வலைச்சரம் - வணக்கம், நான், சிங்கப்பூர் மற்றும் குதிரைப்பந்தயம்
வணக்கம் வலைச்சரம் வாசகர்களே.
என்னைபற்றிய ஓர் அறிமுகம் என் வலைப்பூ
முகப்பில் உள்ளது.
1993 ஆம் ஆண்டு சிங்கப்பூர் சாங்கி விமானநிலையத்துல வந்து இறங்கினேனா, உடனே ஒரே பரபரப்பு , எனக்கில்லங்க, மத்தவங்களுக்குத்தான். நாட்டு அரசர், அமைச்சர்கள் புடைசூழ என்னை வரவேற்க இருப்பதாக செய்தி வந்ததுதா, மத்தவங்கள அனாவசியமா எதுக்கு சிரமப்பட வைக்கணும்னு நான் அதெல்லாம் வேண்டான்னு மறுக்க, யாரங்கே இந்தக் குழந்தைக்கு நிறைய விளையாட்டு சாமான்கள், மிட்டாய்கள் , பழங்கள், எல்லாம் கொடுங்கன்னு ஆணை வர ,
அதிலேந்து ஒருவழியா மீண்டு நான் தங்கவேண்டிய இடத்துக்குப் போனேங்க, அப்புறமேட்டு நூலகம் எங்கன்னு விசாரிக்கணும்னு நெனச்சுகிட்டு.
நான் வந்த 1993 ஆம் ஆண்டுக்கு சரியா 100 வருசம் முன்னால என்னைப்போலவே தமிழகத்துலேந்து ஒருத்தர் சிங்கப்பூர் வந்திருக்காரு. வந்தவர் நூலகத்தைத் தேடியெல்லாம் வரலை, ஏன்னாக்க அவரே ஒரு நூலகம் ஆச்சுதே.
1893 இதே ஏப்ரல் மாசம் வந்தவர் அவரே ஒரு நூல் எழுதிட்டாரு. அதான் அதிவினோத குதிரைப் பந்தய லாவணி ' இதான் தமிழ்ல அச்சிடப்பட்ட முதல் இலக்கியமாங். மதிப்புரை, அணிந்துரை, வாழ்த்துரை, கருத்துரை,
முன்னுரை, என்னுரை, ஒரு பருந்துப்பார்வை எதுவும் இல்லாமல்
மகா ஸ்ரீ ஸ்ரீ குருங்குளம் கருப்பண்ண உபாத்தியாயரின் மாணாக்கன்
மகா ஸ்ரீ ஸ்ரீ ஆதித்திருக்குடந்தை சரபக்கொடி
நா.வ இரங்கசாமிதாசனால் இயற்றியது
அப்படினுட்டு, பிழைகளைப் பொறுத்தருளச் செய்யுங்கன்னு பணிவோடு கேட்டுகிட்டு, சிங்கையையும், சாமியையும் வணங்கிட்டு கூட அழைச்சிட்டு வந்திருக்கும் மனைவி கேட்க (இவங்க குதிரைப்பந்தயம் பார்க்கணும்னுதானே நாகப்பட்டணத்துலேந்து கப்பல்ல ஏத்தி வந்திருக்காரு )
அப்படியே பாட ஆரம்மிச்சிருக்காருங்க, ஒவ்வொரு இடமா அவங்களுக்கு காட்டிக்கிட்டே வந்திருக்காரு. மானே தேனே அடிக்கடி விளிச்சு பாடுற பாடல்
இங்க இருக்கு பாருங்க
படிக்க சுளுவா இருக்கணும்னா
இத்தப்பாருங்க
இந்தப் புத்தகமெல்லாம் இப்ப நம்மகிட்ட இல்லைங்க, ஒலக வழக்கப்படி
இலண்டன் நூலகத்துல பாரம்பரிய சேகரிப்புகள்ல
டிஜிட்டர் உருவத்தில இருக்காமாங். பினாங் வழியா சிங்கப்பூர் வந்தவரு, கடந்து வர ஒவ்வொரு பேட்டையையும் அங்கிருக்கிற பள்ளிவாசல், கோவில், கடைங்க, டாணா பார் ( சுளுக்கெடுக்குற இடம்- அதாங்க போலிஸ் ஸ்டேசன்) , ஆசுபத்திரி, தபால் நிலையம், கோப்பிக்கட, ஆப்பக்கடை, தண்ணீர்ப்பீலி (குழாய்) அல்லாத்தையும் கவனமா லாவணில பதிஞ்சிருக்காரு.
நொடிக்கொருக்கா மானே தேனே சொல்லிக்கிட்டே படாடென்சன் ஆவுற இடத்தையெல்லாங்கூட அத்தப் பாரு இத்தப் பாருன்னு காட்டிகிட்டே வாராரு. அது என்னான்னு நீங்களே படிச்சுக்கிடுங்க.
பொறமலைங்கறது - இப்ப St John's island ஆம், ஸ்ட்டியரிங்க சுக்கான்னு அழகா எழுதியிருக்காரு, தஞ்சம்பாக்கார் தான் Tanjong Pagar Dock, சப்ராஜி ரோட் தான் இப்ப South Bridge ரோடு குசாலா ஊர்கோலம் வந்து, குதிரைப் பந்தயம் நடக்குமிடத்துக்கு வந்து சேர்ந்துட்டாங்க இரண்டுபேரும். இத்தோட மொதல் பாகம் முடிஞ்சிச்சு அப்படிங்கிறாரு.
இரண்டாம் பாகம் எங்க ?
இலண்டன் நூலகத்துகாரங்க தேடிட்டு இருங்காங்களோ என்னவோ
இன்னைக்கி நாம பார்க்குற பதிவர்கள் யாரெல்லாங்க
இதோ
ஹாலிவுட் படங்கள், மெக்சிகன் படங்கள், அல்ஜீரியப் படங்கள், சென்னைத் திரைப்படவிழாப்படங்கள், இந்தியப் படங்கள், குழந்தைகளுக்கான , பெரியவர்களுக்கான படங்கள், பார்க்கவேண்டியவை, தவறவிடக்கூடாதவை, குடும்பப் படங்கள் ன்னு அட்டவணை போட்டு படத்தோட அழகா யாராவது எழுதியிருந்தா தேர்ந்தெடுத்துப் பார்க்கலாமேனு நினைக்கிறவங்க முதல்ல வரவேண்டிய வலைப்பூ,
எல்லாந் தெரிஞ்சவங்க கூட எதையாவது தவற விட்டுட்டமான்னு இங்க வந்து உறுதிபண்ணிக்கிடலாம். அவ்வளவு விவரத்தோட (ஈரானிய, இத்தாலிய, இஸ்ரேலிய) வரிசைப்படுத்தி ரொம்பத் தெளிவா எழுதியிருக்காரு. சூர்யா.
டென்சனாவற விசயத்தை சுளுவா லாவணில சொல்றத பாத்தமே.
டென்சன் ஆக்குற செய்தியை வெற்றிகரமா முன்னிறுத்துறது (presentation) எப்படிங்கறத இவ்வளவு எளிமையா வலிமையா இப்பதான் படிக்குறேன். சூப்பரா எழுதியிருக்காரு குவைத்துல இருக்குற மஞ்சூர் ராசா
நகைச்சுவைல வேறு கலக்குறாரு இவரு. பெயரில் வரும் குழப்பம்ன்னுட்டு ஒரு கட்டுரை, ஆண்களுக்கும் பெண்களுக்கும் பதிமூணு வித்தியாசங்கள் அப்படின்னு எழுதியிருக்கறதெல்லாம் மெய்யாங்காட்டியுமே சிரிப்பு வருது . சிலத என்னால ஒத்துக்கிட முடியாட்டியும் நல்லாத்தான் இருக்குது.
நாட்டு நடப்பு, அறிவியல் செய்தி (செல்போனில் எப்படி முட்டை அவிக்கலாம்) அதிக கவனம் கிடைக்காத ஸ்மைல் பிங்கி பற்றிய விவரங்க,
வாடிவாசல் விமர்சனம், நீங்க தினமும் சாப்பிடுற உணவு உங்களுக்குப்பிடிக்கவில்லையா? அப்படின்னு கேள்வி கேட்டு படங்க போட்டிருக்காரு, நீங்க பாத்திட்டு சொல்லுங்க, அப்புறம் சாப்பாட்ட யாரும் குத்தம் சொல்லமாட்டீங்க
இவரோட வலைப்பூ
|
|
நல்வரவு மாதங்கி..
ReplyDeleteசரம் மணக்கப்போகுதுன்னு நல்லாவே தெரியுது!
இனிய வாழ்த்து(க்)கள்.
வாங்க அக்கா!
ReplyDelete//சரம் மணக்கப்போகுதுன்னு நல்லாவே தெரியுது!
இனிய வாழ்த்து(க்)கள்//
ரிப்பிட்டேய்ய்ய்ய்! :))
முதலாம் நாள் வாழ்த்துகள்
ReplyDelete\\1993 ஆம் ஆண்டு சிங்கப்பூர் சாங்கி விமானநிலையத்துல வந்து இறங்கினேனா, உடனே ஒரே பரபரப்பு , எனக்கில்லங்க, மத்தவங்களுக்குத்தான். நாட்டு அரசர், அமைச்சர்கள் புடைசூழ என்னை வரவேற்க இருப்பதாக செய்தி வந்ததுதா, மத்தவங்கள அனாவசியமா எதுக்கு சிரமப்பட வைக்கணும்னு நான் அதெல்லாம் வேண்டான்னு மறுக்க,\\
ReplyDeleteஆஹா! துவக்கமேவா ...
\\யாரங்கே இந்தக் குழந்தைக்கு நிறைய விளையாட்டு சாமான்கள், மிட்டாய்கள் , பழங்கள், எல்லாம் கொடுங்கன்னு ஆணை வர ,\\
மிட்டாய் வாங்கிட்டீங்களா இல்லையா
வாழ்த்துகள்!
ReplyDeleteகலக்குங்க!
வாங்க
ReplyDeleteமுதலாம் நாள் வாழ்த்துகள்
/////
ReplyDelete1993 ஆம் ஆண்டு சிங்கப்பூர் சாங்கி விமானநிலையத்துல வந்து இறங்கினேனா, உடனே ஒரே பரபரப்பு , எனக்கில்லங்க, மத்தவங்களுக்குத்தான். நாட்டு அரசர், அமைச்சர்கள் புடைசூழ என்னை வரவேற்க இருப்பதாக செய்தி வந்ததுதா, மத்தவங்கள அனாவசியமா எதுக்கு சிரமப்பட வைக்கணும்னு நான் அதெல்லாம் வேண்டான்னு மறுக்க,
/////
எனக்கு இப்படித்தான் ஆயிடுத்து
வாழ்த்துகள்
ReplyDeleteமாதங்கி,
ReplyDeleteவலைச்சரத்தில் பெயர் அடிபட்டவுடன் உங்களுடைய வலைப்பூவிலுள்ள பதிவுகளைச் சென்று பார்த்தேன். நீங்கள் வாங்கியுள்ள பரிசுகளின் வரிசையையும் பார்க்க நேர்ந்தது. அனைத்திற்கும் தாமதமான வாழ்த்துக்கள்.
மேலும் இங்கு உங்கள் வரவு நல்வரவாக வாழ்த்துகிறேன்.
அன்புடன்,
கிருஷ்ணப் பிரபு.
துளசி,ஆயில்யன்,
ReplyDeleteநட்புடன் ஜமால்,
ஜோதிபாரதி,ப்ரியமுடன்பிரபு, திகழ்மிளிர்
கிருஷ்ணப் பிரபு
உங்கள் அன்பான வாழ்த்துகளுக்கு நன்றி
வாழ்த்துக்கள்!
ReplyDeleteமுதலாம் நாள் வாழ்த்துகள்
ReplyDeleteநிஜமா நல்லவன்,
ReplyDeleteகணினி தேசம் உங்கள்
மனங்கனிந்த வாழ்த்துகளுக்கு நன்றி
அன்பின் மாதங்கி
ReplyDeleteஅருமையான துவக்கம் - அறிமுகம் படித்தேன் - பிரமித்தேன் - குதிரைப்ப்பந்தய லாவணி -எளிதில் படிக்கவும் ஒரு சுட்டி - வண்ணத்தூப்பூச்சியாரின் அருமையான பட விமர்சனத் தொகுப்பு - மஞ்சூர் ராசாவின் பதிவுகளின் அருமையான சுட்டிகள் -
உழைப்பு தெரிகிறது - நன்று நன்று
நல்வாழ்த்துகள்
அ
//துளசி கோபால் said...
ReplyDeleteநல்வரவு மாதங்கி..
சரம் மணக்கப்போகுதுன்னு நல்லாவே தெரியுது!
இனிய வாழ்த்து(க்)கள்.
//
Repeat ...taepeR
:)
சீனா, கோவி.கண்ணன்
ReplyDeleteஉற்சாகப்படுத்தியதற்கு நன்றி