அத்தியாயம் 1 - சரத்தில் முதல் மலர்
➦➠ by:
பாலா
வணக்கம் நண்பர்களே இன்று முதல் எனக்குத்தெரிந்த ஒரு சில பதிவர்களின் குறிப்பிடத்தக்க பதிவுகளை உங்களுக்கு அறிமுகப்படுத்தலாம் என்று நினைக்கிறேன். நான் அறிமுகப்படுத்தும் சில பதிவர்கள் தங்களுக்கு ஏற்கனவே அறிமுகமானவர்களாக கூட இருக்கலாம். ஆனால் அவர்கள் எழுதியதில் என்னை கவர்ந்த பதிவுகள் பற்றி இங்கே பகிர்ந்து கொள்கிறேன்.
என்னை பதிவுலகுக்கு அறிமுகப்படுத்திய ராஜா அவர்கள் தலயின் தீவிர ரசிகராக அனைவராலும் அறியப்பெற்றவர். பெரும்பாலும் அஜீத்தை பற்றி எழுதினாலும், காதல் கவிதை, கதை எழுதுவதில் வல்லவர். இவருக்கு கவிதை எழுத வரும் என்று முதலில் அறிந்தது காதலர் தின கவிதையால். காதல் ரசம் சொட்ட கிக்காக எழுதிய பிரியமுடன் பிரியா யாரென்று இன்றுவரை சொல்லமாட்டேன் என்கிறார்.
பவியின் தளத்தில் ஒரே அரட்டை கச்சேரிதான். ஆனாலும் அர்த்தமுள்ள அரட்டை. சமகால நிகழ்வுகளை ஒரு சாதாரண பார்வையில் எழுதுகிறார். கொய்யா சாப்பிடு, முட்டை முக்கியம், வெந்தயம் வேண்டும், மாதுளை அவசியம், தக்காளி இன்னும் முக்கியம் என்று பயனுள்ள தகவல்களை தந்து அசத்துகிறார்.
சீட்டுக்குருவியாக எழுதும் விமலன் சார். ரொம்ப மரியாதையான மனிதர். ஒரு பாமரனின் பார்வையில் வாழ்க்கை எப்படி இருக்கிறது என்பதை வெள்ளந்தியாக சொல்கிறார். இச்சிப்பூவில் ஒரு பெண்ணின் வாழ்க்கையையும், நெருஞ்சியில் இளமைக்கால வாழ்வில் தொலைத்தவை பற்றியும், சுஷ்யத்தை பற்றிய ஏக்க பெருமூச்சும், மறுபடியும் பெண்களை பற்றி மாயலோகத்திலும், மனதில் தைக்கும் முட்களாக வெளிப்படுத்துகிறார்.
நல்லநேரம் ஆர்கே சதீஷ்குமார், பேச்சுலர்களை சமையல் வல்லுனர்கள் ஆக்கியே தீருவேன் என்று அடம்பிடிக்கிறார். புதிதாக பதிவெழுத வந்திருப்பவர்களுக்கு பதிவுலக நெளிவுசுழிவுகளையும் கற்று தருகிறார். ஜோக்’கடி’ப்பதிலும் தான் வல்லவன் என்று நிரூபிக்கும் வகையில் ஏ, யு/ஏ என்று எல்லா சர்டிபிகேட் ஜோக்குகளையும் அள்ளி தருகிறார்.
மருத்துவர் ராஜ்மோகன் குழந்தைகள் நலனுக்காக குழந்தைக்கு டயபர் மாற்றுவதில் இருந்து, ஜீப் மாட்டிக்கொண்டால் விடுவிப்பது வரை ஏகப்பட்ட ஐடியாக்களை அள்ளி வீசுகிறார். குழந்தைகள் விடாமல் அழுதால் என்ன காரணம், எத்தனை மணி நேரம் தூங்கும் என்று பயனுள்ள தகவல்களையும் தருகிறார்.
என்ன நண்பர்களே என்னை கவர்ந்த பதிவுகளை நீங்களும் அறிந்து கொண்டீர்கள்தானே. மறுபடியும் ஒரு சிறு பட்டியலுடன் நாளை உங்களை சந்திக்கிறேன்.
நாளைக்கு சந்திப்போமா?
|
|
நல்ல அறிமுகங்கள் பாலா! அவர்களின் வலைப் பூவின் முகப்புப் பக்கத்தை வெளியிட்டதும் சிறப்பு :)
ReplyDeleteஅறிமுகப்படுத்தும் விதம் புதுமையாக இருக்குதுங்க... பாராட்டுக்கள்!
ReplyDeleteபவியின் தளத்தில் ஏதோ சிக்கல். அது வேறு தளத்திற்கு இட்டுச் செல்கிறது.
ReplyDeleteநல்ல அறிமுகங்கள்.
ReplyDeleteகுறிப்பிட்டு சொல்ல வேண்டுமென்றால் விமலன்,ராஜா.
தொடருங்கள்.
அறிமுகப்படுத்தும் விதம் புதுமையாக அமைந்துள்ளது
ReplyDeleteவாழ்த்துக்கள்
@ Balaji saravana
ReplyDeleteநன்றி நண்பரே. வடை உங்களுக்கே :)
@ Chitra
பாராட்டுக்களுக்கு நன்றி மேடம்
@ Gopi Ramamoorthy
எனக்கு அந்த மாதிரி எதுவும் நிகழவில்லையே.
வாழ்த்துக்களுக்கு நன்றி நண்பரே
@ ஆமினா
நன்றி மேடம்
Super.. good start.. go ahead.
ReplyDeleteநல்ல பதிவர்களை அறிமுகம் செய்தமைக்கு நன்றி
ReplyDeleteஎன்னை அறிமுகப்படுத்தியதற்கு நன்றி. உருப்படியாக பல பதிவுகள் இருக்கும்போது இப்படி என்னை வம்பில் மாட்டி விட்டு விட்டீர்களே?
ReplyDeleteஎன்னை ஒரு பதிவர் பாராட்டி இருக்கிறார் வலைசரத்தில் பகிர்ந்து கொண்டார் என்றால் அது நீங்கள் தான் ரொம்ப சந்தோசமா இருக்கு நன்றி
ReplyDeleteமுகப்பு பக்கம் வெளியிடுவது செம ஐடியா நன்றி
ReplyDeleteகுறிப்பிட்டு சொல்ல வேண்டுமென்றால் விமலன்,ராஜா//சதீஷ் என்பதும் மூன்று எழுத்துதானே அதில் என்ன கஸ்டம் கோபி?
ReplyDeleteஇன்னிக்குதான் ஆரம்பமா சூடு பிடிச்சிருச்சு
ReplyDeleteஅறிமுகத்திற்கு நன்றிகள்..
ReplyDeleteநல்ல அறிமுகங்கள் பாலா
ReplyDeleteவலைப் பூவின் முகப்புப் பக்கத்தை வெளியிட்டது புதுமையாக இருக்கு பாராட்டுக்கள் பாலா
எல்லோருமே தெரிந்தமுகமாக இருந்தாலும் நீங்கள் அறிமுகப்படுத்திய விதம் அருமை
ReplyDeleteநம்ம சதீசை தவிர்த்து மற்றவர்கள் புதியவர்கள். அறிமுகத்திற்கு நன்றி
ReplyDelete@ Madhavan Srinivasagopalan
ReplyDeleteThank you very much
@ அரசன்
ReplyDeleteமிக்க நன்றி அரசரே
@"ராஜா"
மாட்டி விடுவதுதானே நம்ம வேலை
@ ஆர்.கே.சதீஷ்குமார்
மிக்க நன்றி நண்பரே
@ Samudra
உங்களுக்கும் நன்றி நண்பரே
@ r.v.saravanan
ReplyDeleteவாழ்த்தியமைக்கு நன்றி நண்பரே
@ ரஹீம் கஸாலி
என்ன பண்றது சார். நம்மள தவிர எல்லோருமே பிரபலமாக இருக்காங்க
@ எல் கே
உங்களுக்கும் நன்றி நண்பரே
அறிமுகப்படுத்தும் விதம் புதுமையாக இருக்குதுங்க... பாராட்டுக்கள்!
ReplyDeleteஅறிமுகங்கள் அனைத்தும் அருமை . அறிமுக முறை ரசிக்க வைக்கிறது . புதுமை புகுத்தி கலக்கி இருக்கீங்க . பகிர்வுக்கு நன்றி . உங்களின் ஆசிரியர் பணி சிறக்க என் வாழ்த்துக்கள்
ReplyDeleteஅறிமுகங்கள் அருமை பாலா சார் ...
ReplyDeleteநன்றி பாலா. என்னையும் உங்களது அறிமுகத்தில் இணைத்தமைக்கு ,
ReplyDeleteவலைப் பூவின் முகப்புப் பக்கத்தை வெளியிட்டதும் சிறப்பாக உள்ளது .
மேலும் மேலும் எனது நன்றிகள் உங்களுக்கு உரித்தாகட்டும் .
ஏதோ பிரச்சனை இருந்ததுதான் . எனது தளத்தை திறக்கும் போது வேறொரு தளத்துக்கு இட்டு சென்றது .
இப்ப சரி என்று நினைக்கிறேன். என்ன பிரச்சனை என்று எனக்கு தெரியவில்லை .
@ சே.குமார்
ReplyDeleteநன்றி நண்பரே
@ !♫ ♪ …..♥ பனித்துளி சங்கர் .♥...♪ ♫
உங்கள் வாழ்த்தை பெர்சனல் வாழ்த்தாகவும் எடுத்து கொள்கிறேன். உண்மையிலேயே ஆசிரியர் பணியில்தான் இருக்கிறேன். நன்றி நண்பரே
@ karthikkumar
உங்களுக்கும் மிக்க நன்றி
@ Pavi
வருகைக்கு நன்றி சகோ
சிறந்த பதிவர்களை அழகாக அறிமுகப்படுத்தினீர்கள்,
ReplyDeleteஆசிரியர் பாலா! நன்றி!
@ NIZAMUDEEN
ReplyDeleteமிக்க நன்றி நண்பரே
வித்தியாசமான முறையில் அறிமுகப்படுத்தி இருக்கீங்க வாழ்த்துகக்ள்
ReplyDeleteஎன்னை அறிமுகப்படுத்தியதற்கு நன்றி
ReplyDelete