07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Tuesday, October 20, 2009

கடவுள் வாழ்த்து



வாங்க நல்ல மனசுக்காரங்களே.. போன பதிவுல இருந்த லிங்க்ல போய் என் வலைப்பூவைப் பார்த்தீங்களா.. இப்போ தெரிஞ்சிட்டு இருப்பீங்க.. என்னைப்பத்தி.. கடவுளே ..இந்தப் பொண்ணுகிட்ட இருந்து காப்பாத்துன்னு வேண்டனும்ன்னு தோணுமே.. .. எந்த கடவுள்கிட்ட வேண்டறது, எப்படி வேண்டறதுன்னு க‌வலைப்படாதீங்க.. இப்போ நான் ஆன்மீகம் சம்பந்தப்பட்ட வலைப்பூக்களின் விவரங்களைத் தர்றேன்.. அதை வச்சி எந்தக் கடவுள,எப்படி எப்படி பூஜை பண்ணி வேண்டனுமோ..அப்படியெல்லாம் வேண்டிக்கோங்க..

எனக்கு வேண்டும் வரங்களை யிசைப்பேன் கேளாய் கணபதி
மனதிற்சலனமில்லாமல், மதி யிலிருலே தோன்றாமல்
நினைக்கும் பொழுதுநின் மவுனநிலை வந்திட நீ செயல்வேண்டும்
கனக்குஞ் செல்வம் நூறுவய திவையுந்தர நீ கடவாயே
கமலா சனத்துக் கற்பகமே
என பாரதியால் பாடப்பெற்ற முழுமுதல்வன் முந்தி விநாயகன் பெயரிலான வலைப்பூ இது
இவ்வலைப்பூவின் பெயரே மூத்த விநாயகர் கோவில்.இதில் நிறைந்திருக்கும் ஆன்மீக விஷயங்களைப் பற்றி விளக்க மேலும் சாட்சி வேண்டுமோ?


தோடுடைய செவியன் விடையேறியோர் தூவெண்மதிசூடிக்
காடுடைய‌சுட லைப்பொடிபூசியென் னுள்ளங்கவர் கள்வன்
ஏடுடையமல ரான்முனைநாட்பணிந்தேத்த அருள்செய்த‌
பீடுடையபிர மாபுரமேரிய பெம்மா னிவ‌னன்றே
எனத் திருநான சம்பந்தரால் பாடப் பெற்ற சிவனைப் போற்றும் வலைப்பூ இது
சிவத்தமிழோன்
சைவசமய நீதியினைப் பற்றி சிந்தையில் சிவனை நிறுத்தி விளக்கும் வலைப்பூ இது..பிற ஆன்மீக வலைப்பூக்களுக்கும்,சிவநெறி தொடர்பான யூட்யூப் வீடியோக்களுக்கும் கூட சுட்டி கொடுக்கப்பட்டுள்ளது

சிவனின் மற்றுமோர் வடிவான சந்திரசேகரரின் நிழற்படங்களோடு,கார்த்திகை சோமவார மகிமையையும் அறியத்தருவது இப்பதிவு ஒரு நடை போய்வாங்க‌

கேதார கெளரி விரதச் சிறப்பை அறியவும், அது தொடர்பான பாடல்களைத் தரவிறக்கவும் இங்கே முயற்சிக்கலாம்

பிரதோஷ விரதத்தின் விவரங்கள் வேண்டுமா.. இதோ இங்கே இருக்கு.வருடத்தின் எல்லா நாட்களின் ஆன்மீகச் சிறப்புகளும் இவ்வலைப்பூவில் உள்ளன‌‌

திருந‌ந்தீஸ்வரம் போக ஆசையா? அங்கே போகாமலேயே அத்திருத்தலத்தின் ஒவ்வொரு பகுதியையும் காண இங்கே சென்றாலே போதுமே


கரும்பும்,கணை ஐந்தும் பாச அங்குசமும்,கைக்கொண்டு அடியேன்
திரும்பும் திசை தொறும் தோற்றிக் கண்டாய் இசைத் தேக்கு மணிச்
சுரும்பு உண்ட காவியும்,சோதி நிலாவும்,துளிரும் சற்றே
அரும்பும் கனம் குழலாய், மதுராபுரி அம்பிகையே
எனப்பாடப் பெற்ற மீனாட்சி அம்மன் புகழ் பாடும் வலைப்பூ இது
மீனாட்சி அம்மன் கோயில் உலா என்னும் இப்பதிவு,அக்கோயிலுக்கே நேரில் சென்றுவந்ததைப் போன்ற நிறைவைத் தருகிறது.


இறைவனின் புகழ்பரப்ப விளையும் இவரின் இந்த‌‌ வலைப்பூவில் பல்வேறு திருத்தலங்களின் கருடசேவை உற்சவங்கள் நிழற்படங்களொடு மிளிர்கின்றன‌.இந்த வலைப்பதிவரின் மற்ற வலைப்பூக்களையும் பார்த்தீர்களானால் ஆன்மீகம் சம்பந்தப்பட்ட பல செய்திகளையும் அறியலாம். பல்வேறு கடவுள்களின் நிழற்பட தரிசனமும் கிடைக்கும்‌


கிருஷ்ண ஜெயந்தி கொண்டாட்டங்களின் வரைமுறையும்,வழிமுறையும் வேண்டுமா?
இதோ உதவிகரமான குறிப்புகள்



இன்னும் நெறைய நெறைய வலைப்பூக்கள் ஆன்மீகத்தைப் பத்தி பேசுதுங்க.. ஆனால் அது எல்லாம் ஏற்கனவே வலைச்சரத்துல அறிமுகப்படுத்தப்பட்டிருக்கு..‌

எல்லா கடவுளையும் வேண்டியாச்சா? நல்ல புள்ளங்களா போயி வெலைய பாருங்க.
மேலும் பல புதிய வலைப்பூக்களோடு அடுத்த பதிவில் சந்திக்கும் வரை விடைபெறுவது... இயற்கை மகள்‌

87 comments:

  1. //கடவுளே ..இந்தப் பொண்ணுகிட்ட இருந்து காப்பாத்துன்னு வேண்டனும்ன்னு தோணுமே.//

    அந்த கடவுளே அபப்டி தான் வேண்டிகிட்டு இருக்கிரதா கேள்விப்பட்டேன்!!!

    ReplyDelete
  2. சென்டிமென்டா சாமி கும்பிட்டு துவங்கி வைச்சுட்டீங்க :)

    ReplyDelete
  3. ஆரம்பமே கடவுள் வாழ்த்து :) நல்ல செண்டிமெண்ட்ங்க.

    ReplyDelete
  4. வலைச்சர ஆசிரியருக்கு வாழ்த்துக்கள்

    பக்திமணம் கமழுது

    ReplyDelete
  5. வலைச்சர ஆசிரியருக்கு வாழ்த்துக்கள்

    ReplyDelete
  6. ஆர்மபமே பக்தி மணம் கமழுதே!!

    ReplyDelete
  7. மனதிற்சலனமில்லாமல், மதி யிலிருலே தோன்றாமல்
    நினைக்கும் பொழுதுநின் மவுனநிலை வந்திட நீ செயல்வேண்டும்
    கனக்குஞ் செல்வம் நூறுவய திவையுந்தர நீ கடவாயே
    கமலா சனத்துக் கற்பகமே//

    நாக்கெல்லால்..ம்,, கொளறுதே!!

    ReplyDelete
  8. //எல்லா கடவுளையும் வேண்டியாச்சா? நல்ல புள்ளங்களா போயி வெலைய பாருங்க//

    ரைட்டு !

    ReplyDelete
  9. ஆரம்பமே கடவுள் வாழ்த்து :)

    சூப்பர்.

    ReplyDelete
  10. இரண்டாம் நாள் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  11. குறைஒன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா
    குறை ஒன்றும் இல்லை கண்ணா
    நல்ல பதிவு

    ReplyDelete
  12. ஆண்டவா இயற்கையிடம் இருந்து காப்பாத்து

    எதிரிகளை நான் பார்த்துக் கொள்கின்றேன்

    :)

    ReplyDelete
  13. இருப்படிக்கிற இடத்துல இந்த ஈக்கு வேலையில்லை!

    கும்மி அடிக்கும் போது வந்து கலந்துகிறேன்!

    ReplyDelete
  14. இரண்டாம் நாள் வலைச் சர ஆசிரியர் பணிக்கு வாழ்த்துகள்.

    நீங்க சொல்லிய வலைப்பூ எதுவும் இதுவரை பார்த்ததில்லை. நேரம் கிடைக்கும் போது பார்க்கின்றேன்.

    தகவல்களுக்கு நன்றி.

    ReplyDelete
  15. அழகும் மணமும் பயனும் நிறம்பிய
    மலர்களை எடுத்து சரம் தொடுத்துள்ளீர்கள்.

    பொங்கும் மங்களம்
    எங்கும் தங்கட்டும்!

    ReplyDelete
  16. பக்தி மணம் கமழும் சரம்.இறைவனுக்கு படைக்கத் தகுந்த‌து

    ReplyDelete
  17. வாழ்த்துக்கள் இயற்கை.

    ReplyDelete
  18. என் வலைப்பூ தங்களைக் கவர்ந்ததில் மகிழ்ச்சி. இங்கே குறிப்பிட்டதற்கு மிக்க நன்றி

    ReplyDelete
  19. இரண்டாம் நாள் வலைச் சர ஆசிரியர் பணிக்கு வாழ்த்துகள்.

    ReplyDelete
  20. புதிய அறிமுகங்கள் அக்கா..

    ReplyDelete
  21. அருமை... தொடருங்கள்...

    ReplyDelete
  22. எதோ இன்னிக்கு கடவுள் விஷயமா போனதால கும்மிக்கு லீவு விடப்படுகிறது.. !

    எல்லா கடவுளரின் அருளோடு நாளைக்கு இறங்கி கும்மப்படும்..!!

    ReplyDelete
  23. //குறை ஒன்றும் இல்லை !!! said...

    //கடவுளே ..இந்தப் பொண்ணுகிட்ட இருந்து காப்பாத்துன்னு வேண்டனும்ன்னு தோணுமே.//

    அந்த கடவுளே அபப்டி தான் வேண்டிகிட்டு இருக்கிரதா கேள்விப்பட்டேன்!!!//


    ஆமா..நானும் கேள்விப்பட்டேன்..

    நரகத்துல பாவிகளுக்கு தண்டனையா இவங்க ப்ளாகை தான் தினமும் நூறு முறை படிக்க சொல்றாங்களாம்..

    மேலும் தகவலுக்கு நாரதரை அணுகவும்..!!

    ReplyDelete
  24. அறிமுகப்படுத்த உபயோகித்த பாடல்கள் மிக அருமை.

    ரொம்ப பக்தியோ நீங்க? சாமியோட ஆரம்பிக்கிறீங்க?

    ReplyDelete
  25. //
    வாங்க நல்ல மனசுக்காரங்களே..
    //
    இப்டி உசுப்பேத்தி உசுப்பேத்தியே ஒடம்ப ரனகலமாக்கிடுராங்கப்பா..

    ReplyDelete
  26. /விடைபெறுவது... இயற்கை மகள்‌ /


    ரொம்ப சந்தோஷம்...:)

    ReplyDelete
  27. //
    இந்தப் பொண்ணுகிட்ட இருந்து காப்பாத்துன்னு வேண்டனும்ன்னு தோணுமே.. .. எந்த கடவுள்கிட்ட வேண்டறது, எப்படி வேண்டறதுன்னு க‌வலைப்படாதீங்க.. இப்போ நான் ஆன்மீகம் சம்பந்தப்பட்ட வலைப்பூக்களின் விவரங்களைத் தர்றேன்..
    //
    ம்ம்.. எந்த தெய்வத்த வேண்டினாலும் உங்க தொல்லை தீராதுனு குருவி ஜோசியன் சொன்னான்..

    ReplyDelete
  28. எல்லா பூக்களுமே எனக்கு புதியவை.. இயன்றஅளவு சென்று பார்க்கிறேன்.. அறிமுகப்படுத்தியமைக்கு நன்றி..

    ReplyDelete
  29. சொல்ல மறந்துட்டனே..

    இரண்டாம்நாள் வாழ்த்துக்கள்..

    ReplyDelete
  30. /போன பதிவுல இருந்த லிங்க்ல போய் என் வலைப்பூவைப் பார்த்தீங்களா.. இப்போ தெரிஞ்சிட்டு இருப்பீங்க./

    நேத்து நிறைய பேரு இங்க வந்து இருந்தாங்க....இன்னைக்கு ஏன் வரலைன்னு இப்ப தான் தெரியுது:)

    ReplyDelete
  31. //குறை ஒன்றும் இல்லை !!! said...
    //கடவுளே ..இந்தப் பொண்ணுகிட்ட இருந்து காப்பாத்துன்னு வேண்டனும்ன்னு தோணுமே.//

    அந்த கடவுளே அபப்டி தான் வேண்டிகிட்டு இருக்கிரதா கேள்விப்பட்டேன்!!!
    //
    நல்லா ஆரம்பிச்சிட்டீங்களா..ம்ம்ம்

    ReplyDelete
  32. //சின்ன அம்மிணி said...
    சென்டிமென்டா சாமி கும்பிட்டு துவங்கி வைச்சுட்டீங்க :)
    //

    ஆமாங்க. அதையும் காமெடி பண்றாங்க‌ பாருங்க..

    ReplyDelete
  33. வருகைக்கு நன்றிங்க ஆதவன்

    ReplyDelete
  34. நன்றிங்க புதுகைத் தென்றல்

    ReplyDelete
  35. /Suresh Kumar said...
    வலைச்சர ஆசிரியருக்கு வாழ்த்துக்கள்
    / வாங்க சுரேஷ்குமார். வாழ்த்திற்கு நன்றி

    ReplyDelete
  36. /தேவன் மாயம் said...
    ஆர்மபமே பக்தி மணம் கமழுதே!!
    /
    வாங்க டாக்டர். எப்படியோ மனம் விரும்பும் மணமாக இருந்தால் சரி

    ReplyDelete
  37. //தேவன் மாயம் said...
    மனதிற்சலனமில்லாமல், மதி யிலிருலே தோன்றாமல்
    நினைக்கும் பொழுதுநின் மவுனநிலை வந்திட நீ செயல்வேண்டும்
    கனக்குஞ் செல்வம் நூறுவய திவையுந்தர நீ கடவாயே
    கமலா சனத்துக் கற்பகமே//

    நாக்கெல்லால்..ம்,, கொளறுதே!!
    //


    வாய்விட்டுப் படிக்கதீங்க டாக்டர். என்னை மாதிரி மனசுக்குள்ளயே சொலிகோங்க‌:-)

    ReplyDelete
  38. /ஆயில்யன் said...
    //எல்லா கடவுளையும் வேண்டியாச்சா? நல்ல புள்ளங்களா போயி வெலைய பாருங்க//

    ரைட்டு !
    /

    எப்போ போகச்சொல்லுவாங்கன்னு சான்ஸ் பார்த்துட்டு இருக்கீங்களா பாஸ்

    ReplyDelete
  39. /மங்களூர் சிவா said...
    ஆரம்பமே கடவுள் வாழ்த்து :)

    சூப்பர்.
    /
    நன்றிங்க சிவாண்ணா

    ReplyDelete
  40. //S.A. நவாஸுதீன் said...
    இரண்டாம் நாள் வாழ்த்துக்கள்
    //

    இரண்டாம் நாள் நன்றிகள்:-)

    ReplyDelete
  41. /சிட்டுக்குருவி said...
    குறைஒன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா
    குறை ஒன்றும் இல்லை கண்ணா
    நல்ல பதிவு
    /

    மிக மிக நன்றி

    ReplyDelete
  42. //இய‌ற்கை said...

    /ஆயில்யன் said...
    //எல்லா கடவுளையும் வேண்டியாச்சா? நல்ல புள்ளங்களா போயி வெலைய பாருங்க//

    ரைட்டு !
    /

    எப்போ போகச்சொல்லுவாங்கன்னு சான்ஸ் பார்த்துட்டு இருக்கீங்களா பாஸ்//

    ஹாஹாஹா..தெரிஞ்சா சரி..!!

    ReplyDelete
  43. //இய‌ற்கை said...

    //தேவன் மாயம் said...
    மனதிற்சலனமில்லாமல், மதி யிலிருலே தோன்றாமல்
    நினைக்கும் பொழுதுநின் மவுனநிலை வந்திட நீ செயல்வேண்டும்
    கனக்குஞ் செல்வம் நூறுவய திவையுந்தர நீ கடவாயே
    கமலா சனத்துக் கற்பகமே//

    நாக்கெல்லால்..ம்,, கொளறுதே!!
    //


    வாய்விட்டுப் படிக்கதீங்க டாக்டர். என்னை மாதிரி மனசுக்குள்ளயே சொலிகோங்க‌:-)//

    எனக்கு நாக்குலயே சுளுக்கு வந்துடுச்சு..அவ்வ்வ்வ்வ்வ்வ்...!!

    ReplyDelete
  44. //எம்.எம்.அப்துல்லா said...
    ஆண்டவா இயற்கையிடம் இருந்து காப்பாத்து

    எதிரிகளை நான் பார்த்துக் கொள்கின்றேன்

    :)
    //

    உங்கள இந்த ஜென்மத்தில என்கிட்ட இருந்து காப்பத்த முடியாது அண்ணா
    :-))

    ReplyDelete
  45. //வால்பையன் said...
    இருப்படிக்கிற இடத்துல இந்த ஈக்கு வேலையில்லை!

    கும்மி அடிக்கும் போது வந்து கலந்துகிறேன்!
    //

    ஐய்...இன்னிக்கு கும்மி இல்லியே... :-))

    ReplyDelete
  46. /இராகவன் நைஜிரியா said...
    இரண்டாம் நாள் வலைச் சர ஆசிரியர் பணிக்கு வாழ்த்துகள்.

    நீங்க சொல்லிய வலைப்பூ எதுவும் இதுவரை பார்த்ததில்லை. நேரம் கிடைக்கும் போது பார்க்கின்றேன்.

    தகவல்களுக்கு நன்றி.
    /

    இன்னிக்கும் ஹோம்வொர்க் கரெக்டா பண்ணிட்டீங்களா.. வெரிகுட்:‍)
    அருமையான வலைப்பூக்கள். கட்டாயம் பாருங்க‌

    ReplyDelete
  47. /Anonymous said...
    அழகும் மணமும் பயனும் நிறம்பிய
    மலர்களை எடுத்து சரம் தொடுத்துள்ளீர்கள்.

    பொங்கும் மங்களம்
    எங்கும் தங்கட்டும்!
    /

    நன்றிங்க. அப்படியே உங்க பேரையும் போட்டு இருகலாமே

    ReplyDelete
  48. //Anonymous said...
    பக்தி மணம் கமழும் சரம்.இறைவனுக்கு படைக்கத் தகுந்த‌து
    //

    நன்றி..ந‌ன்றி

    ReplyDelete
  49. @ T.V.Radhakrishnan
    வாங்க அண்ணா

    ReplyDelete
  50. நன்றி தாரணி.. வாங்க ..ரொம்ப நாளைக்கப்புறம் வர்றீங்க.

    ReplyDelete
  51. நல்ல வலைப்பூக்கள் அன்பு. கட்டாயம் பாருங்கள்

    ReplyDelete
  52. நன்றிங்க கிருஷ்ணபிரபு

    ReplyDelete
  53. //ரங்கன் said...
    எதோ இன்னிக்கு கடவுள் விஷயமா போனதால கும்மிக்கு லீவு விடப்படுகிறது.. !

    எல்லா கடவுளரின் அருளோடு நாளைக்கு இறங்கி கும்மப்படும்..!!
    //

    கடவுளே.. கடா வெட்ட ரெடியா இருக்காங்களே..:-(

    ReplyDelete
  54. //நரகத்துல பாவிகளுக்கு தண்டனையா இவங்க ப்ளாகை தான் தினமும் நூறு முறை படிக்க சொல்றாங்களாம்..
    //

    ஆமாம் .. அவங்க செஞ்ச பாவத்தைக் குறைக்க‌

    ReplyDelete
  55. /ஜோசப் பால்ராஜ் said...
    அறிமுகப்படுத்த உபயோகித்த பாடல்கள் மிக அருமை.

    ரொம்ப பக்தியோ நீங்க? சாமியோட ஆரம்பிக்கிறீங்க?
    /

    நன்றிங்க‌

    பக்தியும் இருக்கு

    ReplyDelete
  56. //இய‌ற்கை said...

    //ரங்கன் said...
    எதோ இன்னிக்கு கடவுள் விஷயமா போனதால கும்மிக்கு லீவு விடப்படுகிறது.. !

    எல்லா கடவுளரின் அருளோடு நாளைக்கு இறங்கி கும்மப்படும்..!!
    //

    கடவுளே.. கடா வெட்ட ரெடியா இருக்காங்களே..:-(//

    கடா மட்டுமில்லை.. கும்மி..கும்மியடித்தல், கும்மலாட்டம், கும்மி தாண்டி, இப்படி பல போட்டிகள் நடத்தி “விழாவை சிறப்பிக்க” போறோமே.!!

    ReplyDelete
  57. /सुREஷ் कुMAர் said...
    //
    வாங்க நல்ல மனசுக்காரங்களே..
    //
    இப்டி உசுப்பேத்தி உசுப்பேத்தியே ஒடம்ப ரனகலமாக்கிடுராங்கப்பா..
    /

    ஹி..ஹி..கண்டுபிடிச்சிட்டீங்களா

    ReplyDelete
  58. /நிஜமா நல்லவன் said...
    /விடைபெறுவது... இயற்கை மகள்‌ /


    ரொம்ப சந்தோஷம்...:)
    /

    பாஸ்.. யூ டூ... நீங்க எவ்ளோ நல்லவரு.. இப்பிடி சொல்லல்லாமா

    ReplyDelete
  59. /सुREஷ் कुMAர் said...
    //
    இந்தப் பொண்ணுகிட்ட இருந்து காப்பாத்துன்னு வேண்டனும்ன்னு தோணுமே.. .. எந்த கடவுள்கிட்ட வேண்டறது, எப்படி வேண்டறதுன்னு க‌வலைப்படாதீங்க.. இப்போ நான் ஆன்மீகம் சம்பந்தப்பட்ட வலைப்பூக்களின் விவரங்களைத் தர்றேன்..
    //
    ம்ம்.. எந்த தெய்வத்த வேண்டினாலும் உங்க தொல்லை தீராதுனு குருவி ஜோசியன் சொன்னான்..
    /

    இந்த தொல்லைக்கு காரணம் யார்ன்னு எல்லாருக்கும் சொல்லட்டுமா ?:-)))

    ReplyDelete
  60. //सुREஷ் कुMAர் said...
    எல்லா பூக்களுமே எனக்கு புதியவை.. இயன்றஅளவு சென்று பார்க்கிறேன்.. அறிமுகப்படுத்தியமைக்கு நன்றி..
    //

    இது நல்ல புள்ளக்கி அடையாளம்

    ReplyDelete
  61. /सुREஷ் कुMAர் said...
    சொல்ல மறந்துட்டனே..

    இரண்டாம்நாள் வாழ்த்துக்கள்..
    /

    சொல்ல மறந்துட்டனே..நன்றி

    ReplyDelete
  62. /நிஜமா நல்லவன் said...
    /போன பதிவுல இருந்த லிங்க்ல போய் என் வலைப்பூவைப் பார்த்தீங்களா.. இப்போ தெரிஞ்சிட்டு இருப்பீங்க./

    நேத்து நிறைய பேரு இங்க வந்து இருந்தாங்க....இன்னைக்கு ஏன் வரலைன்னு இப்ப தான் தெரியுது:)
    /

    நல்லவர்ன்னு பேர் வச்சிகிட்டு ....இதெல்லாம் சரியே இல்ல பாஸ்

    ReplyDelete
  63. /ரங்கன் said...
    //இய‌ற்கை said...

    /ஆயில்யன் said...
    //எல்லா கடவுளையும் வேண்டியாச்சா? நல்ல புள்ளங்களா போயி வெலைய பாருங்க//

    ரைட்டு !
    /

    எப்போ போகச்சொல்லுவாங்கன்னு சான்ஸ் பார்த்துட்டு இருக்கீங்களா பாஸ்//

    ஹாஹாஹா..தெரிஞ்சா சரி..!!
    /

    ஒய் திஸ் மர்டர்வெறி மிஸ்டர் ரங்கா

    ReplyDelete
  64. கடவுளே.. கடா வெட்ட ரெடியா இருக்காங்களே..:-(//


    ரங்கன் said...
    கடா மட்டுமில்லை.. கும்மி..கும்மியடித்தல், கும்மலாட்டம், கும்மி தாண்டி, இப்படி பல போட்டிகள் நடத்தி “விழாவை சிறப்பிக்க” போறோமே.!!//

    அறிமுகப்படுத்தற வலைப்பூக்களப் பாருங்கப்பு.. யாரைப் போட்டுத் தள்ளலாம்ன்னு யோசிச்சிகிட்டு

    ReplyDelete
  65. //இய‌ற்கை said...

    கடவுளே.. கடா வெட்ட ரெடியா இருக்காங்களே..:-(//


    ரங்கன் said...
    கடா மட்டுமில்லை.. கும்மி..கும்மியடித்தல், கும்மலாட்டம், கும்மி தாண்டி, இப்படி பல போட்டிகள் நடத்தி “விழாவை சிறப்பிக்க” போறோமே.!!//

    அறிமுகப்படுத்தற வலைப்பூக்களப் பாருங்கப்பு.. யாரைப் போட்டுத் தள்ளலாம்ன்னு யோசிச்சிகிட்டு//

    அதெல்லாம் பண்ணிட்டு தான் இருக்கோம்.. ஆனாலும் கும்மியை கைவிட என்னமோ மன்ஸே வர்லை..!!

    ReplyDelete
  66. உலா வரும் ஒளிக்கதிர் அப்படி ஒரு நிகழ்ச்சி தூர்தர்ஷனில் வரும். அதை நினைவு படுத்தி விட்டது...

    பக்தி மணம்..

    நல்லாயிருக்கு...

    ReplyDelete
  67. அன்பின் இயறகை மகள்

    அருமையான அறிமுகங்கள் - அனைத்தும் ஆன்மீகப் பதிவுகள் - தேடிப் பிடித்துப் போடப்பட்ட இடுகைகள் - எல்லாக்கடவுள்களின் அருளும் கிட்ட நல்வாழ்த்துகள்

    ஒவ்வொண்னையும் போய்ப் பாத்தேன் - சிவமுருகனைத் தவிர அனைத்துமே புதியவை.

    இரண்டாம் நாள் நல்வாழ்த்துகள் ராஜி

    ReplyDelete
  68. மிக அரிய செய்திகள்.

    ReplyDelete
  69. பக்தி முத்திப்போச்சுன்னு சொல்லுவாங்களே அப்பிடியா ராஜி?

    :))))

    இதுவரைக்கும் படிச்சே இல்லாத வலைப்பூக்கள் அறிமுகத்துக்கு நன்றி ராஜி

    ReplyDelete
  70. நன்று நன்றி

    ReplyDelete
  71. இறைவனடிமைWed Oct 21, 07:34:00 AM

    இறைவனிடம் கையேந்துங்கள்.அவர் இல்லையென்று சொல்லுவதில்லை

    ReplyDelete
  72. குறை ஒன்றும் இல்லை என்று வலைச்சரப் பணியை துவக்கியுள்ள இயற்கைப் மகளுக்கு வாழ்த்துக்கள். தங்கள் தொகுப்புகள், வலைப்பூ எல்லாம் அருமை. நட்சத்திரமாக ஒளிர வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  73. எனது பதிவையும் அறிமுகம் செய்தமைக்கு நன்றிகள். வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  74. ம்ம்..உங்க திருப்திக்கு கும்மியாச்சா ரங்கன். இப்போ நிம்மதியா

    ReplyDelete
  75. //butterfly Surya said...
    உலா வரும் ஒளிக்கதிர் அப்படி ஒரு நிகழ்ச்சி தூர்தர்ஷனில் வரும். அதை நினைவு படுத்தி விட்டது...

    பக்தி மணம்..

    நல்லாயிருக்கு...
    //

    மறை(ற) ந்துபோன ஒரு நிகழ்ச்சியை நினைவூட்டியதற்கு நன்றி

    ReplyDelete
  76. /cheena (சீனா) said...
    அன்பின் இயறகை மகள்

    அருமையான அறிமுகங்கள் - அனைத்தும் ஆன்மீகப் பதிவுகள் - தேடிப் பிடித்துப் போடப்பட்ட இடுகைகள் - எல்லாக்கடவுள்களின் அருளும் கிட்ட நல்வாழ்த்துகள்

    ஒவ்வொண்னையும் போய்ப் பாத்தேன் - சிவமுருகனைத் தவிர அனைத்துமே புதியவை.

    இரண்டாம் நாள் நல்வாழ்த்துகள் ராஜி/


    மிக்க‌ ந‌ன்றி. நீங்க‌ள் அளித்த‌ ப‌ணியை நீங்க‌ள் ம‌கிழ்வுறும் வ‌கையில் செய்கிறேன் என்ப‌தில் ம‌கிழ்ச்சி

    ReplyDelete
  77. /Anonymous said...
    மிக அரிய செய்திகள்/

    / Anonymous said...
    நன்று நன்றி

    /

    நன்றி

    ReplyDelete
  78. /
    பிரியமுடன்...வசந்த் said...
    பக்தி முத்திப்போச்சுன்னு சொல்லுவாங்களே அப்பிடியா ராஜி?

    :))))

    இதுவரைக்கும் படிச்சே இல்லாத வலைப்பூக்கள் அறிமுகத்துக்கு நன்றி ராஜி/



    இப்பிடி சொல்லிட்டீங்களே வ‌ச‌ந்த்..இப்பிடி சொல்லிட்டீங்களே:‍))

    ReplyDelete
  79. /இறைவனடிமை said...
    இறைவனிடம் கையேந்துங்கள்.அவர் இல்லையென்று சொல்லுவதில்லை
    /


    வாருங்க‌ள். த‌ங்க‌ள் க‌ருத்துக்கு ந‌ன்றி

    ReplyDelete
  80. /Kailashi said...
    குறை ஒன்றும் இல்லை என்று வலைச்சரப் பணியை துவக்கியுள்ள இயற்கைப் மகளுக்கு வாழ்த்துக்கள். தங்கள் தொகுப்புகள், வலைப்பூ எல்லாம் அருமை. நட்சத்திரமாக ஒளிர வாழ்த்துக்கள்./


    ந‌ன்றி

    ReplyDelete
  81. /சந்ரு said...
    எனது பதிவையும் அறிமுகம் செய்தமைக்கு நன்றிகள். வாழ்த்துக்கள்./


    ந‌ன்றி

    ReplyDelete
  82. வாழ்த்துக்கள் இயற்கை.

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது