வலைச்சரத்தில் முருவின் மூன்றாம் பதிவு.,
➦➠ by:
அப்பாவி முரு
வாழ்க்கையில் சுவாரசியமான விசயங்களில் மிகமுக்கியமான ஒன்றாக நான் கருதுவது குழந்தைகளையும் தான்.
அம்மாவின் அணைப்பில் இருந்து மெதுவாக வெளிவரும் குழந்தை, தான் உயிர் வாழத் தேவையான வேலைகளை செய்தோடு, தன்னுடைய பிறப்பின் நோக்கத்தை உறுதிபடுத்துவதுடன் மற்றவர்களையும் சந்தோசப்படுத்த ஆரம்பிக்கும்.
ஆறு மாதமுதல் மூன்று வயது வரையிலான குழந்தையின் ஒவ்வொரு செயலும், ஒரு எழுத்தில் ஆரம்பித்து மெல்ல, மெல்ல வார்த்தையாவதும், கை, காலை அசைப்பது மெதுவாக தத்து நடையாவதும், பெற்றோரையும் தாண்டி உற்றார் உறவினர்களை அடையாளம் கண்டுகொள்ளும் அந்த நாட்கள், நமெக்கெல்லாம் அலுக்காத ஆனந்த நிமிடங்கள்.
அத்தகைய குழந்தைகளுக்கு ஒப்பானவர்கள், என்னைப் போன்ற புது பதிவர்கள். ஆர்வத்துடன் நாங்களின் செய்யும் ஒவ்வொரு செயலும் ஒரு கவிதைக்கு இணையான அழகு மிளிரத்தான் செய்கிறது. அதிலிருந்து சுவாரஸ்யமான் சில பதிவர்கள் உங்களின் பார்வைக்காக….
****************************************************மாலத்தீவு
எனும் தலைப்பில் எழுதிவரும் ராது அவர்கள். மாலத்தீவில் இருப்பதால் தீவின் இயற்க்கை அழகை, வைகரையிலிருந்து அந்தி வரையிலான பல நேரங்களில், பல கோணங்களில் எடுக்கப்பட்ட படங்களை அழகாக இணைத்துள்ளார்
சென்ற வார சமையல் - 3
தலைப்பில் மாலத்தீவில் மீன் பிடிப்பதில் ஆரம்பித்து, அதை சுத்தம் செய்து சமைப்பது வரை தொடர் படங்கள் தான், படத்தைப் பார்த்து யாரும் ஏங்கினால், தொடர்பிற்கு திருவாளர் ராது....
எனும் தலைப்பில் எழுதிவரும் ராது அவர்கள். மாலத்தீவில் இருப்பதால் தீவின் இயற்க்கை அழகை, வைகரையிலிருந்து அந்தி வரையிலான பல நேரங்களில், பல கோணங்களில் எடுக்கப்பட்ட படங்களை அழகாக இணைத்துள்ளார்
சென்ற வார சமையல் - 3
தலைப்பில் மாலத்தீவில் மீன் பிடிப்பதில் ஆரம்பித்து, அதை சுத்தம் செய்து சமைப்பது வரை தொடர் படங்கள் தான், படத்தைப் பார்த்து யாரும் ஏங்கினால், தொடர்பிற்கு திருவாளர் ராது....
**********************
பட்டிக்காட்டான்
என்ற தலைப்பில் எழுதிவரும் கிருஸ்னமணிவேல் என்பவர். எழுதியது கொஞ்சமே என்றாலும், இவரின் கவிதைகள் மிக அழுத்தமாக உள்ளன. படிக்க, படிக்க மிக சுவாரஸ்யமாக உள்ளது.
முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாமைப் பற்றிய அக்னி சிறகொன்று கண்டேன்! கவிதையில் டேன்…டேன்… என வரியை முடிப்பது, நமக்குள் டான், டான் என விழுகிறது.
பட்டிக்காட்டான்
என்ற தலைப்பில் எழுதிவரும் கிருஸ்னமணிவேல் என்பவர். எழுதியது கொஞ்சமே என்றாலும், இவரின் கவிதைகள் மிக அழுத்தமாக உள்ளன. படிக்க, படிக்க மிக சுவாரஸ்யமாக உள்ளது.
முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாமைப் பற்றிய அக்னி சிறகொன்று கண்டேன்! கவிதையில் டேன்…டேன்… என வரியை முடிப்பது, நமக்குள் டான், டான் என விழுகிறது.
***********************
இனியவன்
எனும் தலைப்பில் எழுதிவரும் லால்குடி என். உலகநாதன். தலைப்பிற்கு ஏற்றவாறே எழுத்துகளும் இருக்கின்றன. நல்ல சிந்தனையாளராக தென்படுகிறார்.
பணம், புகழ், சொத்து மட்டுமா, வாழ்க்கை? என்ற இடுக்கையில்,
//நாம் அடிக்கடி சொல்வதுபோல், "நமக்காக இல்லாவிட்டாலும், நம் குடும்பத்திற்காகவாவது உழைக்கவேண்டும்" என நம்மை நாமே ஏமாற்றி சந்தோசத்தை தொலைக்கிறோம்.அதற்காக யாரையும் உழைக்க வேண்டாம், சம்பாதிக்க வேண்டாம் என சொல்லவில்லை. பொன், பொருள், பதவியை நோக்கி எப்போதும் அலைய வேண்டாமே எனத்தான் சொல்கிறேன்.இந்த கட்டுரை எனக்கும் சேர்த்துதான் எழுதிகொண்டிருக்கிறேன்.//
என எழுதியுள்ளார். மேலும் விளக்கம் தேவையில்லை. அவசியம் படிக்க வேண்டிய பதிவர். தவறவிட வேண்டாம்.
அன்பு நண்பர்களே முத்தான மூன்று பதிவர்களை அறிமுகம் செய்து என்னுடைய மூன்றாவது பதிவிலிருந்து விடைபெறுகிறேன்.
நன்றி கூறி விடைபெறுவது.,
நன்றி கூறி விடைபெறுவது.,
உங்கள் அப்பாவி முரு.
|
|
மீ த பர்ஸ்ட் !
ReplyDeleteதம்பி ஜமாலு, சீக்கிரம் ஓடியா, உன் வேலையை நான் பார்த்துக்கிட்டு இருக்கேன்
அன்பின் முரு
ReplyDeleteஅருமையான இடுகை - அதிக அறிமுகம் இல்லாத மூன்று முத்தான பதிவர்களை அறிமுகப்படுத்திய விதம் நன்று. மூவரின் பதிவுகளுக்கும் சென்று வந்தேன் - நல்ல பதிவுகள்.
ஊக்கப்படுத்தியமைக்கு நன்றி
நல்வாழ்த்துகள்
கோவி - மீ த பர்ஸ்ட் - நான் மூணு பதிவு போய்ப் பார்த்துப் படிச்சு - அங்கே மறு மொழி இட்டு - அப்புறம் இங்கே வந்தேன் - நாலு நிமிசம் லேட் - மொத்தத்திலே நாந்தேன் மீ த பர்ஸ்ட் !
ReplyDeleteமூன்றாம் நாள் வலைச்சர ஆசிரியர் பணிக்கு வாழ்த்துகள்.
ReplyDeleteஅருமையான மூவர் இன்றும் அறிமுகம் செய்துள்ளீர்கள்.
மாலத்தீவு ராது அருமையான புகைப் படங்கள். கண்களுக்கு அருமையான விருந்து.
பட்டிக்காட்டான் சும்மா சொல்லக்கூடாதுங்க சூப்பர் கவிதை. இவர் இன்னும் நிறைய எழுத வேண்டும். கவிதையில் மனிதனை கட்டிப் போடுகின்றார்.
இனியவன். அருமையான எழுத்து நடை. சமூகப் பார்வை இவருக்கு நிறைய இருக்கின்றது. இவரையும் நாம் அனைவரும் ஊக்குவிக்க வேண்டும்.
arumaiyana pathivu, nalla mundru pera arimugam senju irukinga valthukkal
ReplyDelete//ஆறு மாதமுதல் மூன்று வயது வரையிலான குழந்தையின் ஒவ்வொரு செயலும், ஒரு எழுத்தில் ஆரம்பித்து மெல்ல, மெல்ல வார்த்தையாவதும், கை, காலை அசைப்பது மெதுவாக தத்து நடையாவதும், பெற்றோரையும் தாண்டி உற்றார் உறவினர்களை அடையாளம் கண்டுகொள்ளும் அந்த நாட்கள், நமெக்கெல்லாம் அலுக்காத ஆனந்த நிமிடங்கள்.//
ReplyDeleteவாழ்வின் அற்புத பொழுதுகள் கூட!
நாளெல்லாம் பார்த்து கொண்டே இருக்கலாம்!
மூன்றாம் நாள் வலைச்சர ஆசிரியர் பணிக்கு வாழ்த்துகள்!!
ReplyDeleteஅறிமுகப் படுத்தப் பட்ட மூவர்கள்
ReplyDelete===============================
மாலத்தீவு ராது
பட்டிக்காட்டான்
இனியவன்.
ஆசிரியர் முரு ஆறுமுகப் படுத்திய இந்த மூவரின் இடுகைகளும் அருமையா இருந்திச்சு.
நல்ல அறிமுகங்கள் அளித்தமைக்கு ஆசிரியர் முருக்கு மிக்க நன்றியும் வாழ்த்துக்களும்.
புது அறிமுகங்களுக்கும் எனதன்பு வாழ்த்துக்கள்!!
மூன்றாம் நாள் வாழ்த்துகள்!!
ReplyDeleteகுழந்தை மனசு உங்களுக்கு...
ReplyDeleteவாழ்த்துகள்..இன்று தான் வர முடிந்தது...
ReplyDeleteதொடர்ந்து கலக்குங்கள்..:-))
வருகைக்கும் கருத்துகளுக்கும் நன்றி நண்பர்களே....
ReplyDeleteஅப்பாவி முரு
வாழ்த்துகள் அப்பாவி முரு!
ReplyDeleteகலக்குங்கள்!
வலைச்சர ஆசிரியருக்கு மூன்றாம் நாள் வாழ்த்துகள்.
ReplyDelete//cheena (சீனா) said...
ReplyDeleteகோவி - மீ த பர்ஸ்ட் - நான் மூணு பதிவு போய்ப் பார்த்துப் படிச்சு - அங்கே மறு மொழி இட்டு - அப்புறம் இங்கே வந்தேன் - நாலு நிமிசம் லேட் - மொத்தத்திலே நாந்தேன் மீ த பர்ஸ்ட் !
//
அழுகுணி ஆட்டம் ஒப்புக் கொள்ள மாட்டேன். யார் மொத(லி)ல் போடுகிறார்களோ அவர்கள் தான் மீ த பர்ஸ்ட்டுக்கு உடையவர்கள்