இனிய ஐந்தாவது நாள்
நான்கு வெவ்வேறு நாட்டை சேர்ந்த வியபாரிகள் ஒன்றாக பயணம் செய்தார்கள் அப்போது வழியில் அவர்களுக்கு பசி எடுத்தது , கையில் குறைந்த அளவே பணம் இருப்பதால் நால்வரின் பணத்தையும் சேர்த்து ஏதாவது வாங்கி அதை பங்கிட்டு சாப்பிட முடிவுசெய்தார்கள். அதில் அரேபியன் எனக்கு inab வேண்டும் என்றான் , கிரேக்கன் stafil வேண்டும் என்றான் , துருக்கியன் uzum வேண்டும் என்றான் , பெர்ஷியன் angkuur வேண்டும் என்றான் . இப்படி ஒவ்வொன்றாக சொல்ல அவர்களுக்குள் சண்டை வந்துவிட்டது . அப்போது அந்த வழியாய் வந்த ஒரு பெரியவர் அவர்களிடம் நடந்ததை கேட்டு தெரிந்துகொண்டார். பணத்தை என்னிடம் கொடுங்கள் உங்கள் நால்வரின் தேவையையும் பூர்த்திசெய்கிறேன் என்றார். பணத்தை பெற்று சென்று ஒரு கூடை நிறைய “திராட்சை” பழங்களோடு வந்தார் . அதை பார்த்த அரேபியன் நான்கேட்ட inab இதுதான் என்றான் , கிரேக்கன் தான் கேட்ட stafil அதுதான் என்றான் ,துருக்கியன் தான் கேட்ட uzum இதுதான் என்றான் , பெர்ஷியன் தான் கேட்ட angkuur இதுதான் என்றான் . ஆக அவர்கள் அனைவரும் தங்களுக்கு “திராட்சை”-தான் வேண்டும் என்று அவரவர் மொழியில் கேட்டுள்ளார்கள் , அதை புரிந்துகொள்ளாமல் சண்டை போட்டுக்கொண்டுள்ளார்கள்.
உலகில் உள்ள எல்லோருக்கும் அன்பான , அமைதியான வாழ்வு வேண்டும் என்பதே ஆசை , கடவுளும் மதமும் இதைத்தான் செல்கின்றன ஆனால் ஒருவரை ஒருவர் புரிந்துகொள்ளாமல் , ஒருவர் உணர்சிகளுக்கு ஒருவர் மதிப்புகொடுக்காமலும் சண்டை போட்டுகொண்டுள்ளார்கள் . இதை புரிந்துகொண்டால் எல்லா நாளும் இனிய நாளே….
…………………………..
http://kinatruthavalai.blogspot.com/
கிணற்றுத் தவளை.... என்று எழுதி வருகிறார்
. 3 பதிவுகள் மட்டுமே இட்டுள்ளார் .
வாழ்ந்த நேரம் மட்டும்
வயதுக் கணக்கானால்
நான் இன்னும் கைக்குழந்தைதான்
- அருமையான வரிகள் . மேலும் நிறைய எதிர்பார்க்கலாம்.
|
|
பிரபு, நல்ல கதை, நல்ல விளக்கம்.
ReplyDeleteஇந்த பதிவுக்கு தலை வணங்குகிறேன்.
வாழ்த்துகள்.....
நல்ல கதை பிரபு!
ReplyDeleteஊக்கத்துக்கு நன்றி பிரபு!
ReplyDeleteஅருமை அன்பரே
ReplyDeleteவாழ்த்துகள் பிரியமுடன் பிரபு!
ReplyDeleteசிறப்பான சரம் தொடுப்பு!
சங்கதிகள்!
vazhdha neram mattum,..
ReplyDeletenandragak irukkirathu