அறிமுகம்
➦➠ by:
க.நா.சாந்தி லெட்சுமணன்
வலைச்சரத்தின் இந்த வார ஆசிரியராக என்னை அழைத்தற்கு மதிப்பிற்குரிய சீனா ஐயா அவர்களை பணிவன்புடன் வணங்குகிறேன். ஐயா தாங்கள் வழங்கிய இந்த வாய்ப்பை என் வலையுலகப் பயணத்தில், எனக்குக்கிடைத்த ஆகச்சிறந்த அங்கீகாரமாக எண்ணி மகிழ்கிறேன்.நன்றி! நன்றி! நன்றி!
வலைச்சரத்தின் ஆசிரியர் குழுவிற்கும் மற்றும் வாசக நண்பர்களுக்கும் முதற்கண் பணிவன்பான வணக்கத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
ஒவ்வொரு படைப்பாளிக்கும் அவரது படைப்புகள், ஆன்ம திருப்தியைத் தரவேண்டும். ஆன்ம திருப்திக்காக எழுதப்படும் ஒரு படைப்பு வாசிப்பவர்களையும் கவர்ந்து விட்டால் அது படைப்பவனுக்கு கிடைக்கும் வெற்றி என்பது என் தாழ்மையான கருத்து.
முதலில் நான் கவிதை என்று கிறுக்கும் கிறுக்கல்களை பதிய வேண்டி வலை தொடங்கி, புதுச்சேரி கல்லூரிப்பேராசிரியர் மதிப்பிற்குரிய முனைவர் மு.இளங்கோவன் ஐயா அவர்களின் வழிகாட்டலில் கட்டுரைகள் எழுதத்தொடங்கி, இன்று வலைச்சரத்தில் உங்கள் முன் நான் உங்கள் அங்கீகாரத்தையும், வழிகாட்டலையும் வேண்டி நிற்கிறேன்.
எனது வலைப்பூக்களில், அந்தமான் தமிழோசையில் எனது வாழ்விடம் குறித்த பதிவுகளைப் பதிவதிலும், மற்றும் காந்தீய கிராமங்களில் எனது பிறந்த மண்ணின் பாரம்பர்யத்தை,மனக்கிடக்கைகளைப் பகிரும் முயற்சியிலும் இருக்கிறேன்.
"நா எழுதறது பிடிக்கலையா பின்னூட்டத்துல சொல்லுங்க! அதுக்காக இதுக்கெல்லாம் யாருப்பா இவ்ள பெரிய பொறுப்பக்குடுத்ததுன்னு தயவு செய்து சீனா ஐயா அவர்கள மட்டும் எதுவும் சொல்லிடாதீங்க!
இந்த ஒரு வாரம் எனக்கான, என் எழுத்துக்கான மேடையாக வலைச்சரத்தை ஆக்கிக்கொடுத்த ஐயா சீனா அவர்கள் மற்றும் ஆசிரியர் குழுவிற்கும் மீண்டும் மனம் நெகிழ்ந்த, நிறைந்த நன்றி.
என்றும் அன்புடன்
க.நா. சாந்தி லெட்சுமணன்.
|
|
வாழ்த்துக்கள் சாந்தி.
ReplyDeleteநல்வரவு சாந்தி.
ReplyDeleteஉங்க அந்தமானை ஓசைப்படாமல் படித்தேன்:-)
அருமையான கட்டுரைகள்.
கடல் தாண்டி வாழ்ந்தாலும் கலங்கி விடாமல் கலக்கிக்கொண்டுருக்கும் உங்கள் தமிழ் ஆர்வம் போல் இந்த வாய்ப்பையும் பயன்படுத்தி புதியவர்களை அறிமுகம் செய்ய வாழ்த்துகள்.
ReplyDeleteவாழ்த்துக்கள் :-)
ReplyDeleteவாழ்த்துக்கள்!
ReplyDeleteநல்வாழ்த்துகள் சாந்தி
ReplyDeleteநட்புடன் சீனா
welcome santhi madam
ReplyDeleteவாழ்த்துக்கள் .
ReplyDeleteநல்வாழ்த்துக்கள் சாந்தி.
ReplyDeleteதாமதமாய் பார்த்தேன்; வாழ்த்துக்கள் மேடம்
ReplyDeleteவாழ்த்துகள் மேடம்.
ReplyDelete