குரு வணக்கத்தில் தொடங்கி ஆறு போல் நகர்ந்து இன்று விடைபெறும் நேரம்.
நான் வாசிக்கும் பலரும், என் இடுகையில் எழுதும் எழுத்துக்களை ஆதரித்த வர்களும், புதிய முகங்கள் பலரும் ஒன்று சேர்ந்து இந்த வலைச்சர பணியில் நல்ல அனுபவத்தை தந்தமைக்கு நன்றி. அன்பென்ற சவுக்கால் என் விவேகத் தை அதிகமாக்கிய சீனா அவர்களுக்கு முக்கிய நன்றி.தினந்தோறும் செய்தி ஓடையின் மூலமாகத்தான் தேவியர் இல்லத்தை படிக்கும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டுருக்கிறது. அவர்களுக்கும், இந்த நேரத்தில் மற்ற நண்பர்களுக்கும் இந்த நேரத்தில் நன்றி.
எனக்குள்ளும் இன்று வரையிலும் ஏராளமான இருள் அப்பிக்கிடக்கிறது. மூளையில் இருக்கும் ந்யூரான்களில் எனக்கு முன்னால் வாழ்ந்த தலைமுறை களின் பாதிப்பு இன்னமும் இருக்கிறது. இறை வெறுப்பு, இறை மறுப்பு என்று வாழ்ந்து வந்த வாழ்க்கையில் அனுபவங்கள் கொடுத்த பாதிப்பில் இன்று இறை என்பது இப்போதும் தேடலாகத் தான் இருக்கிறது. நடிகர் சிவகுமார் போலவே கோவிலுக்கு செல்வதை விட என்னுள்ளேயே தேடிக்கொண்டு இருக்கின்றேன். கோவிலுக்குச் சென்றாலும் அங்கு நடக்கும் பல நிகழ்வுகள் மொத்தமாக யோசிக்க வைக்கின்றது.
அச்சத்தை உருவாக்கி பிழைப்பு நடத்தும் மனிதர்களையும், வெளியே கை ஏந்திக்கொண்டு பிழைக்க வழியில்லாமல் வாழும் மனிதர்களையும் தான் ஆதங்கமாய் பார்க்க வைக்கின்றது. இந்த இரண்டு மனிதர்களைப் பற்றியும், சமூகத்தில் உள்ள இடைவெளியையும் இன்று வரைக்கும் எனக்கு அடையாளம் காட்டிக்கொண்டுருப்பவர்கள் வால்பையன், வினவு தளங்கள்.
எதையும் கேள்விகள் கேட்காமல் அப்படியே ஏற்றுக் கொண்டால் குறைந்த பட்சம் அமைதி கிடைக்கலாம். அடுத்த மனிதனைப் பற்றி யோசிக்க வைக்க முடியுமா?
அதைத்தான் இருவரும் செய்து கொண்டு இருக்கிறார்கள். விமர்சனம், வெறுப்பு, குழுமனப்பான்மை, குறுகிய நோக்கம் போன்ற அத்தனையும் தூக்கி எறிந்து பார்த்தாலும் இருவரின் படைப்புகள் மூலம் என்னையும் என்னைச் சுற்றியுள்ள சமூகத்தை புரிந்து கொள்ள முயற்சிக்கின்றேன். என்னால் நீக்க முடியாத இருள் என்பது என் குழந்தைகளுக்காவது வராமல் இருக்க வேண்டும்.
மதநம்பிக்கை உள்ளவனின் எண்ணத்தில் இந்த
வால்பையன் அடுத்த சம்மட்டி அடிகள் எவராலும் மறுக்க முடியாது.
"எனக்கு எல்லா மதமும் ஒன்று தான், எல்லா கடவுளும் ஒன்று தான், உங்க ளுக்கு பல பல வடிவங்களிலும், பல பல பெயர்களில் இருந்தாலும் எனக்கு குழுமனப்பான்மையை உருவாக்கி மக்களிடயே அமைதியை குழைத்து அடிச்சி கிட்டு சாவுங்கடான்னு உருவாக்கப்பட்டதே கடவுள்! அப்படிபட்ட கடவுளை என்னால் எப்படி ஏற்றுகொள்ள முடியும், இதுவரை மனித சமுதாயத் திற்கு எள் ளலவும் பயனில்லாத கடவுளை நான் எப்படி வணங்கமுடியும்!"
திருப்பூரில் பணம் கொழுத்தவர்களின் மத்தியில் வாழும் வாழ்க்கையில் பயமே அறியாதவனின் வாழ்க்கை தேவியர்கள் அறிமுகமானதற்குப் பிறகே அத்தனை பயமும் வந்தது. எழுதத் தொடங்கிய பிறகே மொத்த விவேகமும் வந்துள்ளது. சீனா போன்றவர்களால் இன்னமும் வளர்த்துக் கொள்ள வேண்டி உள்ளது என்பதை புரிந்து கொண்டேன்.
வலைச்சரம் ஆசிரியர் பணி என்பது எத்தனை முள்படுகை போன்றது என்பதை நன்றாகவே உணர்ந்து கொண்டேன். வலைச்சரம் தமிழ் மண மணிமகுடத்தில் வராமல் இருக்கலாம். ஆனால் வாசிப்பு அனுபவத்தை தேடிக் கொண்டு இருப்ப வர்களுக்கு இந்த தளம் வாழ் நாள் பொக்கிஷம்.
இலங்கை குறித்து நான் கொடுத்த தலைப்புகள் போல என்னால் நூறு அற்புத தளங்களை சுட்டிக்காட்ட முடியும். மற்ற தலைப்புகளைச் சுட்டிக் காட்ட எனக்கு உதவிய நண்பர்கள் போல் இல்லாமல் நானே உணர்ந்துபடித்த தளங்கள் அது. ஆனால் அத்தனையும் இங்கு சுட்டிக்காட்ட முடியவில்லை என்ற ஆதங்கம் அதிகம் உண்டு. பல நண்பர்களின் தளங்களையும் சுருக்கம் கருதி என்னால் சுட்டிக் காட்ட முடியவில்லை.
நான் எழுதிய ஈழம் குறித்த கட்டுரைகள் இன்று வரைக்கும் பலருக்கும் தேட லாய் இருக்கிறது. எட்டு வருடங்கள் மீதம் உள்ள ஈழ வரலாற்றை இப்போது என்னுடைய மதிப்புக்கு உரியவர் கொடுத்த தாக்கத்தால், உதவியால் புத்தகத் திற்கான வேலைகள் நடந்து கொண்டுருக்கிறது.
தேவியர் இல்லம் இடுகையை உருவாக்கித் தந்த
நாகா மூலமாக இந்த நல்ல பயணம் இன்று வரைக்கும் தொடர்ந்து சென்று கொண்டு இருக்கிறது. அன்று முதல் இன்று வரையிலும் என் எழுத்துலக வளர்ச்சியில் தனிப்பட்ட அக்கறை காட்டு வலையுலக குருஜீ
ராகவன் நைஜீரியாவுக்கு (பின்னூட்ட சுனாமி நன்றி கார்த்திகை பாண்டியன்)என்னுடைய குரு வணக்கம்.
ஏழு நாட்களும் தொடர்ந்து வந்து வாசித்த, பின்னூட்டமிட்ட, ஓட்டு அளித்த, பாராட்டிய, எண்ணங்களை பகிர்ந்து கொண்ட உங்களுக்கு நன்றி. படங்களை தந்த 4தமிழ்மீடியாவுக்கும் நன்றி.
ஜோதிஜிதேவியர் இல்லம். திருப்பூர்23.07.2010நாம் தமிழர்