07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Monday, March 29, 2010

பின்னூட்டம் தேவையா ? ( வலைச்சரம் முதல் நாள் )

மன்னாதி மன்ன, மன்னர் குலதிலக மொக்கை வர்மன் மன்னன் பராக் பராக் பான்பராக்.

மொக்கை வர்மன் : மங்குனி அமைச்சரே இன்றைய நிகழ்ச்சிகள் என்ன?

மங்குனி : மன்னா தங்களை காண பதிவர் அக்பர் வந்துள்ளார்.

மொ.வ : வரச்சொல்லுங்கள்.

காவலாளி : பிரபல பதிவர் அக்பரை மன்னர் அழைக்கிறார்.

அக்பர் : மன்னா சௌக்கியமா?

மொ.வ : சௌக்கியம். சௌக்கியம்.. ஆமா பிரபல பதிவர் என்பது நீங்க வாங்கிய பட்டமா?

அக்பர் : பதிவர்ன்னாலே பிரபலம்தானுங்களேண்ணா. அதான் அவர் அப்படி சொல்லிட்டார்.

மங்குனி : என்ன நெஞ்சழுத்தம் மன்னனை அண்ணா என்கிறாயே.

அக்பர் : எங்க நாட்டிலே மன்னனை விட அண்ணா தான் பேமஸ்.

மொ.வ : (வந்த உடனேயே அரசியல் பேசுறானே. இவன்கிட்ட ஜாக்கிரதையா இருக்கணும்) டேய் லகுடபாண்டி உண்மையைச்சொல் எதற்காக இவரை பிரபல பதிவர்னு சொன்னாய்?

காவலாளி : அதுவா மன்னர் மன்னா. அவர்தான் 50 காசுகள் கொடுத்து சொல்லச்சொன்னார்.

மொ.வ : அக்பர் இது உமக்கு வெட்கமாக இல்லை.

அக்பர் : இதிலென்ன வெட்கம். சிற்றரசராகிய நீங்க மன்னர் மன்னான்னு சொல்ல மாச சம்பளம் கொடுக்கிறீர்கள். நான் கொடுத்தா கேவலமா.

மொ.வ : ( விட்டா இவன் கண்ணுல விரல உட்டு ஆட்டிடுவான் )உங்களை யார் இங்கே அழைத்தது.

அக்பர் : நம்ம சீனா ஐயாதான் இந்த வாய்ப்பை எனக்கு வழங்கியது. அவர்களுக்கு நன்றிகள்.

மொ.வ : சரிசரி உங்களைப்பற்றி சொல்லுங்கள்.

அக்பர் : 2003 கடைசில கம்ப்யூட்டர் சர்வீஸ் இஞினியர் வேலைக்காக சவுதி வந்தேன் மன்னா. நான் கெட்டது காணாதுன்னு ரெண்டு வருடம் கழித்து நம்ம ஸ்டார்ஜன்னையும் இங்க இழுத்து வந்துட்டேன். ரெண்டு வருடத்துக்கு ஒருக்க ஊருக்கு நாலு மாசம் லீவுல போகலாம். 2007 ல் பதிவுலகம் அறிமுகம் ஆச்சு. வெறும் பின்னூட்ட பதிவரா இருந்த நான் பதிவர்கள் கொடுத்த உற்சாகத்துனால நானும் பதிவராயிட்டேன்.

நகைச்சுவையா எழுதி அடிக்கடி மொக்கை போடறதுதான் எங்க ப்ளான். ஆனா சிக்கல் என்னான்னா வேலையையும் சரியா கவனிக்கனும். பின்ன சாப்பாட்டுக்கு வழியில்லாம போயிடக்கூடாது பாருங்க.

ஆனாலும் சும்மா சொல்லக்கூடாது நம்ம ஸ்டார்ஜன் கவிதை, கட்டுரைன்னு அடிச்சு ஆடுனார். நான் ரன்னர் சைடுல நிக்கும் பேட்ஸ்மேன் மாதிரி அவருக்கு கம்பெனி கொடுத்து அவர் ஆடுறத ரசிச்சுக்கிட்டு இருக்கேன். நானும் அப்பப்ப ஒன்னு ரெண்டுன்னு ஆடிக்கிட்டு இருக்கேன்.

மொ.வ : சரி பதிவர்களுக்கு நீங்க சொல்லவருவது என்னா?

அக்பர் : நான் எழுத வந்த புதிதில் அண்ணன் முரளிக்கண்ணன், கோவி கண்ணன்,தல சுரேஷ்(பழனி), நவாஸுதீன், நட்புடன் ஜமால், ஷஃபி, எம்.எம் அப்துல்லா, சீனா ஐயா , ஸ்டார்ஜன் மற்றும் நண்பர்கள் அனைவருமே தொடர்ந்து எனக்கு பின்னூட்டமிட்டு ஆதரவளித்ததுதான் என்னை இந்த அளவுக்கு எழுத வச்சிருக்கு. (பெயர் விடுபட்டவர்கள் மன்னிக்க)

பின்னூட்டத்தோட நன்மைகளை சொல்லிக்கொண்டே போகலாம். காலையில் வேலைக்கும் வரும் போது ரெண்டு பின்னூட்டங்கள் நம்மை பாராட்டி வந்தா அந்த நாளில் நாம் உற்சாகத்துடன் வேலை செய்வது நிச்சயம். அது நல்ல தொடக்கமாகவும் அமையும். கேயாஸ் தியரி மாதிரி ஒரு பின்னூட்டம் என்ன வேலையெல்லாம் செய்யுது பாருங்க.

எல்லோருக்கும் பின்னூட்டம் இடுவது இயலாத காரியம். ஆனால் நாம் வாசித்த பதிவுகளுக்கு அரை நிமிடம் செலவிடுவது கஷ்டமான காரியம் இல்லையே, அது போல நமக்கு பின்னூட்டமிட்டவர்களுக்கு பதில் பின்னூட்டமிடுவதும் நம் கடமைதானே.

எனவே ஓட்டு போடுறீங்களோ இல்லையோ, ஒரு பின்னூட்டம் அது ஒரு ஸ்மைலியாகவோ, அருமைன்னோ எப்படி பட்ட டெம்ளேட் பின்னூட்டமாக இருந்தாலும் போட்டு விடுங்கள் (காசா, பணமா). யார் கண்டா நீங்கள் செலவழிக்கும் அந்த அரை நிமிடம் பலபேர் உற்சாகத்தோடு பல சிகரங்களை தொட வழிவகுக்க கூடும்.

மொ.வ : அப்போ புதியவர்கள் என்ன செய்யனும்?

அக்பர் : புதியவர்கள் அனைவரையும் வருக வருக என வரவேற்கிறோம். இன்றைய பிரபலங்கள் எல்லாருமே நேற்றைய புதிய பதிவர்கள் தான். எனவே உங்களது படைப்புகளை உற்சாகத்தோடு வெளியிடுங்கள்.

அதை விட முக்கியம் பிறரிடம் உங்கள் அறிமுகம். எல்லோரிடமும் பின்னூட்டமிட்டு அறிமுகப்படுத்துங்கள். முடிந்தவரை அதிக பதிவுகளை படித்து பின்னூட்டமிடுங்கள்.

புத்தகம் படிப்பது, டிவி பார்ப்பது, விளையாடுவது, எழுதுவது, சாட்டிங் செய்வது எல்லாமே நல்ல போதைகள். இவை அனைத்துமே நம் வேலைக்கு பிறகுதான் என்பதை மறக்காமல் நினைவில் கொண்டு மேலும் சிறக்க வாழ்த்துகிறேன்.

மொ.வ : ஸ்ஸ்ஸ்.. யப்பா முடியலை... போதும் நிறுத்துங்கள். மீதியை நாளை பார்க்கலாம்.


அக்பர் : மன்னரே சொல்லிட்டார். நாளை சந்திப்போம்.அதுவரை எனது இந்த இடுகைகளை வாசித்து பாருங்களேன்.

கற்றதும்... பெற்றதும்.

டீக்கடையில் பதிவர்கள்

தருகின்ற பொருளா காதல் ?

தங்களின் கருத்துக்களை தெரிவியுங்கள் நண்பர்களே.

அன்புடன்

அக்பர்.75 comments:

 1. பார்த்தீங்களா எங்க பின்னூட்ட மகிமையை..

  நாங்கெல்லாம் பின்னூட்டம் மட்டும் போட பிறந்தவங்க..

  ReplyDelete
 2. வாங்க வாங்க அக்பர் அண்ணா.. அசத்துங்க அசத்துங்க.., முதல் நாளே அருமையா இருக்கு..

  ReplyDelete
 3. அக்கபர் அண்ணா , இதுல வர்ற மங்குனி அமைசர் நான்தானுங்களா?
  டயலாக்க நமக்கு ரொம்ப கொறசுடிகளே, ஏதோ பாத்து பண்ணுங்க
  (உங்க அக்கவுன்ட் நம்பர கொஞ்சம் மெயில் பண்ணுங்க )

  ReplyDelete
 4. எனக்கென்னவோ உங்க ரெண்டு பேரையும் ரெண்டுபேரா நினைக்க முடியல. ஒரே ஆளாத்தான் நினைச்சு, குழப்பிக்குவேன். அதனாலயே, இப்பத்தானே ஸ்டார்ஜன் வந்துட்டுப் போனார், உடனே நீங்கன்னா கொஞ்சம் கஷ்டம்தான், தொய்வில்லாம கொண்டு போக இன்னும் அதிக மெனக்கெடணுமேன்னு நினைச்சேன்!! ஆனா, முத நாளே படுசுவாரஸ்யமா ஆரம்பிச்சதிலருந்தே தெரியுது, இந்த வாரமும் நல்லப் பதிவுகள் கிடைக்கும்னு. நல்ல சவால் உங்களுக்கு!!

  ReplyDelete
 5. வாழ்த்துகள் அக்பர்

  ReplyDelete
 6. //மொ.வ : ஸ்ஸ்ஸ்.. யப்பா முடியலை... போதும் நிறுத்துங்கள். மீதியை நாளை பார்க்கலாம்.//

  :)

  வாழ்த்துகள் !

  ReplyDelete
 7. மன்னர் மன்னன் அக்பர் வாழ்க!
  அறிமுக இடுகை அருமை! வாழ்த்துகள்.

  ReplyDelete
 8. வாழ்த்துக்கள் அக்பர்.

  ReplyDelete
 9. வாங்க வாங்க அக்பர் கலக்குங்க கலக்குங்க... வாழ்த்துக்கள்

  ReplyDelete
 10. வாழ்த்துகள் அக்பர்

  ReplyDelete
 11. அக்பர் வாங்க உங்க பதிவு மூலம் தான் ஸ்டார்ஜன் அறிமுகம்

  கலக்குங்க வாழ்த்துக்கள். ஆனாலும் யாராலையும் மங்குனிய இழுக்காம பதிவு போட முடியாது, வடிவேலு உடைய தம்பி மாதிரி அவர் இப்ப வலைஉலகுக்கு,

  அமைச்சரே, பார்த்து ரொம்ப .....

  ReplyDelete
 12. இந்தப் பதிவைப் படிச்சிட்டு பின்னூட்டம் போடணுமா, வேண்டாமான்னு ஒரு முடிவுக்கு வர முடியாம, ஒரு ரவுண்டு மற்ற வலைப்பதிவுக்கெல்லாம் போயிப் பின்னூட்டம் போட்டுப்புட்டு, பொறவு திரும்பி வந்து இங்கேயும் பின்னூட்டம் போட்டுட்டு, இன்னும் பின்னூட்டம் போட வேண்டிய பதிவுக்கெல்லாம் போயி பின்னூட்டம் போட்டுட்டுத் திரும்பி வந்து நீங்க குறிப்பிட்டிருக்கிற பதிவுகளைப் படிச்சு பின்னூட்டம் போடணுமா வேண்டாமான்னு தீர்மானிச்சு அப்புறம் போட்டாலும் போடுவேன்; போடாமலும் இருப்பேன்னு தோணுது.

  ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்! அப்பாடா, முடிச்சிட்டேன் ஒரு வழியா....!

  ReplyDelete
 13. ஆரம்பமே களை கட்டுது!!!
  அசத்துங்க அக்பர்.

  ReplyDelete
 14. யார் கண்டா நீங்கள் செலவழிக்கும் அந்த அரை நிமிடம் பலபேர் உற்சாகத்தோடு பல சிகரங்களை தொட வழிவகுக்க கூடும்.//

  உண்மைங்க.

  வாழ்த்துகள் அக்பர்.:)

  ReplyDelete
 15. //அது போல நமக்கு பின்னூட்டமிட்டவர்களுக்கு பதில் பின்னூட்டமிடுவதும் நம் கடமைதானே.//

  நிச்சயமாக...

  வாழ்த்துக்கள்....

  ReplyDelete
 16. யப்பா..முடிலப்பா சாமி... மரண மொக்கையா இருக்கே... இனி அஞ்சநாள் பொறுத்தக்கனுமா???
  ரைட்டு...

  ReplyDelete
 17. வாங்க இராகவன் அண்ணா,

  //பார்த்தீங்களா எங்க பின்னூட்ட மகிமையை..

  நாங்கெல்லாம் பின்னூட்டம் மட்டும் போட பிறந்தவங்க..//

  கண்டிப்பா.

  நட்புடன் ஜமால், நவாஸ், உங்களைப்போன்றோரின் ஆதரவுதான் பல பதிவர்களுக்கு உற்சாக டானிக்.

  வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அண்ணா

  ReplyDelete
 18. வாங்க மின்மினி

  //வாங்க வாங்க அக்பர் அண்ணா.. அசத்துங்க அசத்துங்க.., முதல் நாளே அருமையா இருக்கு..//

  சந்தோசம். உங்கள் பதிவும் அருமை தொடருங்கள்.

  வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அண்ணா

  ReplyDelete
 19. வாங்க தேவன் சார்

  //அக்பர் வருக!!//

  ரெண்டு கமெண்ட் போட்டு உற்சாகப்படுத்துனதுக்கு நன்றி.

  என்னைய வச்சு காமெடி கீமெடி பண்ணலையே :)

  வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அண்ணா

  ReplyDelete
 20. வாங்க மங்குனி

  //அக்கபர் அண்ணா , இதுல வர்ற மங்குனி அமைசர் நான்தானுங்களா?
  டயலாக்க நமக்கு ரொம்ப கொறசுடிகளே, ஏதோ பாத்து பண்ணுங்க

  அடுத்து கூட்டிருவோம்.

  //(உங்க அக்கவுன்ட் நம்பர கொஞ்சம் மெயில் பண்ணுங்க )//

  ஹிஹிஹி. வேணாம் தல, உங்கள் அன்பும் ஆதரவும் போதும்.

  வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

  ReplyDelete
 21. வாங்க ஹுஸைனம்மா

  //எனக்கென்னவோ உங்க ரெண்டு பேரையும் ரெண்டுபேரா நினைக்க முடியல. ஒரே ஆளாத்தான் நினைச்சு, குழப்பிக்குவேன். //

  நிறைய பேருக்கு இதுதான் சந்தேகம். நாங்க ரெண்டு பேர்தான் நம்புங்க‌

  //ஆனா, முத நாளே படுசுவாரஸ்யமா ஆரம்பிச்சதிலருந்தே தெரியுது, இந்த வாரமும் நல்லப் பதிவுகள் கிடைக்கும்னு. நல்ல சவால் உங்களுக்கு!!//

  உங்க எதிர்ப்பார்ப்பை நிறைவேற்ற முயற்சிக்கிறேன்.

  வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

  ReplyDelete
 22. பின்னூட்டம் தான் சிறந்த டானிக்னு சரியாச் சொல்லியிருக்கீங்க

  ReplyDelete
 23. ஆரம்பமே அசத்தலா இருக்கே!! ஏற்கனவே ஒரு மங்குனியை நான் பிச்சி பெடெலெடுத்து கிட்டு இருக்கேன். வாங்க!! வாங்க!!!!. கலக்குங்க....

  ReplyDelete
 24. வாழ்த்துக்கள்

  விஜய்

  ReplyDelete
 25. பின்னூட்ட புலிகள் இருக்கும்வரை இந்த பதிவுலகம் நிலைத்து நிற்கும்.

  கலக்குங்க அக்பர்

  ReplyDelete
 26. வலைச்சர ஆசிரியருக்கு வாழ்த்துக்கள்!!

  முதல்நாளே அசத்தலா இருக்கு....

  ReplyDelete
 27. அசத்தலா ஆரம்பிச்சுருக்கீங்க.. அடிச்சு ஆடு தல....

  நாங்க இருக்கோம்..

  ReplyDelete
 28. வாழ்த்துகள்; அசத்துங்க!

  ReplyDelete
 29. வாழ்த்துக்கள் அக்பர். ந்லல ஆரம்பம்.

  ReplyDelete
 30. வாழ்த்துக்கள் நண்பரே . கலக்குங்க

  ReplyDelete
 31. வாழ்த்துக்கள் அக்பர்

  ReplyDelete
 32. முதல் பதிவிலேயே சிம்மாசனம் போட்டு அமர்ந்திருக்கீங்க போல .


  ம்ம் . இந்த வாரம் உங்களுக்கு சிறப்பாக அமையட்டும் !

  வாழ்த்துகள் !

  ReplyDelete
 33. //புத்தகம் படிப்பது, டிவி பார்ப்பது, விளையாடுவது, எழுதுவது, சாட்டிங் செய்வது எல்லாமே நல்ல போதைகள்.//

  நல்ல பதிவு, நல்ல வழிகாட்டுதல், நன்றி.

  ReplyDelete
 34. அறிமுக இடுகை அருமை! வாழ்த்துகள்.

  ReplyDelete
 35. அழகான அறிமுகம் தொடர்ந்து படிக்கிறேன். [வழக்கம் போல் பின்னூட்டமிட தயங்கி - இல்லை இட்டுவிட்டேன்.]

  ReplyDelete
 36. ஹுசைனம்மா சொன்னது சரிதான் வாழ்த்துக்கள் அக்பர்

  ReplyDelete
 37. வருக நண்பரே,
  // அது போல நமக்கு பின்னூட்டமிட்டவர்களுக்கு பதில் பின்னூட்டமிடுவதும் நம் கடமைதானே.//
  அப்படி என்றால் ஒரு முட்டாள் பதிவு போட்டுவிட்டு உங்களுக்கும் ஒரு பின்னுட்டம் இட்டுவிடுகிறேன்

  ReplyDelete
 38. வாழ்த்துகள் அக்பர்...

  நிறைய புதியவர்களை அறிமுகப்படுத்துமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்ளப்படுகிறது.....

  ReplyDelete
 39. ரொம்பவே வித்தியாசமா.... கிரியேட்டிவா கால் பதிச்சிருக்கீங்க சிநேகிதா.... கலக்குங்க :)

  ReplyDelete
 40. உங்களுக்கு ஒரு பின்னூட்டம் போடுவதால்தான் பல மொக்கைப் பதிவுகளும் பிரபலமாகிறது.
  நல்ல பதிவுகளை அடையாளப்படுத்தாமல் பதிவுலகை அழிவுக்கு இழுத்துச்செல்கிறது.

  பின்னூட்டமும் ஓட்டும் தகுதி சார்ந்து இருக்கவேண்டும்.

  ReplyDelete
 41. வாங்க T.V.ராதாகிருஷ்ணன் சார்

  வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

  ReplyDelete
 42. வாங்க கோவி அண்ணா

  //மொ.வ : ஸ்ஸ்ஸ்.. யப்பா முடியலை... போதும் நிறுத்துங்கள். மீதியை நாளை பார்க்கலாம்.//
  :) வாழ்த்துகள் !//

  நீங்களுமா :)

  வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி

  ReplyDelete
 43. வாங்க ஷங்கி

  //மன்னர் மன்னன் அக்பர் வாழ்க!
  அறிமுக இடுகை அருமை! வாழ்த்துகள்.//

  வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி

  ReplyDelete
 44. வாங்க

  துபாய் ராஜா

  ஜீவன்(தமிழ் அமுதன் )

  ஸ்டார்ஜன்

  கடையம் ஆனந்த்

  வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி

  ReplyDelete
 45. வாங்க Jaleela

  //அக்பர் வாங்க உங்க பதிவு மூலம் தான் ஸ்டார்ஜன் அறிமுகம்
  கலக்குங்க வாழ்த்துக்கள். ஆனாலும் யாராலையும் மங்குனிய இழுக்காம பதிவு போட முடியாது, வடிவேலு உடைய தம்பி மாதிரி அவர் இப்ப வலைஉலகுக்கு,
  அமைச்சரே, பார்த்து ரொம்ப ..... //

  சந்தோசம் ஜலீலா. அடிக்கடி வாங்க.

  வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி

  ReplyDelete
 46. வாங்க சேட்டைக்காரன்

  //ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்! அப்பாடா, முடிச்சிட்டேன் ஒரு வழியா....!//

  நானும் படிச்சிட்டேன் ஒரு வழியா :)

  வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி

  ReplyDelete
 47. வாங்க

  கண்மணி/kanmani

  சைவகொத்துப்பரோட்டா

  வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி

  ReplyDelete
 48. வாங்க

  【♫ஷங்கர்..】

  க.பாலாசி

  வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி

  ReplyDelete
 49. வாங்க நாஞ்சிலாரே

  //யப்பா..முடிலப்பா சாமி... மரண மொக்கையா இருக்கே... இனி அஞ்சநாள் பொறுத்தக்கனுமா??? ரைட்டு...//

  உங்களை விடவா :)

  நாளைக்கு இருக்குடி உங்களுக்கு.

  வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி

  ReplyDelete
 50. வாங்க

  புதுகைத் தென்றல்

  ஜெய்லானி

  வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி

  ReplyDelete
 51. வாங்க

  விஜய்

  வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி

  ReplyDelete
 52. வாங்க அபுஅப்ஸர்

  //பின்னூட்ட புலிகள் இருக்கும்வரை இந்த பதிவுலகம் நிலைத்து நிற்கும்.
  கலக்குங்க அக்பர்//

  சரியா சொன்னீங்க. நீங்கள்தான் எங்களின் தூண்டுகோல்.

  வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி

  ReplyDelete
 53. வாங்க

  Mrs.Menagasathia

  கண்ணா..

  பழமைபேசி

  இராமசாமி கண்ணண்

  வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி

  ReplyDelete
 54. வாங்க

  ♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥

  அத்திரி

  அமைதி அப்பா

  வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி

  ReplyDelete
 55. வாங்க

  சே.குமார்

  நேசமித்ரன் சார்

  வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி

  ReplyDelete
 56. வாங்க உமா

  //அழகான அறிமுகம் தொடர்ந்து படிக்கிறேன். [வழக்கம் போல் பின்னூட்டமிட தயங்கி - இல்லை இட்டுவிட்டேன்.]//

  நன்றி உமா

  வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி

  ReplyDelete
 57. வாங்க

  தல சுரேஷ்

  தேனம்மை அக்கா

  வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி

  ReplyDelete
 58. வாங்க smart

  //அப்படி என்றால் ஒரு முட்டாள் பதிவு போட்டுவிட்டு உங்களுக்கும் ஒரு பின்னுட்டம் இட்டுவிடுகிறேன்//

  உங்கள் பதிவில் இடுகை இல்லையே

  வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி

  ReplyDelete
 59. வாங்க பிரியமுடன்...வசந்த்

  //நிறைய புதியவர்களை அறிமுகப்படுத்துமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்ளப்படுகிறது.....//

  சரி தலைவா

  வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி

  ReplyDelete
 60. வாங்க பிரபு . எம்

  //ரொம்பவே வித்தியாசமா.... கிரியேட்டிவா கால் பதிச்சிருக்கீங்க சிநேகிதா.... கலக்குங்க :)//

  நன்றி பிரபு

  வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி

  ReplyDelete
 61. வாங்க smart

  //உங்களுக்கு ஒரு பின்னூட்டம் போடுவதால்தான் பல மொக்கைப் பதிவுகளும் பிரபலமாகிறது.நல்ல பதிவுகளை அடையாளப்படுத்தாமல் பதிவுலகை அழிவுக்கு இழுத்துச்செல்கிறது.பின்னூட்டமும் ஓட்டும் தகுதி சார்ந்து இருக்கவேண்டும்.//

  ஓகே. நீங்கள் தகுதியானவர்களுக்கு பின்னூட்டம் போடுங்கள். அது உங்கள் விருப்பம். நான் ஓட்டு போடவே சொல்லவில்லை.

  ReplyDelete
 62. ஆர‌ம்ப‌மே அம‌ர்க‌ள‌ம் த‌ல‌..க‌ல‌க்குங்க‌.

  ReplyDelete
 63. வாங்க ஸ்டீபன்

  வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

  ReplyDelete
 64. ஆரம்பமே அமர்க்களமாயிருக்கு!
  தொடர்க.. வாழ்த்துக்கள் மாப்ள!

  ReplyDelete
 65. //காலையில் வேலைக்கும் வரும் போது ரெண்டு பின்னூட்டங்கள் நம்மை பாராட்டி வந்தா அந்த நாளில் நாம் உற்சாகத்துடன் வேலை செய்வது நிச்சயம்/

  இது சொன்னீஙகளே ரொம்ப சரி

  ஆரம்பமே ம்ம் ரொம்ப அமர்களம், ஒரு வாரம் முழுவதும் இதே கலக்கலில் அறிமுகங்கள் வருமா

  ReplyDelete
 66. //ஆனால் நாம் வாசித்த பதிவுகளுக்கு அரை நிமிடம் செலவிடுவது கஷ்டமான காரியம் இல்லையே//

  கரெக்ட்தான். வலைச்சரத்துக்கு வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 67. ஒருவாரம் பின்னி எடுங்க அக்பர்.

  ReplyDelete
 68. வாங்க

  மாம்ஸ் ஜெகா

  ஜலீலா

  அமைதிச்சாரல்

  பழனிச்சாமி சார்

  வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

  ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது