07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Sunday, April 4, 2010

விடைபெறுகிறேன் , நன்றி நண்பர்களே !


உலகத்தில் எந்த மாற்றமும் இல்லாமல் மாறிக்கொண்டிருப்பது காலம்தான். இப்போதுதான் அறிமுக இடுகை எழுதிய மாதிரி இருக்கிறது அதுக்குள் நன்றி இடுகை.

இந்த ஒரு வார காலத்தையும் சுகமான சுமையாக மகிழ்ச்சியாகவே உணர்கிறேன். உங்களுக்காக தேடியதில் நானும் பல நல்லபதிவுகளை காணமுடிந்தது.

முதல் இடுகையில் புது நண்பர் ஒருவர் "தர‌மற்ற இடுகைகளுக்கு போடப்படும் பின்னூட்டங்கள்தான் தரமான பதிவுகளை வளரவிடாமல் தடுக்கிறது" என்று சொல்லியிருந்தார். அப்படியில்லை நண்பரே ஒவ்வொரு பின்னூட்டத்தையும் நட்பிற்கான முகவரி அட்டையாகவே உணர்கிறேன் நான். அதில் பல புதிய நண்பர்களும் கிடைத்துள்ளார்கள். போக , நல்ல எழுத்துக்கள் எப்படியாவது அனைவரையும் சென்றடைந்தே தீரும்.

ஏனெனில் பிளாக்கரின் அடிப்படை நோக்கமே தங்கள் அனுபவங்கள், போட்டோக்கள், குறிப்புகள், படைப்புகள் போன்ற கருத்து பரிமாற்றங்கள்தான் எழுத்தாளர்களை உருவாக்குவது அல்ல. ஆனால் இதிலுருந்து சக பதிவர் சிறந்த எழுத்தாளராக ஆவதில் எங்களைவிட மகிழ்ச்சியடைபவர்கள் யார் இருக்கிறார்கள். மகிழ்ந்தும் இருக்கிறோம்.

புதியவர் பழையவர் என்ற பேதம் இல்லாமல் சில நேரங்களில் நாம் இடும் சில இடுகைகள் சிறப்பானவையாக அமைந்துவிடும். அந்த மாதிரி இடுகைகள் உங்கள் கண்ணில் படும்போது உங்கள் பதிவில் தெரிவித்தால் படிப்பவர்களுகு மிக உபயோகமாக இருக்கும். அதன் தொடக்கமாகவே நான் வாரம் ஒருமுறை படித்ததில் பிடித்த இடுகைகளை ( பதிவுகளை அல்ல )எழுதுகிறேன். நீங்களும் எழுதுங்கள் நாம் பயன்பெற.

எனக்கு எழுத வாய்ப்பளித்த சீனா ஐயாவுக்கு மிக்க நன்றிகள். புதிய பதிவர்களின் அறிமுகம் என்பதைவிட எனக்கான அறிமுகமாகவே இதை உணர்கிறேன். இது போல் மேலும் பல பதிவர்களை அறிமுகப்படுத்திக் கொண்டிருக்கும் சீனா ஐயாவை பாராட்ட வார்த்தைகளில்லை.

போலவே என்னுடனிருந்து அறிமுகம் செய்த மொக்கை வர்மனுக்கும், மங்குனிக்கும் நன்றிகள்.

இனிதே விடைபெறுகிறேன் நண்பர்களே. வாசித்த அனைவருக்கும் எனது நன்றிகள்.

மீண்டும் சந்திப்போம்.

33 comments:

  1. நன்றி அக்பர் அருமையான வாரத்துக்கு.. நல்ல அறிமுகங்கள். வாழ்த்துகள்

    ReplyDelete
  2. அட... இப்போதான் ஆரம்பிச்ச மாதிரி இருக்கு.அதுக்குள்ள ஒரு வாரம் முடிஞ்சிடுச்சா... மொக்கைவர்மன், மங்குனி அமைச்சரோடு சேர்ந்து அக்பர் செய்த கலகலப்பான அறிமுகங்கள் அனைத்தும் அருமை. புதுமை.

    வாழ்த்துக்கள் வலைச்சரத்திற்கும், அன்பு நண்பர் அக்பருக்கும்...

    ReplyDelete
  3. //பதிவர்களின் அறிமுகம் என்பதைவிட எனக்கான அறிமுகமாகவே இதை உணர்கிறேன்.//

    அருமை அக்பர்!.

    வாழ்த்துகள்.
    :)

    ReplyDelete
  4. சகோ.அக்பர், மிகப்பெரிய வேலை, இது அதுவும் ஓவ்வொன்றாக தேர்வு எடுத்து போடுவது, வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  5. மீண்டும் சந்திப்போம்...வாழ்க, வளர்க!!

    ReplyDelete
  6. அழகாய் பகிர்ந்து கொண்டுள்ளீர்கள் உங்கள் கருத்துக்களை. வாழ்த்துக்கள் அக்பர்.

    ReplyDelete
  7. நல்ல அறிமுகங்கள். அனைவரையும் தேடிப்பிடித்து படித்துவிடும் எனக்கே ஓரிருவர் புதியவர்களாக இருந்தனர்.நன்றி அக்பர் அண்ணே.

    ReplyDelete
  8. அருமை சினேகிதா!

    நல்ல ஓர் பகிர்வு!

    பிரபாகர்...

    ReplyDelete
  9. மீண்டும் சந்திப்போம் அக்பர்.வாழ்த்துக்கள்


    அடுத்து யார்ப்பா "பீர்பாலா?

    ReplyDelete
  10. அசத்தீடீங்க அக்பர்...

    ReplyDelete
  11. நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள் நண்பா

    விஜய்

    ReplyDelete
  12. வாழ்த்துக்க‌ள் அக்ப‌ர் ப‌ல‌ புதிய‌வ‌ர்க‌ளை அறிமுக‌ப்ப‌டுத்தியுள்ளீர்க‌ள்.. ஒரு வார‌ம் சிரிக்க‌ வைத்தே ப‌ல‌ அருமையான‌ அறிமுக‌ங்க‌ள்.

    ReplyDelete
  13. அக்பர் தி கிரேட் என்று சொல்லுவார்கள்.. அதன் படியே தூள் கிளப்பிட்டீங்க அண்ணே.

    ReplyDelete
  14. இந்த வார வலைசரம் ஆசிரியராக சிறப்புற பணியாற்றி படிப்போரை ஒருவாரகாலமாக மகிழ்வித்த அக்பர் சாருக்கு நன்றி.மகிழ்ச்சி.வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  15. நல்ல பகிர்வுகளுக்கு நன்றி அக்பர். வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  16. முன்னுரையைவிட முடிவுரை நல்லா இருக்கு. நிறைய நல்ல அறிமுகங்கள், நன்றி.

    ReplyDelete
  17. ஒரு வாரமாகத் திறம்பட தொகுத்து அளித்து, சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்த பாதுஷா அக்பருக்கு பாராட்டுக்கள்!

    ReplyDelete
  18. ரொம்ப அழகா போனது அக்பர் இந்த வாரம் .வாழ்த்துக்கள்

    ReplyDelete
  19. அருமை அக்பர்!!!
    சிறப்பாக இருந்தது,
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  20. அருமையான வாரமாக இருந்தது அக்பர். வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  21. ரொம்ப அழகா சுவாரஸ்யமா தொகுத்து வழங்கியிருந்தீங்க அக்பர்...
    நன்றி..... அக்பரின் தர்பார் ரொம்பவே கிரியேட்டிவ்...

    ReplyDelete
  22. வாங்க‌

    Starjan ( ஸ்டார்ஜன் )

    துபாய் ராஜா

    【♫ஷங்கர்..】

    Jaleela

    பழமைபேசி

    வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி

    ReplyDelete
  23. வலைச்சரத்தை அருமையான முறையில் கோர்த்ததுக்கு மிக்க நன்றி அக்பர் அண்ணே..

    இதில் என்னையும் அறிமுகப்படுத்தி எனக்கு ஊக்குவித்ததுக்கு நன்றி அண்ணே..

    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  24. அன்பின் அக்பர்

    சிறந்த முறையில் பணியாற்றி விடை பெறுவதற்க்கு பாராட்டுகளுடன் நல்வாழ்த்துகள் அக்பர்

    நட்புடன் சீனா

    ReplyDelete
  25. அருமையான அறிமுகங்களை அறிமுகபடுத்தியதற்க்கு நன்றி அக்பர்!!

    ReplyDelete
  26. வாழ்த்திய அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் நன்றி.

    ReplyDelete
  27. அக்பர் அருமையான வாரத்துக்கு நன்றி .

    ReplyDelete
  28. அருமையான வாரத்துக்கு நன்றி அக்பர்

    ReplyDelete
  29. அதுக்குள்ளே முடிந்ததா ?




    வாழ்த்துகள் பாதுஷா !

    :)

    ReplyDelete
  30. வித்தியாசமான வெற்றிகரமான வாரம் அக்பர். பாராட்டுகள். :)

    ReplyDelete
  31. வாழ்த்திய அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் நன்றி.

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது