ஸ்லாக்கிங் அல்லது பேட்டிங் பவர்ப்ளே
➦➠ by:
முகிலன்
எப்பிடி மிடில் ஆர்டர் விக்கெட் இழக்காம நிதானமா அதே நேரத்தில ரன் ரேட்டும் குறையாம ரன் எடுக்கிறது எவ்வளவு முக்கியமோ அதே அளவு முக்கியம் பேட்டிங் பவர்ப்ளேயை செலக்ட் பண்றதும், கடைசி பத்து ஓவர்ல அதிரடியா ரன் குவிக்கிறதும்.
ஸ்லாக்கிங் (Slogging) அப்பிடிங்கிற வார்த்தைக்கு கன்னா பின்னான்னு சுத்துறது அப்பிடிங்கிற அர்த்தம் வந்தாலும், உண்மையில டெக்னிக் இல்லைன்னா ரொம்ப நேரம் நிக்க முடியாது. யூசுஃப் பதான், ஷாஹித் அஃப்ரிதி இவங்க எல்லாம் அருமையான ஸ்லாக் ஓவர் பேட்ஸ்மென்.
அதே மாதிரிதான் கிரிக்கெட் போன்ற விளையாட்டு பதிவு எழுதுறதும். குறிப்பா கிரிக்கெட் பத்தி எழுதினா அதிகம் பேர் படிப்பாங்கன்னாலும், டெக்னிக் தெரியாம சும்மா கும்மியடிச்சா ரொம்ப நாளைக்கி நிலைக்க முடியாது. கரெக்டா கண்டு பிடிச்சிட்டீங்க. இன்னைக்கி நாம பாக்கப்போறது கிரிக்கெட் இடுகைகளே..
முதல்ல நாம பார்க்கப் போறது விசு. இவர் ஒரு மாணவராம். இன்னும் இரண்டு வலைப்பதிவுகள் வச்சிருக்காரு. அதிலும் கிரிக்கெட் பத்தியே இருக்கு. இந்த இடுகையில 2011 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில இந்திய அணியோட வெற்றிவாய்ப்பு எப்படி இருக்கு, அணியின் ஒவ்வொரு வீரர்களோட பலம் எது பலவீனம் எதுன்னு அலசியிருக்காரு.
மழையால பாதிக்கப் படுற ஒரு நாள்/ 20-20 போட்டிகள்ல நாம கேள்விப்படுற ஒரு சொல் டக்வொர்த்-லூயிஸ் முறை. அப்பிடின்னா என்னான்னு இங்க சொல்றாரு கவிதை வீதி சௌந்தர். இவர் ரொம்ப நாளா எழுதிக்கிட்டு இருக்காரு. இருந்தாலும் இந்த இடுகை எனக்கு ரொம்பப் பிடிச்சதால இங்க பகிர்றேன்.
இலங்கையைச் சேர்ந்த பெரும்பாலான கிரிக்கெட் ரசிகர்களுக்கு இந்திய அணியைக் கண்டாலே பிடிக்காது. ஆனாலும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த பலர் இந்திய அணியின் ரசிகர்களா இருக்காங்க. ஏன் அப்பிடின்னு நான் ரொம்ப நாள் யோசிச்சிருக்கேன். இவர் சொல்றாரு அதுக்கு பதிலை. இவர் பேர் கந்தசாமி. அக்டோபர் 2010ல இருந்து ப்ளாகிக்கிட்டு இருக்காரு.
இவரைப் பத்தி சொல்லியே ஆகணும். இவரோட புனைப்பெயர் புளியங்குடி. மொத்தம் மூணு வலைப்பதிவுகள் வச்சிருந்தாலும் நாம இங்க பாக்கப்போறது இவரோட கிரிக்கெட் சம்மந்தமான ஐபிஎல் நாடகம் மட்டுமே. கிரிக்கெட் போட்டித் தொடர்கள் நடக்கிற போதெல்லாம் தினமும் ஒரு இடுகை அந்தப் போட்டிகளைப் பற்றி எழுதுவாரு. நல்லவிதமா எல்லாம் இல்லை. இந்த மாதிரி. இவருக்குக் கிரிக்கெட்டே பிடிக்காதா அப்பிடின்னா இல்லை. இவருக்கு சச்சின் மேல ஏதோ காண்டு. அதை இவர் வலைப்பக்கத்துல இருக்கிற வாக்கெடுப்பிலே பார்க்கலாம். ஆனாலும் இவரோட வலைப்பூவோட கேப்ஷன் எனக்கு ரொம்பப் பிடிக்கும் - கூக்ளியில் ரேகைகளை இழந்து ஆஃப் ஸ்பின்னில் கட்டைவிரல் தேய்ந்து ஆங்கிலப் பரீச்சையை மறந்து அஞ்சாம் வகுப்பில் கோட் அடித்த சக நண்பர்களுக்காக
நாம அடுத்ததா பார்க்கப் போறவரும் ஒரு இலங்கைப் பதிவரே. இவரை, இவர் நட்பு வட்டாரத்தில ஸ்டேட்டிஸ்டிக்ஸ் புலின்னு சொல்லுவாங்க. யார், யார் கூட எப்ப ஆடினாங்க. அந்தப் போட்டியில யாரு எவ்வளவு ரன் அடிச்சாங்கன்ற புள்ளி விவரமெல்லாம் நல்லா சொல்லுவாரு. இவர் கூட சில இடுகைகள்ல விவாதம் செஞ்சிருக்கேன். கிரிக்கெட் சம்மந்தமாவும், கிரிக்கெட் இல்லாத விசயத்திலயும். உலகக் கோப்பை போட்டிக்கான இலங்கை அணியோட தேர்வு பற்றி இவர் இங்க அலசியிருக்காரு.
கிரிக்கெட் பதிவுகளை அறிமுகப் படுத்தன்னு வந்துட்டு இவங்க ரெண்டு பேரை சொல்லலைன்னா நல்லாவே இருக்காது.
முதலாமவர் பவன். இவர் நம்ம வலைமனை சுகுமார் சுவாமிநாதனைப் பார்த்துட்டு அவரைப் போலவே ஃபோட்டோ கமெண்ட்ஸ் போடுவார். சுகுமார் மாதிரி இல்லாம இவர் கிரிக்கெட் சம்மந்தமா மட்டுமே போடுவாரு. அதிலயும் இந்திய, ஆஸ்திரேலிய அணிகளைக் கலாய்க்கிறதுன்னா இவருக்கு லட்டு சாப்புடுற மாதிரி. சாம்பிளுக்கு இதைப் பாருங்க.
அடுத்தவரு லோஷன். இவரும் பிரபலப் பதிவரே. இவர் வெற்றி எஃப்.எம்மில் அறிவிப்பாளரா வேலை பாக்குறாரு. பொழுதுபோக்கா எழுதினாலும் நல்லாவே எழுதுவாரு. ஆஸ்திரேலிய அணியின் ரசிகர். கிரிக்கெட் போட்டிகளைக் கணிக்கிறதுல கில்லாடி. இவரோட கணிப்புகள் பெரும்பாலும் சரியாத்தான் இருக்கும். உலகக் கோப்பைத் தொடருக்கான இலங்கை, இந்திய, ஆஸ்திரேலிய அணிகள் தேர்வு பற்றி இவர் அலசியிருக்கிற இடுகை இது.
பவர்ப்ளே வெறும் அஞ்சி ஓவர்தான். அதுனால சட்டுனு முடிஞ்சிருச்சி. இனி நாளைக்கி வேற சில அறிமுகங்களோட பார்க்கலாம்.

|
|
Super!!!!
ReplyDeleteNalla arimugangal... Vazhththukkal.
ReplyDeleteநல்ல தகவல் ... வாழ்த்துக்கள்
ReplyDeleteநல்ல கிரிக்கெட் அறிமுகங்கள்
ReplyDeleteஎல்லோரையும் பார்த்தேன்.. சிறப்பு..
ReplyDeleteநல்ல கிரிக்கெட்
ReplyDeleteசே நல்ல அறிமுகங்கள்.
யாருங்க அது கிரிக்கெட்டுக்கு எதிரா குரல் கொடுப்பவர்... அவரைத் தவிர மற்ற அனைவரும் நான் அறிந்த முகங்களே...
ReplyDeleteசித்ரா, சே.குமார், அரசன், ராஜி, தம்பி கூர்மதியன், அன்பரசன், ஃபிலாசஃபி பிரபாகரன்
ReplyDeleteஉங்கள் அனைவருக்கும் நன்றி.