07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Wednesday, July 7, 2010

வலைச்சர புதன் - கவிதை

காதலைப்போல் எளிதாய்
பூப்பது
கவிதை மட்டுமே ..

சட்டென தோன்றி மறையும்
வானவில்லென
எப்போதாவது அபூர்வமாய்
கிடைக்கும் சில
நல்ல கவிதைகளும்..


இன்று கவிதை எழுதும் பதிவர்களை பார்க்கலாம்.. பொதுவாகவே கவிதை படிப்பவர்களைவிட எழுதுபவர்கள் அதிகம் என்று சொல்லபடுவது உண்டு..
காதலை சொல்ல கவிதைதான் சரியான வழி.. ஆனால் சமுதாய கோபம் பற்றிய கவிதைகள்தான் நமக்கு நிறைய தேவை.. பா.ரா, ,நேசமித்திரன், அய்யனார், யாத்ரா, மண்குதிரை, ஜ்யோவ்ராம் சுந்தர், அனுஜன்யா, நந்தா,விநாயக முருகன் போன்ற பிரபல பதிவர்களின் கவிதைகள் தொடர்ந்து படித்தால் கவிதை நமக்கு எளிதாகும்..

மற்றபடி இங்கு நான் குறிப்பிடும் நண்பர்களின் கவிதைகள் என்னை மிகவும் பாதித்தவை..

அண்ணாச்சி கலாநேசன் சோமாயனத்தில் நெய்த கவிதை இது..மனசாட்சி பேசுகிறது..

மௌனம் கிவியன் சூட்சுமம் ற்றி சொல்லியிருக்கிறார்.. பகுத்தறிவு கவிதை ..

வெறுப்பை தொலைக்க முடியுமா உயிரோடையில் அது முடியும் என்கிறார் சகோதரி..

சாத்தூர் மாக்கான் எனப்பெயர் வைத்துக்கொண்டு அறிவாளியாய் வளம் வரும் ராமசாமி கண்ணனின் முதுமையில் காதல் ஒரு அற்புதமான வாழ்வின் சாரம்..

எழுத்துப் பிழை என்று சொல்லி பிழையற்ற கவிதை சொல்லும் போகனின் உயிர்தெழல்..

நம்ம பாலாசி நிறைய கனவுகள் வச்சிருக்கிறாரு.. கண்ணீர் கட்டாயம் வரவழைக்கும் கனவுகள்..

ஆறுமுகம் ஆனந்த் இலையுதிர் காலத்தில் காதலை சொல்ல அவர் நெய்த கவிதை பிரமாதம்..

சகோதரி சுந்தரா தன் குறிஞ்சி மலர்களில் பிள்ளைகளின் பேரன்பை விவரிக்கிறார்.. கொடுத்து வைத்த பிள்ளை..

செல்வராஜ் ஜெகதீசன் கவிதையை முன் வைத்து சங்கத் தமிழ் அனைத்தையும் கேட்கிறார்..

ஹேமாவின் குழந்தை நிலாவில் வானம் வெளித்த பின்னும் தோன்றிய இந்த கவிதை மிகசிறப்பான ஒன்று.. அந்த நேரத்தில் நான் சில வார்த்தைகளை மறு பரிசீலனை செய்ய சொல்லியிருந்தேன்.. ஆச்சர்யம் பின்னூட்டத்தில் அத்தனை பேரும் அதை பொருட்படுத்தாது பாராட்டியிருந்தது..

அன்புடன் ஆனந்தியின் எனக்காய் பிறந்தவனே கவிதை காதலை சொல்லும் மொழி ..

சாய்ராமின் சுயத்தை மறைத்தல் எல்லோரையும் ஒரு கேள்வியை எழுப்புகிறது..

முகிலின் பித்தனா? புத்தனா ஆத்மம் + அர்த்தம் = அறிவு ..

பிரபாகரன் பழனிச்சாமியின் அழகிய முற்றுப்புள்ளி வைக்கும் அனாதைக் காதலன் ...

மக்களை கொத்து கொத்தாய் கொல்லப் போவதாக மிரட்டும் ராஜேஷின் கவிதைகள் கோடிட்ட இடங்களையும் நிரப்புகின்றன..

வள்ளுவம் கோமாவின் பசி பற்றிய புலம்பல்கள் .. அவசியம் படிக்க வேண்டிய நல்ல கவிதை..

ஈரோடு கதிரின் கசியும் மௌனத்தில் காவல் காக்கும் கடவுள் நிலைமையை பாருங்கள்..

கமலேஷின் சுயம் தேடும் பறவையில் சொல்லத் தெரியாதவை ...

மின்னற் பொழுதே தூரம் அபிலாஷ் நிறைய நல்ல பிறமொழிக் கவிஞர்களின் படைப்புகளை தருபவர்.. இவரின் தத்தம் இடங்களுக்கு கவிதை தரும் ஆழம் அற்புதமானது..

இதில் நண்பர் தேவாவின் கவிதையை சேர்க்கவில்லை.. அவரும் வலைச்சர ஆசிரியர் பொறுப்பை வகித்து இருந்ததால் பதில் மரியாதை ஆகிவிடக் கூடாதே என்பதற்காக..

மற்றபடி கூடுமானவரை கவிதைகளை படித்து தேர்வு செய்துள்ளேன்.. விடுபட்டவர்கள் இருப்பின் அது என் கவனக் குறைவே..

மீண்டும் நாளை சந்திக்கிறேன்..




30 comments:

  1. கவிதையிலேயே பதிவு.... ரொம்ப அருமையா இருக்குங்க..

    என்னையும் அறிமுகப் படுத்தியதற்கு.. மிக்க நன்றிங்க..

    உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்.. :-)))

    ReplyDelete
  2. சில தெரியாத பதிவர்கள்
    இதோ உடனே பார்த்துவிடுகிறேன்

    நன்றி செந்தில் அண்ணே

    ReplyDelete
  3. கவிதை நமக்கு ரொம்ப தூரம் சார், இருந்தாலும் படிச்சு பார்ப்போம் (இந்த பாலும் போர் ... குட் கோயிங் )

    ReplyDelete
  4. செந்தில் இந்ததளத்தின் வடிவமைப்பு குறுகிய சந்து போல இருக்கிறது. அதறகு தகுந்தாற் போல் படங்களை உருவாக்குங்கள்.

    ReplyDelete
  5. ஆஹா... அறிமுகப்படுத்தும் விதம் ஒரு கவிதை.... பாராட்டுக்கள்!

    அனைவருக்கும் வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  6. //கவிதைகள் தொடர்ந்து படித்தால் கவிதை நமக்கு எளிதாகும்..//

    படிச்சாலாச்சும் புரியுதா பாக்கிறேன் :) மிக நல்ல தொகுப்பு..

    ReplyDelete
  7. மாறுப்பட்ட வகையில் கவிதையுடன் அறிமுகங்கள். நிச்சயம் சிறந்த பதிவு.

    ReplyDelete
  8. சில புதியவர்களும் உண்டு அதையும் பார்த்து விடுவோம் :-))

    ReplyDelete
  9. அறிமுகப்படுத்தும் விதம் ஒரு கவிதை....
    சிறந்த பதிவு. பாராட்டுக்கள்!

    ReplyDelete
  10. சிறந்த பதிவு

    ReplyDelete
  11. கவிதையாக இருக்கு அறிமுகம் எல்லாம்.
    எல்லாவற்றையும் படிக்கிறேன்.

    ReplyDelete
  12. அறிமுக‌ங்க‌ள் ந‌ல்லா இருக்கு செந்தில் அண்ணா.. சில‌ இடுகைக‌ள் ப‌டிக்காத‌வை.. இப்போது ப‌டிக்கிறேன்.

    ReplyDelete
  13. தரம் பிரித்து ஒவ்வொரு பகுதியாய் அறிமுகப்படுத்தும் விதம் அருமை செந்தில்... நாளென்றுக்கு ஒரு ரசனை என்று அட்டகாசமாய் இருக்கிறது....

    ஒவ்வொன்றாய் படிக்கிறேன்...! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  14. நிறைய அறிமுகங்கள் தெரிந்து கொண்டேன். நன்றி

    ReplyDelete
  15. கவிதை அறிமுகம் கவிதையான அறிமுகம்

    ReplyDelete
  16. செந்தில் நன்றி.சொல்லுப் பேச்சுக் கேக்கலன்னு சொல்ற மாதிரி இருக்கு !மன்னிச்சுக்கோங்க.

    காதலைப்போல கவிதை எளிதா ?காதல் அவ்ளோ எளிதுன்னு சொல்றீங்களா ?
    தொடரும் வாழ்த்துகள்.

    ReplyDelete
  17. புதிய அறிமுகங்களுக்கும் அன்பிற்கும் நன்றி :)

    ReplyDelete
  18. கவிதை பதிவுக்கு கவிதை.
    அடடா என்ன அழகு.
    கவிதை கவிதை...

    ReplyDelete
  19. /செந்தில் நன்றி.சொல்லுப் பேச்சுக் கேக்கலன்னு சொல்ற மாதிரி இருக்கு !மன்னிச்சுக்கோங்க.//

    அப்படியில்லை ஹேமா..

    என்னைத்தவிர வேறு யாரும் அதைப்பற்றி சொல்லாமல் பாராட்டியிருப்பது. வெகுஜன ரசனை மாறிவிட்டதை காட்டுகிறது..

    அடுத்து நான் எழுதப் போகும் படங்களை அந்த தைரியமே என்னை எழுத தூண்டியது.. அதற்கு உங்களுக்குத்தான் என் நன்றியை சொல்லவேண்டும்

    ReplyDelete
  20. அறிமுகத்துக்கு நன்றிண்ணா. மற்ற அறிமுகங்களுக்கு வாழ்த்துகள்.

    ReplyDelete
  21. ஓஹ்..நிறைய புது அறிமுகங்கள். பார்த்துருவோம் பாஸ்!

    அறிமுகங்களுக்கு நன்றி செந்தில்!

    ReplyDelete
  22. நன்றி.உண்மையில் நான் கவிதை எழுதுவது நிறுத்தி பத்தாண்டுகளுக்கு மேலாயிற்று.இப்போது எல்லாவற்றையும் தொகுத்து தூசுதட்டி வெளியிடுகிறேன்.அவ்வளவே.கட்டுரைகளும் கதைகளும் எழுதுவதே விருப்பம்.ஒரு இளைப்பாறல் போலவே கவிதை செய்கிறேன்.சமூகப் பிரச்சினைகளைப் பற்றி கவிதை எழுதுவதில் உள்ள சிரமம் என்னவெனில் அவை மாறிக் கொண்டே இருக்கின்றன.கவனித்தீர்களா..வரதட்சிணைக் கொடுமை பற்றியும் ஸ்டவ் வெடிப்பு பற்றியும் ஏன் இப்போது கவிதை அதிகம் வருவதில்லை?வரதட்சிணைப் பிரச்சினை சமூகத்தில் இருந்து ஒழிந்து விட்டது என்று இதன் மூலம் முடிவுக்கு வரமுடியுமா எனத் தெரியவில்லை.நிஜம் என்னவெனில் நாம் அப்பிரச்சினை பற்றி புலம்பித் தீர்த்துவிட்டோம்.படைப்புமனம் எல்லா காலகட்டத்திலும் சமூகத்தோடு ஒட்டி நிற்கும் என்று சொல்லமுடியாது.காதல் மட்டும் தான் எல்லா காலத்திலும் எவ்வளவு புலம்பியும் கரைக்க முடியாத விசயமாக இருக்கிறது.

    ReplyDelete
  23. அன்பின் செந்தில்

    கவிதை நாள் - அத்தனை அறிமுகங்களும் அருமை. செல்கிறேன் - பார்க்கிறேன் - படிக்கிறேன் - ரசிக்கிறேன் - மறு மொழி இடுகிறேன் - சரியா

    நல்வாழ்த்துகள் செந்தில்
    நட்புடன் சீனா

    ReplyDelete
  24. நல்ல தேடல்கள்! :)

    ReplyDelete
  25. கவிதையிலேயே பதிவு.... ரொம்ப அருமையா இருக்குங்க..

    உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்..

    ReplyDelete
  26. ஒவ்வொரு நாளும் துவக்க வரிக் கவிதைகள் தூள்.

    என்னையும் அறிமுகப் படுத்தியதற்கு மிக்க நன்றி.

    அப்புறம் ஒரு டவுட்டு.... 22 வயசுப் பையன சார்னு சொல்றிங்க. 28 வயசுக் குழந்தைய (!) அண்ணாச்சின்னு சொல்றிங்க. அப்ப உங்க வயசென்ன பதினெட்டா..?

    ReplyDelete
  27. கவிதை நாள். கவிதையான அறிமுகங்கள்.

    ReplyDelete
  28. நன்றிங்க செந்தில்.. இரண்டுநாள் விடுப்பில் இருந்தபடியால் இப்பொழுதான் பார்த்தேன்... உங்களது அன்பிற்கும், அறிமுகத்திற்கும் நன்றிகள்...

    ReplyDelete
  29. நன்றி
    கவிதைக்கான மை தீர்ந்த நிலையில் இக்கவிதை 7 ஆண்டுகளுக்கு முன் திண்ணை.காமில் வெளியான என் இந்தக் கவிதையை வலைப்பூவோடு கோர்த்திருந்தேன்.
    வள்ளுவம் முழுவது வாசித்திரிருக்கிறீர்கள்.அதற்கும் நன்றி

    ReplyDelete
  30. என் கவிதையையும் அறிமுகம் பண்ணுனதுக்கு நன்றிங்கோ ,,,,,

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது