008

விமர்சனச்சரம்

விமர்சனச்சரம்.

கேரளாவில் நடந்த முழூ அடைப்பை அடுத்து நம்ம டீக்கடை நாயரும் கடை திறக்கவில்லை ஆகவே பெஞ்ச் பெரியவர்கள் சந்தித்துக்கொள்ள முடியவில்லை! இருந்தாலும் கொஞ்சம் முயன்று பார்க்கிறேன்.

விமர்சனம் என்பது ஒருவரை இன்னொருவர் தாழ்த்தும் செயலல்ல அவரை அவரே சீர்படுத்திக்கொள்ள ஒரு சந்தர்ப்பம். இப்படியாக பல தங்களது பார்வையில் கண்டகாட்சிகள் விமர்சனமாக இணையத்தில் பதித்துள்ளனர் அவற்றை தொகுக்கும் சரம் இந்த விமர்சனச்சரம்.

குருவின்னு ஒரு படம் வந்தாலும் வந்தது பல பதிவர்கள் தங்கள் பங்கிற்க்கு விமர்சனம் எழுதி தள்ளினர்!

படம் வரும் முன்னரே இதன் கதை இப்படி இருக்கலாம், அப்படி இருக்கலாம் என்று மின்னஞ்சல்கள் பறந்து கொண்டிருந்தது.

அப்பேற்ப்பட்ட எதிர்பார்ப்பை நிறைவேற்றியதா இப்படம் வாருங்கள் நம்பதிவர்களின் விமர்சனத்தை பார்க்கலாம்!

கடைலயூரில், செல்வன் எழுதுறார், படம் பரவாயில்லை என்று சான்றளித்த செல்வன் கொஞ்சம் காட்டமாகவே விமர்சித்திருந்தார்.
TBCD அவர்கள் சற்றே ஒரு படி மேலே போய் ஒவ்வொரு தலைப்பாக ஆராய்கிறார் மொத்தத்தில் சரியில்லையாம் .

“குருவி பார்த்து யாம் பெற்ற துன்பம் பெற வேண்டாம் இவ்வையகம்.” என்று இங்கே எழுதினார் இரவிசங்கர்.

நெல்லை செய்திகளில் இரசிகர்களுக்குகாக எடுக்கப்பட்ட படம் என்று தெள்ளதெளிவாக சொல்லிவிட்டனர்.
அதோட சில வேறு மொழி படம்
வஜ்ரா சங்கர் அருமையாக அரசியலையும் அறிவியலையும் ஆராய்பவர் இவர் எழுதிய மனிதவெடிகுண்டு என்ற இரண்டு ஆங்கில பட விமர்சனம்
“சவுதி அரேபியாவில் உள்ள ஒரு அமேரிக்க குடியுருப்புப் பகுதியில் நடந்த மனித வெடிகுண்டுத் தாக்குதல் ஒன்றை பற்றி துப்பறியச் சென்று, அங்கு அவர்கள் ஆளாகும் பிரச்சனைகள் பற்றிய படம்….ஆறுதலான நல்ல விஷயம், படத்தில் பேசப்படும் அரபு dialect பாலஸ்தீன அரபு மொழி. அது சற்றே ஹீப்ரூவை ஒத்திருக்கிறது.”

எனக்கேன் வம்பு படம் பார்த்தவங்க தான் சொல்லனும்! நானே படம் பார்க்குறத விட்டு (ஒன்னு ரெண்டு மூணூ நாலு அங்ங்ங்ங்ங்) அஞ்சு வருசமாச்சு.

இப்ப தொடர் பற்றிய விமர்சனம் அண்ணன் குமரன் ஒரு தொடர் பதித்தார்! சூப்பராக வந்த தொடர், சும்மாவா ஆண்மீக சூப்பர்ஸ்டார்ல! புல்லாகி பூண்டாகின்னு பேரு. கதை படிக்க ஆரம்பித்தால் விட மனசு வராது அதை பற்றி ஒரு சிலர் விமர்சனம் எழுதினர் முதலில் பாலஜி

“தல வரலாறு (தலயோட வரலாறு படம் இல்லைங்க) கதையா மாறிடுமோனு ஒரு பயத்துல கூட இதை செஞ்ச மாதிரி தெரிஞ்சிது. ஆனா இந்த மாதிரி கதைகள்ல வாசகர்களுக்கு ஆயிரம் கதை கேட்டாலும் அலுக்காது என்றே தோன்றுகிறது. கோவிலை இன்னும் பொறுமையாக சுற்றி காண்பித்திருக்கலாம்.”

இப்பிடி இன்னும் நிறைய எழுதியுள்ளார்.

அப்பறம் நம்ம ஜீவ்ஸ், யோகன் ஐயா, திரு. ஜீவா - காலத்தின் (கோவி.கண்ணனின்) கடைக்கண் பார்வை: ரொம்பவே வித்யாசமாக மேலும் அருமையாக இருந்தது அதில் ஒரு துளி இங்கே.
“அதுவும் நீங்கள் எடுத்துக் கொண்ட 'சப்ஜெக்ட்' மனம் போன போக்கில், நினைக்கும் எதையும் கற்பனையில் எழுதும் செய்தி இல்லை. சில ஆன்மீகச் செய்திகளைச் சுவைபடச் சொல்வதற்காக எடுத்துக் கொண்ட உருவம் கதையாக நேரிட்டதால், இயல்பாகவே அப்படிப்பட்ட கதைகள் எழுதுவதில் ஏற்படும் சில சங்கடங்களை நீங்களும் எதிர்கொள்ள நேரிட்டது….கதையை நீங்கள் முடித்த பாங்கும் மிகுந்த நிறைவேற்படுத்தியது.”

மேலும் பலர் எழுதிய விமர்சனம் இங்கே.

அப்பறம் சில கே.ஆர்.எஸ். எழுதிய நையாண்டி பதிவுகள், நகைச்சுவையாக ஆரம்பித்து ஒரு பல பெரிய உண்மைகளை சொன்ன பொகவத் கீதை, கைப்புள்ளவை தலையானந்தாவாக்கிய சங்கத்து செய்தி, ஆன்மீக பதிவர்களை ஒரு கணம் நரகத்தில் தள்ளிய பதிவு இப்படி ஒரு பல பதிவுகள் இன்றும் படித்தால் சிரித்துக்கொண்டே இருக்கலாம்.

ஜோதிடத்திற்க்கு தமது பதிவுகளை அற்பணித்துக் கொண்ட ஐயா சுப்பையா வாத்தியார் அவர்களின் பதிவுகள் நிச்சயமாக இந்த வாரம் எனக்கு எத்தனை தர்மசங்கடம் வந்திருக்கும் என்று கணிக்க கற்று தந்துவிடும். இவர் எழுதிய சனீஸ்வரன் படித்த பள்ளிக்கூடம் யாரும் அறியாத செய்தியாக இருக்கவேண்டும். பரல்களை எண்ணி வாழ்வை கணிக்க கற்றுத்தரும் இந்த தொடர்கள் எல்லாம் என்றும் இனிப்பவை.

(ஒருவேளை இந்த பதிவுக்கு என்றும் இனிப்பவை சரம்ன்னு பெயர் வைத்திருக்கலாமோ!)

நாளை டீக்கடை திறக்கும், அண்ணாச்சி மற்றும் குழுவினர் வருவர் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.

சகல செய்திகளை அறிந்து வைத்துகொள்ளும் அனைத்து சகலகலா வித்தகர்கள் அனைவருக்கும் இச்சரம் சமர்பணம்.

4 comments:

  1. //சில கே.ஆர்.எஸ். எழுதிய நையாண்டி பதிவுகள்//

    சில கே ஆர் எஸ்ஸாஆஆஆஆ?
    எனக்குப் போலி வேற இருக்காங்களாப்பா? யார் யாருன்னு எல்லாம் சரத்துல அறிமுகப்படுத்த மாட்டீங்களாப்பு? :-))

    //நையாண்டி பதிவுகள்//

    ஹிஹி!
    அவன் எழுதறது எல்லாமே அதான்!
    யாரு சொன்னா ஆன்மீகம்-னு? :-))

    ReplyDelete
  2. ////சில கே.ஆர்.எஸ். எழுதிய நையாண்டி பதிவுகள்//

    சில கே ஆர் எஸ்ஸாஆஆஆஆ?
    எனக்குப் போலி வேற இருக்காங்களாப்பா? யார் யாருன்னு எல்லாம் சரத்துல அறிமுகப்படுத்த மாட்டீங்களாப்பு? :-))//

    உங்க பேர்ல போலியா நீங்களே போலின்னு சொல்லிகிட்டு திரியுரேன்! :)))). உண்மை பேர்ல போலி இருக்கலாம் போலி பேர்ல போலி!

    ////நையாண்டி பதிவுகள்//

    ஹிஹி!
    அவன் எழுதறது எல்லாமே அதான்!
    யாரு சொன்னா ஆன்மீகம்-னு? :-))//

    இதைத்தான் போலின்னு சொன்னேன்!

    ReplyDelete
  3. சிவமுருகன்,

    விமர்சனச் சரம் புதுமையானது - புதியது - நன்கு தொடுக்கப் பட்ட சரம்
    நல்வாழ்த்துகள்

    ReplyDelete
  4. சிவமுருகன்,

    சென்றவாரம் தான் திரும்பியதால் உங்கள் வலைச்சரம் இன்னும் படிக்கவில்லை.

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது