07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Monday, July 5, 2010

வலைச்சர செவ்வாய் - சமையல்

எல்லா நகரங்களிலும்
சிற்றூர்களிலும்
இருக்கும் ஒரு பிரபல
உணவு விடுதி
எத்தனை ருசி என்றாலும்
ஒரு போதும் கிடைத்ததில்லை
அம்மாவின் கைப்பக்குவம்

அறிவிப்பு: தற்சமயம் திருவண்ணாமலையில் இருப்பதால் இந்தப் பதிவை மட்டும் முன் கூட்டியே (இது நாளைக்கானது) பதிவிடுகிறேன்.. என் அறிமுகப் பதிவில் பின்னூட்டம் இட்ட அத்தனை அன்பு உள்ளங்களையும் நான் மீண்டும் ஒருமுறை சிரம் தாழ்த்தி வணங்குகிறேன்.. உங்களால்தான் நான்..

முதலில் சமையலில் இருந்து ஆரம்பிக்கலாம்...சொந்த வாழ்க்கையில் இன்றுவரை மனைவிக்கு ஒரு டீ கூட போட்டு தந்தது கிடையாது.. ஆனால் கிட்டத்தட்ட பதினெட்டு வருட வெளிநாட்டு வாழ்க்கையில் எட்டு வருடங்கள் சுத்த சைவம் அப்போது சாப்பாட்டுக்கு நான் படும் சிரமம் அநேகம்.. ஒரு கட்டத்தில் தாக்குபிடிக்க முடியாமல் மீண்டும் அசைவ உணவுக்கு மாறிவிட்டேன்.. அதனால் முதல்நாள் சமையல் பற்றிய பதிவுகள்...

திருமதி.மேனகா அவர்களின் வலைபக்கத்தை பாருங்கள் பெரும்பாலும் வித்தியாசமான சமையல் முறைகள்..இந்த மாம்பழ அவகோடா சாலட் பாருங்கள் ..

கீதா ஆச்சல் வழங்கும் என் சமையல் அறையில் ஒரு சிம்பிள் மீன் குழம்பு வைத்திருக்கிறார் நீங்களும் செய்து பாருங்கள்..

சகோதரி ஆசியா ஓமர் சமைத்து அசத்தலாம் என சொல்கிறார்... அவரின் பேக்ட் சிக்கென் வித் வெஜிடபிள் ரெசிப்பியின் படங்களே நம்மை செய்து பார்க்க தூண்டும் ..

சின்னு டேஸ்டி(அவர் ரேஸ்ரி என்று சொல்கிறார்) இவரின் வழிமுறைகள் மிகவும் வித்தியாசமானது.. நீங்களே பாருங்களேன்.

ஜலீலா கமல் செய்யும் சமையல் அட்டகாசங்கள்.. அடேயப்பா எத்தனை வகைகள்...

இன்னும் நிறைய பதிவர்களை அறிமுகம் செய்ய முடியவில்லை... அதனால் மற்ற சமையல் ராணிகள் என்னை மன்னிக்கவும்..

இதில் ஜெய்லானி சமையல் குறிப்புகளை சேர்க்க முடியவில்லை.. நிறைய பேர் வெந்நீர் வைக்க தெரியாமல் சுட்டுகொண்டதால் சாரி ஜெய்லானி..


34 comments:

  1. அண்ணா நீங்க எனக்கு சிங்கைல வாங்கி கொடுத்த காந்தி கடை சாப்பாடு பத்தி சொல்லவே இல்லையே?

    ReplyDelete
  2. சமையல் குறித்து வலைசரத்தில் அறிமுகப்படுத்துவது இது முதல் முறை என்று நினைக்கின்றேன். சரிதானே செந்தில். இப்போது தான் நாக்கை ஒரு வழியா கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து நிறுத்தியுள்ளேன். இவர்கள் வேறு கிளம்பி விட்டால் வம்பே வேண்டாம். பொறுமையாக வீட்டுக்காரம்மா பார்த்தாங்க. ஆனால் மீன் கொளம்பு மட்டும் பழசை நினைக்க வைத்தது.

    ReplyDelete
  3. சமையல் அறிமுகம் ருசியான அறிமுகம் அண்ணா

    ReplyDelete
  4. என் சான் உடம்புக்கு வயிறே ஆதாரம். சமையல் ஒன்னு இல்லேன்னா நம்மளாம் இல்லேவே இல்ல. நல்ல அறிமுகங்க்ள் செந்தில் அண்ணே. தொடர்ந்து கலக்குங்க.

    ReplyDelete
  5. அடப்போங்க... இப்பவே நாக்க ஊறுதுங்க...

    நல்ல அறிமுகம்...நன்றிகள்....

    ReplyDelete
  6. சாப்பாட்டுட‌ன் முத‌ல் இடுகை க‌ளைக‌ட்டுது.... வாழ்த்துக்க‌ள் செந்தில் அண்ணா...

    ReplyDelete
  7. நல்ல அறிமுகங்கள்

    ReplyDelete
  8. வலைச்சரத்தில் என்னையும் அறிமுகபடுத்தியதற்க்கு மிக்க நன்றி சகோ!!...

    ReplyDelete
  9. மனிதன் படும் அனைத்து கஷ்டங்களும் - வயிராற சாப்பிட வேண்டும் என்பதற்காக தான். அந்த உணவை மையபப் படுத்தி ஒரு பதிவு. அருமையான கவிதையுடன்.

    ReplyDelete
  10. சமையல் அறிமுகம் ருசியான அறிமுகம்

    ReplyDelete
  11. எங்களை விருந்தோட கவனிக்கிறீங்களா? நல்ல அறிமுகங்கள்.

    ReplyDelete
  12. ////எல்லா நகரங்களிலும்
    சிற்றூர்களிலும்
    இருக்கும் ஒரு பிரபல
    உணவு விடுதி
    எத்தனை ருசி என்றாலும்
    ஒரு போதும் கிடைத்ததில்லை
    அம்மாவின் கைப்பக்குவம் ////


    உண்மைதான் நண்பரே . மிகவும் சிறப்பாக சொல்லி இருகிறிர்கள் . புகைப்படம் கலக்கல் . தொடரட்டும் உங்களின் ஆசிரியர் பணி மிகவும் சிறப்பாக . பகிர்வுக்கு நன்றி

    ReplyDelete
  13. சமையல் ருசியாகத்தான் இருக்கு
    நடத்துங்க நடத்துங்க :)

    ReplyDelete
  14. அண்ணே பசியை உண்டாக்கிடீங்க..என் அம்மாவை இப்போவே அழைக்கிறேன்... :)

    ReplyDelete
  15. எல்லோருமே அருமையானவர்கள். நல்ல அறிமுகங்கள் செந்தில். தொடருங்கள்.

    ReplyDelete
  16. படமே கலக்கல்! அறிமுகமும் அசத்தல்! பாராட்டுக்கள்!

    ReplyDelete
  17. நீங்க ஓட்டுப் போட்டு ஆதரிக்கும் இந்த [விட்டகுசு, மயிராண்டி, குஜிளிம்பா]மாதிரி வால்பையன்&கோவின் பதிவுகளையும் நாளைக்கு அறிமுகப் படுத்துங்க தல. எல்லாருக்கும் உங்களோட திருப்பணி தெரியும்

    ReplyDelete
  18. பதிவுக்குச் சம்மந்தமில்லாமல் கருத்திட்டதால் மற்றவர்கள் மன்னிக்கவும்.

    ReplyDelete
  19. இப்படிப் பட்டவர்களை ஆசிரியராகப் போடும் தள உரிமையாளர்கள் சிந்திக்கட்டும்.

    ReplyDelete
  20. செந்தில்...நல்ல சமையல் அறிமுகங்கள்.இதில ஜெய்லானியின் சுடுதண்ணியும் தெரிவு.இனி எல்லாரும் சுடுதண்ணி வைக்கப் பழகிடலாம் !

    ReplyDelete
  21. //முதலில் சமையலில் இருந்து ஆரம்பிக்கலாம்..//

    தமிழன்.

    ReplyDelete
  22. ருசியான பதிவு. நான் ஆரம்பத்தில் இணையத்தை படித்துதான் சமைக்க ஆரம்பித்தேன்.

    ReplyDelete
  23. நல்ல அறிமுகம். சமையல் தானே என்றில்லாமல் அருமையாக பாராட்டியுள்ளிர்கள். வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  24. பாஸ்ட்டு பால் பால் ஃபோர் அடிசிட்டிங்க , அசத்துங்க சார்

    ReplyDelete
  25. விருந்தோம்பல் தமிழரின் பண்பாடு..

    நல்ல ஆரம்பம்

    ReplyDelete
  26. முத‌ல்ல‌ பாலை க‌ற‌ந்து,
    இர‌ண்டாவ‌தா டீயும், ஓகே,
    அப்புற‌மென்ன‌?
    விருந்து தெட‌ங்கிருச்சி,
    ருசியா, வ‌லைச்ச‌ர‌த்திலே!

    ReplyDelete
  27. முக்கியமான பதிவுகளை அறிமுகப்படுத்தியிருக்கீங்க நன்றி

    படிச்சிட்டு ஒரு கை பார்த்திட வேண்டியதுதான். (என்ற ஊட்டுகாரி சண்டைக்க வந்தா செந்தில்தான் காரணம்)

    ReplyDelete
  28. செந்தில்.....முதல் நாளே....விருந்து உபசரிப்போடு....ஆரம்பித்தது ரொம்ப டச்சிங்...பங்காளி...!


    தொடர்ந்து கலக்குங்கள்!

    ReplyDelete
  29. பரவால்லையே - செந்திலுக்கு சமைக்கவும் தெரியுமா - அது சரி - அறிமுகங்கள் ஒவ்வொன்றாகச் செல்கிறேன் - சரியா

    நல்வாழ்த்துகள் செந்தில்
    நட்புடன் சீனா

    ReplyDelete
  30. அட , சமையல் ராணிகளுக்கு நடுவில சேஃப்டிகாக சுடுதண்ணி பதிவா..?. அசத்திட்டீங்க செந்தில்..

    என்னையும் இவர்களுடன் சேர்த்ததுக்கு ரொம்பவும் நன்றி.

    ReplyDelete
  31. enakku Singai Gandhi hotella vaankikoduththa meals paththi sollave illai....

    ReplyDelete
  32. செந்தில் வாழ்த்துக்கள் & பாராட்டுக்கள்,அறிமுகம் அசத்தலாக இருக்கு.என்னையும் அறிமுகப்படுத்தியமைக்கு மிக்க மகிழ்ச்சி.

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது