உலக புத்தக தினம்
➦➠ by:
பிரியமுடன் பிரபு
' கற்க கசடற கற்பவை கற்றபின்நிற்க அதற்குத் தக.'- குறள் எண்: 391.
நல்ல புத்தகத்தை வாசிப்பதும் , நல்ல படங்களை நேசிப்பதும் கவுரவமான விடயமாக மாற வேண்டும் – வெ . இறையன்பு
நல்ல புத்தகத்தை வாசிப்பதும் , நல்ல படங்களை நேசிப்பதும் கவுரவமான விடயமாக மாற வேண்டும் – வெ . இறையன்பு
இன்று உலக புத்தக தினம். உலகப் புத்தக நாள் என்பது யுனெஸ்கோ நிறுவனத்தின் தீர்மானத்தின்படி ஆண்டுதோறும் ஏப்ரல் 23 அன்று புத்தகம் தொடர்பான விழிப்புணர்வுகளுக்காகக் கடைப்பிடிக்கப்படும் சிறப்பு நாளாகும்.
பாரிஸ் நகரில் 1995 ஆகஸ்ட் 25 முதல் நவம்பர் 16 வரை நடந்த யுனெஸ்கோவின் 28வது மாநாட்டில் ஒரு தீர்மானம் நிறைவேற்றப்படது. அத்தீர்மானம் வருமாறு,
"அறிவைப் பரப்புவதற்கும், உலகெங்கிலும் உள்ள பல்வேறு கலாசாரங்கள் பற்றிய விழிப்புணர்வினைப் பெறுவதற்கும், புரிதல், சகிப்புத்தன்மை போன்றவற்றின் மூலம் மனிதர்களின் ஒழுக்கத்தினை மேம்படுத்தவும், புத்தகம் ஒரு சிறந்த கருவியாக உள்ளதால் ஏப்ரல் 23 உலக புத்தக தினமாக கொண்டாடப்படும்"
ஷேக்ஸ்பியரின் பிறந்ததினமான ஏப்ரல் 23 அன்று உலகப்புத்தக தினம் கடைப்பிடிக்கப்படுவதை பொருத்தமானதாகக் யுனெஸ்கோ மாநாடு கருதியது. ஷேக்ஸ்பியர் மறைந்த தினமும், செர்வான்டிஸ், இன்கா போன்ற இலக்கியவாதிகள் மறைந்த தினமும் இதுதான்.
உலகப் புத்தக தினம் என்று ஒரு தினத்தை உருவாக்க வேண்டும் என்ற கருத்து சர்வதேச பதிப்பாளர் சங்கத்தால் முன்வைக்கப்பட்டு ஸ்பெயின் நாட்டு அரசால் யுனெஸ்கோவிற்கு பரிந்துரை செய்யப்பட்டது. ரஷ்யப் படைப்பாளிகள் புத்தக உரிமைக்கும் (காப்புரிமை) முக்கியத்துவம் அளிக்கப்படவேண்டும் என்று கருதியதால் ஏப்ரல் 23 உலகப் புத்தகம் மற்றும் புத்தக உரிமை தினமாக கடைப்பிடிக்கப்படுகிறது.
( நன்றி
புத்தகம்தான் என் முதல் நன்பன். சிங்கை நூலகங்களுக்கு நன்றி சொல்லவேண்டும் . பழக்கமில்லாத ஊர் , அறியாத நபர்கள் , புரியாத மொழி என எல்லாம் என்னை குழப்பிய நேரத்தில் எனக்கு ஆறுதல் தந்தது புத்தகங்கள் தான்
“மனித மனம் ஒரு நாய் போல , அதற்க்கு சரியான உணவை நாம் கொடுத்துக்கொண்டே இருக்க வேண்டும் இல்லையென்றால் அந்த நாய் மலம் திண்ண சென்றுவிடும்” – (பிரபு)(????) . புத்தகங்கள்தான் சரியான உணவு
வலைப்பூக்களில் பலர் தங்களின் புத்தக அனுபவம்/விமர்சனம் எழுதுகிறார்கள் . நான் ஏற்க்கனவே கிருஷ்ணா பிரபு –வின் பதிவுகளை குறிப்பிட்டிருந்தேன் .
மேலும் சில பதிவுகள் இங்கே
புரட்டிப் போட்டு விட்டப் படைப்புகள் பற்றி எழுதிவருகிறார் சிவக்குமார்
http://bookimpact.blogspot.com/
ஜேஜே சில குறிப்புகள் , மோகமுள் - தி ஜானகிராமன் என்று பட்டியல் நீளும் படித்து பருங்கள்
திருத்தம் என்ற பெயரில் நல்ல பயனுள்ள பதிவுகளை இட்டுவருகிறார் இளமுனைவர் பொன்.சரவணன் - http://thiruththam.blogspot.com
புரட்டிப் போட்டு விட்டப் படைப்புகள் பற்றி எழுதிவருகிறார் சிவக்குமார்
http://bookimpact.blogspot.com/
ஜேஜே சில குறிப்புகள் , மோகமுள் - தி ஜானகிராமன் என்று பட்டியல் நீளும் படித்து பருங்கள்
திருத்தம் என்ற பெயரில் நல்ல பயனுள்ள பதிவுகளை இட்டுவருகிறார் இளமுனைவர் பொன்.சரவணன் - http://thiruththam.blogspot.com
புத்தகM என்ற பெயரில் தன் புத்தக அனுபவங்களை விளக்கியுள்ளார் சேரல் - http://www.puththakam.blogspot.com/
மேலும் சில
யாழிசை ஓர் இலக்கிய பயணம்......
தமிழ் காமிக்ஸ் உலகம்
http://www.tamilbookreview.blogspot.com/
இந்திய-அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தம் பற்றி படிக்க இங்கே செல்க
|
|
/--“மனித மனம் ஒரு நாய் போல , அதற்க்கு சரியான உணவை நாம் கொடுத்துக்கொண்டே இருக்க வேண்டும் இல்லையென்றால் அந்த நாய் மலம் திண்ண சென்றுவிடும்” – (பிரபு)(????) .--/
ReplyDeleteநல்லா சொன்னீங்க போங்க.
புத்தகங்களைப் பற்றி எழுதும் சக தோழர்களை அறிமுகப் படுத்தியதற்கு மிக்க நன்றி. தொடருங்கள்.
//மனித மனம் ஒரு நாய் போல , அதற்க்கு சரியான உணவை நாம் கொடுத்துக்கொண்டே இருக்க வேண்டும் இல்லையென்றால் அந்த நாய் மலம் திண்ண சென்றுவிடும்//
ReplyDeleteநான் அனுபவத்தில் உணர்ந்த பாடம் இது. நச்சென்று சொல்லியிருக்கிறீர்கள்.
பிரபு தமிழ்மணத்தில் சேர்த்து ஓட்டும் போட்டுவிட்டேன்!!
ReplyDeleteபுத்தகங்கள்தான் சரியான உணவு
ReplyDeleteவலைப்பூக்களில் பலர் தங்களின் புத்தக அனுபவம்/விமர்சனம் எழுதுகிறார்கள் .////
வலையினால் புத்தகம் படிக்கும் நேரம் குறைய ஆரம்பித்து உள்ளது!!
-“மனித மனம் ஒரு நாய் போல , அதற்க்கு சரியான உணவை நாம் கொடுத்துக்கொண்டே இருக்க வேண்டும் இல்லையென்றால் அந்த நாய் மலம் திண்ண சென்றுவிடும்” – (பிரபு)(????) .--/
ReplyDeleteபிரபு நல்ல விசயம் புத்தகம் படித்தல்!!எல்லோருக்கும் ஞாபகப் படுத்தியதுபோல் உள்ளது!!
ReplyDeleteஅருமையான & தேவையான பதிவு.
ReplyDeleteநான் சிறு வயதில் படித்து என்னை மெருகேற்றிய அம்புலிமாமா , பாலமித்ரா, தெனாலி ராமன் கதைகள், முத்து, ராணி மற்றும் லயன் காமிக்ஸ்" போன்ற புத்தகங்கள் இந்த தலைமுறைக்கு அன்னியமாகவே இருக்கிறது
ஒரு காட்சியை காண்பிப்பதற்கு பதில், படிப்பவர் கற்பனைக்கு விட்டு விட்டால் தான் குழந்தைகளின் எண்ணத்தில் அதை பற்றிய காட்சி விரியும் creativity யும் வளரும்" வாய்ப்புகள் அதிகம்
கதை புத்த கங்களை படிக்கும் ஆர்வம் மிகுதியாக இல்லாத இந்தியாவில் குழந்தைகளுக்கு என்று திரைப்படமே இல்லை என்பதும் மிகுந்த வேதனையான விஷயம். அதனால் தான் குழந்தைகளுக்கு மன அழுத்தமும் வீணான சிந்தனக்களும் வருகிறது என்பது உளவியலாளர்கள் கருத்து.
தமிழகத்தில் எல்லா குழந்தைகளும் அழுது வடியும் சீரியல்களையும் சினிமா, போட்டிகள் என்ற பெயரில் ஆபாச நடனங்களையும் அருவருக்கதக்க நிகழ்வுகளையும்
நடு ஹாலில் உட்கார்ந்து மணிகணக்கில் பார்ப்பது என்பது கொடுமையிலும் கொடுமை.
பதிர்விற்கு நன்றியும் வாழ்த்துகளும்.
பிரபு உலகப் புத்தக தினத்தை ஞாபகப்படுத்தியதற்கு நன்றி. விமர்சனங்கள், கருத்துக்களை எழுதுபவர்களை அறிமுகப்படுத்தியதற்கு நன்றி
ReplyDeleteபின்னூட்டமிட்ட அனைவருக்கும் நன்றி
ReplyDeleteவித்தியாசமான சிந்தனை - நல்ல சிந்தனையாக மலர்கிறது - படிக்க வேண்டிய சுட்டிகள் - நல்வாழ்த்துகள்
ReplyDeleteபிரியமுடன் பிரபு
//“மனித மனம் ஒரு நாய் போல , அதற்க்கு சரியான உணவை நாம் கொடுத்துக்கொண்டே இருக்க வேண்டும் இல்லையென்றால் அந்த நாய் மலம் திண்ண சென்றுவிடும்” – (பிரபு)(????) . புத்தகங்கள்தான் சரியான உணவு//
ReplyDeleteஅருமை :-) புத்தகங்களைப் பற்றி எழுதும் சக தோழர்களை அறிமுகப் படுத்தியதற்கு மிக்க நன்றி