07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது
Showing posts with label அக்பர். Show all posts
Showing posts with label அக்பர். Show all posts

Sunday, April 4, 2010

விடைபெறுகிறேன் , நன்றி நண்பர்களே !


உலகத்தில் எந்த மாற்றமும் இல்லாமல் மாறிக்கொண்டிருப்பது காலம்தான். இப்போதுதான் அறிமுக இடுகை எழுதிய மாதிரி இருக்கிறது அதுக்குள் நன்றி இடுகை.

இந்த ஒரு வார காலத்தையும் சுகமான சுமையாக மகிழ்ச்சியாகவே உணர்கிறேன். உங்களுக்காக தேடியதில் நானும் பல நல்லபதிவுகளை காணமுடிந்தது.

முதல் இடுகையில் புது நண்பர் ஒருவர் "தர‌மற்ற இடுகைகளுக்கு போடப்படும் பின்னூட்டங்கள்தான் தரமான பதிவுகளை வளரவிடாமல் தடுக்கிறது" என்று சொல்லியிருந்தார். அப்படியில்லை நண்பரே ஒவ்வொரு பின்னூட்டத்தையும் நட்பிற்கான முகவரி அட்டையாகவே உணர்கிறேன் நான். அதில் பல புதிய நண்பர்களும் கிடைத்துள்ளார்கள். போக , நல்ல எழுத்துக்கள் எப்படியாவது அனைவரையும் சென்றடைந்தே தீரும்.

ஏனெனில் பிளாக்கரின் அடிப்படை நோக்கமே தங்கள் அனுபவங்கள், போட்டோக்கள், குறிப்புகள், படைப்புகள் போன்ற கருத்து பரிமாற்றங்கள்தான் எழுத்தாளர்களை உருவாக்குவது அல்ல. ஆனால் இதிலுருந்து சக பதிவர் சிறந்த எழுத்தாளராக ஆவதில் எங்களைவிட மகிழ்ச்சியடைபவர்கள் யார் இருக்கிறார்கள். மகிழ்ந்தும் இருக்கிறோம்.

புதியவர் பழையவர் என்ற பேதம் இல்லாமல் சில நேரங்களில் நாம் இடும் சில இடுகைகள் சிறப்பானவையாக அமைந்துவிடும். அந்த மாதிரி இடுகைகள் உங்கள் கண்ணில் படும்போது உங்கள் பதிவில் தெரிவித்தால் படிப்பவர்களுகு மிக உபயோகமாக இருக்கும். அதன் தொடக்கமாகவே நான் வாரம் ஒருமுறை படித்ததில் பிடித்த இடுகைகளை ( பதிவுகளை அல்ல )எழுதுகிறேன். நீங்களும் எழுதுங்கள் நாம் பயன்பெற.

எனக்கு எழுத வாய்ப்பளித்த சீனா ஐயாவுக்கு மிக்க நன்றிகள். புதிய பதிவர்களின் அறிமுகம் என்பதைவிட எனக்கான அறிமுகமாகவே இதை உணர்கிறேன். இது போல் மேலும் பல பதிவர்களை அறிமுகப்படுத்திக் கொண்டிருக்கும் சீனா ஐயாவை பாராட்ட வார்த்தைகளில்லை.

போலவே என்னுடனிருந்து அறிமுகம் செய்த மொக்கை வர்மனுக்கும், மங்குனிக்கும் நன்றிகள்.

இனிதே விடைபெறுகிறேன் நண்பர்களே. வாசித்த அனைவருக்கும் எனது நன்றிகள்.

மீண்டும் சந்திப்போம்.
மேலும் வாசிக்க...

Saturday, April 3, 2010

இன்டர்நெட் யுக காதல் !

மொ. : ஹாய் அக்பர்! இன்னிக்கு யாரையெல்லாம் இன்ட்ரடியூஸ் பண்ண போறீங்க.

அக்பர் : ! மன்னா இங்கிலீஷ் கலந்து பேசுறீங்க.

மொ. : எல்லாம் உங்கள மாதிரி ஆளுகிட்ட ஒரு வாரமா பேசிப்பேசி தான்.

அக்பர் : மன்னா டாக்டர்கள் பற்றிய அறிமுகப்பதிவில் டாக்டர் எம்.கே.முருகானந்தன் அவர்களை குறிப்பிட மறந்து விட்டேன். அருமையான பல மருத்துவ கட்டுரைகள் அளித்துள்ளார் போய் பாருங்கள். ( நினைவூட்டலுக்கு நன்றி ஹுசைனம்மா)

அது போலவே முனைவர் இரா.குணசீலன் அவர்களும் பல அருமையான இடுகைகளை வழங்கியுள்ளார். தங்கம் கொடுத்து மிளகு வாங்கியவர்களை இவர் பதிவில் காணலாம்.

இனி கணினி வைத்திருக்கும் அனைவருக்கும், அது சம்பந்தமாக படிப்பவர்களுக்கும் பல உபயோகமான தகவல்களை அளிக்கும் வலைப்பூக்களை காணலாம்.

முதலில் நம் மாம்ஸ் ஜெகநாதன் - சங்கர் இணைந்து வழங்கும் கற்போம் எக்ஸெல். இதில் செல்லுக்கு பூட்டு போடுவது குறித்து அருமையாக விளக்கியுள்ளார்.

மொ. : அமைச்சரவையில் சிலருக்கு வாய்ப்பூட்டு போட வேண்டியுள்ளது.

அக்பர் : தங்களை மனதில் வைத்துதானோ என்னவோ எண்ணுதல் யார்க்கும் எளியவாம் என்னும் தலைப்பில் இன்னொரு இடுகை எழுதியிருக்கிறார்.

நண்பர் வடிவேலன் அவர்கள் கணினியில் உள்ள ஒன்றுக்கும் மேற்பட்ட இடத்தில் பதிந்துள்ள ஒரே புகைப்படைத்தை நீக்கவும், தேவையற்ற தளங்களை பார்ப்பதிலிருந்து குழந்தைகளை பாதுக்காக்கவும் வழிகள் சொல்லியுள்ளார்.

மொ. : அவசியமான ஒன்று. அடுத்து.

அக்பர் : நண்பர் சைபர்சிம்மன் பிற மொழிகளை எளிதாக கற்க வழி சொல்வதோடு, இன்டர்நெட் யுக காதலைப்பற்றியும் அழகாக எழுதியுள்ளார்.

நண்பர் டிவிஎஸ் 50 பிளாக்கர்களுக்கு பயன்படும் விதமாக "மேலும் வாசிக்க" வைப்பது எப்படி என்று கூறியுள்ளார். இடுகைகளை பிடிஎஃப் கோப்பாக சேமிப்பது பற்றியும் விளக்கியுள்ளார்.

மொ. : டிவிஎஸ் 50 பலதர மக்களுக்கும் பயனளித்தது போல இவரும் என்று சொல்லுங்கள்.

அக்பர் : நண்பர் சூரிய கண்ணன் நெருப்பு நரியில் வேகமாக உலவுவதற்கு வழிகள் சொல்லியுள்ளார்.

மொ. : குள்ள நரியை வேட்டையாடி இருக்கிறேன். நெருப்பு நரியா?

மங்குனி : ( வேட்டையாடிய லட்சணம்தான் தெரியுமே) மன்னா அது இணையத்தை திறக்க உதவும் மென்பொருள்.

அக்பர் : நண்பர் பிகேபி வெப் கேமரா பயன்படுத்தும் நேரம் தவிர மீதி நேரம் மூடிவைக்க அறிவுறுத்துகிறார் . ஐ போனில் அழகு தமிழின் பயன்பாட்டையும் விளக்கியுள்ளார்.

சுதந்திர இலவச மென்பொருள் தளத்தில் வீட்டுக்கடன் EMI கணக்கு போடுவது எப்படியென்று சொல்லிக்கொடுக்கிறார்கள். படிப்பதற்கு வசதியாக தமிழின் தொழில்நுட்ப பதிவுகளின் பட்டியலை அளித்துள்ளார்கள்.

மொ. : ரொம்ப நல்ல தகவல்.

அக்பர் : இணையத்தில் கட்டற்ற சுதந்திரம் இருப்பது போலவே தனிநபர் பாதுகாப்பும் கேள்விக்குறியாகவே இருப்பதால் ஜாக்கிரதையாக இருப்பது நல்லது. அனைத்து தளங்கள் வழங்கும் மென்பொருள்களையும் சரி பார்த்த பின்பே பயன்படுத்துங்கள்.
மேலும் வாசிக்க...

Friday, April 2, 2010

மங்குனி முதல் அமைச்சரா !

மொ.வ : என்ன அக்பர் லேட்டு?

அக்பர் : லேட்டா வந்தாலும் லேட்டஸ்ட்டா வருவேன் மன்னா.

மொ.வ : என்ன பஞ்ச் டயலாக்கா?

அக்பர் : இல்லை பதிவர் டயலாக். சரி இனி அறிமுகத்தை ஆரம்பிப்போம். இன்று இந்த பதிவைப்பார்த்ததும் மனதுக்கு வருத்தமாகிவிட்டது.

உமா அவர்கள் எழுதிய இந்த பதிவை பார்த்தது அசந்து போய் விட்டேன். தமிழ் செய்யுளின் அனைத்து வகைகளையும் எளிமையான பாடல்களாக எழுதியிருக்கிறார். உதாரணத்துக்கு ஒன்று

காலை எழுந்து கண்மூடி தியானத்தில்
கருத்தை இருத்தல் நலம்.

நடையும் ஓட்டமும் நாளும் பழகினால்
அடையும் நன்மை பல.

உடலும் மனமும் ஓய்ந்திருந்தால் வாழ்வில்
கடலாய் பெருகும் கடன்.

அளவாய் தூக்கம் அறுசுவை உணவு
நலமாய் வாழும் நிலை.

ஆட்டமும் ஓட்டமும் நன்றாம் சிருவர்தம்
நாட்டம் அதிலே நிறுத்து.

என்ற இந்த பாடல் குறள் தாழிசை, வெண்பா பகுதியில் வருகிறது.

மொ.வ : சரி சந்தோசமான விசயம் தானே பிறகெதற்கு வருத்தம்.

அக்பர் : 2006லிருந்து எழுதி வரும் இவருக்கு இதுவரை 19 பின்தொடர்பவர்கள், ஒவ்வொரு பதிவுக்கும் 0 லிருந்து 6 பின்னூட்டம் வரை வந்துள்ளது. அவர் விரும்பாவிட்டாலும். படித்து ஊக்கப்படுத்துவது நமது கடமை தானே.

மொ.வ : சரியாக சொன்னீர்கள் இப்போதே போகிறேன்.

அக்பர் : அவசரம் வேண்டாம் இவர்களையும் படியுங்கள்.

அடுத்து ஆனந்தி அவர்களின் இந்த புதுக்கவிதையும் வாசியுங்கள். உதாரணத்துக்கு சில வரிகள்.

" உன்னிடம் ஒன்று கேட்பேன்
மறைக்காமல் சொல்வாயா??
உனக்குள் தொலைந்த என்னை
உயிராய் நீ காப்பாயா?? "

அது போக நீங்கள் எந்தவகை நண்பர் என்பதையும் அழகாக சொல்லியிருக்கிறார்.

நண்பர் சே. குமாரின் மனசுக்குள் சில எண்ணங்களை இங்கு அறிந்து கொள்ளலாம். கவிதையும் , சிறுகதையும் அருமையாக எழுதுகிறார்.

நண்பர் விஜயின் அச்சச்சுவை கவிதையை சுவைத்துப்பாருங்கள். கடவுச்சொல் மற‌ந்து விடுவீர்கள். அவரின் முதல் கவிதையையும் இங்கு காணலாம்.

அடுத்து மங்குனி அமைச்சர்.

மொ.வ : நிறுத்துங்கள். யோவ் மங்குனி என் அனுமதியில்லாமல் எப்போதைய்யா பதிவர் ஆகினீர்கள்.

மங்குனி : நீங்கள் வேறு அரசே கைரேகை பதியும் என்னைப்போய்... ஹிஹிஹி.. அது வேறு மங்குனி.

மொ.வ : பார்த்தால் மன்னர் மாதிரி அல்லவா இருக்கிறார்.

அக்பர் : எங்கள் நாட்டில் அமைச்சருக்கு மேல் உயர்ந்த பதவிகள் கிடையாது மன்னா. அது போக பதிவுலகில் முறையான அமைச்சராக வந்த முதல் அமைச்சரும் இவர்தான். நோகியா பரிசு போட்டி அறிவித்திருக்கிறார் கலந்து கொள்ளுங்கள் மன்னா.

அடுத்து நண்பர் சுரேந்திரனின் அகம் புறம் அருமையாக இருக்கிற‌து. ஒரு கிரிக்கெட்டரின் கதையை அருமையாக் சொல்லியிருக்கிறார் பாருங்கள்.

அது போலவே நண்பர் ஜெய்லானி முட்டாள்கள் தினத்தை பார்த்த பார்வையை இங்கே படியுங்கள்.

புல்லட் மணியை தெரியுமா.

மொ.வ : ஆராய்ச்சி மணி தெரியும். அதுவும் அடிக்கப்படாமலே கிடக்கிறது. அது யாரு புல்லட் மணி.

அக்பர் : மணி அடிக்கப்படவில்லை என்றால்? நாட்டில் குற்றங்களே இல்லையா மன்னா.

மங்குனி : நீங்க வேற அதை திருட்டு போயிட்டாங்க. வேறு மணி செய்யச் சொல்லியிருக்கு. நீங்க புல்லட் மணியைப் பற்றி சொல்லுங்கள்.

நண்பர் புல்லட் மணி அவர்கள். சச்சினிற்கு முன்னாலேயே சர்வதேச அரங்கில் 200 ரன்கள் அடித்தவரைப்பற்றி எழுதியுள்ளார். பஸ்ஸை பற்றி இவரின் பார்வை நன்று.

நண்பர் வெங்கட் சிங்கத்திடமிருந்து தப்பிக்கச்சொல்லும் யோசனை அருமை. சேலையோட கதை சிரிக்க வைக்கிறது.

அடுத்து அண்ணன் பொன். பழனிச்சாமி அவர்கள் பெண் பார்த்த கதையையும், திருமண விருந்தையும் நகைச்சுவை ததும்ப சொல்லியுள்ளார் படியுங்கள்.



மொ.வ : ரொம்ப மகிழ்ச்சி அக்பர். மணி விசயத்தை யாரிடமும் சொல்லிவிடாதீர்கள்.

அக்பர் : அதற்கு மணி வேண்டும் மன்னா.
மேலும் வாசிக்க...

Thursday, April 1, 2010

சங்கம் வைக்காமல் தமிழ் வளர்க்கும் பதிவர்கள்

இதுவரை படித்து பின்னூட்டமிட்டு ஆதரவளித்து வரும் அனைத்து நண்பர்களுக்கும் நன்றி. இனி வரும் இடுகைகளுக்கும் தங்களது ஆதரவை தொடர்க.

‍‍‍‍‍‍‍‍‍‍‍====================

மொ.வ : அமைச்சரே இன்று இடுகை முழுக்க ஊதா மையினால் எழுதப்பட்டுள்ளதே ஏன்.

மங்குனி : அதுவா மன்னா. அக்பர் சிறுவயதில் ஏப்ரல் 1ம் தேதி போறவார பையன்கள் மேல மை தெளிப்பாராம் அந்த நினைவில் தான்.

மொ.வ : பார்த்தா தெளித்தவர் மாதிரி தெரியலை. பாருங்க இவர் சட்டைதான் மையா இருக்கு. ம்.. அக்பர் இன்று என்ன ஸ்பெஷல்.

அக்பர் : தமிழ் வலைதளத்தில் சிறப்பாக இயங்கிவரும் சில டாக்டர்களை முதலில் பார்க்கலாம் மன்னா.

மொ.வ : ஆகா அருமை அப்படியே ஆகட்டும். ஆனால் அவர்கள் ஏற்கனவே பிரபலம் ஆயிற்றே.

அக்பர் : புதியவர்களுக்கு இவர்கள் புதியவர்கள்தானே மன்னா.

முதலில் டாக்டர் தேவா சார். மருத்துவம் தொடர்பாக அருமையான பல இடுகைகளை எழுதியுள்ளார். அனைத்து பதிவர்களையும் தோழமையுடன் அணுகும் தன்மை சிறப்பு. அனைவருக்கும் பிடித்தமானவர்.

அடுத்து டாக்டர் புருனோ சார். அருமையான மருத்துவக்குறிப்புகள் வழங்குவதோடு மட்டுமில்லாமல், மருத்துவத்துறை சம்பந்தமான செய்திகளையும் அலசுகிறார். ஒரு மருத்துவராக மட்டுமில்லாமல் தேவா சாரை போல தோழமை உணர்வு உள்ள‌வர்.

நம் தல டாக்டர் சுரேஷ் அவர்களும் மருத்துவம் சம்பந்தமாக தனி வலைப்பூ வைத்துள்ளார். கிராமப்புற மருத்துவர்களின் பிரச்சனைகளை விரிவாக அலசியுள்ளார். மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் இவரின் இடுகைகள் அருமை.

டாக்டர் துமிழ் சார் அவர்கள் குழந்தைப்பேறு , பாலியல் சம்பந்தமான இடுகைகளை அருமையாக எழுதியுள்ளார். இன்னும் பலரை தன‌து பதிவு சென்றடைய வேண்டுமென்பதில் அக்கறை எடுத்துக்கொள்வது பிடித்திருக்கிறது.

டாக்டர் சுர்ஜித் (Dr. Srjith.) அவர்கள் ஒரு அக்குபஞ்சர் ஸ்பெஷலிஸ்ட். அக்கு பஞ்சர் பற்றிய இவரின் சுவாரஸ்யமான இடுகைகளை படிக்க தவறாதீர்கள். வலையுலகுக்கு புதியவரான இவருக்கு நாம் தொடர் ஆதரவு கொடுத்து நல்ல பல இடுகைகளை பெறுவோம். (அறிமுகப்படுத்தியதற்கு நன்றி நாடோடி ஸ்டீபன்)

மன நல மருத்துவர்கள், டாக்டர் ருத்ரன், டாக்டர் ஷாலினி வலைத்தளத்தில் இயங்குவது நமக்கு பெருமையே.

மொ.வ : மற்ற மருத்துவர்களிடம் போனால் ஊசி போட்டு விடுவார்கள். நான் அக்கு பஞ்சர் மருத்துவரிடம் போகிறேன்.

மங்குனி : மன்னா அவர்களிடம் ஒரு ஊசி, இவரிடம் போனால் உடம்பு முழுக்க ஊசிதான் ஜாக்கிரதை.

அக்பர் : வலிக்காது மன்னா. பயம் வேண்டாம்.

மொ.வ : அடுத்து யார் அக்பர்.

அக்பர் : பதிவுலகிற்கு வந்த குறுகிய காலத்தில் தன் எழுத்தின் மூலம் அதிக நண்பர்களையும், வாசகர்க‌ளையும் பெற்ற நண்பர் செ. சரவணகுமாரின் பக்கத்தை பார்ப்போம் மன்னா. புத்தகவிமர்சனம், சினிமா விமர்சனம், சொந்த அனுபவங்கள் என்று எதை எழுதினாலும் இனிமையாக, எளிமையாக மனதில் பதியச்செய்து விடுவது இவரின் சிறப்பு. ஒரு முறை சென்றால் விடமாட்டீர்கள்.

அது போலவே மாம்ஸ் ஜெகநாதனும் தனது வித்தியாசமான நடையில் படிப்பவர்களை கட்டிப்போட்டு விடுகிறார்.இவரின் இடுகைகளுக்கு இருப்பது போலவே இவரது பின்னூட்டங்களுக்கும் தனி ரசிகர் பட்டாளம் உண்டு அதில் நான்தான் முதலில்.

அடுத்து நம்ம ஷங்கி அண்ணன். வேலைப்பளு காரணமாக குறைவாக எழுதினாலும் ரசிக்க வைத்து விடுவது அவரது சிறப்பு. நெகிழ வைக்கும் எழுத்துக்கு சொந்தக்காரர்.

நண்பர் கார்த்திகேயனின் ஹாலிவுட் சினிமா விமர்சனங்கள் எனக்கு மிகப்பிடித்தமானவை. இவரின் விமர்சனத்தை படித்தால் படம் பார்க்கவே தேவையில்லை அந்த அளவு காட்சிக்கு காட்சி மிக நுட்பமாக விவரித்து நம் கண் முன் கொண்டு வந்து விடுவார். இவரின் விமர்சன தூண்டுதலில் புரியாத படங்களை கூட ரசித்துப்பார்த்துள்ளேன். அண்ணன் ஹாலிவுட் பாலா போலவே மற்றுமொரு சிறந்த விமர்சகர்.

அது போலவே தமிழ் பட விமர்சனங்களுக்கு ஜெட்லி. இவரின் விமர்சனத்தை பார்த்தே படம் ஓடுமா, ஓடாத என்பதை தெரிந்து கொள்ளலாம். அதுவும் அந்த ஜெட்லி பஞ்ச் சூப்பர்.

மொ.வ : ஆமாம் முட்டாள்கள் தினம் தேவையா?

அக்பர் : மகளிர் தினம், குழந்தைகள் தினம், தொழிலாளர்கள் தினம்னு இருக்கிறமாதிரி நமக்கும் ஒரு தினம் இருந்துட்டு போகட்டுமே மன்னா.

மொ.வ : நீங்க சொன்னவங்களை எல்லாம் அவசியம் இன்று சந்திக்கணும். அதனால இன்று இது போதும். மக்களே நீங்களும் வாருங்கள். அதுக்கு முன்னாடி பின்னூட்டம் போட்டுட்டு வர மறந்துறாதிங்க.


,
மேலும் வாசிக்க...

Wednesday, March 31, 2010

தமிழுக்கு அமுதென்று பேர் (வலைச்சரம் 3ம் நாள்)

மொ. : என்ன அக்பர் நீங்கள் நேற்று சொன்னதில் பாதி பேரை ஸ்டார்ஜன்னும் அறிமுகப்படுத்தியிருக்கிறாரே.

அக்பர் : ஒரு ஷோரூமில் வேலை பார்க்கும் இருவர் வலைச்சரத்தில் வேறு என்னதான் செய்யமுடியும்.

மொ. : இந்த மொக்கை காரணம் எல்லாம் சொல்லாமல் மேலும் புதியவர்களை அறிமுகப்படுத்துங்கள்.

அக்பர் : உத்தரவு மன்னா. தமிழுக்கு பெருமை ஏற்படுத்திய பலரில் முனைவர் எம். ஏ. சுசீலா அவர்கள் குறிப்பிடத்தக்கவர்கள். இவர் பியோத்தர் தஸ்தயேவ்ஸ்கியின் "குற்றமும் தண்டனையும்" நாவலை மொழிபெயர்த்து பலவிருதுகள் வாங்கியுள்ளார். பிரபல எழுத்தாளர்களின் பாராட்டும் அந்நூலுக்கு கிடைத்துள்ளது.

மொ. : அருமை. அருமை.. நிச்சயம் தமிழுக்கு பெருமைதான்.

அக்பர் : இதே வரிசையில் அடுத்து முனைவர் கல்பனாசேக்கிழார் இவரின் வலைத்தளத்தில் சங்க இலக்கியம், இலக்கணம், தமிழர் திருமண முறை, பழமொழிகள் , சொற்பொழிவுகள் என்று தமிழ் துள்ளி விளையாடுகிறது.

மொ. : அப்படியா. கண்டிப்பாக படித்தாக வேண்டுமே.

அக்பர் : இவர்கள் இருவரையும் அறிமுகப்படுத்திய சரவணனுக்கு நன்றி சொல்லி ஒரு போன் செய்து விடுகிறேன். (சிறிது நேரம் கழித்து) என்ன சரவணன் வீட்டுலையா இருக்கீங்க?

சரவணன் : ஆமாம் அக்பர். வீட்டுல எல்லோரும் ஒரு ஃபங்ஷனுக்கு போயிருக்காங்க.
அக்பர் : அப்படியா. போன் ஃபங்ஷன்ல தானே இருக்கு.
சரவணன் : இல்லைஜி எங்கிட்டதான் இருக்கு.
அக்பர் : அட! அடிச்சா எடுக்கலையே ஆன் பண்ணி இருக்கான்னு கேட்டேன்.அப்புறம் அறிமுகப்படுத்துனதுக்கு ரொம்ப நன்றி சரவணன்.

மங்குனி : மொக்கை போட்டது போதும் அடுத்து யாருன்னு சொல்லுங்க

அக்பர் : அடுத்து கயல்விழி சண்முகம். இவரின் கூர்வாளில் இருந்து புறப்படும் கவிதைகள் ஆழமாக மனதை பதம் பார்க்கிறது உதாரணத்துக்கு இந்த கவிதை.

நாலே வரியில் கவிதையில் கலக்கும் ஜீனும் மனதில் பதிந்த காவியம். ஆனாலும் இவருக்கு பாசம் அதிகம் தான்

அடுத்து பிரேமா மகள்,சுபி வன்யா (சரிதானே) அவர்களின் காதலனைப் பற்றி எழுதியுள்ள கவிதை அருமை. நானும் சாத்தனும் அப்படின்னு வேற பீதி கிளப்புகிறார்.

மொ. : அட எல்லாமே கவிதைகளாக இருக்கிறதே.

அக்பர் : பெண்களே கவிதைகள் தானே மன்னா.

ரெண்டு வரியில் எழுதிய முக்கனிக்குறளை பாரட்டும் நம்ம கோமா, அதே ரெண்டுவரியில் எழுதப்படும் எஸ்.எம்.எஸ் அழிச்சாட்டியங்களையும் அம்பலப்படுத்தியிருக்கிறார்.

மொ. : எனக்கும் விளம்பர எஸ்.எம்.எஸ் தொல்லை தாங்க முடியவில்லை அக்பர்.

மங்குனி : மன்னர் காலத்தில் எஸ்.எம்.ஸா லாஜிக் இடிக்கிறதே.

மொ. :அட மங்குனி அமைச்சரே. நம் மக்கள் காமெடி பதிவில் லாஜிக் பார்க்க மாட்டங்கையா.

அக்பர் : மேனகாசாதியா(Mrs.Menagasathia ) அவர்களின் சமையல் குறிப்புகளை சமைத்துப்பாருங்கள். பின்பு விடவே மாட்டீர்கள் அதன் சுவையை.

புதுப்பதிவர் மின்மினியும் சமையல் குறிப்பு அழகு குறிப்புகள் என்று அசத்துகிறார்.

மேலும் சிறப்பாக கதை, கவிதை, சமையல் குறிப்பு, அனுபவம், சமூகம் என்று எழுதிக்கொண்டிருக்கும் சகோதரிகள் தேனம்மை அக்கா, ஹுசைனம்மா, க.நா.சாந்தி லக்ஷ்மணன், ஜலீலா, ஸாதிகா, சித்ரா, அம்பிகா, சுமஜ்லா, மைதிலி கிருஷ்ணன், ஜெஸ்வந்தி, அனன்யா மகாதேவன், பவி, லக்ஷ்மி SRK, சிநேகிதி, பத்மா, பத்மினி , ஹேமா , மலிக்கா அனைவரும் ஏற்கனவே பிரபல பதிவர்கள் ஆகிவிட்டதால் விரிவாக சொல்லவேண்டாம் என்று நினைக்கிறேன். விரிவாக இங்கே இருக்கிறது.

தேனம்மை அக்கா எல்லோரையும் நீங்களே அறிமுகப்படுத்திட்டா நாங்க யாரை அறிமுகப்படுத்தன்னு கேட்பதால் இத்தோட நிறுத்திக்கிறேன்.

மொ. : எல்லாத்தையும் சொல்லிட்டு இப்படி ஒரு பிட்டா. இனி சொல்றதுக்கு யாரு இருக்கா.

அக்பர் : இன்னும் இருக்காங்க மன்னா, தினம் தினம் வந்து கொண்டு இருக்கிறார்கள் கலக்குவதற்கு.

,
மேலும் வாசிக்க...

Tuesday, March 30, 2010

பதிவர்கள் இமேஜ்! டோட்டல் டேமேஜ் !!( வலைச்சரம் 2ம் நாள் )

மொ.வ : அமைச்சரே இன்றைய நிகழ்ச்சிகள் என்ன?

மங்குனி : அக்பர் இன்று சில பதிவர் நண்பர்களை அறிமுகப்படுத்துகிறார் அரசே.

மொ.வ : ம்... ஆரம்பியுங்கள்.

அக்பர் : மன்னா இதோ இந்த போட்டாவில் இருக்கும் இருவரில் ஒருவர் உங்களுக்கு நன்றாக தெரிந்திருக்கும் மற்றவர் யார் என்று சொல்லுங்க பார்ப்போம்.

மொ.வ : அடடே இது நம்ம பிரதாப் தம்பியாச்சே, ஆமா அவருகிட்ட ஏதோ கேடயம் கொடுக்கிறாரே அவர் யாரு.

அக்பர் : நாசமாப் போச்சு அவர்தாங்க பாரதப்பிரதமர். சிறந்த மொக்கை பதிவர்ங்கிற பட்டத்தை கொடுக்கிறாரு. ஆமா அவரை விட பிரதாப்பை எப்படி தெரியும்?

மொ.வ : இது என்ன கேள்வி அவர் வேர்ல்ட் பேமஸாச்சே, ( நாஞ்சிலார் பந்தாவாக வருகிறார்). தம்பி பிரதாப் சுகமா, பார்த்து எத்தனை நாளாச்சு.
இவர் எழுதும் பட விமர்சனங்களை பார்த்தால் அசந்து விடுவீர்கள். அது போக அவங்க ஊர் ஹீரோவைப்பற்றி எப்படி எழுதியிருக்கிறார் தெரியுமா?

அக்பர் : மன்னா இது டூ மச் நாந்தான் பதிவரை அறிமுகப்படுத்தனும். இவரை ஒரு பெண் தன் குரலால் மயக்கியிருக்காங்க அது தெரியுமா?

மங்குனி : (மன்னரின் காதில்) நாஞ்சில் எக்ஸ்பிரஸை இவர் வைத்துள்ளதாக ஒற்றர்கள் மூலம் தகவல் வந்துள்ளது அரசே. இது தேசத்துரோகம் அல்லவா.

மொ.வ : அட மங்குனி அது ரயில் இல்லையா இவரோட வலைப்பூ. ம் அடுத்து.

அக்பர் : இவர்தான் நாடோடி ஸ்டீபன் குழந்தைகள் மேல இவர் வச்சிருக்கிற அக்கறை ரொம்ப புல்லரிக்குது மன்னா, இவர் புதிர் போடுவதிலும் வல்லவர்.

ஸ்டீபன் : நான் நாடோடி சவுதி கடல் பாலத்தை கண்டுவந்தேன். நம் நாட்டில் அது போல் சிறந்த பாலம் ஏதும் இல்லையே.

மொ.வ : ஹி.ஹி..ஹி.. நம் நாட்டில் கடலே இல்லையே. உங்கள் இருக்கையில் போய் அமருங்கள்.ம் அடுத்து.

அக்பர் : மன்னா அடுத்து கண்ணா. இவர் சிறந்த கட்டிட நிபுணர் குறைந்த செலவில் கட்டிடம் கட்டுவதைப்பற்றி எழுதி வருகிறார். புர்ஜ் கட்டிடத்தையே கட்டியவர் அப்படின்னா பாருங்களேன்.

கண்ணா : வாஸ்து மூலைகளைப்பற்றி பதிவெழுதியும் உங்கள் மூளையேன் இப்படி போகிறது. வாஸ்துவினால் தானே அந்த சுவரை இடித்து வாசல் இடுகிறீர்கள்.

மொ.வ : கிழிஞ்சது போங்க.வயதாகிவிட்டதல்லவா அந்தபுரம் செல்ல சுற்றவேண்டியிருக்கிறது. அதனால் இந்த‌ குறுக்குவழி.

பிரதாப் : அப்போ இந்தபுறம் போக வேண்டியதுதானே. ஹிஹிஹி. யோவ் கண்ணா என் வீடு கட்ட நீதான்வே கொத்தனாரு சொல்லிட்டேன் ஆமா.

கண்ணா : அஞ்சு வருஷமா இதத்தான் சொல்லுதீரு அட்வான்ஸ் கொடுக்க காணோம்.

மொ.வ : சிரித்து சிரித்து வயிறு புண்ணாகிவிட்டது நிறுத்த சொல்லுங்கள்.

அக்பர் : மன்னா அதுக்குத்தான் அடுத்து நம்ம டாக்டர் தல சுரேஷ்(பழனியிலிருந்து) வாரார்.

தல சுரேஷ் : காதை பொத்திக்கொள்ளுங்கள் மன்னா.

மொ.வ : என்னது வயிற்று வலின்னா காதை பொத்த சொல்கிறார்?

அக்பர் : என்ன தல பின்னூட்டம் போடுறமாதிரியே புரியாம ஒத்த வரியில சொன்னா எப்படி. மன்னா இவர்கள் பேசுவதை கேட்டதால்தான் உங்களுக்கு சிரிப்பு வந்து வயிற்று வலி ஏற்படுகிறது. காதை பொத்தினால் கேட்டு சிரிக்கமுடியாதல்லவா அதைத்தான் சுருங்கச்சொன்னார்.

இவரை லேசாக நினைக்கவேண்டாம்.தலைவரோட புகழ் கொரியா வரை பரவியிருக்கிறது, அது போக வசிய மருந்து செய்யறதுக்கு விளக்கம் கொடுக்கிற அளவுக்கு மாந்திரீகமும் தெரியும்.

மங்குனி :மன்னா இவர் பதிவருக்கே அதிர்ச்சி கொடுத்த ஆளாச்சே. மக்களுக்கு உபயோகமாக பொது சுகாதாரமும் மருத்துவமும்னு கூட ஒரு பதிவு எழுதுகிறார். சரி அடுத்து சொல்லுங்கள் அக்பர்.

அக்பர் : அடுத்து நம்ம ஸ்டார்ஜன். இவர் செஞ்ச இறால் சாப்ஸை சாப்பிட்டேன் என்ன சுவை தெரியுமா, ரூமில் இருக்கும் போது வட்டார வழக்கில் பேசி அசத்துவார். இரு வார்த்தைகளில் கதையும் சொல்லி விடுவார்.

மொ.வ : அப்போ எனக்கும் இறால் சாப்ஸ் செய்து தாருங்கள் ஸ்டார்ஜன்.

ஸ்டார்ஜன் : செய்யலாம் மன்னா. ஆனா எனக்கு தொடர்ச்சியா பின்னூட்டம் போடனும் சரியா.

மங்குனி : மன்னரிடமே பின்னூட்டமா. அடுத்து யார்.

அக்பர் : அடுத்து சேட்டைக்காரன். இவரை கல்வியமைச்சராக்கினால் பிள்ளைகள் படிப்பில் பிச்சிக்கிட்டு போகும். சிறுவயசுல பட்ட அனுபவத்தை வச்சி பதிவர்களுக்கு ராசிபலன் சொல்றாருன்னா பாருங்களேன்.

மங்குனி : அப்போ இவரை ஆஸ்தான ஜோசியாராக்கவேண்டியதுதானே மன்னா. ம் அடுத்து.

சேட்டை :(மனதுக்குள்) ஆங்குங்க அப்புறம் இருக்குடி..

அக்பர் : இது நம்ம துபாய் ராஜா விமானத்துல இவருக்கு ஏற்பட்ட குளுகுளு அனுபவத்தை அருமையா சொல்லியிருக்கிறார்.பல நாடுகள் சுற்றியவர், குட்டிச்சாத்தனே இவரை கண்டு பயந்து விட்டுடுச்சுன்னா பாருங்களேன்.

மொ.வ : பலே பலே அவ்வளவு பெரிய ஆளா பெயரைக்கேட்டாலே தெரியுதே. ம் அடுத்து.

அக்பர் : இவர்தான் சைவகொத்து புரோட்டா இவரோட பதின்ம நினைவுகளை படிச்சா சிரிச்சி முடியாது. உள்ளங்கையில் உலகத்தை கொண்டுவந்த இவர் யார் ஞானி என்பதையும் அழகாக விளக்கியுள்ளார்.

மொ.வ : ரொம்ப சந்தோசம். ஆனா சீனா ஐயா உங்களுக்கு தந்தது ஒரு வாரம். நீங்க போற வேகத்துக்கு ஒரு மாசம் ஆகும் போல. நாளைக்கு இன்னும் நிறைய புதியவர்களை அறிமுகப்படுத்தனும் சரியா.

அக்பர் : சரி மன்னா.

நண்பர்களே மொக்கை வர்மன் தர்பாரிலே பதிவரை தொடர்ந்து அறிமுகப்படுத்தவா? இல்லை விறுவிறு சுறுசுறுன்னு வேகமாக முடித்து விடலாமா?

மேலும் வாசிக்க...

Monday, March 29, 2010

பின்னூட்டம் தேவையா ? ( வலைச்சரம் முதல் நாள் )

மன்னாதி மன்ன, மன்னர் குலதிலக மொக்கை வர்மன் மன்னன் பராக் பராக் பான்பராக்.

மொக்கை வர்மன் : மங்குனி அமைச்சரே இன்றைய நிகழ்ச்சிகள் என்ன?

மங்குனி : மன்னா தங்களை காண பதிவர் அக்பர் வந்துள்ளார்.

மொ.வ : வரச்சொல்லுங்கள்.

காவலாளி : பிரபல பதிவர் அக்பரை மன்னர் அழைக்கிறார்.

அக்பர் : மன்னா சௌக்கியமா?

மொ.வ : சௌக்கியம். சௌக்கியம்.. ஆமா பிரபல பதிவர் என்பது நீங்க வாங்கிய பட்டமா?

அக்பர் : பதிவர்ன்னாலே பிரபலம்தானுங்களேண்ணா. அதான் அவர் அப்படி சொல்லிட்டார்.

மங்குனி : என்ன நெஞ்சழுத்தம் மன்னனை அண்ணா என்கிறாயே.

அக்பர் : எங்க நாட்டிலே மன்னனை விட அண்ணா தான் பேமஸ்.

மொ.வ : (வந்த உடனேயே அரசியல் பேசுறானே. இவன்கிட்ட ஜாக்கிரதையா இருக்கணும்) டேய் லகுடபாண்டி உண்மையைச்சொல் எதற்காக இவரை பிரபல பதிவர்னு சொன்னாய்?

காவலாளி : அதுவா மன்னர் மன்னா. அவர்தான் 50 காசுகள் கொடுத்து சொல்லச்சொன்னார்.

மொ.வ : அக்பர் இது உமக்கு வெட்கமாக இல்லை.

அக்பர் : இதிலென்ன வெட்கம். சிற்றரசராகிய நீங்க மன்னர் மன்னான்னு சொல்ல மாச சம்பளம் கொடுக்கிறீர்கள். நான் கொடுத்தா கேவலமா.

மொ.வ : ( விட்டா இவன் கண்ணுல விரல உட்டு ஆட்டிடுவான் )உங்களை யார் இங்கே அழைத்தது.

அக்பர் : நம்ம சீனா ஐயாதான் இந்த வாய்ப்பை எனக்கு வழங்கியது. அவர்களுக்கு நன்றிகள்.

மொ.வ : சரிசரி உங்களைப்பற்றி சொல்லுங்கள்.

அக்பர் : 2003 கடைசில கம்ப்யூட்டர் சர்வீஸ் இஞினியர் வேலைக்காக சவுதி வந்தேன் மன்னா. நான் கெட்டது காணாதுன்னு ரெண்டு வருடம் கழித்து நம்ம ஸ்டார்ஜன்னையும் இங்க இழுத்து வந்துட்டேன். ரெண்டு வருடத்துக்கு ஒருக்க ஊருக்கு நாலு மாசம் லீவுல போகலாம். 2007 ல் பதிவுலகம் அறிமுகம் ஆச்சு. வெறும் பின்னூட்ட பதிவரா இருந்த நான் பதிவர்கள் கொடுத்த உற்சாகத்துனால நானும் பதிவராயிட்டேன்.

நகைச்சுவையா எழுதி அடிக்கடி மொக்கை போடறதுதான் எங்க ப்ளான். ஆனா சிக்கல் என்னான்னா வேலையையும் சரியா கவனிக்கனும். பின்ன சாப்பாட்டுக்கு வழியில்லாம போயிடக்கூடாது பாருங்க.

ஆனாலும் சும்மா சொல்லக்கூடாது நம்ம ஸ்டார்ஜன் கவிதை, கட்டுரைன்னு அடிச்சு ஆடுனார். நான் ரன்னர் சைடுல நிக்கும் பேட்ஸ்மேன் மாதிரி அவருக்கு கம்பெனி கொடுத்து அவர் ஆடுறத ரசிச்சுக்கிட்டு இருக்கேன். நானும் அப்பப்ப ஒன்னு ரெண்டுன்னு ஆடிக்கிட்டு இருக்கேன்.

மொ.வ : சரி பதிவர்களுக்கு நீங்க சொல்லவருவது என்னா?

அக்பர் : நான் எழுத வந்த புதிதில் அண்ணன் முரளிக்கண்ணன், கோவி கண்ணன்,தல சுரேஷ்(பழனி), நவாஸுதீன், நட்புடன் ஜமால், ஷஃபி, எம்.எம் அப்துல்லா, சீனா ஐயா , ஸ்டார்ஜன் மற்றும் நண்பர்கள் அனைவருமே தொடர்ந்து எனக்கு பின்னூட்டமிட்டு ஆதரவளித்ததுதான் என்னை இந்த அளவுக்கு எழுத வச்சிருக்கு. (பெயர் விடுபட்டவர்கள் மன்னிக்க)

பின்னூட்டத்தோட நன்மைகளை சொல்லிக்கொண்டே போகலாம். காலையில் வேலைக்கும் வரும் போது ரெண்டு பின்னூட்டங்கள் நம்மை பாராட்டி வந்தா அந்த நாளில் நாம் உற்சாகத்துடன் வேலை செய்வது நிச்சயம். அது நல்ல தொடக்கமாகவும் அமையும். கேயாஸ் தியரி மாதிரி ஒரு பின்னூட்டம் என்ன வேலையெல்லாம் செய்யுது பாருங்க.

எல்லோருக்கும் பின்னூட்டம் இடுவது இயலாத காரியம். ஆனால் நாம் வாசித்த பதிவுகளுக்கு அரை நிமிடம் செலவிடுவது கஷ்டமான காரியம் இல்லையே, அது போல நமக்கு பின்னூட்டமிட்டவர்களுக்கு பதில் பின்னூட்டமிடுவதும் நம் கடமைதானே.

எனவே ஓட்டு போடுறீங்களோ இல்லையோ, ஒரு பின்னூட்டம் அது ஒரு ஸ்மைலியாகவோ, அருமைன்னோ எப்படி பட்ட டெம்ளேட் பின்னூட்டமாக இருந்தாலும் போட்டு விடுங்கள் (காசா, பணமா). யார் கண்டா நீங்கள் செலவழிக்கும் அந்த அரை நிமிடம் பலபேர் உற்சாகத்தோடு பல சிகரங்களை தொட வழிவகுக்க கூடும்.

மொ.வ : அப்போ புதியவர்கள் என்ன செய்யனும்?

அக்பர் : புதியவர்கள் அனைவரையும் வருக வருக என வரவேற்கிறோம். இன்றைய பிரபலங்கள் எல்லாருமே நேற்றைய புதிய பதிவர்கள் தான். எனவே உங்களது படைப்புகளை உற்சாகத்தோடு வெளியிடுங்கள்.

அதை விட முக்கியம் பிறரிடம் உங்கள் அறிமுகம். எல்லோரிடமும் பின்னூட்டமிட்டு அறிமுகப்படுத்துங்கள். முடிந்தவரை அதிக பதிவுகளை படித்து பின்னூட்டமிடுங்கள்.

புத்தகம் படிப்பது, டிவி பார்ப்பது, விளையாடுவது, எழுதுவது, சாட்டிங் செய்வது எல்லாமே நல்ல போதைகள். இவை அனைத்துமே நம் வேலைக்கு பிறகுதான் என்பதை மறக்காமல் நினைவில் கொண்டு மேலும் சிறக்க வாழ்த்துகிறேன்.

மொ.வ : ஸ்ஸ்ஸ்.. யப்பா முடியலை... போதும் நிறுத்துங்கள். மீதியை நாளை பார்க்கலாம்.


அக்பர் : மன்னரே சொல்லிட்டார். நாளை சந்திப்போம்.அதுவரை எனது இந்த இடுகைகளை வாசித்து பாருங்களேன்.

கற்றதும்... பெற்றதும்.

டீக்கடையில் பதிவர்கள்

தருகின்ற பொருளா காதல் ?

தங்களின் கருத்துக்களை தெரிவியுங்கள் நண்பர்களே.

அன்புடன்

அக்பர்.



மேலும் வாசிக்க...

தமிழ் மணத்தில் - தற்பொழுது