வலைச்சரத்தில் இரண்டாம் நாள்
➦➠ by:
ஜீவன்
நான் மிகவும் மதிக்கின்ற வலை பதிவர்களின் பதிவுகளின் பகிர்வு ..!
தமிழில் பங்கு வணிகம்
பங்கு சந்தை பற்றிய தமிழ் தளங்களில் தலைசிறந்த தளம் இது. கிட்டத்தட்ட ஆறு லட்சம் பார்வையாளர்கள் இதுவரை இந்த தளத்தினை பார்வையிட்டு உள்ளனர் . தினசரி இந்த தளத்தால் நூற்று கணக்கானோர் பயனடைகிறோம். கடந்த மூன்று வருடங்களுக்கும் மேலாக இந்த தளத்தின் மூலம் தினசரி குறிப்புகளையும் வணிக யுக்திகளையும் முற்றிலும் இலவசமாக சேவை மனப்பான்மையுடன் வழங்கி வருகிறார் இதன் ஆசிரியர் எம் .சரவணக்குமார் அவர்கள். பங்கு வணிகத்தில் இருப்பவர்களுக்கும் புதிதாக பங்கு வணிகத்தில் ஈடுபட நினைப்பவர்களுக்கும் அற்புதமான தளம் இது.
இதன் ஆசிரியர் எம் . சரவணக்குமார் அவர்கள் பற்றி .....
இப்போதும் ஒரு புதிய பெயரில் வலம் வருகிறார் இந்த ''பாண்டிய'' நாட்டை சேர்ந்தவர்.
இதன் ஆசிரியர் எம் . சரவணக்குமார் அவர்கள் பற்றி .....
வலையுலகை பொறுத்தவரை இவர் ஒரு பழம் பெரும் பதிவர்...! பங்கு வணிக தளம் மட்டுமல்லாமல் பல வலைத்தளங்கள் இவருக்கு உண்டு. ஒரு வருடம் ஒரு பெயரில் எழுதிவிட்டு அதை அப்படியே நிறுத்தி விடுவார்..! பின்னர் புதிய பதிவராக வேறு பெயரில் தோன்றுவார் ..!இப்படி வருடத்திற்கு ஒரு பெயரில் தோன்றுவார்..! அது இவர்தான் என்று அவரிடம் நெருங்கியவர்களுக்கே சிறிது காலம் கழித்துதான் தெரியவரும் ..!
அப்படி அவர் எடுத்த அவதாரங்கள் !
இப்போதும் ஒரு புதிய பெயரில் வலம் வருகிறார் இந்த ''பாண்டிய'' நாட்டை சேர்ந்தவர்.
மங்கை
வலையுலக பெண் பதிவர்களில் மிகவும் முக்கியமானவர். இவரது பதிவுகள் அழுத்தமானவை.இவர் பதிவுகள் ஒரு டாக்குமெண்டரி படம்போல இருக்கும்..! அனைத்து பதிவுகளிலும் ஒரு சமூக சிந்தனை இருக்கும். எயிட்ஸ் நோய் சம்பந்தமான துறையில் அதிகாரியாக இருந்து எயிட்ஸ் நோயாளிகளுக்கு இவர் ஆற்றிய சேவை மகத்தானது. இவரது அனைத்து பதிவுகளுமே சிறப்பானவைதான். அவற்றில் மிக முக்கியமானவை.
எச்ஐவியால் பாதிக்கப்பட்டவளாய் நான்...
பிஞ்சுக் கரங்களில் தாய்மை....(கண்டிப்பாக படியுங்கள்)
முதுமையில் நீளும் நாட்கள்
மனித உரிமை நாள் - பெனாசீர் கவுரவிக்கப் படுகிறார்.
முத்துச்சரம்
ராம லட்சுமி அம்மா...! சிறந்த பதிவர்,சிறந்த கவிஞர் சிறந்த புகைப்பட கலைஞர்..!இவர்களது படைப்புகளில் சிறந்த பதிவிற்கும்,சிறந்த கவிதைக்கும்,சிறந்த புகைப்பட கலைக்கும் உதாரணமாய் இருக்கும் பதிவுகள்..!
முடிவில் ஒரு விடிவு
இவர்களும் நண்பர்களே
நிழல்கள் -டிசம்பர் pit போட்டிக்கு
அமிர்த வர்ஷினி அம்மா
அமித்து அம்மா முன்பெல்லாம் அவ்வப்போது சிறந்த பதிவுகளை வழங்கி வந்தார்
ஆனால்?? இப்போதெல்லாம் அதி அற்புதமான பதிவுகளையே தருகிறார்.
பல முன்னணி எழுத்தாளர்களுக்கு சவால் விடும் அதி அபூர்வமான எழுத்து நடை
இவருடையது.
ஆனால்?? இப்போதெல்லாம் அதி அற்புதமான பதிவுகளையே தருகிறார்.
பல முன்னணி எழுத்தாளர்களுக்கு சவால் விடும் அதி அபூர்வமான எழுத்து நடை
இவருடையது.
இவரது பல பதிவுகள் மறக்க முடியாதவை..!
இவர்களது சமீபத்தைய அசத்தல்கள்...!
உளவு
மிளகாய் கிள்ளி சாம்பார்
சின்னஞ்சிறுசுங்க மனசுக்குள்ள
கேபிள் சங்கர்
எப்போதும் சிரித்த முகத்துடன் இருப்பவர் ஆரம்ப காலங்களில் இருந்து இவரது பதிவுகளை படித்து வருகிறேன். இவரது திரை விமர்சனங்கள் சிறப்பு வாய்ந்தவை
இவரது குறும்படமான ஆக்சிடென்ட் என்னை மிகவும் கவர்ந்தது அதை பெரும்பாலும் அனைவரும் பார்த்து இருக்க கூடும்..! பார்க்காதவர்களுக்காக ..!
இவரது குறும்படமான ஆக்சிடென்ட் என்னை மிகவும் கவர்ந்தது அதை பெரும்பாலும் அனைவரும் பார்த்து இருக்க கூடும்..! பார்க்காதவர்களுக்காக ..!
தண்டோரா
சமீபத்தில்தான் எனக்கு இவரது தளம் அறிமுகமானது பல சிறந்த பதிவுகளையும் கவிதைகளையும் படித்து அசந்து போனேன்..! என் மனதை விட்டு அகலாத அவரது இந்த கவிதையை நீங்களும் படித்துதான் பாருங்களேன்..!
என்வானம்
பெரும்பாலும் பெரிய கவிதைகள் என்றால் பிறகு படிக்கலாம் என இருந்து விடுவேன் ஆனால் என் வானம் அமுதா இவர்கள் கவிதைகள் மட்டும் படிக்கும்போது இன்னும் சில வரிகள் இருக்க கூடாதா என தோன்றும்.
ஒரு திண்ணையின் கதை
தந்தை பாசம்
மவுனம்
நீயின்றி
இவற்றை படியுங்கள் அனுபவியுங்கள் ..
எழுத்தோசை
நின்றால் கவிதை,எழுந்தால் கவிதை, அமர்ந்தால் கவிதை என்றால் அது இந்த தமிழ் அரசிக்குதான் பொருத்தமாய் இருக்கும். துள்ளி விளையாடுது தமிழ் இவர் கவிதைகளில் . எந்த கவிதை சிறந்தது என சொல்ல முடியாத அளவிற்கு இவர் கவிதைகள் அனைத்துமே சிறப்பானவை .! உதாரணத்துக்கு சில
தமிழ்
மாற்றங்கள் ஏன் ?
வசந்தம் வரும் நாள்
மரம் தன்னை பற்றி கூறும் இந்த பதிவும் அழகானது
எனக்கும் மனம் உண்டு மனிதர்களே
தமிழ்
மாற்றங்கள் ஏன் ?
வசந்தம் வரும் நாள்
மரம் தன்னை பற்றி கூறும் இந்த பதிவும் அழகானது
எனக்கும் மனம் உண்டு மனிதர்களே
|
|
இரண்டாம் நாள் வாழ்த்துக்கள்
ReplyDeleteஅன்பின் ஜீவன்
ReplyDeleteபலப்பல அறிமுகச் சுட்டிகள் - அத்தனையும் அருமை
நல்வாழ்த்துகள் ஜீவன்
இன்றைய அறிமுகங்கள் ஜொலிக்கும் வைரங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்
ReplyDeleteஇரண்டாம் நாள் வாழ்த்துக்கள் தமிழ்
வலைச்சர அறிமுகம் கண்ணையும் கருத்தையும் கவரும் வகையில்...
ReplyDeleteவாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள் ஜீவன்!
ReplyDeleteஇரண்டாம் நாள் வாழ்த்துகள். பதிவர் அறிமுகம் சிறப்பு. நன்றி.
ReplyDeleteவாழ்த்துகள் ஜீவன் !!! கிட்டத்தட்ட அனைவருமே பரிச்சயமான முகங்கள் என்றாலும் சிறப்பான அறிமுகம் தான்.ஒவ்வொருவரும் தத்தம் பாணியில் வெவ்வேறு தளங்களில் கலக்குபவர்கள். !!!
ReplyDeleteதொடர்க !!
ஏனுங்க...எங்களை எல்லாம் பெரிய ஆளுக கூட சேர்த்துட்டீங்க...நன்றி..
ReplyDeleteஆரம்பமே அசத்தல் ஜீவன். தொடருங்கள். வெகுநாட்களுக்குப் பின் வலையுலகம் வந்தேன். உங்களை வலைச்சரத்தில் கண்டதில் மிக்க மகிழ்ச்சி. வாழ்த்துக்கள்
ReplyDeleteஅறிமுக வார்த்தைகள் அற்புதம்
ReplyDeleteஇன்றைய அறிமுகங்கள் அத்தனையும் முத்துக்கள்.
ReplyDeleteவாழ்த்துக்கள் ஜீவன்.
ஜீவன் இனிய வாழ்த்துக்கள்.அழகாய் அமைதியாய்த் தொடருங்கள்.
ReplyDeleteஇரண்டாம் நாள் வாழ்த்துகள் அண்ணே. அனைவரும் மிக அழகாக எழுதும் பதிவர்கள். அனைவரையும் எனக்கு ரொம்ப பிடிக்கும்.
ReplyDeleteமிகவும் பயனுள்ள அறிமுகப் பதிவு!!
ReplyDeleteதொடர்க உங்கள் பணி!!
வாழ்த்துக்கள்!!
மங்கை said...
ReplyDeleteஏனுங்க...எங்களை எல்லாம் பெரிய ஆளுக கூட சேர்த்துட்டீங்க...நன்றி..
அஃதே அஃதே அஃதே :)
இரண்டாம் நாள் வாழ்த்துக்கள் தல. பிரபல பதிவர்களின் சிறந்த இடுகைகளை சிறந்த மொழிகொண்டு விளக்கியிருப்பது அருமை. பாராட்டுக்கள் தல
ReplyDeleteஇரண்டாம் வாழ்த்துக்கள் நண்பரே, அனைவரையும் அறிமுகப்படுத்திய விதம் அருமை. வாழ்த்துக்கள்.
ReplyDeleteஅழகான அறிந்த முகங்கள் அவர்களின் சிறந்த பதிவுகளின் அறிமுகம் நன்று
ReplyDeleteதொடர்ந்து கலக்குங்க
நல்ல அறிமுகங்கள். முதல் இரண்டு பேரைத்தவிர மற்ற எல்லோருமே நமக்கு மிகவும் நெருக்கமான சகாக்கள்தான். அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
ReplyDeleteஇரண்டாம் நாள் வாழ்த்துக்கள்!
ReplyDeleteநீங்கள் அறிமுகங்கள் அனைத்துமே அறிந்தவர்கள் என்றாலும் ஜீவனின் அறிமுகத்தில் புதுப் பொலிவுடன் படிக்க முடிந்தது.
ReplyDeleteஅனைவருக்கும் இந்த ரம்யாவின் வாழ்த்துக்கள்!
நல்ல அறிமுகங்கள் தலைவா!
ReplyDeleteகருத்து தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள் ...!
ReplyDeleteநன்றி ஜீவன்..
ReplyDelete