07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது
Showing posts with label இய‌ற்கை ம‌க‌ள். Show all posts
Showing posts with label இய‌ற்கை ம‌க‌ள். Show all posts

Sunday, October 25, 2009

நன்றி சொல்லும் நேரம்




நன்றி ... வணக்கம்
மேலும் வாசிக்க...

Saturday, October 24, 2009

இசை என்னும் இன்ப வெள்ளம்

வணக்கம்.ஒரே சந்தோஷமா இருக்கீங்களா எல்லாரும்..ம்ம்..ந‌ல்லது.அப்படியே இருந்துகோங்க.மகிழ்ச்சியோ,கவலையோ இசை எதற்கும் இனியது.இன்னிக்கு இசை விருந்து தயாரா இருக்கு.

எங்கேன்னு பாக்கறீங்களா?
இதோ இங்கே தான்.

ரேடியோஸ்பதி
தேன்கிண்ணம்



இந்த ரெண்டு வலைப்பூவைப் பத்தியும் நான் பேசப் போறதில்லை,ஏன்னா அந்த இசையின் இனிமையே உங்களோட பேசும்.அதன் சிறப்பை உணர்த்தும்.

கேளுங்க..கேளுங்க..கேட்டுகிட்டே இருங்க‌


இசையைக் காதால ரசிப்பதில்லாமல் கண்ணாலும் இரசிக்கவேண்டுமா?இங்கே இருக்கு கண்களுக்கும் விருந்து

வீடியோஸ்பதி

தட்ஸ் ஆல் மக்கள்ஸ்..

என்சாயிங்கோ
மேலும் வாசிக்க...

Friday, October 23, 2009

வானவில்

வணக்கம்.. வந்தனம்.வார இறுதி வந்தாச்சு.இந்த வாரம் இனிய வாரமாய்க் கழிந்திருக்கும் அப்படின்னு நம்பறேன். வார இறுதி வந்தாலே வேலை கொஞ்சம் குறையும்ன்னு நினைக்கிறேன். அதனால நம்க்கு கொஞ்சம் ஃப்ரீடைம் கிடைக்கும்.அப்போ நம்ம வலைப்பூவில மராமத்து வேலை எல்லாம் பார்க்கலாம்.அதுக்கான சில வழிகள் சொல்றேன்.படிங்க‌
இப்போ வலைப்பூவை எப்படில்லாம் அழகுபடுத்தலாம்ன்னு சில வழிகள் பார்ப்போமா?(எனக்குத் தெரிஞ்சதைத் சொல்றேன்.அது உங்களுக்கு ஏற்கனவே தெரிஞ்தும் இருக்கலாம்.டென்சனாகக் கூடாது)
அழ‌குப‌டுத்த‌ற‌துல‌ முத‌ல் வ‌ழி டெம்ப்ளெட் மாத்த‌ற‌து.ஆயிர‌க்க‌ண‌க்கான‌ டெம்ப்ளெட்ஸ் இருக்குங்க‌.அதெல்லாம் எங்க‌ தேட‌றதுன்னு பார்ர்க்றீங்க‌ளா..இதோ கீழே இருக்க‌ லிங்க்ல‌ கிளிக் ப‌ண்ணுங்க‌
http://freetemplates.blogspot.com/
http://www.finalsense.com/services/blog_templates/
http://www.bloggertemplatesfree.com/
http://blogger-templates.blogspot.com/
http://btemplates.com/
http://www.ourblogtemplates.com/#
http://www.pyzam.com/bloggertemplates
http://freeblogger-templates.blogspot.com/

இப்பொ டெம்ப்ளெட் மாத்தியாச்சி.அடுத்து லேஅவுட்ல‌ என்ன‌ அல‌ங்கார‌ம் ப‌ண்ண சில‌ கேட்ஜெட் இணைக்க‌லாம்.அது என்ன‌ன்னா
1,ப‌ல ஓடும் மீன்க‌ளை கொண்ட‌ மீன் தொட்டி
2.ஒரு பெரிய‌ மீன்
3.ஏதேனும் ஒரு நிக‌ழ்ச்சிக்கான‌ க‌வுண்ட்ட‌வுன் கிளாக்
4.அல்லது பென்குயின் வ‌ள‌ர்க்க‌லாம்.
5.ப‌ல மொழி சேன‌ல்க‌ளைக் கொண்ட‌ இணைய‌ ரேடியோ கூட‌ இருக்கு. (http://www.gmodules.com/ig/creator?synd=open&hl=en&url=http://www.tamilmp3thunder.com/gadget/tamilradio.xml)
லேஅவுட்ல add gadget கிளிக் ப‌ண்ணினீங்க‌ன்னா இது மாதிரி ப‌ல‌ மாட‌ல்க‌ள் இருக்கு.

மேலும் உங்க பிளாக்ல‌ டி.வி, ரேடியோ போன்ற‌வ‌ற்றையும் இணைக்க‌லாம்.

உங்க பிளாக்ல ஒரு சினிமா ஓடிட்டே இருக்கணும்ன்னு நெனச்சீங்கன்னா அதுக்கு கூட இலவச கேட்ஜெட் இருக்கு


டி.வி,ரேடியோ எல்லாம் இணைக்கும்போது,அதில இருக்க autoplay mode ல இணைக்காதீங்க. ஆபிஸ்ல உங்க வலைப்பூவைத் திறந்தா, அது சத்தமா பாடி, ஊருக்கே காட்டிக் கொடுத்துடும். அப்புறம் இல்ல‌ன்னா உங்க பிளாக்கைத் திறக்கவே எல்லாரும் பயப்படுவாங்க‌.
இதையெல்லாம் இணைப்பதால் உங்கள் வலைப்பூ திறக்க எடுக்கும் நேரம் அதிகரிக்கலாம்.ஆனால் சில குறிப்பிட்ட டெம்ப்ளெட்டுகளில் இந்த நேர அதிகரிப்பும் இருப்பதில்லை. அது எந்த டெம்ப்ளெட்டுன்னு கண்டுபிடிக்கறதுதான் கஷ்டம்.

வ‌லையுல‌க‌த்தில‌ முக்கிய விஷ‌ய‌ம் விருதுக‌ள். நிறைய‌ விருதுக‌ள் வாங்கினா எல்லாத்தையும் பிளாக்ல‌ போட‌ இட‌ம் போதாது. போட‌லைன்னா அதைத் த‌ந்த‌வ‌ங்க‌ளுக்கு ம‌ரியாதையா இருக்காது. அதுக்கான‌ ஒரு வ‌ழி.

http://www.slide.com/arrange?bc=17612&fx=3&tt=11&sk=4&cy=bb&th=23&sc=17இந்த‌ ஸ்லைட் ஷோ. விருதுக‌ள் எல்லாத்தையும் இதுல இணைச்சி பிளாக்ல‌ போட்டுட‌லாம்.

என‌க்குத் தெரிஞ்ச‌ சில‌ சில‌ டிப்ஸ் சொல்லியிருக்கேன். தேவையானப்போ ப‌ய‌ன்படுத்திக்கோங்க‌. ஆனால் ஒரு முக்கிய‌ விஷ‌ய‌ம்.வெளி லிங்க்ல இருந்து எதை உங்க பிளாக்ல போட்டாலும் அதோட copyright form நல்லா படிச்சிகோங்க‌

சரி.. இப்போ வலைப்பூ அறிமுகத்துக்குப் போவோமா
இன்னிக்கு பல துறை வலைப்பூக்களையும் கலந்து தரப்போறேன்.
அதெல்லாம் என்னன்னு பாருங்க‌

கல்வி

பல நாடுகளிலும் பல்வேறு துறைக் கல்வி வாய்ப்புகளையும், வேலை வாய்ப்புகளையும் தரும் வலைப்பூ இது
http://enippadigal.blogspot.com/

MBA படிப்பைப் பற்றிய அனைத்து விவரங்களையும் அறிய இங்கே கிளிக்கலாம்
http://biriyaani.blogspot.com/2009/10/mba-3.html

நகைச்சுவை

சிரிக்கணுமா..இங்கே படியுங்க. நல்லாவே சிரிக்கலாம்
http://error007.blogspot.com/2009/10/blog-post_558.html

பழமொழி

பழமொழி சொல்ல பெரியவங்க யாரும் இல்லையேன்னு கவலையா..இதோ இங்கே தெரிஞ்சிகோங்க எல்லா வகைப் பழமொழியும்
http://eegaraikumar.blogspot.com

அறிவியல்
அறிவியல் அறிய‌
http://ariviyalpoo.blogspot.com/
http://puthumaitech.blogspot.com
http://pinnalnagaran.blogspot.com/2009/09/blog-post.html

சினிமா

திரைத்துறை செய்திகளுக்கு இங்கேயும் போகலாம்
http://puthumaicine.blogspot.com/

வைத்தியம்
திடீர் திடீர்ன்னு வர்ற உடல் நலக்குறைவுக்கு கைவைத்தியம் வேணுமா..
இதோ இருக்கு சில வலைப்பூக்கள்


இதில் கைவைத்தியம் சொல்லாத நோய்கள் இன்னும் கண்டுபிடிக்கப்படவேயில்லையோ?
http://maruththuvam.blogspot.com/

இந்த‌ வ‌லைப்பூவின் பெய‌ரே பாட்டிவைத்திய‌ம் தான்..பாருங்க‌.எப்ப‌டி உப‌யோக‌ப்ப‌டுதுன்னு
http://paadivaittiyam.blogspot.com/2009/10/blog-post_07.html


சமையல்

நல்ல உணவைச் சாப்பிட்டா வைத்தியம் பண்ற தேவையே வராதுங்க.அப்படியான நல்ல உணவை சுவையா சமைப்பது எப்படி?
லேகியத்திலிருந்து மைக்ரோவேவ் சமையல் வரை அனைத்தும் உண்டு.வாருங்கள்.
http://annaimira.blogspot.com/

பப்பாளி அல்வா செஞ்சிருக்கீங்களா?
http://geetha.wordpress.com/2008/05/02/papaya-halwa/

பேச்சிலர் சமையலுக்கும் சமையல் குறிப்பு வந்தாச்சே..
http://samaiyalsamaiyal.blogspot.com/

எல்லார் சமையலும் கலந்த சமையல் வலைப்பூ திரட்டி வேண்டுமா? இதோ இங்கே
http://thamizhcooking.blogspot.com/

சமையல் பதிவுகளைப் பார்த்தே வயிறு நிறைஞ்டிடுச்சா..சரி..போய் ஓய்வு எடுங்க:‍))


பதிவு கொஞ்சம் பெரிசாத்தான் போச்சோ?
ம்ம்ம்ம்..என்ன பண்றது? வானவில்ன்னா பெரிசாத்தான் இருக்கும்..
ஒ.கே மக்கள்ஸ்.என்சாய் த வார இறுதி.. மீண்டும் சந்திக்கிறேன்
மேலும் வாசிக்க...

Thursday, October 22, 2009

கவிஞர்களும் கதைஞர்களும் - தொடர்கிறது

வாங்க.வணக்கம். அப்பாடி. ஒரு வழியா நாலாவது நாளா உங்களையெல்லாம் நான் எழுதறதைப் படிக்க வச்சிட்டேன்.வலையுலகில் பெரும்பாலானோரின் எழுத்து கதை, கவிதை சார்ந்தே இருப்பதால் கவிஞர்களும் கதைஞர்களும் பற்றிய அறிமுகத்தை நேத்தேமுடிக்க முடியாம போச்சு. அதனால இன்னிக்கும் அதே தொடர்கிறது. நேத்து கதை சொல்லி அறிமுகங்களை ஆரம்பிச்சேன். இன்னிக்கு என்ன சொல்றது? ம்ம்ம்..கவிதை.எழுதலாமா.

வேணாம். எதுக்கு ரிஸ்க்.இங்க மிக நல்ல கவிஞர்க‌ளோட கவிதைகள் எல்லாம் படிக்கறீங்க.இங்கோ போய் நான் ஏன் கவிதை சொல்லணும்.

இன்னிக்கு நான் ரசிச்ச சில SMS சொல்றேன். நீங்களும் இரசியுங்க.

முதல்ல எல்கேஜி கிளாஸ் குழந்தைகளைப் பற்றி:


ஒரு ஸ்கூல்ல விழாவாம்.விழாவுக்காக நிறைய சாக்லெட்ஸ்,பழங்கள் எல்லாம் வச்சிருந்தாங்களாம். குழந்தைங்க அதை எடுத்து சாப்டாம இருக்க சாக்லெட்ஸ் மேல "யாரும் பார்க்கவில்லை என‌ இதைக் எடுக்க முயற்ச்சிக்காதீர்கள். கடவுள் இதைப் பார்த்துக் கொண்டு இருக்கிறார் "அப்படின்னு எழுதி ஒரு அட்டை வச்சிருந்தாங்களாம்.
அதைப் பார்த்து எந்தக் குழந்தையும் அதை எடுக்கலியாம். அங்க‌ இருந்த ஒரு அறிவான என்னை மாதிரி குழந்தை‌ வேக‌வேக‌மா போயி அங்க‌ இருந்த‌ இன்னொரு அட்டையை எடுத்து " ந‌ண்பர்க‌ளே. க‌ட‌வுள் சாக்லெட்டுக‌ளைப் பார்த்துக் கொண்டிருக்கிறார்.அத‌னால் நீங்க‌ள் தேவையான‌ ப‌ழ‌ங்க‌ளை எழுத்துக் கொள்ளுங்க‌ள்." அப்ப‌டின்னு எழுதி பழக்கூடையில வ‌ச்சிடுச்சாம்.(க‌ஷ்ட‌ம்டா சாமி இந்த‌ குட்டீஸோட‌)


இன்னொரு பாப்பா எல்லா ப‌ரிச்சைல‌யும் முட்டை மார்க் வாங்கிட்டு வ‌ந்துச்சாம். ரிப்போர்ட் கார்ட் பாத்துட்டு அவ‌ங்க‌ அப்பா கேட்டார‌ம்.என்ன‌ இப்பிடி வாங்கியிருக்கென்னு.அதுக்கு அந்த‌ பாப்பா சொல்லிச்சாம்.. அப்பா..எல்லாருக்கும் ஸ்டார் குடுத்து டீச்ச‌ர் கிட்ட‌ ஸ்டார் தீர்ந்துபோச்சு.அத‌னால‌ எனக்கு மூன்(moon)குடுத்து இருக்காங்க‌.( இதுக்கு மேல‌ அப்பா பேசுவாருங்கிறீங்க‌?)

இன்னொரு அருமையான‌ SMS . ஒரு பாச‌க்கார‌ ஃப்ர‌ண்ட் என‌க்கு அடிக்க‌டி அனுப்ப‌ற‌து..

நான் தின‌மும் காலைல‌ எழுந்ததும் க‌ட‌வுளை வேண்ட‌றது, க‌ட‌வுளே.. ராஜிய‌ மாதிரி ஃப்ர‌ண்ட் உல‌க‌த்துல எல்லாருக்கும் கொடு.


நான் ம‌ட்டுமே எத்த‌னை நாளைக்கு கொடுமையை அனுப‌விக்கிற‌து


(ம்ம்..இதுகளையெல்லாம் தோழியா வச்சிருக்க நான் எங்கே போய் என் சோகத்தைச் சொல்றது)


ஒகே..மொக்கை போதும்.இப்போ வலைப்பூ அறிமுகத்துக்குப் போகலாம்
அருமையான கவிதைகளை எழுதும் அன்பான தோழி இவர். நான் சில நேரத்துல கவிதைங்கிற பேர்ல கிறுக்கறேன்னா அதுக்கு இன்ஸ்பிரேஷன் இவங்க தான். இவர் வலைப்பூவைப் பாருங்க. மயக்கும் கவிதைகளுக்கு நான் கியாரண்டி
http://padhumai.blogspot.com

"அப்பா"இந்த‌ ஒரு வார்த்தையே ஆயிர‌ம் க‌விதைக‌ள் சொல்லும்போது,அவ்வார்த்தைக்காகவே எழுதிய‌ க‌விதை எவ்வ‌ள‌வு அருமையாக‌ இருக்கும்? பாருங்க‌ள் இங்கே
http://thennavan-sri.blogspot.com/2009/09/blog-post_17.html

சுபா சில‌ க‌விதைக‌ள் எழுதினாலும் சும்மா "ந‌ச்"ன்னு இருக்கும்.
http://entamilulagam.blogspot.com/search/label/%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88

சில‌ க‌தைஞர்க‌ளைப் பார்க்க‌லாமா

இவ‌ங்க‌ளோட‌ திகில் க‌தைய‌ இர‌வுல‌ ப‌டிக்காதீங்க‌.அப்புறம் ப‌ய‌ந்துருவீங்க‌. ரொம்ப‌ திகிலாஇருக்கும்.
http://tamilpoongga.blogspot.com/search/label/%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88


இவ‌ங்க‌ எழுத‌ற‌ ப‌திவு எல்லாமே குட்டி குட்டி சி(ரி)க‌தைக‌ள் போல‌த் தான் இருக்கும்.பேர் ஒன்றே போதும் இவங்களப் பத்தி தெரிஞ்சிக்க. அப்படி என்ன பேர்ன்னு கேக்கறீங்களா? ராஜி தான் இவங்க பேரும்
http://rajisays.blogspot.com/

கவுன்டர்(counter) வசனங்களுக்குப் பேர் போன இந்த வலையுலகில் கவுண்டர் (gounder) வசனங்களால் பேர் வாங்கியவர் இவர். குறை ஒன்றும் இருக்காது.பாருங்கோ..
http://yellorumyellamum.blogspot.com/

வாழ்க்கைப்பாட‌த்தைக் க‌தைக‌ளின் மூல‌ம் விள‌க்க‌ முய‌ல்கிறார். பாருங்க‌ள். நிச்ச‌ய‌மாய்ப் பிடிக்கும்
http://hellorayar.blogspot.com

ஐ.டி. வாழ்க்கையை அழ‌காய்க் க‌ண்முன் கொண்டுவ‌ரும் க‌தைக‌ள் இவ‌ருடையது
http://muthumalla.blogspot.com/

எல்லாப் பதிவும் பார்த்திட்டீங்களா? நல்லாவே இருந்திருக்கும்ன்னு நம்பறேன்.
இப்போ போயிட்டு அப்புறமா அடுத்த பதிவோட வர்றேன்.

அதுவரை வணக்கம் கூறி விடைபெறுவது இயற்கைமகள்‌
மேலும் வாசிக்க...

Wednesday, October 21, 2009

கவிஞர்களும் கதைஞர்களும்

வாங்க மக்களே.. வணக்கம்.. ரெண்டு நாளா எதை எதையோ பத்தி எழுதிட்டு, தீபாவளிக்கு வாழ்த்துக்கள் சொல்லாமயே விட்டுட்டேன்..
தீபாவளி வாழ்த்துக்கள் மக்களே..
அட..ஏன் கோபப்படறீங்க .. தீபாவளி லீவெல்லாம் முடிஞ்சி ஆபீஸ்ல வந்து சோகமா உக்கார்ந்து இருக்கற நாள்ல வந்து வாழ்த்து சொல்றேனேன்னு தானே கோபம்.ம்ம்.உங்க கோபம் நியாயம்தான்.ஆனா வாழ்த்தாம எப்படி விடறது..அதனால‌தான் வாழ்த்திட்டேன்...
இப்பிடித்தாங்க சில பேர் எந்த நேரத்துல எதைப்பேசறதுன்னு தெரியாம..என்னை மாதிரி வம்புல மாட்டிகறாங்க.. அது எப்படின்னு நான் ஒரு கதை சொல்றேன் கேட்கறீங்களா?(மாட்டேன்னு யாரும் சொல்லப்படாது)
ஒரு பெரியவர் ஒரு சின்ன கிராமத்துக்குப் போக வேண்டி இருந்துச்சாம்.பஸ் எத்தனை மணிக்கு வரும்ன்னு தெரியாததால அவர் பேரனைக் கூப்பிட்டு பஸ் ஸ்டாண்ட்ல போயி "பஸ் எப்போ வரும்ன்னு கேட்டுட்டு வா" அப்படின்னு சொன்னாராம்.
பேர‌ன் "சரி"ன்னு சொல்லிட்டு ப‌ஸ்ஸ்டான்ட்ல‌ போயி கேட்டானாம்..4 ம‌ணிக்கு வ‌ரும்ன்னு சொன்னாங்க‌ளாம்..
ந‌ம்ம‌ ப‌ய‌தான் வாலுப் ப‌ய‌லேச்சே.. சும்மா இருப்பானா..
" 4 ம‌ணிக்கு வ‌ரும்"" 4 ம‌ணிக்கு வ‌ரும்"ன்னு க‌த்திகிட்டே..வீட்டுக்கு வ‌ந்தானாம்..
வ‌ர்ற‌ வ‌ழியில‌ ஒரு ம‌ண்பானை செய்ய‌ற‌வ‌ர்.. பானையெல்லாம் செஞ்சி வெயில்ல காய‌வ‌ச்சிகிட்டு இருந்தாராம்.மேகம் அப்போ அப்போ வந்து போய்கிட்டு இருந்துச்சாம்.. ம‌ழை வ‌ந்திர‌க்கூடாதே.. பானையெல்லாம் வீணாயிடுமேன்னு கவலைப் பட்டுட்டு இருந்தாராம்.
அந்த‌ வ‌ழியா ந‌ம்ம‌ ஹீரோ 4 ம‌ணிக்கு வ‌ரும்ன்னு க‌த்திட்டு வ‌ந்தாராம்.எப்ப‌டி இருக்கும் அந்த ம‌னுச‌னுக்கு..கூப்ட்டு ந‌ம்ம‌ ஹீரோவை "ந‌ல்லா க‌வ‌னிச்சு"..(மேகம்)உள்ளதும் போயிடும்ன்னு சொல்லுன்னு மிர‌ட்டினாராம். உட‌னே பைய‌ன்
உள்ளதும் போயிடும்ன்னு க‌த்த‌ ஆர‌ம்பிச்சுட்டான்..
அடுத்து வ‌ழில‌..ஒருத்த‌ர் க‌ண் சிகிச்சை செஞ்சுகிட்டு ..க‌ண் நல்லாத் தெரிய‌ணுமேன்னு க‌ட‌வுள‌ வேண்டிகிட்டே வ‌ர்றார்.அவ‌ர் முன்னாடி போயி.."(பார்வை)உள்ளதும் போயிடும்"ன்னு கத்தினா என்ன ஆகும்..ம்ம்.. ஹிஸ்ட‌ரி ரிப்பீட்ஸ் மாதிரி.. மிர‌ட்ட‌ல் ரிப்பீட்ட‌ட்.. நல்லாத் தெரியும்ன்னு சொல்லுன்னு சொல்லி அனுப்பி வ‌ச்சாராம்.பைய‌ன்.. ந‌ல்லாத் தெரியும்ன்னு க‌த்திட்டே வ‌ந்தானாம்.(( ப‌ய‌புள்ள‌ இத்த‌னைக்கும் க‌த்த‌ற‌த‌ ம‌ட்டும் விட‌ல‌.. இதைப்போட்டு சாத்தினா த‌ப்பே இல்ல‌))

இப்போ எதிர்ல‌ வ‌ந்த‌து திருட்டுப் பொருட்களோட ஒரு திருட‌ன்.திருடின‌து யாருக்கும் தெரிய‌க்கூடாதுங்க‌ற‌ க‌வ‌லையோட‌...இப்போ அவ‌ர் முன்னாடி பைய‌ன் போயி " ந‌ல்லாத் தெரியும்"ன்னு க‌த்தினான். அப்புறம் என்ன‌.. வ‌ழ‌க்க‌மான‌ க‌வ‌னிப்போட‌.. ட‌ய‌லாக்.. "ஒண்ணும் தெரியாது"ன்னு மாற்றப்ப‌ட்ட‌து. வீட்டுக்குப் போனான் தாத்தாகிட்ட‌ போயி ஒண்ணும் தெரியாதுன்னு சொன்ன்னான். ம்ம்.. அப்புற‌ம் என்ன‌.. தாத்தாகிட்ட‌யும்..ஸ்டார்ட் மீஜிக்தான் .. தேவையில்லாத‌ நேர‌த்துல‌.. தேவையில்லாத‌த‌ப் பேசினா இப்பிடித்தாங்க‌ ஏடாகூட‌மா ஏதாச்சும் ந‌ட‌க்கும்

இப்படியெல்லாம் நேரம் காலம் தெரியாம உளராம சொல்ல வர்ற கருத்தை அனைவரும் ஈர்க்கும் சொற்களோடு,எளிதில் புரியும் வகையிலும்,விரும்பப்படும் வகையிலும் சொல்வதே கதையும்,கவிதையும். இதைப் போன்ற சிறந்த கதாசிரியர்களும்,கவிஞ‌ர்களும் வலையுலகில் மிக அதிகம்.அவர்களில் சிலரின் வலைப்பூவை இங்கே காணலாம்.

எல்லாரும் அதிகமா காதல் கவிதைகள் படிச்சிருப்பீங்க.மொழிப்பற்று,நாட்டுப்பற்று இதைப் போன்ற கவிதைகள் படிச்சிருக்கலாம். ஆனா இவர் எழுதியிருக்க கவிதையப் பார்த்தா டைட்டில்லயே டெரர் ஆகுதுங்க. நீங்களும் படிங்க. பயந்திராதீங்க‌
http://konjumkavithai.blogspot.com/2009/10/blog-post_19.html

ஆத்திச்சூடியை மாத்தித் தந்திருக்கிறார் இவர்
http://vijaykavithaigal.blogspot.com/2009/09/2009.html.இதுமட்டுமல்ல‌ காதல் கவிதைகள் முதல் கண்ணீர்க்கவிதைகள் வரை அனைத்தும் உண்டு இவ்வலைப்பூவில்

ஒரு மீனவ குடும்பத்தின் வாழ்வைச் சொல்லுவதாய் எழுதப்பட்ட இக்கவிதை கடல் கடந்து குடும்பத்தைப் பிரிந்து வாழும் எவருக்கும் பொருந்ந்துவதாய் இருப்பது சிறப்பு http://keerthyjsamvunarvugal.blogspot.com/2009/10/blog-post_392.html


உதவிகள் இன்றியும் உண்ணால் முடியும்
உழைக்க ஏனோ தயங்குகிறாய்...
த‌ன்ன‌ம்பிக்கையைத் தூண்டும் அரிய‌ க‌விதையின் சில‌ வ‌ரிக‌ள் இவை.மேலும் ப‌டிக்க‌ கீழே கிளிக்குங்க‌ள்
http://aazhmana-alaigal.blogspot.com/2009/09/blog-post_24.html

ஆறாந்திணை என்னும் த‌லைப்பில் ஐவ‌கை நில‌ங்க‌ளின் இய‌ல்போடு இவ‌ர் எழுதும் க‌விதைக‌ள் அபார‌ம்
http://theyaa.blogspot.com/2009/09/blog-post_16.html

சில கதை எழுதும் வலைப்பூக்களைப் பார்க்கலாமா இப்போ?

இவர் எழுதும் தில்தில் திகில் நிஜமாவே திகிலாத்தான் இருக்கு.நீங்களும்தான் கொஞ்சம்பயப்படுங்களேன்
http://mahawebsite.blogspot.com/

உற‌வுகளின் அருமையைச்சொல்லும் அழகிய கதை இது
http://anbudan-mani.blogspot.com/2009/10/blog-post_18.html

ஆன்மீகக் கதைகளை ஜனரஞ்சகமான வடிவில் படிக்க வேண்டுமா?வாருங்கள் இங்கே.நிச்சயமாய் ஆன்மீகத்தைப் பற்றிய ஒரு புதிய சிந்தனையைத் தரும் இவரது பதிவுகள்
http://gurugeethai.blogspot.com/

இன்னிக்குப் பதிவு கொஞ்சம் பெரிசா போச்சி. அதனால இதேவகையில் மற்ற சில வலைப்பூக்களை நாளை பார்க்கலாம்.

அதுவரைக்கும் டாடா..பைபை..சீ யூ... ஃப்ர்ம் இயற்கைமகள்
மேலும் வாசிக்க...

Tuesday, October 20, 2009

கடவுள் வாழ்த்து



வாங்க நல்ல மனசுக்காரங்களே.. போன பதிவுல இருந்த லிங்க்ல போய் என் வலைப்பூவைப் பார்த்தீங்களா.. இப்போ தெரிஞ்சிட்டு இருப்பீங்க.. என்னைப்பத்தி.. கடவுளே ..இந்தப் பொண்ணுகிட்ட இருந்து காப்பாத்துன்னு வேண்டனும்ன்னு தோணுமே.. .. எந்த கடவுள்கிட்ட வேண்டறது, எப்படி வேண்டறதுன்னு க‌வலைப்படாதீங்க.. இப்போ நான் ஆன்மீகம் சம்பந்தப்பட்ட வலைப்பூக்களின் விவரங்களைத் தர்றேன்.. அதை வச்சி எந்தக் கடவுள,எப்படி எப்படி பூஜை பண்ணி வேண்டனுமோ..அப்படியெல்லாம் வேண்டிக்கோங்க..

எனக்கு வேண்டும் வரங்களை யிசைப்பேன் கேளாய் கணபதி
மனதிற்சலனமில்லாமல், மதி யிலிருலே தோன்றாமல்
நினைக்கும் பொழுதுநின் மவுனநிலை வந்திட நீ செயல்வேண்டும்
கனக்குஞ் செல்வம் நூறுவய திவையுந்தர நீ கடவாயே
கமலா சனத்துக் கற்பகமே
என பாரதியால் பாடப்பெற்ற முழுமுதல்வன் முந்தி விநாயகன் பெயரிலான வலைப்பூ இது
இவ்வலைப்பூவின் பெயரே மூத்த விநாயகர் கோவில்.இதில் நிறைந்திருக்கும் ஆன்மீக விஷயங்களைப் பற்றி விளக்க மேலும் சாட்சி வேண்டுமோ?


தோடுடைய செவியன் விடையேறியோர் தூவெண்மதிசூடிக்
காடுடைய‌சுட லைப்பொடிபூசியென் னுள்ளங்கவர் கள்வன்
ஏடுடையமல ரான்முனைநாட்பணிந்தேத்த அருள்செய்த‌
பீடுடையபிர மாபுரமேரிய பெம்மா னிவ‌னன்றே
எனத் திருநான சம்பந்தரால் பாடப் பெற்ற சிவனைப் போற்றும் வலைப்பூ இது
சிவத்தமிழோன்
சைவசமய நீதியினைப் பற்றி சிந்தையில் சிவனை நிறுத்தி விளக்கும் வலைப்பூ இது..பிற ஆன்மீக வலைப்பூக்களுக்கும்,சிவநெறி தொடர்பான யூட்யூப் வீடியோக்களுக்கும் கூட சுட்டி கொடுக்கப்பட்டுள்ளது

சிவனின் மற்றுமோர் வடிவான சந்திரசேகரரின் நிழற்படங்களோடு,கார்த்திகை சோமவார மகிமையையும் அறியத்தருவது இப்பதிவு ஒரு நடை போய்வாங்க‌

கேதார கெளரி விரதச் சிறப்பை அறியவும், அது தொடர்பான பாடல்களைத் தரவிறக்கவும் இங்கே முயற்சிக்கலாம்

பிரதோஷ விரதத்தின் விவரங்கள் வேண்டுமா.. இதோ இங்கே இருக்கு.வருடத்தின் எல்லா நாட்களின் ஆன்மீகச் சிறப்புகளும் இவ்வலைப்பூவில் உள்ளன‌‌

திருந‌ந்தீஸ்வரம் போக ஆசையா? அங்கே போகாமலேயே அத்திருத்தலத்தின் ஒவ்வொரு பகுதியையும் காண இங்கே சென்றாலே போதுமே


கரும்பும்,கணை ஐந்தும் பாச அங்குசமும்,கைக்கொண்டு அடியேன்
திரும்பும் திசை தொறும் தோற்றிக் கண்டாய் இசைத் தேக்கு மணிச்
சுரும்பு உண்ட காவியும்,சோதி நிலாவும்,துளிரும் சற்றே
அரும்பும் கனம் குழலாய், மதுராபுரி அம்பிகையே
எனப்பாடப் பெற்ற மீனாட்சி அம்மன் புகழ் பாடும் வலைப்பூ இது
மீனாட்சி அம்மன் கோயில் உலா என்னும் இப்பதிவு,அக்கோயிலுக்கே நேரில் சென்றுவந்ததைப் போன்ற நிறைவைத் தருகிறது.


இறைவனின் புகழ்பரப்ப விளையும் இவரின் இந்த‌‌ வலைப்பூவில் பல்வேறு திருத்தலங்களின் கருடசேவை உற்சவங்கள் நிழற்படங்களொடு மிளிர்கின்றன‌.இந்த வலைப்பதிவரின் மற்ற வலைப்பூக்களையும் பார்த்தீர்களானால் ஆன்மீகம் சம்பந்தப்பட்ட பல செய்திகளையும் அறியலாம். பல்வேறு கடவுள்களின் நிழற்பட தரிசனமும் கிடைக்கும்‌


கிருஷ்ண ஜெயந்தி கொண்டாட்டங்களின் வரைமுறையும்,வழிமுறையும் வேண்டுமா?
இதோ உதவிகரமான குறிப்புகள்


இன்னும் நெறைய நெறைய வலைப்பூக்கள் ஆன்மீகத்தைப் பத்தி பேசுதுங்க.. ஆனால் அது எல்லாம் ஏற்கனவே வலைச்சரத்துல அறிமுகப்படுத்தப்பட்டிருக்கு..‌

எல்லா கடவுளையும் வேண்டியாச்சா? நல்ல புள்ளங்களா போயி வெலைய பாருங்க.
மேலும் பல புதிய வலைப்பூக்களோடு அடுத்த பதிவில் சந்திக்கும் வரை விடைபெறுவது... இயற்கை மகள்‌
மேலும் வாசிக்க...

Monday, October 19, 2009

சுய தம்பட்டம்

எல்லோருக்கும் வணக்கம்.
எத்தனையோ வல்லவர்களால் தொடுக்கப்பட்டு வரும் இந்த வலைச்சரத்தினைத் தொடுக்கும் வாய்ப்பளித்த சீனா ஐயாவுக்கும்,வலைச்சரக்குழுவினருக்கும் என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
முதல் பதிவுல சுயதம்பட்டம் அடிச்சிக்க அனுமதி குடுத்திருக்காங்க‌.. அதனால என்னைப் பத்திக் கொஞ்சம் சொல்லிக்கிறேன்.

பிறந்ததும் வச்சபேர்.. ராஜி.. இந்த 2009 பிறக்கறவரைக்கும் அந்தப் பேர் மட்டும் போதும்ன்னு தான நெனச்சிட்டு இருந்தேன்.. ஆனா..இந்த வலையுலகில தெரியாத்தனமா எட்டிப் பார்த்தப்பதான் இங்க தனக்குத்தானே பேர் சூட்டிக்கற வழி இருக்குன்னு.. உடனே நானும் எனக்கு ஒரு புது பேர் யோசிச்சேன்.

சரி.. நாம என்னதான் விவசாயப் பரம்பரையில பிறந்தாலும், நெல்லுமரம் எத்தனை மீட்டர் வளரும்ன்னு கேக்கறவளாச்சே.. அதனால பேராவது கொஞ்சம் இயற்கை சம்பந்தமா இருக்கட்டும்ன்னு இயற்கை மகள்ன்னு வச்சிகிட்டேன்.
சரி..பேர் விளக்கம் முடிஞ்சிது.
அடுத்து தொழில்
சின்ன‌ வ‌ய‌சில‌ ஸ்கூல‌ போயிட்டு வ‌ந்து மாலைல விளையாடின டீச்சர் விளையாட்டை இன்னும் தொடர்ந்துகிட்டு இருக்கேன்.ஆனா என்ன.. இப்போ நாள் முழுக்க ஒரு பொறியியல் கல்லூரில விளையாடிட்டு இருக்கேன்..

என் வலைப்பூவப் பத்தியும் கொஞ்சம் சொல்லிக்கறேனே..
இதயத்தில தோணற எல்லாத்தையும்,தோணறப்போல்லாம் எழுதறதால என் வலைப்பூ பேர் இதயப்பூக்கள்.. ( இதயப்பூக்கள்..பூக்கள்..கள்.. )( ஒண்ணுமில்லீங்க‌.. எக்கோ எபெக்ட்)
என் வலைப்பூல பிடிச்ச பதிவுன்னு பார்த்தா.. எல்லாமே என‌க்குப் பிடிக்கும்.. பிடிக்காத‌ எதையும் நான் எழுத‌மாட்டேன்.. ( நானே பிடிக்காதுன்னு சொன்னா அப்புறம் யாரும் என் வ‌லைப்பூ ப‌க்க‌ம் வ‌ர‌வே மாட்டீங்க‌ளே..இப்போவே கொலைமிர‌ட்டல் விட்டாத் தான் சில‌பேர் வ‌ர்றீங்க..)

ம்ம்.ஹலோ எங்க ஓடறீங்க‌.அவ்ளோதாங்க‌ ..சுய‌தம்ப‌ட்டத்த முடிச்சிட்டேன்..மற்ற வலைப்பூக்கள் அறிமுகத்துடன் அடுத்த பதிவில் சந்திக்கலாம்.. நான் அடுத்த பதிவு போட வர்ரதுக்குள்ள எல்லாரும் இந்தப் பதிவில் கமெண்ட் போட்டிருக்கணும்.. நான் செக் பண்ணுவேன் (ஹி.ஹி..டீச்சர் புத்தி.. ஹோம்வொர்க் குடுத்தே பழகிப்போச்சி)
அடுத்த‌ ப‌திவில் ச‌ந்திக்கும் வ‌ரை விடைபெறுவ‌து..
இய‌ற்கை ம‌க‌ள்
.
மேலும் வாசிக்க...

தமிழ் மணத்தில் - தற்பொழுது