07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Sunday, July 18, 2010

நல்வாழ்த்துகள் பிரதாப் - வருக வருக ஜோதிஜி

அன்பின் சக பதிவர்களே !

இன்றுடன் முடியும் வாரத்திற்கு ஆசிரியப் பொறுபேற்ற அருமை நண்பர் நாஞ்சில் பிரதாப் - ஏற்ற பொறுப்பினை நிறைவேற்றி - நம்மிடமிருந்து விடை பெறுகிறார். இவர் நாலு இடுகைகள் இட்டு, ஏறத்தாழ நூறுக்கும் மேற்பட்ட மறு மொழிகள் பெற்று, மன நிறைவுடன் விடை பெறுகிறார்.

இவர் அறிமுகப்படுத்திய பதிவர்கள் / இடுகைகள் ஏறத்தாழ பதினைந்து. எதிர்பாராத காரணத்தால் ஏற்பட்ட உடல் நலக் குறைவின் காரணமாக இரு தினங்கள் இடுகைகள் இட இயலவில்லை.

நல்ல முறையில் புதுப்புது பதிவர்களைத் தேடிப் பிடித்து அறிமுகம் செய்த விதம் பாராட்டுக்குரியது. நண்பர் பிரதாப்பினை விரைவினில் உடல் நலம் பெற பிரார்த்தனைகளூடன் கூடிய நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். விடைபெறும் நண்பரை வலைச்சரத்தின் சார்பினில் வாழ்த்தி வழி அனுப்புவதில் பெருமை அடைகிறேன்.

நாளை 19 ஜூலை துவங்கும் வாரத்திற்குப் பொறுப்பேற்க வருகிறார் திருப்பூரைச் சார்ந்த அருமை நண்பர் ஜோதிஜி. இவர் தேவியர் இல்லம் என்ற வலைப்பூவினில் எழுதி வருகிறார். இவர் தற்பொழுது திருப்பூரில் வாழ்ந்து வருகிறார். இவர் வரலாற்று உண்மைகளை இந்திய சுதந்திர ரகஸ்யங்கள் என்ற தொடரில் எழுதி இருக்கிறார். இலங்கை ஈழப் பிரச்னைகளைப் பற்றி பல இடுகைகள் எழுதி இருக்கிறார்.

நண்பர் ஜோதி கணேசனை வருக வருக - பதிவர்கள் அறிமுகம் தருக தருக என வரவேர்று வாழ்த்துக்ள் கூறுவதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

நல்வாழ்த்துகள் ஜோதிஜி
நட்புடன் சீனா


6 comments:

  1. சோதனை மறுமொழி

    ReplyDelete
  2. நன்றியும் வணக்கமும்.

    ReplyDelete
  3. நண்பர் நாஞ்சில் பிரதாப் உடல் நலம் பெற பிரார்த்திக்கிறேன். நண்பர் ஜோதிஜியின் வலைச்சர வாரம் அருமையாக அமைய வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  4. இந்த வாய்ப்பை அளித்த சீனா ஐயாவுக்கும் அருமையாய் துவங்கப்போகும் ஜோதிஜிக்கும் வாழ்த்துக்கள்.நாஞ்சில் பிரதாப் நலம்பெற்று ஃபேஸ்புக்கில் அடித்து ஆடிக்கொண்டிருக்கிறார்,யாரும் வருந்தவேண்டாம்:))

    ReplyDelete
  5. என்ன கொடுமை சீனா ஐயா, ஜோதிஜி ஏற்கனவே முதல் இடுகையை போட்ட பிறகு அறிமுகமா ?
    :)

    லேட் லேட் தூங்கிட்டிங்க

    ReplyDelete
  6. அன்பின் கோவி

    தவறு என்னுடையதல்ல - நான் தூங்கவும் இல்லை - சரியான நேரத்தில் இடப்பட்ட இடுகை இது. ஆயினும் தொழில் நுட்ப காரணங்களினால் ( Publishing a draft post by him)- அவரது முதல் இடுகை முந்திக் கொண்டது - அவ்வளவுதான்.

    ஹா ஹா ஹா கவனித்துச் சுட்டியதற்கு நன்றி கோவி

    நல்வாழ்த்துகள் கோவி
    நட்புடன் சீனா

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது