ஸ்பின் பவுலிங்
➦➠ by:
முகிலன்
வணக்கம் நண்பர்களே!
எனக்கும் கிரிக்கெட் தொடருக்கும் ஒரு ராசி. வழக்கமாக எழுத ஆரம்பித்து சூடு பிடித்துப் போகும்போது வேறு எதாவது ஒரு பிரச்சனை வந்து என் எழுத்துகளுக்குத் தடை போடும். அதுபோல இப்போது ட்விட்டர் தளத்தில் தமிழ் ட்விட்டர்கள் முன்னெடுத்து நடத்தும் கீச்சுப் புரட்சி #tnfisherman. தமிழ் பேசும் இந்திய மீனவர்களை நடுக்கடலில் தாக்கி சுட்டும் கழுத்தை இறுக்கியும் கொலை செய்கிறது சிங்களப் பேரினவாத இலங்கை அரசின் சிங்களக் கடற்படை. இந்தச் செயலை கை கட்டி வேடிக்கை பார்க்கின்றன தடுத்து நிறுத்த வேண்டிய மத்திய அரசும் தட்டிக் கேட்க வேண்டிய தமிழக அரசும். பத்திரிக்கைகளும் இதைப் பற்றி எட்டாவது பக்கத்தில் எட்டு வரிகளுக்குள் செய்தி வெளியிட்டு மறந்துவிட்டன. டாஸ்மாக்கில் ஸ்ட்ராங்க் பியருக்கு தட்டுப்பாடு ஏற்பட்டதெல்லாம் தலைப்புச்செய்தியாக்கும் எச்சைப் பொறுக்கி பத்திரிகைகளுக்கு இதெல்லாம் முக்கியமே இல்லை. இதில் லங்கா ரத்னா ராமின் தி இந்து பத்திரிகையில் சிங்கள ஜால்ரா அமெரிக்கா வரை கேட்கிறது.
இணையத்தில் ட்விட்டும் தமிழர்களில் பெரும்பாலானோருக்கு அறிமுகமான பெயர் டிபிசிடி. இவர் முன்னெடுத்த இயக்கமே #tnfisherman. இவரது வேண்டுகோளைத் தொடர்ந்து மற்ற டிவிட்டர்களும் இந்திய, இலங்கை, தமிழக அரசுகளையும் அரசு அதிகாரிகளின் மெத்தனப் போக்கையும் கண்டித்து டிவிட்டித் தள்ளிவிட்டார்கள். இரண்டு நாட்களாக இந்திய அளவில் ட்ரெண்டாக இருந்த இந்த #tnfisherman ஐ வெள்ளி இரவு 9-10 மணிக்குப் பேசி வைத்து ட்விட்டுகளாகத் தட்டித் தள்ளி உலக அளவில் முதலிடத்துக்குக் கொண்டு வந்து விட்டார்கள். முதலில் சும்மா வெட்டிப் போராட்டம் என்று புறந்தள்ளிய பலரும் பின்னர் இதில் குதித்தது ஆச்சர்யப் படத்தக்கதாய் இருந்தது.
மீனவர் படுகொலைக்கு மன்னிப்பையும் இனி இது போல் நடக்காது என்ற உத்தரவாதத்தையும், கடந்த இரண்டு படுகொலைகளை நிகழ்த்திய கடற்படையினருக்கு தண்டனையையும் தரும் வரை இந்தப் போராட்டம் தொடரும். உங்களுக்கு டிவிட்டர் கணக்கு இருந்தால் நீங்களும் #tnfisherman என்ற டேகை இணைத்து ட்விட்டுங்கள். கணக்கில்லையென்றால் கணக்கைத் தொடங்கி ட்விட்டுங்கள்.
ஃபாஸ்ட் பவுலிங் பத்தி நேத்து பார்த்தோம். மிடில் ஓவர்ஸ்ல ஃபாஸ்ட் பவுலரை மட்டுமே நம்பிக்கிட்டு இருக்க முடியாது. ஸ்பின் பவுலிங் வேணும். ஒரு வேளை ஃபாஸ்ட் பவுலர்ஸ் ரொம்ப டைட்டா பவுலிங் போட்டுட்டாங்க, ரன் ஏறலை அதே சமயத்துல விக்கெட்டும் விழலைன்னு வச்சிக்கோங்க. டக்குனு ஒரு ஸ்பின்னரை உள்ள விட்டா அந்த பவுலிங்கை அடிக்க நினைப்பாங்க. அவுட்டாகிடுவாங்க. நிறைய பார்ட் டைம் பவுலர்ஸ் பார்ட்னர்ஷிப் ப்ரேக்கர்னு பேர் வாங்க இந்த சைக்காலஜி ஒரு காரணம்.
இந்த ஸ்பின் பவுலிங் இருக்கே, இதை ஆடுறது ரொம்பக் கஷ்டம். சப் காண்டினெண்ட் (இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, பங்களாதேஷ்) தவிர மற்ற நாட்டு ப்ளேயர்ஸ் ஸ்பின் ஆடத் திணறுவாங்க. பெரும்பாலும் ஸ்வீப் ஷாட்தான் ஆடுவாங்க. பந்து எந்தப் பக்கம் திரும்பும்னு பவுலர் கைய ரீட் பண்ணி பேட் பண்றதே ஒரு பெரிய கலை.
எழுத்துல என்னைப் பொறுத்த வரைக்கும் கவிதைங்கிறது ஸ்பின் பவுலிங் மாதிரி. குறிப்பா பின் நவீனத்துவக் கவிதைகள். அரைகுறையா இருக்கிற மாதிரி இருக்கும். கவிஞர் ஒரு மனநிலைல எழுதியிருப்பாங்க. நாம வேற மனநிலைல வாசிச்சா அது வேற ஒரு அர்த்தத்தைக் கொடுக்கும். அப்படிப்பட்ட கவிதைப் பதிவுகளைத்தான் இன்னைக்கிப் பார்க்கப் போறோம்.
முதல்ல பார்க்கப் போற வலைப்பதிவு - உதிரும் சருகுகள். ஆதி அப்பிடிங்கிறவர் தலைப்பே இல்லாத கவிதைன்னு அசத்தறாரு.
அடுத்தவரு நம்ம பக்கத்தூர்க்காரரு. சாத்தூர் மாய்க்கானு செல்லமா அழைக்கப்படுற இராமசாமி. அயல்நாட்டுல இருந்துட்டு நாடு திரும்பினதும் பெரும்பாலானவங்களுக்கு வர்ற உணர்வை இங்க அழகா சொல்லியிருக்காரு. ஊர் ஊரா சுத்தற சேல்ஸ் ரெப் மாதிரி வேலையில இருக்கிறவங்களோட நிலமையை இங்கே வலிக்கிற மாதிரி சொல்லியிருக்காரு.
யார் மேலயாவது கோவம் வந்தா சட்டுனு எதையாவது சொல்லிடறோம். ஆனா அது அவங்களை எந்த அளவுக்கு பாதிக்கும்னு நாம யோசிக்கிறதில்லை. வள்ளுவர் தீயினாற் சுட்ட புண்ணுள்ளாறும்னு திருக்குறள் எல்லாம் எழுதியும் நாம யோசிக்கறதில்லை. தமிழ் காதலன் சொல்லியா கேக்கப் போறோம்?
இவருக்கு என் பேருங்கிறதால நான் இங்க இவரை அறிமுகப் படுத்தலை. இவர் எழுதிய இந்தக் கவிதைல இருக்கிற சந்த நயமும் வார்த்தை அலங்காரமும்தான் இவரை இங்க பகிரத் தூண்டியது.
இவர கூகுள் பஸ்ல இருந்து பழக்கம். இந்தக் கவிதையில அவர் போட்டிருக்கிற படம் போல கத்தியால குத்துறது மாதிரி கவிதை எழுதுறதுல மன்னன் இந்த போகன். கவிதை மட்டுமல்ல நறுக்குன்னு நாக்கைப் புடிங்கிக்கிற மாதிரி கட்டுரைகளும் எழுதுவாரு.
இன்றைய அறிமுகங்கள் அவ்வளவுதான். நாளை நான் நமக்கெல்லாம் நல்லா அறிமுகமான சில பதிவர்கள் எழுதினதுல எனக்குப் பிடிச்ச பதிவுகளை பகிர்ந்துக்கலாம்னு இருக்கேன். நன்றி.

|
|
வழக்கம்போலவே சிறப்பான அறிமுகங்கள்...
ReplyDeleteஇதில் கலியுகம் தினேஷ் மற்றும் கடைசியாக சொன்ன “எழுத்துப்பிழை” நண்பர்களைதவிர மற்றவர்கள் எனக்கு அறிமுகமாக உள்ளது சென்று பார்க்கிறேன்
நன்றி நண்பரே
nice introduction..
ReplyDeletethanks
நன்றி தினேஷ் :)
ReplyDeleteபுதியதாய் பதிவர்களை அறிமுகம் செய்துவைத்தமைக்கு நன்றி முகிலன்!
ReplyDeleteஉங்கள் நடையும் நீங்கள் அறிமுகப்படுத்தும் விதமும் அருமை...
ReplyDeleteவாழ்த்துக்கள்.
அன்பின் முகிலன், வணக்கம். உங்களின் அன்பான அறிமுகம் கண்டேன். மகிழ்ந்தேன். உங்களின் பார்வைப் பரிமாணங்கள் பார்த்து பரவசமானேன். தங்களின் இனிய அறிமுகத்துக்கு இதயங்கனிந்த நன்றி. எம்முடன் பகிரப்பட்ட சகப் பதிவர்களுக்கும் பாராட்டுகள்.
ReplyDeleteஅன்பின் முகிலன்,
ReplyDeleteஎன் கவிதையையும், வலைமனையையும் இங்கு அறிமுகம் செய்து வைத்தமைக்கு நன்றிக பல..
அன்புடன் ஆதி