07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Thursday, January 7, 2010

ரத்தின(ங்கள்) சுருக்கம்...

வணக்கம் நண்பர்களே!

பதிவுன்னு எழுத ஆரம்பிக்கும் போதே என்னிய மாதிரி பலரும் எது தோணுதோ எழுதுவோம்னு பரந்த நோக்கில்(யாருப்பா அது எத விட்டு வச்ச கெடுக்காமன்னு குரல் விடுறது) ஆரம்பிக்கிறோம். தீர்மானமா, சமையல், சினிமா, மொழி, வரலாறு இப்படி ஏதொ ஒரு தனிப்பாதை போட்டு அதில் நம்மை இழுத்துச் செல்பவர்கள் சிலரே.

தமிழ்மொழி, அதன் வளர்ச்சி, ஈழம் என தமிழ் சார்ந்த விஷயங்களை புள்ளி விபரங்கள், சரித்திர மேற்கோள்கள் காட்டி உணர்வு பூர்வமாக எழுதுபவர் தேவியர் இல்லம் தேவிஜி. அகதிகள் குறித்த அவலம் சொல்லும் அவரின் ஓர் இடுகை ஒரு ஊரிலே.

ரவிப்ரகாஷின் என் டைரி ஒரு புதையல். மென்மையான உணர்வுகளின் வெளிப்பாடு, நனவோடைகள் என்று பலவும் கிடைக்கும் இங்கே. உள்ளம் உலுக்கும் அவரின் எழுத்துக்கு ஒரு சாம்பிள் இது. இவரின் இன்னோரு வலைப்பூ உங்கள் ரசிகன். இங்கும் இவரின் எழுத்தை அனுபவிக்கலாம். பத்திரிகையாளரின் எழுத்துக்கு கட்டியம் கூற எனக்கு வாய்த்தற்கு நன்றி.

கலகலப்புக்கு ஒரு வலைமனை நாஞ்சில் எக்ஸ்ப்ரஸ். பெயருக்கேற்றார்போல் ஒரு ரயில் வண்டியின் அத்தனை பரபரப்பும் பிரதாபின் இடுகைகளில் இருக்கும். மூக்குக் கண்ணாடி குறித்த அவரின் பதிவு இந்த எக்ஸ்ப்ரஸின் வேகம் சொல்லும்.

மூச்சுத் திணற ஈழத் தமிழ் சுவைக்க ஓர் முற்றமிருக்கிறது. ஈழத்து முற்றம். ஒரு குழுவாக இந்த வலைப்பூவை பராமரிக்கிறார்கள். அழகான எழுத்துக்களின் நந்தவனம் இது. மனமள்ளும் மொழியழகுக்கு இதோ.

லஞ்சம் - ஊழல் - மோசடி
யென்ற இந்த வலைப்பூவை இன்று கண்டெடுத்தேன். சமுதாயத்தில் புரையோடிய இந்த நோயை துகிலுரிக்கும் வலைப்பூ இது. பிச்சைக்காரரிடம் திருடிய ஒரு போலீஸ் காவலரின் முகத்திரை கிழிக்கும் இடுகை இது.

படிக்காதவன் என்ற பெயர் ஈ.ரா.வின் வலைப்பூவுக்கு. நம்மை படிக்க வைக்கும் எழுத்து இவருடையது. வரவில்லை என்ற இவரின் கவிதை இதோ.

இரசிகையின் கவிதைக்கு ரசிகனாகாமல் இருக்க முடியாதுங்க. நிமிடங்களில் சில என்ற இவரின் கவிதை அட சொல்ல வைக்கும் ரகம்.

இன்றைக்கு இவ்வளவு போதும். நாளை சந்திப்போமா?


12 comments:

  1. ஈழத்து முற்றம்,லஞ்சம்-ஊழல்-மோசடி, ரசிகை ஆகியன இன்று புதிதாய் அளித்திருக்கும் வலைப்பூக்கள். தொடர ஆரம்பித்திருக்கிறேன், உங்களின் சுட்டலுக்குப் பின் படித்து வியந்து. நன்றிங்கய்யா!

    பிரபாகர்.

    ReplyDelete
  2. என் டயரி , உங்கள் ரசிகன் தெரியும் மற்ற பக்கங்கள் .. தொடர்கிறேன் நன்றி ...சார் ..:)

    ReplyDelete
  3. நல்ல தொகுப்பு நண்பரே...
    வாழ்க வளமுடன்,
    வேலன்.

    ReplyDelete
  4. அன்பின் பாலா

    பல புதிய பதிவர்களை அறிமுகப் படுத்தும் அழகே அழகு - அருமையான முறையில் அறிமுகங்கள் - வழக்கம் போஅல் சென்று படித்து வந்தேன்

    நல்வாழ்த்துகள்

    ReplyDelete
  5. அசத்தல் அறிமுகங்கள். நன்றி.

    ReplyDelete
  6. அருமையான அறிமுகங்கள்.

    நல்ல புதிய அறிமுகங்களுக்கு நன்றி பாலா சார்.

    ReplyDelete
  7. பகிர்விற்கு நன்றி.

    ReplyDelete
  8. குறிப்பிட்ட வயதுக்குப் பிறகு நான் பார்த்தவரையிலும் பெரும்பாலான மனிதர்கள் இன்னமும் பல ஆசைகளின் மீது ஆசை வைத்து அவஸ்த்தை பட்டுக்கொண்டு வாழ்வதை நேரிடையாக பார்த்துக்கொண்டுருக்கும் போது, உங்கள் வயது, உழைப்பு, கருத்துக்கள், குறிப்பாக பெரிய சிந்தனைகளுக்குரிய விசயங்களை அனாயசமாக நகைச்சுவையில் துவைத்து பந்தாடிக்கொண்டுப்பதைப் பார்க்கும் பாமரன் என்றும் வாமனன் தான்.

    அறிமுகத்திற்கும் வார்த்தைகளுக்கும் நன்றி.

    ReplyDelete
  9. ரத்தினங்களுக்கு வாழ்த்துக்கள்...!

    ReplyDelete
  10. @@நன்றிங்க பிரபா
    @@நன்றிங்க பலா பட்டறை
    @@நன்றிங்க வேலன்
    @@நன்றிங்க சீனா. இந்த் ஊக்கத்துக்காகவே தேடப் பிடிக்கிறது.
    @@நன்றிங்க நன்றி சித்ரா
    @@நன்றிங்க நவாஸ்
    @@நன்றிங்க பாலாசி
    @@நன்றிங்க தேவிஜி
    @@நன்றிங்க குணா
    @@ வாம்மா. நன்றி
    @@நன்றி வசந்த்

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது