அத்தியாயம் 4 - சரத்தில் நான்காவது மலர்
➦➠ by:
பாலா
அனைவருக்கும் வணக்கம். "பழையன கழிதலும் புதியன புகுதலும்", என்ற சொல்லுக்கேற்ப, உங்கள் மனதில் இருந்த பழைய கவலைகள் எல்லாம் மறைந்து, புதிய மகிழ்ச்சி குடியேறட்டும் என்று இந்த போகி திருநாளில் மனமாற வாழ்த்துகிறேன். வழக்கம்போல இன்றும் ஒரு ரெடிமேட் பட்டியல். பாத்துவிடலாமா?
அரசர்குளத்தானாகிய நண்பர் கஸாலி பயனுள்ள பல நல்ல பதிவுகளை எழுதி வருகிறார். அவர் எழுதிய ஆட்டோ சங்கர் பற்றிய பிளாஷ்பேக் குறிப்பிடத்தக்கது. மிசா அல்லது எமர்ஜென்சி பற்றிய வரலாற்றையும், மகாத்மா காந்திஜி அவர்களை கொன்ற தினத்தன்று நடந்தவைகளையும் கண்முன் நிறுத்துகிறார். பூனையை ஹீரோவாக வைத்து சுவாரசியமாக சிறுகதையும் தந்திருக்கிறார். காலப்போக்கில் தவறாக அர்த்தம் கொள்ளப்பட்டுவிட்ட பழமொழிகள் பற்றியும், அவற்றின் சரியான அர்த்தம் பற்றியும் கூறுகிறார்.
சேலம் தேவாவோ ஏடாகூடமாக பழமொழிகளுக்கே எதிராக ஆராய்ச்சி நடத்தி புதுமொழிகளை உதிர்க்கிறார். செல்போனால் ஏற்படும் தொல்லைகளுக்கு காரணமான மார்டீன் ஹூப்பரையும் கலாய்க்கிறார். மாதா, பிதா, கூகிள் என்று குருவுக்கு பதிலாக கூகிளை வைக்கிறார். காரணமும் சொல்கிறார். சொந்த கதை என்று நொந்த கதையும் சொல்கிறார்.
நண்பர் முத்தூசிவா சிவசம்போ என்ற தன் வலைப்பக்கத்தில், குண்டு ஒண்ணு வச்சிருக்கேன் என்று தமிழ் சினிமாவில் வெடிகுண்டு வைக்கும் வில்லன்களை கலாய்க்கிறார். எந்திரன் படத்தில் வசீகரனாக கவுண்டரும், சிட்டியாக செந்திலும் நடித்தால் எப்படி இருக்கும் என்று காமெடி கலாட்டா செய்கிறார். சரி மனிதர் ரொம்ப ஜாலியான ஆள் என்று பார்த்தால், அந்த நேரம் அந்தி நேரம் என்று திகில் கதை எழுதி அடிவயிற்றில் பீதியை கிளப்புகிறார்.
நண்பர் வடிவேலன் கணினிமென்பொருள்கூடம் என்ற தன் வலைப்பக்கத்தில் எண்ணற்ற கணினி சார்ந்த தகவல்களை அள்ளித்தந்திருக்கிறார். புதிதாக கணினி வாங்குபவர்கள் கவனிக்க வேண்டிய விஷயங்கள், மின் புத்தகங்களை படிப்பதற்கு ஏற்ற மென்பொருட்கள் போன்றவை பற்றி பயனுள்ள செய்திகள் தருகிறார். ஸ்டார்ட் மெனுவில் நம் பெயர் வரும்படி செய்யும் வழியையும் கற்பிக்கிறார்..
நண்பர் செய்யது அலி தன் வலைப்பக்கமான செய்தாலியில் கவிதையாக எழுதி தள்ளிவிட்டார். போலி மனிதர்களின் முகச்சாயம் பற்றி கோடிட்டு காட்டுகிறார். காதல் கவிதையும் அழகாக எழுதுகிறார், சமூக அவலங்களை பற்றிய சோக கவிதையும் ஆழமாக எழுதுகிறார்.
இன்று சில புதிய தளங்களை பற்றி அறிந்து கொண்டீர்களா? என்ன நண்பர்களே நாளைக்கு சந்திப்போமா?
|
|
அனைவருக்கும் வாழ்த்துக்கள்!
ReplyDeleteஅனைத்து நண்பர்களுக்கு இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்
ReplyDeleteநல்ல அறிமுகங்கள்.
ReplyDeleteஎன்னையும் அறிமுகப்படுத்திய நண்பர் பாலாவுக்கு நன்றி....
ReplyDeleteஉங்களுக்கு பொங்கல் நல் வாழ்த்துக்கள்.
அறிமுகங்கள் அருமை.
ReplyDelete@ Chitra
ReplyDeleteநன்றிகள்
@ மாணவன்
இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்
@ எல் கே
மிக்க் நன்றி
@ ரஹீம் கஸாலி
பொங்கல் நல்வாழ்த்துக்கள்
@ asiya omar
மிக்க நன்றி
அனைவருக்கும் வாழ்த்துகள்..
ReplyDeleteநல்ல அறிமுகம், அனைவருக்கும் பொங்கல் நல்வாழ்த்துக்கள்
ReplyDeleteஅனைவருக்கும் பொங்கல் வாழ்த்துக்கள்
ReplyDeleteநல்ல அறிமுகங்கள் பாலா
ReplyDeleteஅனைவருக்கும் பொங்கல் நல்வாழ்த்துக்கள்
நல்ல அறிமுகங்கள் அண்ணா ... தங்களுக்கும் தங்கள் குடும்பத்திற்கும் பொங்கல் வாழ்த்துகள்....
ReplyDeleteஇனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.
ReplyDeleteபயனுள்ள அறிமுகங்கள் நன்றி.
@ அமைதிச்சாரல்
ReplyDelete@ இரவு வானம்
@ நா.மணிவண்ணன்
@ r.v.saravanan
@ karthikkumar
@ Dr.எம்.கே.முருகானந்தன்
மனமார்ந்த நன்றி மற்றும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்
நண்பர் ரஹீம் (from) கஸாலி தவிர மற்ற( பதி)வர்கள்
ReplyDeleteஎனக்கு புதியவர்கள்தான். அறிமுகங்களுக்கு
நன்றி, ஆசிரியரே!
கடந்த ஆண்டு கவிதை ஊர்வலம் என்ற தலைப்பில் நண்பர் சே.குமார் அவர்கள் என்னை முதன் முதலில் வலைச்சரத்தில் அறிமுகம் செய்தார் அவருக்கு இந்த வேளையில் மீண்டும் நன்றி சொல்லிகொள்கிறேன்
ReplyDeleteஎன்னை மீண்டும் அறிமுகம் செய்தமைக்கு நன்றி தோழரே
கணினி பதிவர்களை ஊக்குவிக்கும் வலைச்சரத்திற்கு அதன் குழுமத்திற்கும் என் மனமார்ந்த நன்றிகளும் வாழ்த்துக்களும்