07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Thursday, April 8, 2010

முல்லைக்கொடிகள் (வலைச்சரம்)

இங்கே ஆகச்சிறந்த பெரும்பான்மை படைப்பாளிகளின் ‘முன்’மொழியென்பது கவிதைகளே. (மாற்றுக் கருத்துக்களுக்குமிடமுண்டு) எனக்கான அடையாளத்தினை நான் இங்கே தோண்டியெடுக்கவும், நிலைப்படுத்திக்கொள்ளவும் அதுவே ஊன்றுகோலும்கூட. மிகச்சிறப்பிற்குரிய கவிதைகள் பவளங்களாய் இக்கடலில் நிறைய முளைத்திருக்கின்றன. எளிமையான வார்த்தைகளில் தெள்ளிய நீரோடைபோல், அழகாய் இடுக்குகளின்றி வழுக்கியோடும் கவிதைகளும் இங்கே நிறைய. என்னுடையதை இரு அடிகள் தூரப்படுத்திவிட்டு பிறரின் கவிதைகளையே புலமைக்கும், புரிந்துணர்விற்கும் அப்பாற்பட்டு விரும்பி வாசிக்கும் மனதனானன்றி வேறோர்கள் இருக்கிறார்களாவென்று தெரியவில்லை. அப்படியாயின் சாத்யக்கூறுகள் மிகையுண்டு.

பெரும்பான்மை புரியாக்கவிதைகளை படித்துவிட்டு குழம்பியுமிருக்கிறேன். எழுதியவர்களன்றி வேறெவர்க்கும் புரியாத கவிதைகளும் இவ்வலைப்பூவுலகில் அதிகம்.

கவிஞர் அ. வெண்ணிலா ஒரு கவிதையில் ஆண்கள் மீதுள்ள வெறுப்பினை இப்படி காட்டியிருக்கிறார். கொஞ்சம் உண்மையும்கூட... இடம், பொருள், ஏவல்களுக்கேற்ப மாறுபடலாம்... எத்தனைக்கூர்மை இதனுள். இதன்பொருள் தைத்த இதயத்தில் வடியாத குருதியும்கூட வெட்கப்படுகிறது.

சாப்பிடும் சோறு
பேசும் பேச்சு
சிரிக்கும் சிரிப்பு
எல்லாம் குழந்தைக்காக என
கரு சுமந்து…

நாளை
உன்னோட வண்டியில்
முன்நின்று சிரித்து வர
உன் இனிசியல் போட்டுக்கொள்ள
உனக்கு பிள்ளை பெற்றுத் தருவேன்
நான்கைந்து மணிநேரம்
ரத்த வெள்ளத்தில் மிதந்து...

கேட்டால் கிடைக்கும்தான்
உன் முத்தம்
உன் அரவணைப்பு
உன் ஆறுதல்
பச்சப்புள்ள கேட்டா
பாலூட்டுகிறோம்??

கரு சுமந்து
குழந்தை தவமிருக்கும் பெண்களை
சுமக்க
எந்த ஆணுக்கு உள்ளது கருப்பை!.

•••••••••••


சரி.. இனி...

முதலாமவர் ராகவன்

சமீப காலத்தில் இவ்வலையுலகம் கண்டெடுத்ததொரு வைரம். இவரது கவிதைகளை படிக்கும்பொழுது இத்தனை காலம் எங்கே இவர் மறைத்து வைக்கப்பட்டிருந்தார் என்ற எண்ணம் எனக்கும் உண்டாகிறது. படித்துப்பாருங்கள். யானைகளின் காலடியில் ஊர்ந்துபோகும் எறும்பாகவே என்னைநான் பார்த்துக்கொள்கிறேன். இவரது வலைப்பூவின் பின்புலத்தில் மட்டும் பச்சையமில்லை. அங்கே பின்னப்பட்டுள்ள வார்த்தைகளிலும்.

மாயக்கம்பளம்...

(படிப்பவரின் மனம் எத்திசையிலேனும் பயணிக்கக்கூடும்... முடிந்தால் இப்பயணத்தில் இணையுங்கள்)

இரவில் ஒளிரும் மரம்...

(இக்கவிதையின் கடைசி இரண்டு பத்திகள் கீழே. கண்களுக்கும் கருத்துக்கும் திண்ணக்கொடுங்கள்)

விம்மி புடைத்து அழும்
அறுத்த மரத்தின் வேர்கள்
கருகி முடங்கும்
துளிர்க்க துணிவின்றி

பகலில் ஒளிரா மரத்தின்
கிளையில்
கூடுகட்டிய பறவை
இரவின் ஷார்ட் சர்க்யூட்டில்
பொசுங்கி போச்சு

••••••••••

பனி நீர்தாங்கிய புற்களினால் யாருக்குப் பெருமையிருக்கமுடியும், காணக்கிடைப்பவர் கண்களுக்கன்றி. திராட்சை உலர்ந்துவிட்டால் சுவை குறைந்து போய்விடுமாயென்ன.?? வாய்ப்பில்லையென்பேன்.

இவ்விடம் ராஜாசந்திரசேகர்
சேகரித்துவைத்துள்ள சொற்‘கலை’ வடிவங்களை பாருங்கள். இவற்றில் மனதைக் கொள்ளையடிக்கும் வசீகரம், இங்கே இலைமறைக் கனியாக கனிந்து கிடக்கிறது.

இடம்

ஏறக்குறைய
இன்னொரு இடத்தையும்
ஆக்கிரமித்து
பயணம் செய்கிறீர்கள்
நிற்பவர்
தன் புன்னகையால்
உங்களைத்
தண்டித்துக்கொண்டிருப்பது
தெரியாமல்...

...காலண்டர் பெண்

ஒன்று
இரண்டு மூன்று
நான்கு
ஜந்து ஆறு ஏழு
எட்டு
ஒன்பது
பத்து என
தொடரும் சிகிரெட்டுகளுடன்
முடிகிறது
பகல்பொழுது
இருமலின் அதிர்வை
கேட்டபடி ஆஸ்ட்ரே...
விரைத்த கண் பார்க்க
எப்போதும் போல்
காமம் வீசுகிறாள்
காலண்டர் பெண்
காற்றில் அசைந்து

அடுத்து மூன்றாமவர்



சமீப காலத்தில் அறியப்பெற்றேன். எளியவடிவ கவிதைகள் நிறைய இவரது தளத்தில். கோபுரம் சுற்றும் புறாபோன்று இப்போது இவரது கோட்டையிலும் மேய்ந்துகொண்டிருக்கிறேன். பாருங்கள் கீழே.......

பச்சை வண்ண புடவைக்காரி

விடை பெற்றுச் செல்லும் போது
பட்டும் படாமல் கை பற்றி
அழுத்திச் சென்றாள்...
கைகளில் ஈரமாய் ஒட்டிக் கொண்டே
கிடந்தது அவள் அன்பு ...

(என்கையிலும் இந்தவரிகள் ஒட்டிக்கொண்டே வந்தது... விட்டுவர மனமில்லை சுமந்துவந்தேன்.... )

மற்றும

கைவசம்

(சமீபத்தில் இளமைவிகடனில் வெளியான இவரது படைப்பு... மிகச்சிறந்த கைவண்ணம்)

••••••••••

காட்சி

இத்தளம் இதுவரை காணக்கிடைக்காத பொக்கிஷங்களை (கவிதைகள், கட்டுரைகள், சிறுகதைகள்) இதுவரை யாரும் அதிகம் அறிந்திராத எழுத்தாளர்களின் கலைவடிவங்களை காட்சிக்கு வைக்கின்றது. இங்கே மலர்ந்திருக்கும் கவிதைகளையும், சிறுகதைகளையும் பாருங்கள்.


நன்றிகள்
பாசமுடன்
க.பாலாசி

23 comments:

  1. //இவ்வலையுலகம் கண்டெடுத்ததொரு வைரம்// ராகவனுக்கும் :)

    //மிகச்சிறந்த கைவண்ணம்//
    தேனம்மைக்கும் :)

    ராஜா சந்திர சேகருக்கும்
    காட்சிக்கும்
    வாழ்த்துகள்

    உங்களுக்கு என் நன்றி பாலாசி

    தட்டச்சு பிழைகளை சரி பார்க்கவும் :)

    ReplyDelete
  2. அருமையான பதிவுகளை அறிமுகம் செய்த உனக்கு தேங்க்ஸ் பாலாசி,
    அவங்க அசத்தறாங்க,
    அவங்கள அறிமுகம் பண்ணி நீயும் !!!

    ReplyDelete
  3. //இவ்வலையுலகம் கண்டெடுத்ததொரு வைரம்// ராகவனுக்கும் :)

    //மிகச்சிறந்த கைவண்ணம்//
    தேனம்மைக்கும் :)

    இருவரையும் படித்திருக்கிறேன்.
    மற்றவர்களை இனிதான் படிக்க வேண்டும்
    நல்ல அறிமுகம். நன்றி பாலாசி.

    ReplyDelete
  4. தெள்ளமுதும் தோற்று நிற்கிறது இங்கே... கவியமுது முன்னிலையில்...

    அழகான அறிமுகங்கள்...

    ReplyDelete
  5. ரசிக்க வைக்கும் அறிமுகங்கள். வாழ்த்துக்கள்!
    உங்களுக்கு பாராட்டுக்கள்!

    ReplyDelete
  6. நீங்கள் அறிமுகப்படுத்தும் விதம் அருமை.

    தேனம்மை, ராகவன் ஆகியோரிடம் அருமையான எழுத்துக்கள். அவர்கள் நட்பில் திளைக்க வைப்பவர்கள்.

    மற்றவர்களை விரைவில் படிக்கிறேன்.

    ReplyDelete
  7. தமிழ் மணத்தில் தவம் கொண்டெடுத்த முத்துக்கள். பகிர்ந்தமைக்கு நன்றி.

    ReplyDelete
  8. அருமை!!!!
    நல்ல அறிமுகங்கள்,
    நன்றி & வாழ்த்துக்கள் பாலாசி.

    ReplyDelete
  9. மிகவும் அருமை பாலாசி...பகிர்வுக்கு நன்றி!

    ReplyDelete
  10. அருமை அருமை பாலாசி .இவர்களை அறிமுகம் செய்ததால் வலைச்சரம் பெருமை உற்றது .நீங்கள் அதன் பெருமைக்கு வழிவகுக்கிறீர்கள்.நீங்கள் அறிமுகப்படுத்தும் அழகே அழகு
    .வாழ்த்துக்கள்

    ReplyDelete
  11. ஆஹா...

    அருமை பாலாசி

    நான் விரும்பி வாசிக்கும் கவிஞர்களையே நீயும் சுட்டியிருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது.

    நன்றி

    ReplyDelete
  12. அன்பு பாலாசி,

    மிகப்பெரிய அங்கீஹாரம் எனக்கு இது... காலையில் காரில் அலுவலகத்திற்கு வந்து கொண்டிருக்கும் போது பத்மாவின் தொலைபேசி அழைப்பு எனக்கு ஆச்சர்யத்தை கொடுத்தது... அவர்கள் முதலில் சொன்னது கங்குராஜூலேசன்ஸ் என்ற வார்த்தை என்ன என்று புரிபடுவதற்க்குள், வலைச்சரத்தை பற்றியும், அதில் என்னை அறிமுகபடுத்தியது பற்றியும் சொன்னார்கள்... சந்தோசமாய் இருந்தது வயதானவர்கள் கடந்து போக அனுமதித்தேன், பின்னால் வந்து பைக்கில் இடித்தவனை மன்னித்தேன், மனசுக்கு பிடித்த பாடல்களை பாடினேன்... இன்னும் எத்தனையோ நெஹிழ்வான, மகிழ்வான விஷயங்களை செய்தேன் பயண தூரத்தை கடக்க... இந்த நாளும் இப்படியே தொடரும் என்று நினைக்கிறேன்... இந்த காலை அழகானதாய் இருக்கிறது பாலாசி... வைரம் என்று குறிப்பிட்டது உங்கள் அன்பை காட்டுகிறது இன்னும் ஒழுங்கில்லாத கார்பனாய் தான் இருக்கிறேன், நானோ தொழிற்நுட்பத்தின் படி ஒரு ஒழுங்கை அடைந்து வைரமாய் மாற நிறைய படிக்க வேண்டும், எழுத வேண்டும் என்று தோன்றுகிறது.
    நீங்கள் குறிப்பிட்டுள்ள அனைவரையும் படித்திருக்கிறேன், நான் உட்பட. எல்லோருக்கும் என் வாழ்த்துக்களும் அன்பும். உங்களுக்கும் பாலாசி, தொடர வேண்டும் இது போன்ற நல் அறிமுகங்கள்.

    அன்புடன்
    ராகவன்

    ReplyDelete
  13. எழுத்துப்பிழைகள்தான் நெருடுது.
    சமயங்களில் வேறு அர்த்தங்கள் தர வல்லவை அவை.
    :)

    ReplyDelete
  14. //நேசமித்ரன் said...
    ராகவனுக்கும் :)

    தேனம்மைக்கும் :)

    ராஜா சந்திர சேகருக்கும்
    காட்சிக்கும்
    வாழ்த்துகள்
    உங்களுக்கு என் நன்றி பாலாசி
    தட்டச்சு பிழைகளை சரி பார்க்கவும் :)//

    மிக்க நன்றி அய்யா... பிழைகளை திருத்தியிருக்கிறேன்...

    //Blogger ரோகிணிசிவா said...
    அருமையான பதிவுகளை அறிமுகம் செய்த உனக்கு தேங்க்ஸ் பாலாசி,
    அவங்க அசத்தறாங்க,
    அவங்கள அறிமுகம் பண்ணி நீயும் !!!//

    நன்றிங்க்கா... வாழ்த்துக்களுக்கும்...

    //Blogger அம்பிகா said...
    ராகவனுக்கும் :)
    தேனம்மைக்கும் :)
    இருவரையும் படித்திருக்கிறேன்.
    மற்றவர்களை இனிதான் படிக்க வேண்டும்
    நல்ல அறிமுகம். நன்றி பாலாசி.//

    நன்றிங்க அம்பிகா...

    //Blogger அகல்விளக்கு said...
    தெள்ளமுதும் தோற்று நிற்கிறது இங்கே... கவியமுது முன்னிலையில்...
    அழகான அறிமுகங்கள்...//

    ராசா..வாங்க நன்றி...

    //Blogger Chitra said...
    ரசிக்க வைக்கும் அறிமுகங்கள். வாழ்த்துக்கள்!
    உங்களுக்கு பாராட்டுக்கள்!//

    நன்றிங்க சித்ரா....

    //Blogger சே.குமார் said...
    நீங்கள் அறிமுகப்படுத்தும் விதம் அருமை.
    தேனம்மை, ராகவன் ஆகியோரிடம் அருமையான எழுத்துக்கள். அவர்கள் நட்பில் திளைக்க வைப்பவர்கள்.
    மற்றவர்களை விரைவில் படிக்கிறேன்.//

    உண்மைதான்... நன்றிங்க சே.குமார்...

    //Blogger வானம்பாடிகள் said...
    தமிழ் மணத்தில் தவம் கொண்டெடுத்த முத்துக்கள். பகிர்ந்தமைக்கு நன்றி.//

    கண்டுபிடிச்சிட்டீங்களா?.... ரைட் நன்றிகள்...

    //Blogger சைவகொத்துப்பரோட்டா said...
    அருமை!!!!
    நல்ல அறிமுகங்கள்,
    நன்றி & வாழ்த்துக்கள் பாலாசி.//

    நன்றிங்க நண்பரே...

    ReplyDelete
  15. //சந்தனமுல்லை said...
    மிகவும் அருமை பாலாசி...பகிர்வுக்கு நன்றி!//

    நன்றிங்க சந்தனமுல்லை..

    //Blogger padma said...
    அருமை அருமை பாலாசி .இவர்களை அறிமுகம் செய்ததால் வலைச்சரம் பெருமை உற்றது .நீங்கள் அதன் பெருமைக்கு வழிவகுக்கிறீர்கள்.நீங்கள் அறிமுகப்படுத்தும் அழகே அழகு
    .வாழ்த்துக்கள்//

    நன்றிங்க பத்மா... வாழ்த்துதலுக்கும்...

    //Blogger ஈரோடு கதிர் said...
    ஆஹா...
    அருமை பாலாசி
    நான் விரும்பி வாசிக்கும் கவிஞர்களையே நீயும் சுட்டியிருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது.
    நன்றி//

    நன்றிங்க அய்யா...

    //Blogger ராகவன் said...
    அன்பு பாலாசி,
    மிகப்பெரிய அங்கீஹாரம் எனக்கு இது... காலையில் காரில் அலுவலகத்திற்கு வந்து கொண்டிருக்கும் போது பத்மாவின் தொலைபேசி அழைப்பு எனக்கு ஆச்சர்யத்தை கொடுத்தது... அவர்கள் முதலில் சொன்னது கங்குராஜூலேசன்ஸ் என்ற வார்த்தை என்ன என்று புரிபடுவதற்க்குள், வலைச்சரத்தை பற்றியும், அதில் என்னை அறிமுகபடுத்தியது பற்றியும் சொன்னார்கள்... சந்தோசமாய் இருந்தது வயதானவர்கள் கடந்து போக அனுமதித்தேன், பின்னால் வந்து பைக்கில் இடித்தவனை மன்னித்தேன், மனசுக்கு பிடித்த பாடல்களை பாடினேன்... இன்னும் எத்தனையோ நெஹிழ்வான, மகிழ்வான விஷயங்களை செய்தேன் பயண தூரத்தை கடக்க... இந்த நாளும் இப்படியே தொடரும் என்று நினைக்கிறேன்... இந்த காலை அழகானதாய் இருக்கிறது பாலாசி... வைரம் என்று குறிப்பிட்டது உங்கள் அன்பை காட்டுகிறது இன்னும் ஒழுங்கில்லாத கார்பனாய் தான் இருக்கிறேன், நானோ தொழிற்நுட்பத்தின் படி ஒரு ஒழுங்கை அடைந்து வைரமாய் மாற நிறைய படிக்க வேண்டும், எழுத வேண்டும் என்று தோன்றுகிறது.
    நீங்கள் குறிப்பிட்டுள்ள அனைவரையும் படித்திருக்கிறேன், நான் உட்பட. எல்லோருக்கும் என் வாழ்த்துக்களும் அன்பும். உங்களுக்கும் பாலாசி, தொடர வேண்டும் இது போன்ற நல் அறிமுகங்கள்.
    அன்புடன்
    ராகவன்//

    மிக்க நன்றிங்க அய்யா... எப்படியாயினும் என் பார்வையில் தாங்கள் வைரம்தான்....

    //Blogger ♠ ராஜு ♠ said...
    எழுத்துப்பிழைகள்தான் நெருடுது.
    சமயங்களில் வேறு அர்த்தங்கள் தர வல்லவை அவை.
    :)//

    நன்றிங்க ராஜு..சரிசெய்துவிட்டேன்...

    //Blogger T.V.ராதாகிருஷ்ணன் said...
    நல்ல அறிமுகம்//

    நன்றிங்க அய்யா....

    ReplyDelete
  16. வாவ்!!

    அற்புதம் பாலாஜி!

    ராகவனின் பின்னூட்டங்கள்-தனித்துவமானது,என்பதையும் இங்கு பதிய விரும்புகிறேன்.

    வாழ்த்துக்கள் ராகவன்,சந்திரா,தேனு மக்கா!

    ReplyDelete
  17. வலைச்சர வாழ்த்துக்கள் பாலாஜி..அறிமுகங்களுக்கு நன்றி..

    ReplyDelete
  18. பகிந்தமைக்கு நன்றி்.

    ReplyDelete
  19. எல்லோரும் கலக்கல்,அதிலும் ராகவன் .....கலக்கலோ கலக்கல்..

    ReplyDelete
  20. அன்பின் பாலாசி

    நீண்ட மறுமொழி போட எண்ணி - எண்னிய கருத்துகளை எண்ணத்திலேயே வைத்து விட்டேன். அறிமுகங்கள் அருமை - அததனை சுட்டிகளையும் சுட்டிச் சென்று படித்து ரசித்து மறுமொழி இட்டு மகிழ்ந்தேன்.

    அத்தனையும் அருமை -

    நல்வாழ்த்துகள் பாலாசி
    நட்புடன் சீனா

    ReplyDelete
  21. //பா.ராஜாராம் said...
    வாவ்!!
    அற்புதம் பாலாஜி!
    ராகவனின் பின்னூட்டங்கள்-தனித்துவமானது,என்பதையும் இங்கு பதிய விரும்புகிறேன்.
    வாழ்த்துக்கள் ராகவன்,சந்திரா,தேனு மக்கா!//

    நன்றிங்கய்யா.. ராகவனின் பின்னூட்டம் தனித்துவம் மிக்கதுதான்.

    //Blogger கண்ணகி said...
    வலைச்சர வாழ்த்துக்கள் பாலாஜி..அறிமுகங்களுக்கு நன்றி..//

    நன்றிங்க கண்ணகி...

    //Blogger D.R.Ashok said...
    :)//

    நன்றிங்கண்ணா...

    //Blogger தாராபுரத்தான் said...
    பகிந்தமைக்கு நன்றி்.//

    வாங்க அய்யா... நன்றி...

    //Blogger ஜெரி ஈசானந்தன். said...
    எல்லோரும் கலக்கல்,அதிலும் ராகவன் .....கலக்கலோ கலக்கல்..//

    நன்றிங்க ஜெரி சார்...

    //Blogger cheena (சீனா) said...
    அன்பின் பாலாசி
    நீண்ட மறுமொழி போட எண்ணி - எண்னிய கருத்துகளை எண்ணத்திலேயே வைத்து விட்டேன். அறிமுகங்கள் அருமை - அததனை சுட்டிகளையும் சுட்டிச் சென்று படித்து ரசித்து மறுமொழி இட்டு மகிழ்ந்தேன்.
    அத்தனையும் அருமை -
    நல்வாழ்த்துகள் பாலாசி
    நட்புடன் சீனா//

    மிக்க நன்றி சீனா அய்யா... தாங்கள் சுட்டி படித்தமைக்கும் நன்றிகள்....

    ReplyDelete
  22. ஆகச்சிறந்த நடையில் அற்புதமான அறிமுகங்கள்.
    அனைவரையும் சென்று பார்க்கிறேன்.

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது