07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Wednesday, November 2, 2011

கடமைமிக்க காலை - வலைச்சரம்



            ஆதவனின்  கிரணங்களின் வருடலில் ஆம்பல் மலர
            வெள்ளி பட்டாடை எடுத்து பூமித்தாய் உடை மாற்றிட 
            இருள் திரை விலகிய அழகை காண மேகங்கள் உலா வர
            வண்டினம் ரீங்காரிக்க இதோ வருகிறது புதிய காலை.


விடியலின் பின் புத்தொளியுடன் கூடிய காலை. பரிதியின் கதிர்கள் உலகத்தின் ரகசியத்தை மொத்தமாக வெளிச்சம் போட்டு காட்டிடும் காட்சி. இல்லை... இல்லை, இப்போது உலா போக அழைக்க மாட்டேன். காலையில் அலுவலகம் செல்லும் நேரத்தில் கடவுளே வந்தாலும் "சற்று பொறு" என்று சொல்கின்ற கர்மயோகிகளாக மாறிவிடுகிறோம். எனவே உங்களை தொந்தரவு செய்ய மாட்டேன். ஆனால்... உங்கள் வீட்டிற்கு அருகில் உள்ள கோவிலின் குளம் நிறைய தாமரைகள் மலர்ந்து பச்சையும் இளஞ்சிவப்புமாக உடை உடுத்தியிருப்பதை பார்த்தீர்களா என்று கேட்க மட்டும் நினைக்கிறேன். 
உங்களுக்காக ஒரு தாமரை மட்டும்

இன்றைய நாளின் ஆரம்பம்... எத்தனை கடமைகள் காத்திருக்கின்றன. நேற்றைய இரவு நீங்கள் பட்டியலிட்ட செயல்களை ஆரம்பிக்கப் போகிறீர்கள். வெற்றிபெற வாழ்த்துக்கள். புதிதாக ஒரு செயல் செய்யப் போகிறீர்கள் எனில்,  அனுபவமிக்க பெரியோரின் ஆலோசனையையும் கேட்பது நல்லது என்று சொல்லியிருக்கிறார்கள். கூடவே, முயற்சி பலனளிக்க வேண்டுமே என்கிற பதட்டமும் இருக்கும். இன்றைய நாளுக்காக நம்மை தயார் செய்து கொள்ளும்  சமயத்தில், மனதையும் உறுதிபடுத்திக் கொள்ளுங்கள்.  பன்னாட்டு நிறுவனங்களின் தாக்கத்தில் உள்ள இந்த காலத்தில் குடும்ப பொறுப்பை பகிர்ந்து கொள்ள முடிவதில்லை. காலையில் பள்ளி வாகனம் வந்து குழந்தையை அழைத்துச் செல்லும்போது முழுமை பெறாத காலை உணவை முடித்துக் கொண்டிருப்போம். இதில் அலுவலம் செல்லும் பெண்கள் பத்து வேலைகளை பத்து சிந்தனைகளுடன் செய்ய வேண்டியிருக்கும்.

முன்பெல்லாம், பள்ளிக்கு மிதிவண்டியில் வைத்து அழைத்து செல்லும் தந்தைகளும் அவர்கள் கூறும் நல்ல கருத்துக்களும் இப்போது நினைவிற்கு வருகிறதல்லாவா? ஆமாம் அப்பாக்கள் மட்டும் ஏன் எப்போதுமே கதை கூறாமல் கருத்துக்களை மட்டும் கூறுகிறனர்? ஆனால் ஒன்று, மிதிவண்டி அழுத்தும் நேரத்திலேயே வாழ்க்கை பற்றி நிறைய சொல்லியே நம் மனதில் கதாநாயகனாகி விடுவார்கள். பாவம், இப்போதைய தந்தைக்கு இன்னும் பல சக்திகள் தேவைப்படுகின்றன.

மனோவியல் என்ன சொல்கிறது எனில், 80 சதவிகிதம் பேர் காலையில் வீட்டைவிட்டு கிளம்பும்போது வீட்டை ஒரு முறை பார்த்துவிட்டுதான் கிளம்புகிறார்களாம். நம்மை பொறுத்தவரை வீடு என்பது பாதுகாப்பான இடமாக இருக்கிறது. அதைவிட்டு கிளம்பும்போது மெல்லிய பதட்டம் வருகிறது.  எனவேதான் வீட்டை விட்டுக் கிளம்பும்போது ஒரு அப்படி பார்க்கிறோமாம். எனவே பதட்டமடையாமல் திட்டமிடுங்கள். 
வீடும் பத்திரமாகத்தான் இருக்கிறது.

காலை உணவு உடம்பிற்கும் மட்டுமல்ல சிந்திக்கும் திறனை தூண்டிவிடும் தன்மையுடையதாகவும் இருக்கிறது. மூளைக்கு செல்லும் இரத்த ஓட்டத்தை தூண்டும் உணவை எடுத்துக் கொள்ளுங்கள். அது என்ன தெரியுமா? பாரம்பரியமிக்க இட்லிதான் (இது சங்ககால உணவு வகை இல்லையாமே?) சிரித்த முகம் பல விசயங்களை சாதித்துக் காட்டும்.

இன்றைய குறிப்புகள்
               முயற்சியின் துவக்கம், பிள்ளைப்பருவம், தந்தை, வெற்றியின் முனைப்புகள்,  வீடு ,கல்வி

1. மதிப்பிற்குரிய திருமதி. மனோசாமிநாதனின் முத்துச்சிதறலில் பெண்ணை வாழ்த்தியனுப்பும் அழகுக் கவிதை, பெருமிதம் கொள்ள வைக்கிறது.      புறப்படு பெண்ணே புவியசைக்க!


2. வாழ்க்கையின் தொடக்கத்தில் எப்படி வாழ வேண்டும் என்று தெரிந்து கொள்வது முக்கியமல்லவா? தீதும் நன்றும் பிறர் தர வாரா திரு.ரமணி அவர்களின் பதிவினை படித்தால் புரியும். வாழும் வகையறிந்து..... 

3. மதிப்பிற்குரிய திரு.ரத்னவேல் ஐயா அவர்களின் வலைப்பூவில் இந்த பதிவு கல்வி பற்றிய விசங்களை பகிர்கிறது. வாசிப்பின் முக்கியத்துவத்தை படியுங்கள். 
கெத்தேசால் மலைக்கிராமத்தில் ஒரு முகாம்..!

4. பொதுவாக அப்பாவிற்கான பதிவுகள் மிகவும் குறைவாகவே காணப்படுகின்றன. ஏன்? சகோதரர் ரெவரியின் வலைப்பூவில் இந்த பதிவை கட்டாயம் படித்திடுங்கள். மகனின் பார்வையாக எழுதப்பட்ட இந்த பதிவு சில விளக்கங்கள் சொல்கிறது.  அன்புள்ள அப்பாவுக்கு... 

5. யதார்த்தமான நடையில் பெரும்பாலும் சிறுகதைகளே எழுதும் தமிழ்உதயம் அவர்கள், வீட்டின் மீது பிரியம் கொண்டு எழுதிய கவிதை. வீடு விற்பனைக்கு...

6. இந்த பதிவில் பிள்ளையின் பார்வையில் அப்பா எடுக்கும்  பலவித அவதாரங்கள் பற்றி பதிந்துள்ளார் அவர்கள் உண்மைகள் மதுரை தமிழன்.   றிவின் திறவு கோலான அப்பா என்ற அப்பாவித்தந்தை


7. கடமைகள் கழுத்தை பிடித்து தள்ளும் இந்த நேரத்தில் உழைப்பை பற்றி சொல்கிறார் மாய உலகம் ராஜேஸ். இந்த பதிவை படியுங்களேன். 
சும்மா நிற்காதீங்க...

8. வாழ்க்கையின் முன்னேற்றத்தை பற்றி நினைக்கும் இந்த வேளையில் அவற்றிற்கான தடைகளை அறிந்துகொள்வோமா? அன்பு உலகம் வலைப்பூவில் திரு.ரமேஷ் எழுதியிருக்கும் பதிவை படியுங்கள். 
நம் முன்னேற்றத்தை தடுக்கும் ஏழு தடைகள்.

9. மூச்சுவிடக் கூட முடியாதபடிக்கு கடமைகளால் கட்டுப்பட்டு, பேசுவதை குறைத்த பின் பேசுவதை கேட்டே ஆக வேண்டிய கட்டாயத்தில் பெண்ணின் மனச்சிதறல்கள் அச்சமூட்டும் அளவிற்கு வெளிப்பட்டுள்ளன. இதுதான் இன்றைய பெண்ணீயத்திற்கான பதிவு. ஹேமாவின் வலைப்பூவில் பாருங்கள்.   வார்த்தைகள்

10. பிள்ளை பருவத்தில் தெரிந்து கொள்ள வேண்டிய விசயங்கள் அனைத்தும் மதிப்பிற்குரிய. திருமதி.ருக்மணி சேஷசாயி  அவர்களின் வலைப்பூவில் கிட்டுகின்றன். சிறு பிள்ளைகளை படிக்கச்சொல்லுங்கள்.  பாட்டி சொல்லும் கதைகள்

11. ஆழ்கடல் களஞ்சியம் என்ற வலைப்பூவில் குழந்தை வளர்ப்பு பற்றி பிரபா தாமு சொல்வதை படிக்கலாமா?. இந்த பதிவு மட்டும் அல்ல இந்த வலைப்பூவில் உடல் நலனில் அக்கரைமிக்க பல நல்ல பதிவுகள் உள்ளன. 

12. வெற்றியின் ரகசியம் எண்ணம்தான். எண்ணம்தான் ஒரு செயலை சாதிக்க வைக்கிறது. என்கிறார் மதுரகவி ராம்வி எண்ணம் ...செயல்.   
கிளம்பும் முன் காலை உணவை சாப்பிட மறக்காதீர்கள்.   



ப்போது விடை பெறுகிறேன். மீண்டும் (நாளை) முயற்சி திருவினையாக்கும் முற்பகலில்  உங்களை சந்திக்கிறேன். நன்றி

50 comments:

  1. "மதிப்பு மிகுந்த பேராசிரியை சாகாம்பரி "அவர்கள் மூலம் என் வலைத்தளம் இங்கு அறிமுகப்படுத்தபட்டதில் எனக்கு மிகப் பெரிய சந்தோசம். நான் பதிவுகள் இடும் பயனை அடைந்த ஆனந்தம் உண்மையில் இன்றுதான் கிடைத்தாக நான் உணர்ந்தேன். நன்றி.
    சாகாம்பரி மேடம் நீங்கள் பதிவர்களை அறிமுகப்படுத்துவதே மிக வித்தியாசமாக இருக்கிறது.
    பேராசிரியை அவர்களால் இங்கு அறிமுகப்படுத்தப்பட்ட & படும் அனைத்து பதிவாளர்களுக்கும் எனது மனம்மார்ந்த வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. காலைப்பொழுது எத்தனை அழகாக விடிகிறது உங்கள் பார்வையில் சாகம்பரி! சிறு வயதில் பார்த்த தாமரைக்குளம், நெற்கதிர்கள் ஊஞ்சலாடும் பசிய வயல்கள், சுகமாக வ‌ருடிச்செல்லும் தென்றல் காற்று என்று காலைப்பொழுதின் பல ரம்யங்களை இன்றைய மின்வேக வாழ்க்கையில் ரசிக்க மறக்கிறோம் என்பதை அழகாக நினைவூட்டுகிறீர்கள்!

    என் பதிவினை‍ வலைத்தளத்தை அறிமுகம் செய்ததற்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள்!!

    ReplyDelete
  3. புதிய காலையை அழகிய கவிதையுடன் வரவேற்று அசத்தி இன்றைய வலைச்சர அறிமுகங்களை அருமையாக அசத்தியுள்ளீர்கள்...

    இன்றைய வலைச்சரத்தில் அறிமுகமாகியிருக்கும் அனைவருக்கும் மனம் கனிந்த வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  4. எனது பதிவையும் அறிமுகபடுத்தியமைக்கு தங்களுக்கு மனம் கனிந்த நன்றி.

    ReplyDelete
  5. ஆழமான அற்புதமான அறிமுகங்கள். உங்கள் நடை ரொம்பவே ரசிக்க வைத்தது.

    ReplyDelete
  6. இயல்பாய் அழகாக வரும் எழுத்தும்,அறிமுகங்களும் அசத்தல்கள்..
    மனோ அக்காவின் லின்க் பார்க்க முடியலையே..

    ReplyDelete
  7. அழகான காலை பொழுது உங்கள் எழுத்தில் மேலும் அழகாயிற்று.

    மிக்க நன்றி மேடம்,என்னுடைய பதிவினை அறிமுகம் செய்ததற்கு.

    ReplyDelete
  8. இனிய காலையை போல, மகிழ்ச்சியான திருப்தியளிக்கக்கூடிய சிறந்த பதிவர்களின் அறிமுகங்கள். அனைவருக்கும் வாழ்த்துக்கள். என்னை அறிமுகம் செய்தமைக்கும் நன்றி.

    ReplyDelete
  9. சுறுசுறுப்பான, விறுவிறுப்பான, பரபரப்பான, கடமைக்கு முக்கியத்துவம் தரும் காலைப்பொழுதை கண்முன் கொண்டுவந்து நிறுத்தியுள்ள விதம் அழகோ அழகு தான்.

    அந்தக்கால அப்பாக்கள் குழந்தைகளை சைக்கிளில் மிதியோ மிதி என்று மிதித்து, பள்ளிக்குக் கூட்டிச்சென்றதும்,இன்று எழுந்தால் யாரும் யாருடனும் பேசவோ, முகத்துக்கு முகம் பார்க்கவோ நேரமின்றி

    //காலையில் அலுவலகம் செல்லும் நேரத்தில் கடவுளே வந்தாலும் "சற்று பொறு" என்று சொல்கின்ற கர்மயோகிகளாக மாறிவிடுகிறோம். //

    ஒவ்வொன்றையும் வெகு அருமையாக நாசூக்காகச் சொல்லிப் போவது படிக்க மிகுந்த சுவாரஸ்யமாகவே உள்ளது.

    இன்றைய அனைத்து அறிமுகங்களும் வெகு அருமை. அனைவருக்கும் என் பாராட்டுக்களும், வாழ்த்துக்களும்,

    //குளம் நிறைய தாமரைகள் மலர்ந்து பச்சையும் இளஞ்சிவப்புமாக, அந்தக்குளம் உடை உடுத்தியிருப்பதை//

    எவ்வளவு அழகான கற்பனை. மிகவும் ரஸித்தேன்.

    பகிர்ந்துகொண்ட பேராசிரியையான தங்களுக்கு எந்தன் மனமார்ந்த நன்றிகள். vgk

    ReplyDelete
  10. இன்றைய வலைச்சரத்தில் அறிமுகமாகியிருக்கும் அனைவருக்கும் மனம் கனிந்த வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  11. அருமையான அறிமுகங்கள்

    ReplyDelete
  12. அருமை அம்மா.
    உங்களை நினைத்து நாங்கள் மிகவும் பெருமைப் படுகிறோம்.
    மனப்பூர்வ வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  13. அறிமுகத்திற்கு மிக்க நன்றி சாகம்பரி!உங்கள் மற்ற அறிமுகங்களையும் படித்துப் பார்க்கிறேன்.

    ReplyDelete
  14. அழமான காலை அறிமுகங்கள்.

    வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  15. கடமைமிக்க காலையில் என் பதிவையும்
    அறிமுகப் படுத்தியமைக்கு மனமார்ந்த நன்றி
    அறிமுகப் படுத்தப்பட்ட அனைத்து பதிவர்களுக்கும்
    எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்

    ReplyDelete
  16. கடமை மிக்க காலையின் கருத்துக்கள் அருமை.ஆமா! இத்தனை பேருக்கும் சேர்த்து ஒரே ஒரு தாமரையா? சரி.போனால் போகிறது.நல்ல பதிவர்களை தந்திருப்பதால் தாமரையை விட்டுக் கொடுத்து விடுகிறேன்.
    அப்பறம் அந்த இட்லி சட்னி எல்லாருக்கும்தான?எவ்வளவு கேட்டாலும் உண்டுதானே? :-))

    ReplyDelete
  17. வாங்க மதுரை தமிழன், பாராட்டிற்கு மிக்க நன்றி.

    ReplyDelete
  18. @மனோ சாமிநாதன்
    வணக்கம் மேடம். தங்களின் வருகைக்கு நன்றி. அருமையான பாராட்டிற்கும் நன்றி.

    ReplyDelete
  19. என் பதிவினை‍ வலைத்தளத்தை அறிமுகம் செய்ததற்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள்!!// மிக்க நன்றி ராஜேஷ்.

    ReplyDelete
  20. @ஜோதிஜி திருப்பூர்//
    தங்கள் கருத்துரை என்னை மகிழ்விக்கிறது. மிக்க நன்றி சார்.

    ReplyDelete
  21. தங்களின் வீடு கவிதை எனக்கு மிகவும் பிடித்தது. மிக்க நன்றி தமிழ் உதயம் திரு.ரமேஷ்.

    ReplyDelete
  22. மிக்க நன்றி மேடம்,என்னுடைய பதிவினை அறிமுகம் செய்ததற்கு.// மிக்க நன்றி ராம்வி.

    ReplyDelete
  23. வணக்கம் ஆசியா மேடம். தங்களின் பாராட்டிற்கு நன்றி. நீங்கள் சுட்டிக்காட்டிய உடனேயே திருத்திவிட்டேன். இப்போது சரியாகிவிட்டது. மிக்க நன்றி

    ReplyDelete
  24. வணக்கம் சார். வழமை போலவே விரிவான கருத்துரை. பெரிய குடும்பத்தில் மூத்த பொறுப்பில் இருப்பதால் 'நாசுக்கு' தானாகவே வந்துவிடுகிறது. அப்புறம் ரசனக்கு காரணம் - நம்மை சுற்றியிருப்பதை ரசிக்கும்போதுதான் இறைவனின் கருணை புரியவருகிறது.

    தங்களின் பாராட்டிற்கு மிக்க நன்றி VGK சார்.

    ReplyDelete
  25. மிக்க நன்றி திரு.குமார்.

    ReplyDelete
  26. மிக்க நன்றி ராஜபாட்டை திரு.ராஜா.

    ReplyDelete
  27. @Rathnavel
    தங்களின் வாழ்த்துக்கள் என்னை ஊக்கப்படுத்துகிறது. மிக்க நன்றி ஐயா.

    ReplyDelete
  28. நன்றி ஹேமா. உங்களுடைய வலைப்பூ பதிவுகள் நன்றாக இருக்கின்றன.

    ReplyDelete
  29. இன்றைய வலைச்சரத்தில் அறிமுகமாகியிருக்கும் அனைவருக்கும் மனம் கனிந்த வாழ்த்துக்கள்...

    கடமைமிக்க காலையில் என் பதிவையும் அறிமுகப் படுத்தியமைக்கு என் மனமார்ந்த நன்றி சகோதரி...

    மேலும் உங்கள் படைப்புகளால் இவ்வலையுலகை ஆள வாழ்த்துக்கள்... குறிப்பாக அன்னை பூமியில் 'பாரத தேசம்' பற்றிய தொடரை தொடருமாறு கேட்டுக்கொள்கிறேன்...

    மறுபடியும் என் வாழ்த்துக்கள் உங்களுக்கு சகோதரி...

    ReplyDelete
  30. வாழ்த்துக்களுக்கு நன்றி மாதவி.

    ReplyDelete
  31. வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி ரமணி சார்.

    ReplyDelete
  32. நன்றி ராஜி. இட்லி எத்தனை வேண்டுமானாலும் கிட்டும். தாமரையும் எடுத்துக் கொள்ளலாம். யாரும் கேட்கவில்லையே.

    ReplyDelete
  33. உங்களின் படைப்பு வடிவம் அழகு.

    பாட்டி கதைகள்... உதவும்.

    ReplyDelete
  34. நல்ல பதிவுகள் மற்றும் பதிவர்களை அறிமுகப்படுத்தியிருக்கிறீர்கள் சாகம்பரி அவர்களே! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  35. சிறப்பாக செய்து இருக்கிறீர்கள்.. என்னையும் அறிமுகப் படுத்தப் போவதாக கூறியமைக்கு நன்றி

    ReplyDelete
  36. அன்புநிறை சகோதரி,
    இன்று அறிமுகமானவர்களில் இருவர் தவிர
    அனைவரும் எனக்கு பரிச்சயமான எழுத்தாளர்கள்.
    பதிவுலகில் தங்களுக்கென்று தனியிடம் வைத்திருப்பவர்கள்.

    மற்ற இருவரின் வலைத்தளம் சென்று பார்க்கிறேன் சகோதரி.

    ReplyDelete
  37. சாகம்பரி அருமையான பெயர். பேராசிரியை புதிய தகவல். நல்லது. அறிமுக எழுத்தாளர்கள் அனைவருக்கும் வாழ்த்துகள் சகோதரி சாகம்பரி உட்பட. ஒவ்வொருவர் பாணியும் தனிச் சிறப்புடையது. இரவு 11.45க்குத்தான் வாசித்து கருத்து எழுததுகிறேன் மற்றவைகளும் பார்ப்பேன் சகோதரி. மேலும் சிறப்புடன் நடை பயில வாழ்த்துகள்.
    வேதா. இலங்காதிலகம்.
    http://www.kovaikkavi.wordpress.com

    ReplyDelete
  38. அன்பு சகோதரி தாமதத்திற்கு மனிக்கவும் என்னை மற்றவர் அறியத் தந்தமைக்கு நன்றி ,அறிமுகம் செய்த மற்றவர்களுக்கும் வாழ்த்துக்கள்

    மற்றும் அழகிய தொகுப்பு நன்றி சகோ

    ReplyDelete
  39. கடமை பற்றிய அழகிய கருத்து ,அனைத்து ஏற்கக்கூடியதே ,நன்றி பகிர்வுக்கு சகோ

    ReplyDelete
  40. @ரெவரி
    மிக்க நன்றி சகோ. கண்டிப்பாக அந்த தொடரை தொடர்கிறேன். நிறைய குறிப்புகள் எடுத்து வைத்திருக்கிறேன். கோர்க்க வேண்டியது மட்டுமே. பதிவிட்டுவிட்டு தங்களுக்கு தெரிவிக்கிறேன்.

    ReplyDelete
  41. பாராட்டிற்கு நன்றி திரு.சத்ரியன்

    ReplyDelete
  42. கவிப்பிரியன் வருகைக்கு நன்றி. நிறைய கடிதங்கள் எழுதுங்கள்.

    ReplyDelete
  43. @suryajeeva
    மிக்க நன்றி சகோ. முன்கூட்டியே தெரிவித்ததற்கு காரணம் பதிவிடும் முன் அனுமதி பெறும் நோக்கமே.

    ReplyDelete
  44. 'வித்தியாசமாக உள்ளது..!' புரியவில்லையே. பாராட்டுதலா... குறிப்பிடுதலா...? மிக்க நன்றி பிரகாஷ்.

    ReplyDelete
  45. @மகேந்திரன்....
    சில வலைப்பூக்கள் மட்டும் புதிதாக இருக்கும் சகோ. என்னுடைய வலைச்சரத்தின் கருப்பொருள் குருவிமுட்டை அளவிற்கு மட்டுமே இடமளிப்பதாக இருப்பதால் தேடல்கள் குறுகிய எல்லை கொண்டதாகிவிட்டது. ஆனாலும் சில வலைப்பொக்களை தவிர மற்றவை ஒரு வயது நிரம்பியவையாகவே இருக்கும்.
    மிக்க நன்றி சகோ.

    ReplyDelete
  46. @kavithai (kovaikkavi)
    வணக்கம் சகோதரி தங்களுடைய வருகை உற்சாகமூட்டுகிறது. பாராட்டிற்கும் மிக்க நன்றி.

    ReplyDelete
  47. மிக்க நன்றி அன்பு உலகம் திரு.ரமேஷ்

    ReplyDelete
  48. ஒருநாளின் முழுபொழுதின் சூழ்நிலைகளையும் பலன்களை ஒவ்வொன்றாக விளக்கும் உளவியல் மற்றும் ஆலோனை தகவல்கள் அனைத்தும் அருமை!

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது