07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Wednesday, February 23, 2011

மழலைப்பேச்சு முதல் குட்டிப்பையன் வரை


(அறிமுகங்கள் 03)
வணக்கம் மக்களே...

இன்றைக்கும் இரண்டாவது இடுகையை வெளியிடுவதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். வழமை போல இன்று மாலையும் பத்து முத்தான பதிவர்களுடன் வருகை தந்திருக்கிறேன்.

1. மழலைபேச்சு: http://malalaipechu.blogspot.com/
உண்மையிலேயே இவர் ஒரு பதிவுலக மழலைதான். ஒருமாதம் கூட நிறைவடையவில்லை. இதுவரை ஆறு இடுகைகள் மட்டுமே எழுதியிருக்கிறார். என்னதான் மழலையாக இருந்தாலும் பெண்களின் மனது பற்றி தெளிவாக ஆராய்ந்திருக்கிறார். பின்னர், பெண்கள் பற்றி வஞ்சப்புகழ்ச்சி. இந்த இரண்டு பதிவுகளையும் படித்து கோபப்படும் பெண்களை தவிப்பும் சகிப்பும் என்று கவிதை எழுதி சாந்தப்படுத்துகிறார்.

2. ரேடியோ மோகன்: http://radiomohan.blogspot.com/
கவிதை, இலக்கியம், நகைச்சுவை என்று பல்சுவையும் இந்த ரேடியோவில் ஒலிபரப்பப்படுகிறது. அவளுக்கு பேர் அடைமழை என்றோருத்தியை சிலாகித்திருக்கிறார் பாருங்கள். அப்படியே கொஞ்சம் புதுமையாக பாரதிதாசன் எழுதிய பிக்னிக் பாடல், ஒளவையாரின் காதல் கடிதம் என்று கலக்கியிருக்கிறார். இவரது இடுகைகளை விட சைடுபார் சுவாரஸ்யமாக இருக்கிறது. கருத்துக்கணிப்புகள், புலம்பல்ஸ்காந்த் என்று செம சைட் டிஷ் ரகம்.

3. வட்டங்களில் சுழலுது வாழ்க்கை: http://sibhikumar.blogspot.com/
தத்துவார்த்தமான தலைப்பை எதிர்பார்த்து உள்ளே நுழைந்தால் முற்றிலும் புதியதொரு அனுபவம் கிடைக்கிறது. இது முழுக்க முழுக்க கார்களுக்காகவும் பைக்குகளுக்காகவும் அர்பணிக்கப்பட்ட ஒரு வலைப்பூ. திரையுலக பிரபலங்கள் வைத்திருக்கும் கார்கள் பற்றி இங்கே விவரித்திருக்கிறார். மேலும் கார்களுக்காக இவரது வலைப்பூவில் விருதுகள் கூட வழங்கியிருக்கிறார். கார் என்றால் எப்படி இருக்க வேண்டும் என்ற இவரது எதிர்பார்ப்பை கொஞ்சம் பாருங்கள்.

4. வாங்க பழகலாம்: http://silviaselvan.blogspot.com/
சத்தியமங்கலம் காட்டுக்குள் இருந்துக்கொண்டு நம்மை வாங்க பழகலாம் என்று கூலாக கூப்பிடுகிறார். கண்மூடித்தனமாக யாரையும் பின்பற்றக்கூடாது என்று அறிவுரைக்கிறார். ஆபிசில் பிஸியாக இருப்பது போல் காட்டிக்கொள்வது எப்படி...? என்றும் கற்றுக்கொடுக்கிறார். இதையெல்லாம் விட முக்கியமாக எந்திரனா...? அவதாரா...?, ரஜினிகாந்தா...? அமிதாப்பா...? என்று நீயா நானா கோபிநாத் ரேஞ்சுக்கு பஞ்சாயத்து பண்ணியிருக்கிறார் பாருங்களேன்.

5. விக்கி உலகம்: http://vikkiulagam.blogspot.com/
அறிமுகம் தேவைப்படாது என்றேண்ணுகிறேன். வியட்நாமில் வாழ்ந்துவரும் வருங்கால இந்திய அரசியல்வாதி. நடிகர்கள் பற்றிய இவரது எண்ணத்தை பளிச்சென்று சொல்லியிருக்கிறார் பாருங்கள். காதலியும் மனைவியும் சந்தித்துக்கொண்டதால் என்ன நடந்தது என்ற அனுபவத்தை நம்மோடு பகிர்ந்திருக்கிறார். குமுதம் ஸ்டைலில் இவர் எழுதிய தமிழ்த்தலைவன் பயோடேட்டா சூப்பர். தனது மானிட்டர் பக்கங்கள் மூலம் தமிழக அரசியலை ராவாக அடித்துவருபவர்.

6. விண்ணோடும் முகிலோடும்: http://vinmukil.blogspot.com/
வகை வகையான கதைகளையும் கவிதைகளையும் தனது சொந்த அனுபவங்களையும் நம்மோடு பகிர்ந்திருக்கிறார். ஜன்னல் வழியாக தண்ணிபிடிக்கும் இடத்தில் நடந்த சண்டையைப் பார்த்துவிட்டு குழாயடி குங்பூ என்று எழுதியிருக்கிறார். பார்ட்டி கதைகள் என்ற பெயரில் எழுதிய சோஜூவும் வாத்துக்கறியும் அருமை. முதல் முதலாக அலுவலகம் சென்ற அனுபவத்தையும் கொஞ்சம் கேளுங்கள்.

7. வெளங்காதவன்: http://velangaathavan.blogspot.com/
வெளங்காதவன் என்று பெயரை வைத்துக்கொண்டு வெளங்காத நம்மூர் அரசியலை வெளுத்து வாங்குகிறார். எல்லாருக்கும் கடிதம் எழுதும் கலைஞருக்கு இவர் கடிதம் எழுதியிருக்கிறார் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். சரக்கு... சரக்கு... என்று முழுபோதையில் இருக்கும்போது கூட என்னா தெளிவா எழுதியிருக்கிறார் பாருங்கள். உண்மை கசக்கும்ன்னு ரொம்ப சீரியஸா ஒரு மேட்டர் வச்சிருக்கிறார் என்னன்னு கேளுங்க.

இவர் ஒரு ஹீரோ. ஹீரோ என்றால் காதல் இருக்கும்தானே. இவரது கல்லூரி காதல் அனுபவத்தை கேளுங்கள். வீரம் இல்லாத ஹீரோவா...? எப்படி எங்க வீரம் என்று எக்காளமிட்டு கேட்கிறார். மனைவி கணவனை குத்துவிட நினைக்கும் பத்து தருணங்கள் என்று ஒரு ஆராய்ச்சி செய்திருக்கிறார் பாருங்கள். (ரொம்ப அடி வாங்கியிருப்பார் போல...) அப்புறம், கொஞ்சம் சீரியஸாக கனிமொழியிடம் சில கேள்விகளை முன்வைக்கிறார்.

9. அந்நியன் 2: http://naattamain.blogspot.com/
சீரியஸ், காமெடி என்று ஸ்ப்லிட் பர்சனாலிட்டி காட்டும் அந்நியன். சீரியஸாக மூன்றறிவு படைத்த தமிழன் என்று திட்டித்தீர்க்கிறார். பிறிதொரு நாளில் அடுத்தவரை தொந்தரவு செய்யாமல் சிரிக்கவும் என்ற எச்சரிக்கையுடன் ஜோக்ஸ் சொல்கிறார். நம்மூர் இளைஞர்கள் வெள்ளையாகும் ஆசையில் பேர் அண்ட் லவ்லி பூசிக்கொள்கிறார்களே அவர்களுக்கு வெள்ளை நீக்ரோ என்ற இந்த இடுகையின் மூலம் அறிவுரை சொல்கிறார் கேளுங்கள்.

10. குட்டிப்பையன்: http://kutipaiya.blogspot.com/
இந்த குட்டிப்பையனுக்குள் இருக்கும் சமூக அக்கறை வியக்க வைக்கிறது. சயாம் மரண ரயில் குறித்து இவர் எழுதிய பதிவு ஒவ்வொரு தமிழனும் கண்டிப்பாக படிக்க வேண்டியது. பாஸ்... நீங்க ஒரு வில்லேஜ் விஞ்ஞானி பாஸ்... என்று யாரை புகழ்கிறார் என்று பாருங்கள். மேலும் புதுமையான முறையில் ஆறே வார்த்தைகளில் கதைகள் எழுதியிருக்கிறார்.


இவர் அறிமுகம் அல்ல. கிட்டத்தட்ட ஐந்தாண்டு காலமாக பதிவுலகில் இருப்பவர். இருப்பினும் நிறைய பேருக்கு அதிகம் பரிட்சயம் இல்லாமல் இருக்கலாம். ஏனெனில் ஓட்டரசியலில் அதிகம் சிக்காதவர். பொருளாதாரம் குறித்த தொடர்கள் இவரது ஸ்பெஷாலிடி. அவற்றில் கிழக்கிந்திய கம்பெனி இந்தியாவை சுரண்டிய கதை, டாலர் அரசியல் போன்ற தொடர்கள் பிரமாதமாக இருக்கின்றன. சீனா, அமெரிக்கா ஆடும் பொருளாதார சதுரங்கம், கம்யூனிசத்துக்கு சமாதி கட்டும் கியூபா? போன்ற தனிக்கட்டுரைகளும் நெத்தியடியாக இருக்கின்றன. இன்னும் ஏராளமான இடுகைகள் தோண்டத் தோண்ட புதையலாக வந்துக்கொண்டிருக்கின்றன. இவருடைய ஒட்டுமொத்த வலைப்பூவுமே ஒரு பொக்கிஷம் என்று சொல்லலாம்.

வழமையிலிருந்து மாறுபட்டு நாளை மாலை குறிப்பிட்ட வகையறா பதிவர்கள் பத்து பேருடன் களமிறங்குகிறேன்.
என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

40 comments:

  1. வலைச்சரத்தில் இன்றைய அறிமுகங்களுக்கு என்னுடைய வாழ்த்துக்கள்..

    ReplyDelete
  2. வாழ்த்துக்கள் அனைவருக்குமே...
    டிஸ்கி கமெண்டும் ஸ்டாண்ட்டர்ட்கமெண்டும்

    ReplyDelete
  3. இன்றைய அறிமுகங்களுக்கு என்னுடைய வாழ்த்துக்கள்..

    ReplyDelete
  4. அறிமுகங்கள் அசத்தல்... வாழ்த்துக்கள் ஆசிரியரே

    ReplyDelete
  5. என்ன ஒரு பதிவருன்னு போட்டு அறிமுகப்படுத்தி இருக்கும் உங்களுக்கு என் மனம் கனிந்த நன்றி.

    புதியவர்களை தாங்கள் அறிமுகப்படுத்துவதால் இன்னும் பல நல்ல இதயங்களின் வாசலுக்கு தங்களால் எளிதில் செல்ல முடியும் .
    அவர்களும் எளிதில் பதிவுலகில் அடையாளம் காணப்படுவதால் பிகு செய்யும் ஓல்ட் இஸ் கோல்டு வகையறாக்களின் கண்களில் நீங்கள் இப்போது ஒரு...!

    ReplyDelete
  6. இன்றைய அறிமுகங்களுக்கு என்னுடைய வாழ்த்துக்கள்..

    ReplyDelete
  7. நல்ல பயனுள்ள அறிமுகங்கள் சதுக்க பூதம் (tamilfuser) பொருளாதாரத்தில் பெரிய ஆளு அவரையும் அறிமுகம் செய்ததற்கு நன்றி. நிறைய பேரிடம் சென்று அடைய வேண்டிய மிக நல்ல பதிவர் ..........................

    ReplyDelete
  8. அறிமுகமான அனைவருக்கும் என் வாழ்த்துக்கள்....

    ReplyDelete
  9. அறிமுகங்கள் அணைத்தும் அருமை

    அணைவருக்கும் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  10. அருமையான புதிய அறிமுகஙக்ளுனுடன் நம்ம நாட்டமையும் ரொம்ப சந்தோஷம்.
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  11. நன்றி அண்ணா. அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துக்கள். தங்களின் அறிமுக பட்டியலில் எனக்கும் ஓர் இடம் கிடைத்ததை நினைத்து பெருமகிழ்ச்சியடைகிறேன்.

    கீழ்கண்ட லிங்க்'க்கு செல்லவும்... இந்த படம் தங்களின் மனதின் பிரதிபலிப்பு என்று தோன்றுகிறது...

    http://img256.imageshack.us/img256/9063/image002mj2.gif

    ReplyDelete
  12. என்னை இங்கு அறிமுகப்படுத்தி இருக்கும் உங்களுக்கு மிக்க நன்றி

    ReplyDelete
  13. அனைத்தும் நல்ல பதிவர்களே ...
    உங்களுக்கு நன்றிகள்

    ReplyDelete
  14. அறிமுகங்களுக்கு வாழ்த்துக்கள்..

    ReplyDelete
  15. அணைவருக்கும் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  16. அனைவருக்கும் வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  17. நன்றி பிரபா.

    காண மயிலாடக் கண்டிருந்த வான்கோழி தாமும் பாதித்து தம் பொல்லாச் சிறகை விரித்தாடினால் போதுமா ?

    என்று முன்னாடி படித்தது ஞாபகத்திற்கு வருகின்றது,காரணம் நான் எழுதிப் படித்துக் கொண்டிருக்கும் ஒரு மாணவன், என்னையும் ஒரு பதிவர் ஸ்த்தானத்தில் வைத்து மூன்று மிக முக்கிய பதிவர்களால் இவ்வலைச்சரத்தில் அறிமுகப் படுத்தி இருக்கின்றதை நினைத்துப் பார்க்கையில் நாமும் பதிவர்தானா? என்று கூட நினைக்கத் தோன்றுகிறது.

    என்னை வலை சரத்தில் அறிமுகப் படுத்தியதற்கு என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் நண்பா.

    உங்கள் பக்கம் வராமைக்கு மனம் பொறுக்கவும்.

    ReplyDelete
  18. வாழ்த்துக்கள் நண்பர்களே.. வளருங்கள், தொடருகிறோம்.

    ReplyDelete
  19. நன்றி பிரபாகர்.......... அருமையான செலக்சன் இன்றும், சிலரை எனக்குத் தெரியும். அனைவருக்கும் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  20. இன்றைய அறிமுகங்களுக்கு என்னுடைய வாழ்த்துக்கள்..

    ReplyDelete
  21. எல்லாமே புதிய வலைத்தலங்கள்.. பகிர்வுக்கு நன்றி பிரபா..

    ReplyDelete
  22. அறிமுகப்படுதியதற்கு நன்றி எனக்கு கிடைத்த முதல் அங்கீகாரம் மீண்டும் நன்றிகள்

    ReplyDelete
  23. என் வலைதல அறிமுகத்துக்கு நன்றி பிரபாகர்.

    ReplyDelete
  24. நான் நன்கு கவனித்து வரும் விசயம் ! இது என்னவென்றால் ப்ளாக்கர் தளம் பயன்படுத்துவர்களும் வோர்ட்பிரஸ் தளம் பயன்படுத்துவர்களும் சாதிப் பிரிவு போல பிரிந்துக் கிடப்பது. எதை அறிமுகம் செய்ய வரும் ப்ளாக்கர் தளப் பதிவர்கள் வோர்ட்பிரஸ்க் காரர்களை புறக்கணித்துத் தான் வருகிறார்கள். வோர்ட்பிறஸ் பதிவர்களிடம் நல்ல பதிவுகள் இல்லையா. அல்லது இதுவும் ஒரு வகை தீண்டாமைக் கொடுமையா......

    ReplyDelete
  25. அறிமுகங்கள் அற்புதமாய் செய்திருக்கிறீர்கள்.வாழ்த்துக்கள்

    ReplyDelete
  26. அறிமுகங்களுக்கும் அறிமுக படுத்தியவருக்கும் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  27. @ பாட்டு ரசிகன், மைந்தன் சிவா, வேடந்தாங்கல் - கருன், ரேவா, விக்கி உலகம், மாணவன், அஞ்சா சிங்கம், Pari T Moorthy, Speed Master, Jaleela Kamal, Sibhi Kumar, தமிழ் செல்வன், அரசன், கலாநேசன், தினேஷ்குமார், Chitra, அந்நியன் 2, வசந்தா நடேசன், பன்னிக்குட்டி ராம்சாமி, இராஜராஜேஸ்வரி, தேனம்மை லெக்ஷ்மணன், கேரளாக்காரன்(ஆனாலும் அதிரி புதிரி தமிழன் ), சதுக்க பூதம், இக்பால் செல்வன், மோகன்ஜி, கந்தசாமி.

    வருகைக்கும் கருத்துகளுக்கும் மிக்க நன்றி நண்பர்களே... தொடர்ந்து உங்கள் ஆதரவை எதிர்நோக்குகிறேன்...

    ReplyDelete
  28. @ விக்கி உலகம்
    // என்ன ஒரு பதிவருன்னு போட்டு அறிமுகப்படுத்தி இருக்கும் உங்களுக்கு என் மனம் கனிந்த நன்றி. //

    ஏன் இவ்வளவு தன்னடக்கம்...

    // புதியவர்களை தாங்கள் அறிமுகப்படுத்துவதால் இன்னும் பல நல்ல இதயங்களின் வாசலுக்கு தங்களால் எளிதில் செல்ல முடியும் //

    உண்மைதான்... புதியவர்கள் அன்பு பிரமிக்க வைக்கிறது...

    // அவர்களும் எளிதில் பதிவுலகில் அடையாளம் காணப்படுவதால் பிகு செய்யும் ஓல்ட் இஸ் கோல்டு வகையறாக்களின் கண்களில் நீங்கள் இப்போது ஒரு...! //

    நீங்கள் ஒரு... அப்படின்னு சொல்லி நிறுத்திட்டீங்க... எதுவும் கெட்டவார்த்தையா...?

    ReplyDelete
  29. @ Sibhi Kumar
    // நன்றி அண்ணா. //

    தப்பு... தப்பு... நீங்க அண்ணா நான் தம்பி... சரிங்களா...

    // கீழ்கண்ட லிங்க்'க்கு செல்லவும்... இந்த படம் தங்களின் மனதின் பிரதிபலிப்பு என்று தோன்றுகிறது... //

    புல்லரிக்கிறது... உங்கள் அன்புக்கு நன்றி...

    ReplyDelete
  30. @ அந்நியன் 2
    // காண மயிலாடக் கண்டிருந்த வான்கோழி தாமும் பாதித்து தம் பொல்லாச் சிறகை விரித்தாடினால் போதுமா ? //

    இது என்னா லாங்குவேஜ்...??? : )

    // என்னையும் ஒரு பதிவர் ஸ்த்தானத்தில் வைத்து மூன்று மிக முக்கிய பதிவர்களால் இவ்வலைச்சரத்தில் அறிமுகப் படுத்தி இருக்கின்றதை நினைத்துப் பார்க்கையில் நாமும் பதிவர்தானா? என்று கூட நினைக்கத் தோன்றுகிறது. //

    இதெல்லாம் ரொம்ப டூ மச்... உங்க பதிவுகளுக்கு என்ன குறைச்சல்... நீங்க உங்களை குரைச்சு மதிப்பீடு பண்றீங்க...

    ReplyDelete
  31. @ இக்பால் செல்வன்
    // எதை அறிமுகம் செய்ய வரும் ப்ளாக்கர் தளப் பதிவர்கள் வோர்ட்பிரஸ்க் காரர்களை புறக்கணித்துத் தான் வருகிறார்கள். //

    நான் இதுபோன்ற பாகுபாடுகள் பார்ப்பது இல்லை எனினும் என் தரப்பு நியாயத்தை கூறிவிடுகிறேன்... ப்ளாக்கர் கணக்கை பொறுத்தவரையில் ஒருவர் முன்னூறு வலைப்பூக்களை மட்டுமே பின்தொடர முடியும்... அதற்குமேல் யாரையாவது பின்தொடர விரும்பினால் follower widget இருந்தால் மட்டுமே முடியும்... நான் இதுவரை 350க்கும் மேற்பட்ட வலைப்பூக்களை பின்தொடர்ந்து வருகிறேன்... எனவே follower widget இல்லாத wordpress தளங்களை என்னால் பின்தொடர முடியவில்லை...

    // வோர்ட்பிறஸ் பதிவர்களிடம் நல்ல பதிவுகள் இல்லையா. //

    இதற்கு மேலும் ஏதேனும் கூற விரும்பினால் நீங்கள் வைத்திருக்கும் அந்த நல்ல வேர்டுபிரஸ் தளங்களின் லிஸ்ட்டை கொடுங்கள்... ஒரு ஸ்பெஷல் இடுகை போட்டுவிடலாம்...

    ReplyDelete
  32. நல்ல அறிமுகங்கள் சகோதரா... நன்றிகள்..

    ReplyDelete
  33. பிரபா... பிரபா...

    1988 -ல் பிறந்த பிள்ளைக்கு 1996 -ல் பிறந்த பிள்ளை எப்படி அண்ணனாக முடியும்... உங்கள் அலாதி அன்பில் திளைக்கிறோம் . ஏக சந்தோசம் என் மகனுக்கு... தங்கள் அறிமுகப் படுத்தலால்! 22 -ல் ஏகத் திறமைகளைக் கைக்கொண்ட தங்கள் தம்பியாகவே இருந்துவிட்டுப் போகட்டுமே அந்த 14 வயதேயான பாலகன்!

    ReplyDelete
  34. மிக்க மகிழ்ச்சி...! தங்களின் அன்புக்கு மிக்க நன்றி பிரபா...!

    ReplyDelete
  35. அறிமுகம் செய்யப்பட்ட அனைத்து பதிவர்களுக்கும் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  36. ரொம்ப நல்லா பண்ணிக்கிட்டு இருக்கீங்க பிரபாகர்

    ReplyDelete
  37. அறிமுகத்துக்கு நன்றி அப்பு!

    ReplyDelete
  38. @ நிலாமகள்
    // 1988 -ல் பிறந்த பிள்ளைக்கு 1996 -ல் பிறந்த பிள்ளை எப்படி அண்ணனாக முடியும்... உங்கள் அலாதி அன்பில் திளைக்கிறோம் . ஏக சந்தோசம் என் மகனுக்கு... தங்கள் அறிமுகப் படுத்தலால்! 22 -ல் ஏகத் திறமைகளைக் கைக்கொண்ட தங்கள் தம்பியாகவே இருந்துவிட்டுப் போகட்டுமே அந்த 14 வயதேயான பாலகன்! //

    என்னது தாயும் மகனும் பதிவுலகிலா... பொறாமையாக இருக்கிறது மேடம்...

    ReplyDelete
  39. கடந்த ஒருவார காலமாக எனக்கு வலைச்சரத்தில் ஆதரவளித்த நண்பர்கள் அனைவருக்கும் எனது நன்றிகள்... எனக்கு இந்த வாய்ப்பை வழங்கிய சீனா அய்யா அவர்களுக்கும் நன்றிகள்...

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது