07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Tuesday, April 7, 2009

துக்ளக்கல்லாதமகேஷ்..மழைக்கு ஒதுங்கிய..

துக்ளக் மகேஷ்

துக்ளக் என்றவுடன் வேறுமாதிரி நினைத்துவிடாதீர்கள். துக்ளக் கோமாளித்தனங்கள் ஒன்று கூட இவர் எழுத்தில் பார்க்க முடியாது. ஆழ்ந்த அறிவும், திறமையும் மிக்க பதிவர்.

இவர் எழுதிய கடவுள் பற்றிய பதிவு மிக ஆழ்ந்த ஒன்று.

‘தொர’ அவ்வப்பொழுது இங்கிலீஷ் படங்களுக்கு எழுதும் விமர்சனங்களும் அருமையாக இருக்கும்.( ‘தொர’ வார்த்தைப்ரயோகம்: நன்றி அப்துல்லா).

அ.மு.செய்யது.

மழைக்கு ஒதுங்கியவை... என ரம்மியமான தலைப்பில் எழுதிவரும் கவனிக்கப்பட வேண்டிய புதிய(இப்ப கொஞ்சம் பழசாகிவிட்ட) பதிவர்.

இவர் எழுதிய வழக்கொழிந்த சொற்கள் பதிவில் நிறைய வார்த்தைகள் அருமையாக இருக்கும். பின்னூட்ட மொக்கைகளைக் குறைத்தால் இன்னும் வளரலாம் செய்யது.

நையாண்டி நைனா

லகலகலக என இவர் நையாண்டி மட்டுமே செய்வார் என்று நினைத்திருந்த பொழுது, கம்பரின் பாடல் ஒன்றில் சீதை ஏன் வளையலைத் திருப்புவதாக எழுதியிருக்கிறார் கம்பர் என சில காரணங்களை அப் பதிவில் குறிப்பிட்டேன். பின்னூட்டத்தில் அடி பின்னி விட்டார் மனுஷன். மிக அருமையாக உல்ட்டா பதிவுகள் போடுவார். எனது கணிப்பில்,இவர் சீரியஸ் பதிவு எழுதினால் அருமையாக இருக்கும்.ஊர் பெயர் எதுவும் தெரியாது. கணேசாக இருக்கும் வாய்ப்பும் உள்ளது (ச்சும்மா நக்கல் நைனா.)

..

என்.கணேசன்.

இவர் யார் என்றே தெரியாது எனக்கு2007 ல் இருந்து எழுதி வருகிறார். ஒரு பின்னூட்டம் கூட இட்டதில்லை இவருக்கு என்றாலும் இவரின் படைப்புகளை படிக்காமல் தாண்டிப்போனதில்லை. இவரின் படைப்புகள் தொடர்ந்து விகடனில் வருவது இவரது ஃபுரொபைலைப் பார்த்தாலே தெரியும். மிக நேர்த்தியான நடை.

இவரது வலைப்பூ

16 comments:

  1. நீங்கள் சுட்டியுள்ள பதிவாளர்களுக்கு எனது வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  2. ரைட்டு...

    தல வேலையை ஸ்டார்ட் செஞ்சாச்சு

    ReplyDelete
  3. இரண்டாம் நாள் வாழ்த்துகள்

    அருமையான சுட்டிகள்

    ReplyDelete
  4. நர்சிம் சார்... உங்கள் பதிவுகளை சிறிது காலம் வசித்திருக்கிறேன். இங்கே நீங்கள் எழுதுவது மகிழ்ச்சி தருகிறது. தொடர்ந்து வலைப்பூ வாசிப்பை செறிவடைய செய்யும் வலைச்சர பதிவர்களுக்கு நன்றி.

    ReplyDelete
  5. //ஊர் பெயர் எதுவும் தெரியாது. கணேசாக இருக்கும் வாய்ப்பும் உள்ளது (ச்சும்மா நக்கல் நைனா.)//

    நைனா வயது 30க்குள்
    தற்போது மும்பையில் மென்பொருள் வேலை
    திருநெல்வேலிக்காரர், என்னுடன் உரையாடியில் உரையாடுவார்,
    இன்னும் மணம் ஆகவில்லை, பார்த்துக் கொண்டு இருப்பதாகச் சொன்னார். பெயர் என்னிடம் இதுவரை சொன்னதில்லை. சஸ்பென்சாம் !!!

    விரைவில் மும்பாய் தாதா அனுஜன்யாவை சந்திக்க இருப்பதாக என்னிடம் தெரிவித்தார்
    :)

    ReplyDelete
  6. இரண்டாம் நாள் வாழ்த்துக்கள்

    நன்றி புதிய அறிமுகத்துக்கு

    ReplyDelete
  7. இரண்டாம் நாள் வாழ்த்துகள்!!

    ReplyDelete
  8. நன்றி நர்சிம்....

    தல என் பேரைத் தலப்புலயே போட்டுட்டீங்களே... அவ்வ்வ்வ்....

    மற்ற அறிமுகங்களோடு ஒப்பிடும்போது நான் ரொம்ப சின்ன ஆளுங்க...

    ReplyDelete
  9. இரண்டாம் நாள் வாழ்த்துகள்.

    துக்ளக், செய்யது, கணேசன் மூவரும் நான் தொடர்ந்து வாசித்து வருபவர்கள்.

    நையாண்டி நைனா, வாசித்த ஞாபகம் இல்லை. படித்துவிட்டு வருகின்றேன்.

    ReplyDelete
  10. மகேஷ் நல்லா தெரியும். உங்கள் தயவில் பேசினோம்.

    செய்யது மற்றும் நையாண்டி நைனா நல்ல பரிச்சயமான பதிவர்கள். உங்க பதிவு பின்னூட்டங்களில் நிறைய பார்த்திருக்கிறேன். நைனா ஒரு முறை புருனோவிடம் துறை சார்ந்த கேள்வி கேட்டு 'நானும் சீரியஸ் ஆசாமிதான்' என்று காட்டிக் கொண்டார்.

    கணேசன் - இனிமேல் பார்க்க வேண்டும். ஆமாம், உங்களுக்கு இந்தப் பெயரில் ஏன் அலாதி விருப்பம்? :)))

    @ கோவி: //விரைவில் மும்பாய் தாதா அனுஜன்யாவை சந்திக்க இருப்பதாக என்னிடம் தெரிவித்தார் :) //

    என்னது? கடைசியில் எனக்கே ஆட்டோவா? - வாங்க நைனா வாங்க.

    அனுஜன்யா

    ReplyDelete
  11. நையாண்டி நைனா அவர்களின் பதிவை படித்ததும் - வலிக்கிது வேணாம்... அழுதுருவேன் என்ற வடிவேலின் காமெடிதான் ஞாபகத்திற்கு வருகிறது.

    ReplyDelete
  12. பின்னூட்டத்தில் நாங்க சொல்றதுக்கு எதுவுமில்லாம கணேசனே எல்லாத்தையும் சொல்லி்ட்டார் பாஸ்! நல்லா கருத்துள்ளதா இருக்கு. அவருக்கு வாழ்த்துகள்!

    ReplyDelete
  13. செய்யதும், மகேஷ் முன்பே அறிமுகம்தான்!

    ReplyDelete
  14. தலைப்பை பார்த்ததுமே இன்ப அதிர்ச்சி !!!!!

    நன்றி நர்சிம் !!! உங்கள் அறிவுரைகளை ஏற்று கொள்கிறேன்.

    ReplyDelete
  15. /*எனது கணிப்பில்,இவர் சீரியஸ் பதிவு எழுதினால் அருமையாக இருக்கும்.*/

    அறிமுகத்திற்கு மிக நன்றி. நன்றி. நன்றி.

    அண்ணன் கோவி.கண்ணன் கூறியது போல் நான் மும்பையிலே தான் இருக்கிறேன்.
    தகவல் தொழில்நுட்பத்தில் எந்த ஒரு நுட்பமும் இல்லாமல் ஆணி புடுங்கி கொண்டுள்ளேன்.

    தங்கள் அறிவுரைகளை ஏற்கிறேன்.

    ReplyDelete
  16. அ.மு.செய்யது வடசென்னை வாழ்க்கைமுறைகளை எழுதி இருப்பார். அதுவும் சிறந்த பதிவே.

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது