நான் மிகவும் மதிக்கின்ற வலை பதிவர்களின் பதிவுகளின் பகிர்வு ..!
சில மாதங்களுக்கு முன்னர் ஒரு பதிவர் சந்திப்பு ஏற்பாடாகி இருந்தது.சென்னை தியாகராய நகரில் உள்ள ஒரு ஹோட்டலில்...! அதில் கலந்து கொண்டவர்கள்
அண்ணன் ராகவன்,ரம்யா,நாமக்கல் சிபி,தாமிரா,புதுகை அப்துல்லா,அமு செய்யது, ராஜி ..மற்றும் நண்பர் சுரேஷ் ரம்யாவின் அக்கா கலை அக்கா மற்றும் நான்..!
பதிவர் சந்திப்பை பொறுத்தவரை நான் அதுவரை யாரையும் சந்தித்தது இல்லை
அதுதான் என் முதல் பதிவர் சந்திப்பு...! யாரை எப்படி எதிர்கொள்வது என்றும் புரியவில்லை முடிந்தவரை அதிகம் பேசாமல் அமைதியாக இருக்கலாம் என ஒரு எண்ணத்தில் இருந்துவிட்டேன் . அதனாலேயே என்னை அமைதியானவன் என்று
தவறாக நினைத்து விட்டனர் நண்பர்கள்..! ;;))
அந்த சந்திப்பில் கலந்து கொண்டவர்கள் பற்றியும் அவர்களின் சிறந்த பதிவுகளையும் பற்றி சொல்லுகிறேன். அண்ணன் ராகவன்நான் எதிர்பார்த்ததைவிட இளமையாகவும் சுறு சுறுப்பாகவும் இருந்தார்.ஒரு புதியவரை பார்க்கிறோம் என்ற எண்ணம் துளியும் ஏற்படவில்லை.
இவர் பதிவில் எனக்கு மிகவும் பிடித்தது இந்த பதிவுதான்...! போய்விட முடிவு
செய்துவிட்டேன்
ரம்யாஆரம்பத்தில் வெகு சாதாரணமாக தோன்றி..! பின்னர் அணைக்கட்டில் இருந்து பீறிட்டு கிளம்பும் வெள்ளத்தைபோல பதிவுலகில் கலக்கியவர். தன்னம்பிக்கைக்கும்,தைரியத்திற்கும் உதாரணம் இவர். இவரை பற்றி ஒரு வரியில் சொல்வதென்றால்.
''இரும்பு இதயம் படைத்த பீனிக்ஸ் பறவை ''
இவரது பதிவுகளில் என்னை மிகவும் கவர்ந்தது
பெற்றோர்கள் சிந்திக்க ஆதரவற்ற குழந்தைகளும் -முதியவர்களும்
படத்தில் அண்ணன் ராகவன் ,நாமக்கல் சிபி,போன் பேசுவது தாமிரா நாமக்கல் சிபிமுதலில் தன்னை கோவி .கண்ணன் என அறிமுக படுத்தி கொண்டார் அவர் சொன்னதை முதலில் நான் சரியாக கவனிக்கவில்லை செய்யதுவிடமும் அப்படியே சொல்ல..! கோவி .கண்ணனா ? அவர் படத்தை பதிவுகளில் பார்த்து இருக்கிறேன் அவரா நீங்க ...? என சொல்ல.. பார்த்து இருக்கீங்களா ? அப்டினா நாந்தான் நாமக்கல் சிபி என்றார். விளையாட்டாய் பேசுகிறாரா?? இல்லை சீரியஸா பேசுகிறாரா?? என உடனடியாக கண்டுபிடிக்க முடியாத வகையில் சுவாரஸ்யமாய் பேசுகிறார் இந்த நக்கல் நாயகன்..! மரம் வளர்ப்போம் வாருங்கள்
என்ற இவர் பதிவு முக்கியமானது
தாமிரா
ரொம்ப அழகாய் சிரிக்கிறார்..! ரிஷப ராசிக்காரர்களை போன்ற சாந்தமான முகம் பார்த்தவுடன் பிடித்து போகும் இயல்பான மனிதர்
மோகம் முப்பது நாள்
இவரின் இந்த பதிவ படிச்சு பாருங்க
புதுகை அப்துல்லா
கலகலப்பானவர் பதிவுகளில் சொல்வது போலவே நேரிலும் அண்ணே என்று அழைக்கிறார்..!
இவர் பதிவுகளில் இந்த பதிவு மிகவும் சிறப்பானதுதீபாவளி நினைவுகள் அ.மு.செய்யதுஅருமையான படைப்பாளி..! வலையுலகில் ஒரு சிறந்த இடத்துக்கு வருவார்.! அசத்துகிறார் இவர் இந்த பதிவுகளில் ..!கரையான் அரித்த மீதி கதவுகள்
ஜூன் 10 சில நியாபக குறிப்புகள்ரசனைக்காரி சமீபத்தில் இல் வாழ்க்கையில் அடியெடுத்து வைத்திருக்கும் இந்த சகோதரி துள்ளலான எழுத்துக்கு சொந்தகாரர்..!மனதை கணக்க வைத்த இந்த பதிவினை படித்து பாருங்கள்
மீனாட்சி அக்கா