07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Monday, May 23, 2011

வலைச்சரத்துக்கு வணக்கம்..!!


அன்பும்,அறிவும் நிறைந்த பதிவுலக தோழர்களுக்கு சேலம் தேவாவின் இனிய வணக்கங்கள்..!!

ஒவ்வொரு மனுசனுக்கு ஒவ்வொரு பீலிங்ஸ்...இந்த தத்துவத்தை அடிப்படையாக கொண்டு வெற்றிகரமாக இயங்கும் வலைச்சரத்தில் எனது பங்களிப்பையும் இருப்பதை நினைத்து பேருவகை கொள்கிறேன். 
என்ன இது வலைச்சரத்துக்கு வந்த சோதனை என்று யாரும் நினைத்து வருந்தவேண்டாம்.ஒரு வாரம் மட்டும் பொறுத்துக்கொள்ளுங்கள்.நான் கற்றதையும்(படிச்சது பத்தாங்கிளாஸ்) பெற்றதையும்(பெரிய சுஜாதான்னு நெனப்பு) பற்றி எழுதுகிறேன்.

பொதுவாகவே எனது அறிமுகத்தை இணையத்தில் இருக்கும் ஒரு தளம் விடாமல்(Facebook,Twitter,Buzz,etc.,) செய்து கொண்டிருந்தவன் இப்போது வலைச்சரம் வேறு கிடைத்ததால் மௌஸ், கீபோர்டு புரியாமல் ஆடிக்கொண்டிருக்கிறேன்.ஹி.ஹி..முதல்இடுகை முழுவதும் எனது தளத்தில் தெளித்த சிந்தனை சிதறல்களை வலைச்சரத்தில் தெளிக்கிறேன்.

இன்றுள்ள பாஸ்ட்புட் கலாச்சாரத்தில் உடல்நலம் குறித்து யாரும் கவலைப்படுவதாக தெரியவில்லை.அட்டாக் வந்தபிறகுதான் ஆஸ்பத்திரிக்கு செல்கிறார்கள்.இவர்களுக்காகவே நடைபயிற்சி ,சாதத்தை தவிர்ப்பது ,தலை"மை" ,காய்ச்சலால் நான் பட்டது ,இதுபோன்ற உடல்நலம் சம்பந்தப்பட்ட பதிவுகளை படித்து பயனடையுங்கள்.தொலைபேசியால் ஏற்படும் கஷ்டங்களை சொல்லும் பதிவு.

எங்கள் ஊரைக் குறித்து நான் இட்ட இந்த பதிவு சேலத்து வரலாற்றில் பொன்னெழுத்துகளால் பொறிக்கப்பட வேண்டியது.

இப்போது தொல்லைக்காட்சிகளில் குழந்தைகளை வைத்து நடத்தப்படும் பாட்டுப்போட்டிகள் பார்க்கும்போது எனக்கு ஏற்பட்ட கோபத்தில் உதித்த பதிவு.

அரசியல்வாதிகள் செய்யும் ஊழலை பற்றிய விழிப்புணர்வு பதிவு.

நம்முடைய கருத்துகளை உலகத்திற்கு பரப்ப இலவசசேவையாக ப்ளாக்கரை தரும் கூகிள் நிறுவனத்தின் பெருமையை சொல்லும் பதிவு..!!(யாராவது கூகிள்ல சொல்லி என்ன கொ.ப.செ ஆக்குங்கப்பா..)

எப்படி விளையாட வேண்டும் என்பதை ஒரு திறமையான விளையாட்டு வீரரின் பார்வையில் எழுதப்பட்ட பதிவு.

பழமொழிகளின் சிறப்பை விளக்கும் பதிவுகள்.

வாழ்த்து சொல்லி நான் வாங்கிகட்டிக்கொண்டது.

இதுபோல் சொல்லிக்கொண்டே போகலாம்.(இவ்ளோதான் தேறிச்சு)ஆனால்,படிப்பதற்கு நீங்கள் இருக்க வேண்டுமே..?!அதனால் எனது சுயபிரதாபங்களை இத்தோடு நிறுத்திக்கொள்கிறேன்.மீண்டும் நாளை சந்திப்போம்.

11 comments:

  1. ஈரோடு டூ சேலம் ஒரு அழகிய பயணம்

    ReplyDelete
  2. அன்பின் தேவா - சுய அறிமுகம் அருமை - நன்று நன்று - கலக்குக - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    ReplyDelete
  3. Super! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  4. வாழ்த்துக்கள் பாஸ் கலக்குங்க

    ReplyDelete
  5. சேலம் புகழை பார் முழுதும்
    ஒழிக்க.. சே.., ஒலிக்க வந்த
    சேலத்து சிங்கமே.. வருக வருக..

    ( நீங்க வாங்கி குடுத்த ஒத்தை
    " டீ" க்கு இவ்ளோ தான் கூவ முடியும்..! )

    ReplyDelete
  6. மிக்க மகிழ்ச்சி...வலைச்சரத்தில் கலக்க வாழ்த்துக்கள் தேவா

    ReplyDelete
  7. வாழ்த்துகள் சொன்ன அனைத்து அன்பு உள்ளங்களுக்கும்,சேலம் புகழை ஒலி(ழி)த்த வெங்கட் அவர்களுக்கு ஸ்பெஷலான நன்றியையும் தெரிவித்து கொள்கிறேன்.

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது