சங்கம் வைக்காமல் தமிழ் வளர்க்கும் பதிவர்கள்
இதுவரை படித்து பின்னூட்டமிட்டு ஆதரவளித்து வரும் அனைத்து நண்பர்களுக்கும் நன்றி. இனி வரும் இடுகைகளுக்கும் தங்களது ஆதரவை தொடர்க.
====================
மொ.வ : அமைச்சரே இன்று இடுகை முழுக்க ஊதா மையினால் எழுதப்பட்டுள்ளதே ஏன்.
மங்குனி : அதுவா மன்னா. அக்பர் சிறுவயதில் ஏப்ரல் 1ம் தேதி போறவார பையன்கள் மேல மை தெளிப்பாராம் அந்த நினைவில் தான்.
மொ.வ : பார்த்தா தெளித்தவர் மாதிரி தெரியலை. பாருங்க இவர் சட்டைதான் மையா இருக்கு. ம்.. அக்பர் இன்று என்ன ஸ்பெஷல்.
அக்பர் : தமிழ் வலைதளத்தில் சிறப்பாக இயங்கிவரும் சில டாக்டர்களை முதலில் பார்க்கலாம் மன்னா.
மொ.வ : ஆகா அருமை அப்படியே ஆகட்டும். ஆனால் அவர்கள் ஏற்கனவே பிரபலம் ஆயிற்றே.
அக்பர் : புதியவர்களுக்கு இவர்கள் புதியவர்கள்தானே மன்னா.
முதலில் டாக்டர் தேவா சார். மருத்துவம் தொடர்பாக அருமையான பல இடுகைகளை எழுதியுள்ளார். அனைத்து பதிவர்களையும் தோழமையுடன் அணுகும் தன்மை சிறப்பு. அனைவருக்கும் பிடித்தமானவர்.
அடுத்து டாக்டர் புருனோ சார். அருமையான மருத்துவக்குறிப்புகள் வழங்குவதோடு மட்டுமில்லாமல், மருத்துவத்துறை சம்பந்தமான செய்திகளையும் அலசுகிறார். ஒரு மருத்துவராக மட்டுமில்லாமல் தேவா சாரை போல தோழமை உணர்வு உள்ளவர்.
நம் தல டாக்டர் சுரேஷ் அவர்களும் மருத்துவம் சம்பந்தமாக தனி வலைப்பூ வைத்துள்ளார். கிராமப்புற மருத்துவர்களின் பிரச்சனைகளை விரிவாக அலசியுள்ளார். மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் இவரின் இடுகைகள் அருமை.
டாக்டர் துமிழ் சார் அவர்கள் குழந்தைப்பேறு , பாலியல் சம்பந்தமான இடுகைகளை அருமையாக எழுதியுள்ளார். இன்னும் பலரை தனது பதிவு சென்றடைய வேண்டுமென்பதில் அக்கறை எடுத்துக்கொள்வது பிடித்திருக்கிறது.
டாக்டர் சுர்ஜித் (Dr. Srjith.) அவர்கள் ஒரு அக்குபஞ்சர் ஸ்பெஷலிஸ்ட். அக்கு பஞ்சர் பற்றிய இவரின் சுவாரஸ்யமான இடுகைகளை படிக்க தவறாதீர்கள். வலையுலகுக்கு புதியவரான இவருக்கு நாம் தொடர் ஆதரவு கொடுத்து நல்ல பல இடுகைகளை பெறுவோம். (அறிமுகப்படுத்தியதற்கு நன்றி நாடோடி ஸ்டீபன்)
மன நல மருத்துவர்கள், டாக்டர் ருத்ரன், டாக்டர் ஷாலினி வலைத்தளத்தில் இயங்குவது நமக்கு பெருமையே.
மொ.வ : மற்ற மருத்துவர்களிடம் போனால் ஊசி போட்டு விடுவார்கள். நான் அக்கு பஞ்சர் மருத்துவரிடம் போகிறேன்.
மங்குனி : மன்னா அவர்களிடம் ஒரு ஊசி, இவரிடம் போனால் உடம்பு முழுக்க ஊசிதான் ஜாக்கிரதை.
அக்பர் : வலிக்காது மன்னா. பயம் வேண்டாம்.
மொ.வ : அடுத்து யார் அக்பர்.
அக்பர் : பதிவுலகிற்கு வந்த குறுகிய காலத்தில் தன் எழுத்தின் மூலம் அதிக நண்பர்களையும், வாசகர்களையும் பெற்ற நண்பர் செ. சரவணகுமாரின் பக்கத்தை பார்ப்போம் மன்னா. புத்தகவிமர்சனம், சினிமா விமர்சனம், சொந்த அனுபவங்கள் என்று எதை எழுதினாலும் இனிமையாக, எளிமையாக மனதில் பதியச்செய்து விடுவது இவரின் சிறப்பு. ஒரு முறை சென்றால் விடமாட்டீர்கள்.
அது போலவே மாம்ஸ் ஜெகநாதனும் தனது வித்தியாசமான நடையில் படிப்பவர்களை கட்டிப்போட்டு விடுகிறார்.இவரின் இடுகைகளுக்கு இருப்பது போலவே இவரது பின்னூட்டங்களுக்கும் தனி ரசிகர் பட்டாளம் உண்டு அதில் நான்தான் முதலில்.
அடுத்து நம்ம ஷங்கி அண்ணன். வேலைப்பளு காரணமாக குறைவாக எழுதினாலும் ரசிக்க வைத்து விடுவது அவரது சிறப்பு. நெகிழ வைக்கும் எழுத்துக்கு சொந்தக்காரர்.
நண்பர் கார்த்திகேயனின் ஹாலிவுட் சினிமா விமர்சனங்கள் எனக்கு மிகப்பிடித்தமானவை. இவரின் விமர்சனத்தை படித்தால் படம் பார்க்கவே தேவையில்லை அந்த அளவு காட்சிக்கு காட்சி மிக நுட்பமாக விவரித்து நம் கண் முன் கொண்டு வந்து விடுவார். இவரின் விமர்சன தூண்டுதலில் புரியாத படங்களை கூட ரசித்துப்பார்த்துள்ளேன். அண்ணன் ஹாலிவுட் பாலா போலவே மற்றுமொரு சிறந்த விமர்சகர்.
அது போலவே தமிழ் பட விமர்சனங்களுக்கு ஜெட்லி. இவரின் விமர்சனத்தை பார்த்தே படம் ஓடுமா, ஓடாத என்பதை தெரிந்து கொள்ளலாம். அதுவும் அந்த ஜெட்லி பஞ்ச் சூப்பர்.
மொ.வ : ஆமாம் முட்டாள்கள் தினம் தேவையா?
அக்பர் : மகளிர் தினம், குழந்தைகள் தினம், தொழிலாளர்கள் தினம்னு இருக்கிறமாதிரி நமக்கும் ஒரு தினம் இருந்துட்டு போகட்டுமே மன்னா.
மொ.வ : நீங்க சொன்னவங்களை எல்லாம் அவசியம் இன்று சந்திக்கணும். அதனால இன்று இது போதும். மக்களே நீங்களும் வாருங்கள். அதுக்கு முன்னாடி பின்னூட்டம் போட்டுட்டு வர மறந்துறாதிங்க.
,
|
|
:)
ReplyDeleteமருத்துவர்கள் முகாம் !
super
ReplyDeleteடாக்டர்களை அறிமுக படுத்தியதுக்கு நன்றி. வித்தியசமா போய்கிட்டிருக்கு நல்லா கலக்குங்க.
ReplyDeleteஅருமையான டாக்டர்கள் பற்றிய அலசல் நல்லாருக்கு அக்பர். அதுபோல சரவணகுமார் ஒரு நல்ல இடுகையாளர். அவர் எழுத்து நடை ரொம்ப பிடிக்கும், ஷங்கி, மாப்ள ஜெகநாதன் பின்னூட்ட ரசிகபட்டாளத்துல நானும் ஒருவன் எனபதை சொல்லிக்கொள்கிறேன்.
ReplyDeleteநல்ல அறிமுகங்கள்.., வாழ்த்துக்கள் அக்பர்.
//மொ.வ : அமைச்சரே இன்று இடுகை முழுக்க ஊதா மையினால் எழுதப்பட்டுள்ளதே ஏன்.
ReplyDeleteமங்குனி : அதுவா மன்னா. அக்பர் சிறுவயதில் ஏப்ரல் 1ம் தேதி போறவார பையன்கள் மேல மை தெளிப்பாராம் அந்த நினைவில் தான்.// 2010 இல் நம்பர் ஒன் ஜோக்.இன்று மருத்துவபதிவர்களின் அறிமுகம் அபாரம்.
ரைட்டு, மருத்துவர்களை
ReplyDeleteசந்திக்க வேண்டியதுதான்.
இந்த வியாழனை மருத்துவ வியாழனாக வழங்கிய அக்பருக்கு சட்டையில் மையை தெளிக்கும்படி அண்ணன் ஸ்டார்ஜனை தாழ்மையோடு கேட்டு கொள்கிறேன்.
ReplyDelete:))
http://hainallama.blogspot.com
ReplyDeleteஇதுவும் ஒரு மருத்துவரின் பக்கம். (தகவலுக்காக)
"இங்க இலவச மருத்துவ முகாம் நடக்குதுன்னு சொன்னாங்கப்பு",அதான் வந்தேன்.
ReplyDeleteநன்றிங்க அக்பர்..
ReplyDelete//மொ.வ : அமைச்சரே இன்று இடுகை முழுக்க ஊதா மையினால் எழுதப்பட்டுள்ளதே ஏன்.
ReplyDeleteமங்குனி : அதுவா மன்னா. அக்பர் சிறுவயதில் ஏப்ரல் 1ம் தேதி போறவார பையன்கள் மேல மை தெளிப்பாராம் அந்த நினைவில் தான்.//செம காமெடி..
அனைவரின் அறிமுகங்களும் அசத்தல்...
டாக்டர்களின் அறிமுகம் அருமை அக்பர்... நான் சொன்னதை மனதில் வைத்ததற்கு நன்றி..
ReplyDeleteமொ.வ : ஆமாம் முட்டாள்கள் தினம் தேவையா?
ReplyDeleteஅக்பர் : மகளிர் தினம், குழந்தைகள் தினம், தொழிலாளர்கள் தினம்னு இருக்கிறமாதிரி நமக்கும் ஒரு தினம் இருந்துட்டு போகட்டுமே மன்னா.
....ha,ha,ha,ha....
Congratulations to everyone!
/"இங்க இலவச மருத்துவ முகாம் நடக்குதுன்னு சொன்னாங்கப்பு",அதான் வந்தேன்/
ReplyDeleteஅதே!அதே!
வாங்க கோவி அண்ணா
ReplyDelete//மருத்துவர்கள் முகாம் !//
அதுக்கு பிறகும் பதிவர்களை குறிப்பிட்டுருக்கிறேன் அண்ணா.
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
அருமையான பகிரல் அக்பர்!
ReplyDeleteஎழுத்துகள் அனைத்தும் ஊதா நிறத்தில் இருப்பதின் காரணம் அருமை. வி.வி.சி.
ReplyDeleteமருத்துவர்கள் பலரை அறிமுகம் செய்த முறை நன்று.
மற்ற நண்பர்களின் இடுகைகளும் நன்று
நல்ல்ல அறிமுகங்கள் - நல்வாழ்த்துகள் அக்பர். நட்புடன் சீனா
//நம் தல டாக்டர் சுரேஷ் அவர்களும் மருத்துவம் சம்பந்தமாக தனி வலைப்பூ வைத்துள்ளார். கிராமப்புற மருத்துவர்களின் பிரச்சனைகளை விரிவாக அலசியுள்ளார். மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் இவரின் இடுகைகள் அருமை.//
ReplyDeleteஅறிமுகப் படுத்தியதற்கு நன்றி தல.., மொக்கைக்காக ஆரம்பித்த வலைப்பூ இந்த வலைப்பூவை மறைத்துவிடுமோ என்ற பயம் இன்னும் இருந்து கொண்டேதான் இருக்கிறது.,
This comment has been removed by the author.
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteவாழ்த்துக்கள் புதிய அறிமுகங்களுக்கு
ReplyDeleteவிஜய்
அக்யூபஞ்சர் டாக்டர் புது அறிமுகம் எனக்கு. அருமை. தங்கள் அன்பிற்கு நன்றி சிநேகிதரே!
ReplyDeleteரொம்ப நன்றி அக்பர். நீங்கள் குறிப்பிட்டுள்ள மற்ற நண்பர்களையும் அவசியம் வாசிக்கிறேன். அருமையாகப் போய்க்கொண்டிருக்கிறது இந்த வலைச்சர வாரம்.
ReplyDeleteவாங்க ராதாகிருஷ்ணன் சார்
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
வாங்க ஜெய்லானி
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
வாங்க ஸ்டார்ஜன்
ReplyDelete//மாப்ள ஜெகநாதன் பின்னூட்ட ரசிகபட்டாளத்துல நானும் ஒருவன் எனபதை சொல்லிக்கொள்கிறேன்.//
ரொம்ப சந்தோசம்.
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
வாங்க ஸாதிகா.
ReplyDelete//2010 இல் நம்பர் ஒன் ஜோக்.இன்று மருத்துவபதிவர்களின் அறிமுகம் அபாரம்.//
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
வாங்க சைவகொத்துப்பரோட்டா
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
வாங்க கண்ணா
ReplyDelete//இந்த வியாழனை மருத்துவ வியாழனாக வழங்கிய அக்பருக்கு சட்டையில் மையை தெளிக்கும்படி அண்ணன் ஸ்டார்ஜனை தாழ்மையோடு கேட்டு கொள்கிறேன்.//
இங்கதான் மை பேனா இல்லையே... :)
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
வாங்க ஹுஸைனம்மா
ReplyDeleteதகவலுக்கு நன்றி.
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
வாங்க ஜெரி ஈசானந்தன்.
ReplyDelete// "இங்க இலவச மருத்துவ முகாம் நடக்குதுன்னு சொன்னாங்கப்பு",அதான் வந்தேன்.//
இது எப்போ!
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
வாங்க பழனிசாமி சார்
ReplyDeleteஉங்களுக்குத்தான் நன்றி சொல்லனும்.
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
வாங்க Mrs.Menagasathia
ReplyDelete//செம காமெடி
அனைவரின் அறிமுகங்களும் அசத்தல்...//
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
வாங்க ஸ்டீபன்
ReplyDelete//டாக்டர்களின் அறிமுகம் அருமை அக்பர்... நான் சொன்னதை மனதில் வைத்ததற்கு நன்றி..//
இது கடமை
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
வாங்க சித்ரா
ReplyDelete// ....ha,ha,ha,ha....
Congratulations to everyone! //
இது ரொம்ப ஓவர் :)
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
வாங்க அருணா
ReplyDelete///"இங்க இலவச மருத்துவ முகாம் நடக்குதுன்னு சொன்னாங்கப்பு",அதான் வந்தேன்/
அதே!அதே!//
நீங்களுமா!
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
வாங்க பா.ரா அண்ணே
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
வாங்க சீனா ஐயா
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
வாங்க தல சுரேஷ்
ReplyDeleteஉங்களுக்கு மெயில் அனுப்புகிறேன்.
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
வாங்க ராஜா
ReplyDelete//தாமிரபரணி தண்ணி குடிச்ச ஆளுக்கு தனித்திறமை உண்டுன்னு நிரூபிச்சுட்டிங்க... //
சொல்லவேயில்லை :)
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
வாங்க விஜய்
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
வாங்க ஷங்கி
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
வாங்க சரவணன்
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
நன்றி பாஸ்
ReplyDelete//மருத்துவர்கள் முகாம் !//
ReplyDeleteஆனால் முகாம் மருத்துவர்கள் அல்ல
ஹி ஹி ஹி
அதாவது ஒவ்வொரு ஊரிலும் முகாமிட்டு லேகியம் விற்பவர்கள் அல்ல :) :)
அக்பர் நண்பரே,
ReplyDeleteஎன்னையும் மருத்துவ ஜாம்பவான்களுக்கு மத்தியில் அறிமுகப்படுத்தியதற்கு நன்றி..! மற்ற டாக்டர்களின் அறிமுகங்களுகும் மிகவும் உபயோகமாக உள்ளன..!
வாங்க புருனோ சார்
ReplyDelete//ஆனால் முகாம் மருத்துவர்கள் அல்ல
ஹி ஹி ஹி
அதாவது ஒவ்வொரு ஊரிலும் முகாமிட்டு லேகியம் விற்பவர்கள் அல்ல :) :)//
உங்கள் டைமிங் ரைமிங்கா இருக்கு.
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
வாங்க Dr. Srjith.
ReplyDeleteதங்களைப்போன்றோர்களின் சேவை மிக அவசியம். தொடர்ந்து எழுதுங்கள்.
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.