07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Friday, January 8, 2010

ஏக்கமும் தாக்கமும்

வணக்கம் நண்பர்களே!

வலைமனை.இதுவும் நமக்கொரு வீடு. நம் சிந்தனைக் குழந்தைகள் பிறந்து தவழ்கிற வீடு. நட்புக்கள் வருகிற வீடு. ஏதோ காரணத்தால் ஒரு நாள் நம் வலை மனைக்கு வர முடியாவிட்டால் என்னமோ தொலைச்சா மாதிரி இருக்கில்ல.

பரம்பரையா வாழ்ந்து, நாம விளையாடி, வளர்ந்து நம் விருப்பத்தில் எங்கயோ பிழைப்புன்னு போனாலே வீடு கவனம் வந்திச்சோ எல்லாத்தையும் கடாசிட்டு வந்து ஒரு ஒரு செங்கல்லா தொட்டுத் தடவி, ஒரு ஒரு செடியா பார்த்து பேசி கொஞ்சி, நம் மண்ணின் சில்லிப்பில் கால் பதிய நிக்கமாட்டமான்னு ஏங்கிப் போகுமில்லையா?

அது மறுக்கப்பட்ட ஒரு இதயத்தின் வலி. ஆறுதல் சொல்ல முடியாத வலி. அதை விட ஆயிரம் வீடு வாங்கினாலும் அத்தனையும் கொடுத்து விடுகிறேன். இடிந்து சிதிலமானாலும் பரவாயில்லை. அந்த மண் எனக்கு வேண்டும் என என்றும் வலிக்கும் வலி. ஜீவ நதியில் ஜீவராஜ் வீடு என்ற இடுகையில் அந்த வலியை நாம் உணர வைக்கிறார். வலைச்சரத்துக்காக நான் தேடியதில் கிடைத்த இன்னோரு வைரம் இவர் எழுத்து.

மனசு ரொம்ப கவலையா, விரக்தியா எதும் செய்யத் தோணாம இருக்கும் போது குழந்தையாவே இருந்தா எவ்ளோ நல்லா இருக்கும்னு ஏங்கிப் போகும். அதும் வீட்டில பாட்டி, தாத்தா,அப்பா, அம்மான்னு மடியில் அமர்ந்து கேட்ட கதைகள், தூங்குறப்ப சொன்ன கதைகள்ளாம் அடுத்த தலைமுறைக்கு குடுக்க முடியாம தொலைச்சிட்டு நிக்கிறோம். திருமதி ருக்மணி சேஷசாயி சுட்டிக் கதை  வலைப்பூவில் இந்த ஒரு இடுகையில் அந்தக் குறை தெரியாமல் செய்து விடுகிறார். படிக்கையில் குழந்தையாகிப் போனேன். நன்றி அம்மா உங்கள் பணிக்கு.

வடலூரான் கலையரசன்
கழுகுப்பார்வை பார்த்து கலவரமாக்குற கூத்து இங்கே. லொள்ளுக்குண்டோ அடைக்கும் தாழாம்? குசும்பன், இராகவன் நைஜீரியா இவங்களோடு சேர்ந்து அடிச்ச லூட்டி இங்கே. ஏன் கலை. இராகவனுக்கு காமிரா வாங்கிக் குடுத்த கலையரசன் நீங்கதானே?

எங்கே போனாலும் நட்புடன் நீளும் ஒரு கை. மனசார பாராட்டு. பின்னூட்ட முடியாவிடில் திரட்டிகளில் பின்னூட்டு. பிரச்சினையிருக்கிறதா பாருங்கள் என்று முடிந்தால் மின்னஞ்சல் இப்படி ஒரு நட்புக்கரம் வலையுலகின் வரம். ஆமாங்க நட்புடன் ஜமால்தான். ஏணிப்படிகள் என்று இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புச் செய்திகள், சின்னதாய்க் கவிதைகள். கொஞ்சம் எழுதலாமே ஜமால்.

இன்றைய தேடலின் பலன் இந்தக் கவிஞன். கமலேஷ். சுயம் தேடும் பறவை என்ற பெயரே கவிதையாய் வலைமனை இவருடையது. நெஞ்சை ஆக்கிரமித்துக் கொள்ளும் எழுத்து. வித்தியாசமான கவிதைகள். நீரியல் சுழற்சி என்ற இவரின் கவிதை ஒன்று போதும் சாட்சி கூற. இனித் தொடர்வேன்.

மோகனின் மோகனச் சாரல் அழகான பூங்கொத்தோடு வரவேற்கிறது. கலகலப்பான எழுத்து. படிக்க சிரிக்க இதோ இவரின் எஸ்.எம்.எஸ்.கலாட்டா.

ரிஷபன்.  அசத்தும் எழுத்துக்கு சொந்தக்காரர். மண்ணில் சொர்க்கம் என்ற அவரின் இடுகையை அறிமுகப்படுத்த வாய்த்ததில் மகிழ்ச்சி.

வெற்றிக் கதிரவனின் தேடல் ஒன்றே வாழ்க்கை ஒரு வித்தியாசமான அனுபவம் தரும். அவரின் சுயபுராணம் அதற்கோர் எடுத்துக் காட்டு.


நாளை சந்திப்போம். வர்ட்ட்ட்டா:)

11 comments:

  1. அய்யா,

    வடலூரான் தவிர ஏனைய யாவும் அறியாத புதியவைகள். தொடர ஆரம்பித்திருக்கிறேன், உங்கள் வழிகாட்டலால். நன்றிங்கய்யா!

    பிரபாகர்.

    ReplyDelete
  2. மெத்த சந்தோஷம் அன்பரே!

    விரைவில் எழுத துவங்குகிறேன்.

    உங்கள் ஊக்கம் - நன்றி.

    ReplyDelete
  3. வலைமனை.இதுவும் நமக்கொரு வீடு. நம் சிந்தனைக் குழந்தைகள் பிறந்து தவழ்கிற வீடு. நட்புக்கள் வருகிற வீடு. ஏதோ காரணத்தால் ஒரு நாள் நம் வலை மனைக்கு வர முடியாவிட்டால் என்னமோ தொலைச்சா மாதிரி இருக்கில்ல.//

    ஆம் ஐயா உண்மைதான்..

    ReplyDelete
  4. வலைமனை பற்றிய வர்ணனை அருமை

    ஜமால் வடலூரான் தவைர அனைவருமே எமக்குப் புதியவர்கள் - சென்று வந்தேன் அவர்கள் வீடுகளுக்கும் - நன்று நன்று

    நல்வாழ்த்துகள் அன்பின் பாலா

    ReplyDelete
  5. அறிமுகவிதங்கள் அருமை...அனைவரையும் பார்க்கவேண்டும்....

    ReplyDelete
  6. அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்...
    ஜீவ நதி
    கமலேஷ். சுயம் தேடும் பறவை
    இரண்டும் தான் நமக்குத் தெரிந்தவை
    மற்றையவை புதிசு

    ReplyDelete
  7. அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள் இன்னும் நிறைய புதியவர்கள் அறிமுகம் தேவை ஆசானே..

    ReplyDelete
  8. @@நன்றி பிரபாகர்
    @@நன்றி ஜமால். சந்தோஷம்.
    @@நன்றி TVR
    @@நன்றி குணா
    @@நன்றி சீனா
    @@நன்றி பாலாசி
    @@நன்றி றமேஸ்
    @@நன்றி வசந்த்

    ReplyDelete
  9. ////வலைமனை.இதுவும் நமக்கொரு வீடு. நம் சிந்தனைக் குழந்தைகள் பிறந்து தவழ்கிற வீடு. நட்புக்கள் வருகிற வீடு. ஏதோ காரணத்தால் ஒரு நாள் நம் வலை மனைக்கு வர முடியாவிட்டால் என்னமோ தொலைச்சா மாதிரி இருக்கில்ல. ////

    ரொம்ப சரியாச் சொன்னீங்க பாலா சார்.

    நட்புடன் ஜமால் - இந்த ப்ளாக் குடும்பத்தில் என்னைக் கொண்டுவந்த என் நண்பன். - மச்சான் தேங்க்ஸ்டா (சும்மாதான்)

    ReplyDelete
  10. நிறைய புதிய அரிமுகங்கள். படிக்கிறேன் பாலா சார்.

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது