07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது
Showing posts with label பாலா. Show all posts
Showing posts with label பாலா. Show all posts

Sunday, January 16, 2011

அத்தியாயம் 6 - இன்றே இப்படம் கடைசி

பதிவுலக நண்பர்கள் அனைவருக்கும் என் இனிய மாட்டுப்பொங்கல் நல்வாழ்த்துக்கள். தப்பா நினைச்சுக்காதீங்க. இன்னிக்கு மாட்டுப்பொங்கல். அதான் வாழ்த்தினேன். 


கடந்த ஒரு வாரம் எப்படி சென்றது என்றே தெரியவில்லை. பதிவர்களை அறிமுகம் செய்யவேண்டும் என்பதற்காகவே நிறைய பதிவுகளை படிக்க நேர்ந்தது. உங்களோடு சேர்ந்து நானும் பல நண்பர்களை பற்றி தெரிந்து கொண்டேன். இதற்கு வாய்ப்பளித்த நண்பர் சீனா அவர்களுக்கு மீண்டும் நன்றி. இன்று நாம் பார்க்க போகும் பதிவர்கள் யாரென்றால் ,


வானம் எனக்கொரு போதிமரம் என்கிறார் நண்பர் இளவரசன். கவிதைக்கு உண்மையும் அழகு என்று வித்தியாசமான பதிவுகளால் நம்மை அசரவைக்கிறார். காதல் என்றால் குழப்பம் என்று மிகத்தெளிவாக சொல்கிறார். காதலியின் பிணம் என்று தடாலடியாக அதிர வைக்கிறார். ஒரு விபசாரியின் குரலில் கவிதையின் வாயிலாக நாம் மனசாட்சியுடன் பேசுகிறார். பால்பூத் பூச்சாண்டி என்று பால்ய கால நினைவுகளை பகிர்ந்து கொள்கிறார். நடுநிலைன்னா என்ன என்று கேள்வியும் எழுப்புகிறார்.


நண்பர் ஸ்பீட்மாஸ்டர் தான் கண்ட உலகத்தை நம்மோடு பகிர்ந்து கொள்கிறார். ஜாலி பேர்வழி என்று இவரின் பதிவுகளே சாட்சி சொல்கின்றன. அலுவலகத்தில் சும்மா இருந்தால் பொழுதுபோக என்னவெல்லாம் செய்யலாம் என்று ஐடியா தருகிறார். மேலும் சங்கர் அடுத்து எடுக்கப்போகும் 500 கோடி பட்ஜெட் படத்தை பற்றி ஸ்கூப் தருகிறார். பட்டுக்கோட்டை அவர்களைப்பற்றி அறிய தகவல்களை தொகுத்து தருகிறார். வெளிநாட்டுக்கு வேலைக்கு செல்ல விரும்புவோருக்கு பயனுள்ள தகவல்களை தருகிறார்.

நண்பர் பொன்ராஜ் பொன்னான வரிகளால் உள்ளத்தை அள்ளுகிறார். சிந்தனைகள் என்ற தலைப்பில் உபயோகமான செய்திகளை தருகிறார். ஒரு ராணுவ வீரர் சொன்ன உண்மைக்கதையையும் நம்மோடு பகிர்ந்து கொள்கிறார். சில இல்லுஷன் படங்களையும், நெஞ்சை உலுக்கும் ஏழ்மை படங்களையும் தந்து இதயங்களை கனக்க வைக்கிறார். ரொம்ப நக்கலாக அரசியல் வேறு பேசுகிறார். அட போடவைக்கும் சமாச்சாரம் ஒன்றையும் சொல்கிறார். மிக அருமையாக இருக்கிறது.

பலே பாண்டியா, பலே ஆசாமியாகத்தான் இருக்கிறார். ஈசியாக கணக்கு பண்ணுவது எப்படி என்று கற்று தருகிறார். மேலும் போட்டோஷாப் சொல்லி கொடுக்கிறார். கணக்கு புதிர் போட்டு எல்லோரையும் யோசிக்க வைக்கிறார். உங்கள் கணினியை பற்றி புதிது புதிதாக பல துணுக்குகள் அளிக்கிறார். மிகவும் பயனுள்ளதாக உள்ளன. ஒவ்வொரு பதிவின் இறுதியிலும் கருத்து வேறு சொல்கிறார்.


நீ நான் அவன் என்று எழுதி வரும் வெற்றி அவ்வப்போது வெற்றி டைம்ஸ் என்று சுவாரசியமாக செய்தி தொகுப்பு அளிக்கிறார், காஃபி குடிக்கிற கேப்பில் காஃபி பற்றி அரிய தகவல்களை அடுக்குகிறார். தண்ணீர் ஒரு மனிதனுக்கு எவ்வளவு முக்கியம் என்று காரணங்களை அடுக்குகிறார். புயல்களுக்கு பெயர் வைப்பதை பற்றியும் தகவல் தருகிறார்.


நண்பர்களே, இதோ முடிந்து விட்டது எனது தொல்லை. எனக்கு தெரிந்த சில நண்பர்களின் வலைதளத்தை உங்களுக்கு அறிமுகப்படுத்தி இருக்கிறேன். என்னுடைய எழுத்து நடை போராடித்தாலும் பொறுமையாக படித்த உங்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன். நன்றி வணக்கம்.

மேலும் வாசிக்க...

Saturday, January 15, 2011

அத்தியாயம் 5 - சரத்தில் ஐந்தாவது மலர்

ஆண்டுதோறும் எத்தனையோ பண்டிகைகள் கொண்டாடினாலும், சாதி மத பேதம் இல்லாமல் கொண்டாடப்படும் ஒரு பண்டிகை பொங்கல்தான். கடவுளை மையப்படுத்தாமல், உழைப்பை, நன்றியை, இயற்கையை மையப்படுத்துவதாலேயே இந்த சிறப்பு. உலகின் பெரும்பாலான இடங்களில் இந்த பண்டிகை வெவ்வேறு பெயர்களால் கொண்டாடப்பட்டு வருவது ஒரு சிறப்பு. அனைவருக்கும் என் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள். (அட மறந்தே போய்ட்டென். அனைவருக்கும் இனிய (தமிழக அரசு அறிவித்த) தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்.)
ஆறு ஆண்டுகளுக்கு முன் கல்லூரியில் பொங்கல் கொண்டாட்டம். அம்புக்குறி காட்டும் நபர்தான் இந்த பதிவை எழுதுபவர் (ரொம்ப அப்பாவியா இருக்கார்ல?)


இது ஒரு பொங்கல் ஸ்பெஷல் பதிவு. அதென்ன ஸ்பெஷல் என்கிறீர்களா? அதெல்லாம் ஒண்ணும் இல்லீங்க. பெரும்பாலும் டிவியில் சாதாரண நாட்களில் ஒளிபரப்பப்படும் மொக்கை நிகழ்ச்சிகள் எல்லாம், பொங்கல் அன்று சிறப்பு நிகழ்ச்சி ஆவதில்லையா? மொக்கை படங்கள் எல்லாம் சூப்பர்ஹிட் படம் ஆவதில்லையா? அது மாதிரிதான். இது மொக்கை அல்ல. சாதாரண பதிவுதான். ஆனாலும் பொங்கல் அன்று வெளியிடுவதால் சிறப்பு பதிவு.


நண்பர் பாலாஜி சரவணன் கவிதைகளில் பட்டய கிளப்புகிறார். அதிலும், பிரிவு, சோகம், அழுகை என்றால் அல்வா சாப்பிடுவது மாதிரி போலிருக்கிறது. காதலியை பிரிந்த துயரில் புலம்பி தள்ளுகிறார். புதுமையாக மனதை மின்விசிறியுடன் ஒப்பிட்டு அசத்துகிறார். முகமூடி மனிதர்களின் நிதர்சனத்தை வெளிப்படுத்துகிறார். நட்பை பற்றி தலைப்பிடாமலும் கவிதை சொல்கிறார்.


வாழுமட்டும் நன்மைக்காக வாழ்ந்துபார்ப்போம் என்று சொல்லும் குடந்தையூர் நண்பர் சரவணனை நிறைய பேர் அறிந்திருப்பீர்கள். இங்க்ரீமெண்ட் கேட்டு கெஞ்சும் குறுஞ்சிறுகதை புன்னகைக்க வைக்கிறது. இருமன அழைப்பிதழ் என்ற கதை அவரே சொல்வது போல வித்தியாசமாகத்தான் இருக்கிறது. சில நொடி சினேகம் என்று ரயில், பேருந்து சினேகங்களை ஞாபகப்படுத்துகிறார். அப்பப்ப ஜோக்'கடி'க்க வேறு செய்கிறார்.


தன்னடக்கத்துடன் தன்னை சின்னப்பயல் என்று சொல்லிக்கொள்கிறார் இந்த பரமக்குடிக்காரர். குழம்பிய குட்டையில் மீன் பிடிக்கிக்கிறார். கண்ணாடியோடு பேசுகிறார். கண்ணாடியும் நம்மோடு பேசுகிறது. கண்ணாடியால் உறவுகளைப்பற்றியும் விவரிக்கிறார் இந்த சின்னப்பயல். புன்னகைக்க வைக்கும் புள்ளயார் புடிக்க போன கத சொல்கிறார். காதலன் காதலியிடம் என்ன எதிர்பார்ப்பான். ஒன்றும் அதிகமில்லை என்று பட்டியலிடுகிறார். மழை ஏன் யாருக்குமே பிடிக்கிறதில்லைனு கேள்வி கேட்கிறார்.


சகோதரி அபுசனா குழந்தைகள் மேதைகளாக வளர்ப்பதற்கு சில ஐடியாக்கள் தருகிறார். உக்காந்து யோசிச்சதுன்னு சொல்லி மனசாட்சியே இல்லாமல் மொக்கை போடுகிறார். தொலைக்காட்சி பெட்டியின் முன்னேற்றம் பற்றிய செய்திகளையும் பகிர்ந்து கொள்கிறார். அளவில் பெரிய தகவல்களை மெயிலில் அனுப்ப டெக்னிக்கல் ஆலோசனையை எளிய முறையில் தருகிறார்.


நண்பர் மகாதேவன் தான் தளத்துக்கு தகவல்துளிகள் என்று பெயர் வைத்தது சரிதான். நிறைய தகவல்களை அள்ளித்தருகிறார். உங்கள் தலைமுடியின் உண்மையான நிறம் என்ன என்று சொல்கிறார். கடவுச்சொல் (பாஸ்வார்ட்) எப்படி பாதுகாப்பான முறையில் அமைப்பது என்று ஆலோசனை தருகிறார். சிறுநீரகக்கல் உருவாகுவது பற்றி விளக்குகிறார். உலகத்திலேயே மிகப்பெரிய புகைப்படத்தைப்பற்றிய தகவல்களை தருகிறார். பைலட்டின் அறையை 360 டிகிரி கோணத்தில் சுற்றி காட்டுகிறார். பாராசூட்டில் இருந்து குதிக்க கற்று தருகிறார். இவ்வாறு அடுக்கிக்கொண்டே போகலாம்.

இன்னிக்கு அறிமுகங்கள் முடிந்து விட்டது. எல்லோரும் பொங்கல், கரும்பு எல்லாம் சாப்பிட்டு விடுமுறையை எஞ்சாய் பண்ணுங்க. என்ன நண்பர்களே நாளைக்கு சந்திப்போமா?
மேலும் வாசிக்க...

Friday, January 14, 2011

அத்தியாயம் 4 - சரத்தில் நான்காவது மலர்

அனைவருக்கும் வணக்கம். "பழையன கழிதலும் புதியன புகுதலும்", என்ற சொல்லுக்கேற்ப, உங்கள் மனதில் இருந்த பழைய கவலைகள் எல்லாம் மறைந்து, புதிய மகிழ்ச்சி குடியேறட்டும் என்று இந்த போகி திருநாளில் மனமாற வாழ்த்துகிறேன். வழக்கம்போல இன்றும் ஒரு ரெடிமேட் பட்டியல். பாத்துவிடலாமா?


அரசர்குளத்தானாகிய நண்பர் கஸாலி பயனுள்ள பல நல்ல பதிவுகளை எழுதி வருகிறார். அவர் எழுதிய ஆட்டோ சங்கர் பற்றிய பிளாஷ்பேக் குறிப்பிடத்தக்கது. மிசா அல்லது எமர்ஜென்சி பற்றிய வரலாற்றையும், மகாத்மா காந்திஜி அவர்களை கொன்ற தினத்தன்று நடந்தவைகளையும் கண்முன் நிறுத்துகிறார். பூனையை ஹீரோவாக வைத்து சுவாரசியமாக சிறுகதையும் தந்திருக்கிறார். காலப்போக்கில் தவறாக அர்த்தம் கொள்ளப்பட்டுவிட்ட பழமொழிகள் பற்றியும், அவற்றின் சரியான அர்த்தம் பற்றியும் கூறுகிறார்.


சேலம் தேவாவோ ஏடாகூடமாக பழமொழிகளுக்கே எதிராக ஆராய்ச்சி நடத்தி புதுமொழிகளை உதிர்க்கிறார். செல்போனால் ஏற்படும் தொல்லைகளுக்கு காரணமான மார்டீன் ஹூப்பரையும் கலாய்க்கிறார். மாதா, பிதா, கூகிள் என்று குருவுக்கு பதிலாக கூகிளை வைக்கிறார். காரணமும் சொல்கிறார். சொந்த கதை என்று நொந்த கதையும் சொல்கிறார்.


நண்பர் முத்தூசிவா சிவசம்போ என்ற தன் வலைப்பக்கத்தில், குண்டு ஒண்ணு வச்சிருக்கேன் என்று தமிழ் சினிமாவில் வெடிகுண்டு வைக்கும் வில்லன்களை கலாய்க்கிறார். எந்திரன் படத்தில் வசீகரனாக கவுண்டரும், சிட்டியாக செந்திலும் நடித்தால் எப்படி இருக்கும் என்று காமெடி கலாட்டா செய்கிறார். சரி மனிதர் ரொம்ப ஜாலியான ஆள் என்று பார்த்தால், அந்த நேரம் அந்தி நேரம் என்று திகில் கதை எழுதி அடிவயிற்றில் பீதியை கிளப்புகிறார்.


நண்பர் வடிவேலன் கணினிமென்பொருள்கூடம் என்ற தன் வலைப்பக்கத்தில் எண்ணற்ற கணினி சார்ந்த தகவல்களை அள்ளித்தந்திருக்கிறார். புதிதாக கணினி வாங்குபவர்கள் கவனிக்க வேண்டிய விஷயங்கள், மின் புத்தகங்களை படிப்பதற்கு ஏற்ற மென்பொருட்கள் போன்றவை பற்றி பயனுள்ள செய்திகள் தருகிறார். ஸ்டார்ட் மெனுவில் நம் பெயர் வரும்படி செய்யும் வழியையும் கற்பிக்கிறார்..


நண்பர் செய்யது அலி தன் வலைப்பக்கமான செய்தாலியில் கவிதையாக எழுதி தள்ளிவிட்டார். போலி மனிதர்களின் முகச்சாயம் பற்றி கோடிட்டு காட்டுகிறார். காதல் கவிதையும் அழகாக எழுதுகிறார், சமூக அவலங்களை பற்றிய சோக கவிதையும் ஆழமாக எழுதுகிறார்.

இன்று சில புதிய தளங்களை பற்றி அறிந்து கொண்டீர்களா? என்ன நண்பர்களே நாளைக்கு சந்திப்போமா?

மேலும் வாசிக்க...

Thursday, January 13, 2011

அத்தியாயம் 3 - சரத்தில் மூன்றாவது மலர்

வலைச்சரத்தில் எனது வெற்றிகரமான மூன்றாவது நாள். “ரெண்டு நாள் கூட ஆகல, அதுக்குள்ள என்ன வெற்றிகரமான? என்று கேட்கிறீர்களா? இப்போதெல்லாம் படம் ரிலீஸ் அன்னிக்கே மாபெரும் வெற்றி அப்படின்னு சொல்றதில்லையா? அது போலத்தான்.


எனக்கு தொடர்ந்து ஆதரவு அளித்து வருபவர்களில் முக்கியமானவர் எப்பூடி..ஜீவதர்ஷன் அவர்கள். ரஜினியின் தீவிர பக்தராக அறியப்பட்டவர். இவருடைய எளிமையான எழுத்து நடை என்னை மிகவும் கவர்ந்தது. ஒவ்வொரு துறையிலும் இருதுருவங்களாக இருக்கும் இரட்டையர்கள் இணைந்திருக்கும் 50 புகைப்படங்களை அழகாக தொகுத்திருக்கிறார். நாம் வாழ்வில் அன்றாடம் காணும் சின்ன சின்ன சுகமான விஷயங்களை சுட்டிகாட்டி இருக்கிறார். சாட்டிலைட் டீவிக்கும், அன்றைய தூர்தர்ஷனுக்கும் உள்ள வித்தியாசங்களை சொல்லி மலரும் நினைவுகளை ஏற்படுத்துகிறார். கிரிக்கெட் பற்றி எழுதுவதிலும் வல்லவராகவே இருக்கிறார்.


நண்பர் இரவுவானம் என்னைப்போல எதை எழுதினாலும் காமெடி தூவியே எழுதுகிறார். நானும் என் காதலும் என்று சொந்த காதல் கதையை சுவாரசியமாக சொல்கிறார். சபரிமலைக்கு போகிறவர்களுக்கு டிப்ஸ் என்று வித்தியாசமான பதிவுகளையும் எழுதி உள்ளார். குழந்தைகளை தட்டி கேட்கும் விதமாக சமூக நோக்கம் உள்ள பதிவையும் எழுதி இருக்கிறார். அவ்வப்போது திரைவிமர்சனம் எழுதி கலாய்க்கவும் செய்கிறார்.


என் இனிய இல்லம் என்று பெண்களுக்கு தேவையான அத்தனை விஷயங்களையும் அள்ளித்தருகிறார் சினேகிதி. கஞ்சி காய்ச்சுவதில் இருந்து, தந்தூரி வகை வரை சமையல் குறிப்புகளும், களிமண்ணில் இருந்து கண்ணாடி வரை கை வேலைபாடுகள் பற்றிய குறிப்புகளும் கண்டிப்பாக அனைவருக்கும் பயனுள்ளதாகவே இருக்கும்.


வம்ப வேலைக்கு வாங்க துடிக்கும் நண்பர் மணிவண்ணன், ஒரு காமெடி காதல் கதையை சீரியஸாக சொல்லி சிரிக்க வைக்கிறார். இரண்டு என்ற நம்பரை வைத்துக்கொண்டு மொக்கை கதையும் சொல்கிறார். அத்தமகளின் அந்தநாள் ஞாபகங்களை நம்மோடு பகிர்ந்து கொள்கிறார்.


குட்டிசுவர்க்கம் ஆமீனா மேடம் மிகவும் பயனுள்ள  தகவல் அறியும் உரிமை சட்டம் பற்றி உரிமையோடு விளக்குகிறார். பூல்புலாயா என்று மர்ம கோட்டை பற்றிய கதையை சுவாரசியமாகவும் சொல்கிறார். கிரிக்கெட் கற்று கொடுத்த பாடம் என்று கருத்தும் தெரிவிக்கிறார்.

என்ன நண்பர்களே இன்று நான் அறிமுகப்படுத்தியவர்கள் தளங்களை கண்டு கொண்டீர்களா? நாளை இன்னும் சில பதிவர்களை அறிமுகப்படுத்துகிறேன். அப்போ, நாளை சந்திப்போமா?

மேலும் வாசிக்க...

Wednesday, January 12, 2011

அத்தியாயம் 2 - சரத்தில் இரண்டாவது மலர்



நண்பர்களே நேற்று ஒரு சில பதிவுகளை அறிமுகப்படுத்திய நான் இன்று அதே போல இன்னொரு சிறு பட்டியலை வெளியிடுகிறேன். அதற்கு முன்பாக எனக்கு மறுமொழியிட்டு ஆதரவு தந்த நண்பர்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.


என் பள்ளிக்கால நண்பன் ராஜாஅண்ணாமலை. வெகு நாட்களுக்கு பிறகு அவன் எழுதி வரும் பதிவுகள் வாயிலாக மீண்டும் தொடர்பு கிடைத்தது. மழைக்காகிதம் என்ற தளத்தில் காதல் எட்டுவகை என்று ஆராய்ச்சி கட்டுரை எழுதி இருக்கிறார். அனைவருக்கும் தெரிந்திருக்க வேண்டிய இன்சூரன்ஸ் பற்றிய சில அடிப்படை தகவல்களையும், வங்கிகளில் சேவைக்கட்டணம் என்ற பெயரில் கறக்கப்படும் பணத்தை பற்றியும் கூறுகிறார்.

அதிரடி ஹாஜா, குறுகிய காலத்தில் அதிக பதிவுகள் எழுதி வருகிறார். நக்கலாக சில கேள்விகள் வேறு கேட்கிறார். அதுமட்டுமல்லாமல் சாதாரண நெஞ்சு வலிக்கும், மாரடைப்புக்கும் உள்ள வித்தியாசங்களை கூறி நெஞ்சில் பால் வார்க்கிறார். கணிப்பொறியை அதிகம் பயன் படுத்துவோரின் நலனுக்காக கண்களை பாதுகாக்க சில எளிய பயிற்சிகளையும், நாம் உடல் உறுப்புகளுக்கு உண்டான ஆயுளை பற்றிய சுவாரசியமான தகவல்களையும் அள்ளி தருகிறார்.

நண்பர் தங்கம் பழனி உள்ளங்கையில் உலகம் என்று தன் வலைப்பக்கத்துக்கு பெயர் வைத்தது பொருத்தமாகத்தான் இருக்கிறது. கணினி பற்றிய அடிப்படை கருத்துக்களையும், போட்டோஷாப்பில் உள்ள நுணுக்கங்கள் பற்றி நிறைய தகவல்களையும் தருகிறார். அவ்வப்போது தன்னம்பிக்கை அளிக்கும் விதமான கதைகள், பொன்மொழிகள் என்று வழங்குகிறார். இளநரையை போக்குவது குறித்து டிப்ஸ் கொடுக்கிறார். உண்மையிலேயே பல்துறை தகவல்கள் கொட்டி கிடக்கின்றன.

எல்லாவற்றையும் குழந்தையின் மன நிலையில் இருந்து காண முற்படும் நண்பர் விக்கி எப்போதுமே சந்தோசமாக இருக்க சில ஐடியாக்கள் தருகிறார். காதலியும், மனைவியும் சந்தித்தால்? என்று குண்டக்க மண்டக்க உண்மை நிகழ்வை எழுதி சுவாரசியம் கூட்டுகிறார். ஒரு பொதுசன பார்வையில் நடிகர்களைப்பற்றி சில கமெண்டுகளும் அடிக்கிறார்.


என் கடன் பணி செய்து கிடப்பதே என்று கேள்வி பட்டிருப்போம். என் கடன் திரு விஜய் அவர்களை கலாய்ப்பதே என்ற ஒரே குறிக்கோளுடன் பதிவெழுதி வருபவர் நண்பர் குண்டு ராஜகோபால். ஒரு சின்ன கான்ஸெப்ட் கிடைத்தாலோ, அல்லது ஒரு விஜய் புகைப்படம் கிடைத்தாலோ உடனே விஜய்யை கலாய்த்து ஒரு பதிவை தயாரித்து விடுகிறார். சரியான காமெடி பேர்வழியா இருப்பாரோ என்று யோசித்தால், என்னவளே எங்கிருக்கிறாய் என்று திடீரென்று காதல் செய்கிறார். சாப்ட்வேர் வேலையின் கொடுமை என்று வேதனையும் படுகிறார்.


இன்றைய கோட்டா முடிந்து விட்டது. என்ன நண்பர்களே நாளை சந்திப்போமா?


மேலும் வாசிக்க...

Tuesday, January 11, 2011

அத்தியாயம் 1 - சரத்தில் முதல் மலர்


வணக்கம் நண்பர்களே இன்று முதல் எனக்குத்தெரிந்த ஒரு சில பதிவர்களின் குறிப்பிடத்தக்க பதிவுகளை உங்களுக்கு அறிமுகப்படுத்தலாம் என்று நினைக்கிறேன். நான் அறிமுகப்படுத்தும் சில பதிவர்கள் தங்களுக்கு ஏற்கனவே அறிமுகமானவர்களாக கூட இருக்கலாம். ஆனால் அவர்கள் எழுதியதில் என்னை கவர்ந்த பதிவுகள் பற்றி இங்கே பகிர்ந்து கொள்கிறேன்.


என்னை பதிவுலகுக்கு அறிமுகப்படுத்திய ராஜா அவர்கள் தலயின் தீவிர ரசிகராக அனைவராலும் அறியப்பெற்றவர். பெரும்பாலும் அஜீத்தை பற்றி எழுதினாலும், காதல் கவிதை, கதை எழுதுவதில் வல்லவர். இவருக்கு கவிதை எழுத வரும் என்று முதலில் அறிந்தது காதலர் தின கவிதையால். காதல் ரசம் சொட்ட கிக்காக எழுதிய பிரியமுடன் பிரியா யாரென்று இன்றுவரை சொல்லமாட்டேன் என்கிறார்.


பவியின் தளத்தில் ஒரே அரட்டை கச்சேரிதான். ஆனாலும் அர்த்தமுள்ள அரட்டை. சமகால நிகழ்வுகளை ஒரு சாதாரண பார்வையில் எழுதுகிறார். கொய்யா சாப்பிடு, முட்டை முக்கியம், வெந்தயம் வேண்டும், மாதுளை அவசியம், தக்காளி இன்னும் முக்கியம் என்று பயனுள்ள தகவல்களை தந்து அசத்துகிறார்.


சீட்டுக்குருவியாக எழுதும் விமலன் சார். ரொம்ப மரியாதையான மனிதர். ஒரு பாமரனின் பார்வையில் வாழ்க்கை எப்படி இருக்கிறது என்பதை வெள்ளந்தியாக சொல்கிறார். இச்சிப்பூவில் ஒரு பெண்ணின் வாழ்க்கையையும், நெருஞ்சியில் இளமைக்கால வாழ்வில் தொலைத்தவை பற்றியும், சுஷ்யத்தை பற்றிய ஏக்க பெருமூச்சும், மறுபடியும் பெண்களை பற்றி மாயலோகத்திலும், மனதில் தைக்கும் முட்களாக வெளிப்படுத்துகிறார்.



நல்லநேரம் ஆர்கே சதீஷ்குமார், பேச்சுலர்களை சமையல் வல்லுனர்கள் ஆக்கியே தீருவேன் என்று அடம்பிடிக்கிறார். புதிதாக பதிவெழுத வந்திருப்பவர்களுக்கு பதிவுலக நெளிவுசுழிவுகளையும் கற்று தருகிறார். ஜோக்கடிப்பதிலும் தான் வல்லவன் என்று நிரூபிக்கும் வகையில் ஏ, யு/ஏ என்று எல்லா சர்டிபிகேட் ஜோக்குகளையும் அள்ளி தருகிறார்.


மருத்துவர் ராஜ்மோகன் குழந்தைகள் நலனுக்காக குழந்தைக்கு டயபர் மாற்றுவதில் இருந்து, ஜீப் மாட்டிக்கொண்டால் விடுவிப்பது வரை ஏகப்பட்ட ஐடியாக்களை அள்ளி வீசுகிறார். குழந்தைகள் விடாமல் அழுதால் என்ன காரணம், எத்தனை மணி நேரம் தூங்கும் என்று பயனுள்ள தகவல்களையும் தருகிறார்.

என்ன நண்பர்களே என்னை கவர்ந்த பதிவுகளை நீங்களும் அறிந்து கொண்டீர்கள்தானே. மறுபடியும் ஒரு சிறு பட்டியலுடன் நாளை உங்களை சந்திக்கிறேன்.


நாளைக்கு சந்திப்போமா?


மேலும் வாசிக்க...

Monday, January 10, 2011

தம்பட்டம்


அனைவருக்கும் வணக்கம். என்னை பாலா என்று அழைப்பார்கள். என்னை வலைச்சாரத்தில் அறிமுகப்படுத்திய அண்ணன் பன்னிக்குட்டி ராமசாமிக்கு மிக்க நன்றி. என்னை இங்கு எழுதுவதற்காக அழைத்த நண்பர் சீனாவுக்கும் நன்றி. வேறு வழியில்லாமல் ஒரு வாரம் என் பதிவுகளை படிக்க இருக்கும் உங்களுக்கு அட்வான்ஸ் நன்றிகள்.

கதை, கவிதை என்று பெரிதாக எழுத்து திறமை இல்லை என்றாலும் எழுத்தின் மீதான தீராத ஆர்வம்தான் (எல்லோருக்கும் இருக்குறதுதானே?) என்னையும் வலைப்பக்கம் தொடங்க வைத்தது. நான் முதலில் எழுதிய பதிவு நான் என்ன இளிச்சவாயனா?. அரசியல் என்றில்லாமல், விடாமுயற்சி, மனிதநேயம் என்ற ரீதியில் எனக்கு பிடித்த சே குவேராவை பற்றியும், அன்னை தெரசா பற்றியும் எழுதினேன். சிறு வயதில் இருந்தே ஒரு பழக்கம். எந்த செயலும் சரியாக வரவில்லை என்றால் கை விடுவதெல்லாம் இல்லை. மாறாக அமாவாசை (அமைதிப்படை) ரேஞ்சுக்கு அடிமட்டத்தில் நுழைந்து கொஞ்சம் கொஞ்சமாக மேலே சென்று விடுவேன்.

என் கல்லூரி இசைக்குழுவில் சேர வேண்டும் என்று தீராத காதல். நமக்கும் இசைக்கும் காததூரம். ஆனாலும் ஒரு சிறிய வேலையில் (ஜால்ரா அடிக்கும் வேலை) சேர்ந்து பிறகு டிரம்ஸ் அடிக்கும் அளவிற்கு உயர்ந்தேன். அதே போலத்தான் பதிவுலகிலும் அடி மேல் அடி எடுத்து வைத்து வருகிறேன் (அதற்காக ஜால்ரா அடிக்கும் வேலை எல்லாம் செய்யவில்லை).

என் பதிவை பிரபலம் ஆக்க வேண்டும் என்பதற்காகவே அஜித் பற்றியும் விஜய் பற்றியும் அவ்வப்போது எழுதி வந்தேன். பிறகு நான் ரசித்த ஆங்கில படங்களை பற்றியும் எழுதினேன். ஆசிரியர் பணியில் இருப்பதால் கோபம் வந்தால் கூட வராத மாதிரிதான் நடிக்கணும். இல்லையென்றால் காமெடி பீஸ் ஆகி விடுவோம். ஆகவே எந்த கருத்தாக இருந்தாலும் சிறிது நகைச்சுவை கலந்து எழுத வேண்டும் என்பது என் கருத்து. திரைவிமர்சனம் எழுதுவது எப்படி, புனைவு எழுதுவது எப்படி, மொன்னை கேள்விகளும் மொக்கை பதில்களும் என்று சமூகத்துக்கு அவசியமான(?!) சில பதிவுகளை நகைச்சுவை கலந்து எழுதினேன். முதன் முதலில் அதிகம் பிரபலமானது விவஸ்தை கெட்ட விளம்பரங்கள் என்ற பதிவு. சச்சினை எனக்கு பிடிக்காது என்று சொல்லி வாங்கி கட்டிக்கொண்டதும் உண்டு.



போட்டோ கமெண்ட்ஸ் பற்றி சொல்லியே ஆக வேண்டும். சாதாரண பதிவுகளை விட இதற்கு உழைப்பு அதிகம். சமயங்களில் மொக்கையாக கூட போய் விடும். நான் உருவாக்கி, என்னை தவிர மற்ற அனைவரையும் பிரபலம் ஆக்கிய ஒரு பதிவு தோனி சொல்ல மறந்த கதை (எனக்கு விழுந்தது பத்தே ஓட்டு. இதை வைத்து ஐம்பது ஓட்டுகள் வாங்கியவர்கள் எல்லாம் உண்டு). உலகமெல்லாம் சுற்றி, கடைசியில் எனக்கே மின்னஞ்சலில் வந்தது. அதை உருவாக்கியது நான் என்று தெரியாமல் எனக்கு என் நண்பர் அனுப்பி இருந்தார். மிக மகிழ்ச்சியாக இருந்தது. மேலும் ஆண்கள் எல்லாம் சிங்கம் மாதிரி, சிங்கம் அசிங்கமான கதை, சச்சின் விட்ட ரொமாண்டிக் லுக் ஆகியவை குறிப்பிடத்தக்கவை. 

இப்படி கொஞ்சம் கொஞ்சமாக எழுதி தற்போது நூறு பதிவுகளை தாண்டி இருக்கிறேன். இன்னும் உருப்படியாக எழுதவில்லை என்றாலும், எழுத்தில் ஓரளவிற்கு முன்னேற்றம் அடைந்திருக்கிறேன். நான் கொஞ்சம் (கொஞ்சமா?) தற்பெருமைகாரன். ஆகவேதான் இவ்வளவு நீளமான தம்பட்டம். ஜூலியஸ் சீசரே சொல்லி இருக்கார் “வாய்ப்பு கிடைக்கும் போது, உன் டிரம்பட்டை எடுத்து ஊதி விடு.” என்று. வேறு வழியே இல்லை. ஒரு வாரம் பொறுத்துக்கொண்டுதான் ஆக வேண்டும். வேறு எக்ஸ்ட்ரா பில்டப்புகள் எதுவும் இல்லாமல் வெறும் அறிமுகப்படுத்தும் வேலையை மட்டுமே செய்யப்போகிறேன். ஆதரவு தருவீர்கள் என்று நம்புகிறேன்.

அப்ப நாளை சந்திக்கலாமா?

மேலும் வாசிக்க...

தமிழ் மணத்தில் - தற்பொழுது