07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Monday, January 10, 2011

தம்பட்டம்


அனைவருக்கும் வணக்கம். என்னை பாலா என்று அழைப்பார்கள். என்னை வலைச்சாரத்தில் அறிமுகப்படுத்திய அண்ணன் பன்னிக்குட்டி ராமசாமிக்கு மிக்க நன்றி. என்னை இங்கு எழுதுவதற்காக அழைத்த நண்பர் சீனாவுக்கும் நன்றி. வேறு வழியில்லாமல் ஒரு வாரம் என் பதிவுகளை படிக்க இருக்கும் உங்களுக்கு அட்வான்ஸ் நன்றிகள்.

கதை, கவிதை என்று பெரிதாக எழுத்து திறமை இல்லை என்றாலும் எழுத்தின் மீதான தீராத ஆர்வம்தான் (எல்லோருக்கும் இருக்குறதுதானே?) என்னையும் வலைப்பக்கம் தொடங்க வைத்தது. நான் முதலில் எழுதிய பதிவு நான் என்ன இளிச்சவாயனா?. அரசியல் என்றில்லாமல், விடாமுயற்சி, மனிதநேயம் என்ற ரீதியில் எனக்கு பிடித்த சே குவேராவை பற்றியும், அன்னை தெரசா பற்றியும் எழுதினேன். சிறு வயதில் இருந்தே ஒரு பழக்கம். எந்த செயலும் சரியாக வரவில்லை என்றால் கை விடுவதெல்லாம் இல்லை. மாறாக அமாவாசை (அமைதிப்படை) ரேஞ்சுக்கு அடிமட்டத்தில் நுழைந்து கொஞ்சம் கொஞ்சமாக மேலே சென்று விடுவேன்.

என் கல்லூரி இசைக்குழுவில் சேர வேண்டும் என்று தீராத காதல். நமக்கும் இசைக்கும் காததூரம். ஆனாலும் ஒரு சிறிய வேலையில் (ஜால்ரா அடிக்கும் வேலை) சேர்ந்து பிறகு டிரம்ஸ் அடிக்கும் அளவிற்கு உயர்ந்தேன். அதே போலத்தான் பதிவுலகிலும் அடி மேல் அடி எடுத்து வைத்து வருகிறேன் (அதற்காக ஜால்ரா அடிக்கும் வேலை எல்லாம் செய்யவில்லை).

என் பதிவை பிரபலம் ஆக்க வேண்டும் என்பதற்காகவே அஜித் பற்றியும் விஜய் பற்றியும் அவ்வப்போது எழுதி வந்தேன். பிறகு நான் ரசித்த ஆங்கில படங்களை பற்றியும் எழுதினேன். ஆசிரியர் பணியில் இருப்பதால் கோபம் வந்தால் கூட வராத மாதிரிதான் நடிக்கணும். இல்லையென்றால் காமெடி பீஸ் ஆகி விடுவோம். ஆகவே எந்த கருத்தாக இருந்தாலும் சிறிது நகைச்சுவை கலந்து எழுத வேண்டும் என்பது என் கருத்து. திரைவிமர்சனம் எழுதுவது எப்படி, புனைவு எழுதுவது எப்படி, மொன்னை கேள்விகளும் மொக்கை பதில்களும் என்று சமூகத்துக்கு அவசியமான(?!) சில பதிவுகளை நகைச்சுவை கலந்து எழுதினேன். முதன் முதலில் அதிகம் பிரபலமானது விவஸ்தை கெட்ட விளம்பரங்கள் என்ற பதிவு. சச்சினை எனக்கு பிடிக்காது என்று சொல்லி வாங்கி கட்டிக்கொண்டதும் உண்டு.போட்டோ கமெண்ட்ஸ் பற்றி சொல்லியே ஆக வேண்டும். சாதாரண பதிவுகளை விட இதற்கு உழைப்பு அதிகம். சமயங்களில் மொக்கையாக கூட போய் விடும். நான் உருவாக்கி, என்னை தவிர மற்ற அனைவரையும் பிரபலம் ஆக்கிய ஒரு பதிவு தோனி சொல்ல மறந்த கதை (எனக்கு விழுந்தது பத்தே ஓட்டு. இதை வைத்து ஐம்பது ஓட்டுகள் வாங்கியவர்கள் எல்லாம் உண்டு). உலகமெல்லாம் சுற்றி, கடைசியில் எனக்கே மின்னஞ்சலில் வந்தது. அதை உருவாக்கியது நான் என்று தெரியாமல் எனக்கு என் நண்பர் அனுப்பி இருந்தார். மிக மகிழ்ச்சியாக இருந்தது. மேலும் ஆண்கள் எல்லாம் சிங்கம் மாதிரி, சிங்கம் அசிங்கமான கதை, சச்சின் விட்ட ரொமாண்டிக் லுக் ஆகியவை குறிப்பிடத்தக்கவை. 

இப்படி கொஞ்சம் கொஞ்சமாக எழுதி தற்போது நூறு பதிவுகளை தாண்டி இருக்கிறேன். இன்னும் உருப்படியாக எழுதவில்லை என்றாலும், எழுத்தில் ஓரளவிற்கு முன்னேற்றம் அடைந்திருக்கிறேன். நான் கொஞ்சம் (கொஞ்சமா?) தற்பெருமைகாரன். ஆகவேதான் இவ்வளவு நீளமான தம்பட்டம். ஜூலியஸ் சீசரே சொல்லி இருக்கார் “வாய்ப்பு கிடைக்கும் போது, உன் டிரம்பட்டை எடுத்து ஊதி விடு.” என்று. வேறு வழியே இல்லை. ஒரு வாரம் பொறுத்துக்கொண்டுதான் ஆக வேண்டும். வேறு எக்ஸ்ட்ரா பில்டப்புகள் எதுவும் இல்லாமல் வெறும் அறிமுகப்படுத்தும் வேலையை மட்டுமே செய்யப்போகிறேன். ஆதரவு தருவீர்கள் என்று நம்புகிறேன்.

அப்ப நாளை சந்திக்கலாமா?

20 comments:

 1. வணக்கம் நண்பரே வலைச்சரத்தில் உங்கள் வரவு இனிதாகுக

  // வேறு எக்ஸ்ட்ரா பில்டப்புகள் எதுவும் இல்லாமல் வெறும் அறிமுகப்படுத்தும் வேலையை மட்டுமே செய்யப்போகிறேன். ஆதரவு தருவீர்கள் என்று நம்புகிறேன்.//

  தொடர்ந்து சிறக்க வாழ்த்துக்கள்

  ReplyDelete
 2. வாழ்த்துக்கள் பாலா. ஒரு வாரம் அசத்துங்கள்

  ReplyDelete
 3. பாலா ஆட்டம் ஆரம்பம் in வலைசரம் .. கலக்குங்க தல ....

  ReplyDelete
 4. வாழ்த்துகள் பாஸ்!

  ReplyDelete
 5. வாழ்த்துக்கள் பாலா..

  ReplyDelete
 6. வாழ்த்துக்கள் பாலா

  ReplyDelete
 7. வாழ்த்துகள் பாலா. உங்கள் பதிவுகளின் அறிமுகம் நன்றி.

  சுவரஸ்யமாக உள்ளன. தொடருங்கள்.

  ReplyDelete
 8. This comment has been removed by the author.

  ReplyDelete
 9. ஒரு வாரம் வலைச்சரத்தில் முத்திரை பதிக்க வாழ்த்துக்கள் நண்பரே....

  ReplyDelete
 10. வாழ்த்துக்கள் பாலா

  ReplyDelete
 11. நல்ல விஷயங்களைத் தொடர்ந்து எழுதுங்கள்..

  ReplyDelete
 12. வணக்கம் நண்பரே வலைச்சரத்தில் உங்கள் வரவு இனிதாகுக.

  ReplyDelete
 13. @ மாணவன்
  வாழ்த்துக்கு நன்றி நண்பரே


  @ எல் கே
  நன்றி நண்பரே

  @ "ராஜா"
  பில்டப்பு எல்லாம் கொடுக்காதீங்க தலா. நன்றி

  @♠ ராஜு ♠
  நன்றி பாஸ்

  @அமைதிச்சாரல்
  நன்றி சகோ

  @ Jaleela Kamal
  ரொம்ப நன்றிங்க

  ReplyDelete
 14. வலைச்சரத்தில் பாலாவின் பணி சிறக்க வாழ்த்துக்கள்...
  சிறந்த பதிவர்களை, சிறப்பான முறையில் அறிமுகம் செய்ய வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 15. @ ச.செந்தில்வேலன்
  நன்றி நண்பரே

  @துளசி கோபால்
  நன்றி சகோ

  @ரஹீம் கஸாலி
  உங்கள் ஆதரவுடன் நன்றி நண்பரே

  @ அரசன்
  நன்றி அரசரே

  @Samudra
  நிச்சயமாக உங்கள் ஆதரவுடன் எழுதுகிறேன், நன்றி நண்பரே

  @ Madhavan Srinivasagopalan
  மிக்க நன்றி

  @ சே.குமார்
  வரவேற்றமைக்கு மிக்க நன்றி

  @ Chitra
  Thank you madam

  ReplyDelete
 16. @ பாரத்... பாரதி...

  வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி நண்பரே

  ReplyDelete
 17. வாழ்த்துக்கள் பாலா

  ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது