07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Sunday, November 6, 2011

இதம் தந்து விடை பெறும் இரவு -வலைச்சரம்.



பகல் முழுவதும் வேலை முடித்து மேற்கு வாசல் மறைந்திடும்
பரிதியின் பசிக்கு உணவாக கடவுள் தரும் சோற்று உருண்டை நிலா!
கதை சொன்ன  பாட்டி பிரபஞ்சத்தில் நட்சத்திரமானாளோ அல்லது
என்னுடைய மரபணுக்களில் ஒளிந்து மறைந்து வாழ்கின்றாளோ...
ஆனால் .....
இன்றைக்கும் நிலா மட்டும் தேய்வதும் வளர்வதுமாக வருகிறது.


எப்படி ஏமாந்திருக்கிறேன் பாருங்கள். சின்ன வயதில் நான் சற்று மக்கு குழந்தை போலும். ரொம்பவும் கேள்வி கேட்கமாட்டேன். ஆனால், சூரியனுக்கே உழைத்தால்தான் சாப்பாடு என்று உழைப்பின் முக்கியத்துவத்துவத்தை பாட்டி போதித்திருப்பது மட்டும் புரிகிறது.
     
இதோ கண்களை உறக்கத்திற்குள் ஆழ்த்தும் இரவு வந்துவிட்டது. நிலவின் வெளிச்சம் வெள்ளியை உருக்கி வார்த்ததுபோல உலகின் காட்சிகளை மாற்றிவிட்டன. இன்றைக்கு முழு நிலவு நாள் எனில் படகுத்துறைக்கு அழைத்துச்சென்றிருப்பேன். சுற்றிலும் முழுவதுமாக நீர் நிறைத்திருக்க பூமிக்கும் ஆகாயத்திற்கும் இடையே எந்த மறைப்பு இன்றி முழு நிலவை பார்ப்பது மனம் கவரும் காட்சியாகும். அப்படியே அன்பையும் பரிமாறிக் கொண்டு கைப்பிடி உருண்டையாக நிலாச்சோறும் சாப்பிடலாம். 

      
ரொம்பவும் பேச முடியாத நேரம் இரவு. ஏனெனில் மௌனம் மிக மெல்லிய கண்ணாடித்திரையாக படர்ந்திருக்கிறது. சிறு ஒலிகூட திரையை உடைத்துவிடும் அபாயமிருப்பதால், இங்கு மூச்சு
க்களுக்கு மட்டும் அனுமதி உண்டு. அமைதியாக அருகிருப்பவர் மறந்து மனமாகிய மாற்று உலகிற்குள் உள் நோக்கி பயணித்தால்.... இன்றைய நிகழ்வுகள், அதன் தொடர்ச்சியாக நேற்று.. பிறகு அதற்கு முந்தைய நாள்... சில வேளை ஒரே கணத்தில் வருடங்களைக்கூட கடக்க முடியும். இது போன்ற காலப்பயணங்கள் மிக அவசியம். அது கடந்து போன தோல்விக்கு  மயிலிறகு வருடல் தந்து ஆசுவாசப்படுத்தலாம் அல்லது செய்த தவறுகளுக்கு அக்னி குளியல் நடத்தி புடம் போடலாம். இந்த நேரத்து மந்திரம் - என்னிலிருந்து நான் பிரிந்து என்னை  புரிந்து கொண்டு தவறுகளை திருத்த மீண்டும் நானாகினேன்.
                                                    
இரவின் குறியீடுகளுள் முக்கியமான ஒன்று வயோதிகம் மற்றொன்று மரணம். இவை இரண்டுமே காலதேவனின் தீர்ப்பிற்கு கட்டுப்பட்டவை. வெகு சிலர் தன்னை ஆயத்தப்படுத்திக் கொண்டு தயாராக இருப்பார்கள். 

நம்மை மார்பிலும் தோளிலும் சுமந்து கை
ப்பிடித்து நடத்தி உலகில் வாழத்தகுதியான உயிராக ஆக்கியவர்களுக்கு நாம் அன்பையும் ஆறுதலையும் தர வேண்டிய நேரம். உள்ளுறுப்புகளின் செயலாக்கக் குறைவு உடல்நலத்தையும் மனநலத்தையும் பாதிக்கும் நேரம். அவர்களை புரிந்து கொண்டு மகன்/மகளாக இல்லால் ஒரு தாதிக்குரிய பொறுப்புடன் கவனித்துக் கொள்வதே சரியான அணுகுமுறை என்பது என் கருத்து. 
     
  
இன்றைய குறிப்புகள்:  வயோதிகம், மென்மையான அன்பு, தனிமை, மரணம்.

1. மதிப்பிற்குரிய திரு.வை.கோபாலகிருஷ்ணன் அவர்களின் வலைப்பூவில் இல்லறம் நல்லறமாகும் கருத்தை வலியுறுத்தி நிறைய அழகிய சிறுகதைகள் உள்ளன. குடும்பத்தின் பெரியோரின் மேன்மை மிக்க எண்ணங்களை போற்றும் இந்த சிறுகதை எனக்கு மிகவும் பிடித்த ஒன்று.
 முதிர்ந்த பார்வை

2. மதிப்பிற்குரிய  புலவர்.சா.ராமாநுசம் அவர்களின் வலைப்பூவிலிருந்து வாழ்க்கையை திறனாய்வு செய்ய வைக்கும் கவிதை படியுங்கள்.
  முடிந்தது வாழ்வுப் பாதையென... 

3. முதியோருடன் பழகும் முறை பற்றி வேர்களைத் தேடி வலைப்பூவில் முனைவர்.இரா.குணசீலனின் பதிவை படியுங்கள்.  சங்கத்தமிழை சிறப்பிக்கும் சிறந்த வலைப்பூகளில் ஒன்று.

4. திருமதி. கீதாவின் வணக்கம் வலைப்பூவில், உள்ள இந்த பதிவு மனம் கலங்க வைக்கிறது .ஆனாலும் தாயை மகளாக பாவித்து சேவை செய்யும் மகளை நினைத்து பெருமிதம் கொள்கிறது.    குழந்தையாக மாறிவிட்டாய் அம்மா.

5. கடம்பவனப்பூங்காவில், பாட்டியின் பாசத்திற்காக ஏங்கும் குழந்தையாக கவிதை தவிக்கிறது. தேவதையைத் தேடினேன்     

6. 
ஆயுத எழுத்து திரு.ராஜகோபாலன் எழுதுவதை குறைத்து விட்டார். இந்த பதிவினை இப்போது படியுங்கள். அடுத்த பிறவி.. 

7. நண்பர் விச்சுவின் வலைப்பூவில் முதியோர் பற்றிய இந்த பதிவை படியுங்கள். பாசத்திற்கு ஏங்கும் பாட்டி 

8. சகோதரி திருமதி.பி.எஸ்.ஸ்ரீதரின் ஆச்சி ஆச்சி வலைப்ப்பூவில் முதியோர் இல்லங்கள் பற்றிய ஒரு பதிவு கவனத்தை ஈர்க்கிறது. முதியோர் இல்லங்கள் 

9. கதம்ப உணர்வுகள் மஞ்சுபாஷினியின் வலைப்பூவில் இந்த கவிதை வாழ்க்கை பற்றிய மற்றொரு பார்வையை பதிகிறது.   இருப்பேனா?? இறப்பேனா??. இது போல மற்ற கவிதைகளும் உணர்வுபூர்வமா
பதிவாகியுள்ளன.

10. வானம் தாண்டிய சிறகுகள் ஜீயின் வலைப்பூவில் வாழ்க்கை பற்றிய பார்வையை இந்த அருமையான கவிதை பதிக்கிறது. ஆடுகளம்! 

11. இன்னுமொரு சிறுகதை அப்பாவி தங்கமணியின் வலைப்பூவிலிருந்து.  அப்பாவி தங்கமணியின் வலைப்பூவை எப்போது வேண்டுமானாலும் படிக்கலாம். மதுரையிலிருந்து சென்னை செல்லும் நான்குவழிச்சாலையில்  சீரான வேகத்தில் செல்லும் மகிழுந்தில் பயணிப்பதைபோல நேரம் நழுவிச்சென்றுவிடும். 

என்னுயிர் நின்னதன்றோ.

12. நான் அறிமுகம் செய்யப்போகும் கடைசி வலைப்பூ இது. மகளிர் கடலில் கிட்டியது. இப்போது புதிதாக ஏதும் பதியப்படவில்லை. 'காலா என் அருகில் வாடா' என்று அறைக்கூவல் விடுத்
மீசைக்கவியின் காட்டம் தெரியும் இந்தக் கவிதையை படியுங்கள்.  பிரமிக்க வைத்த இந்த கவிதைக்காக மிக்க நன்றி கலகலப்பிரியா. 
  நத்தைக்குள்ளுறங்கும் தவளைகள்...


இப்போது விடைபெறும் நேரம்.
           நான் கூறியது போலவே, திங்களன்று ஆரம்பித்த இந்த வாழ்க்கைப் பயணம், இனிமையான நண்பர்களின் துணையுடன் புனித யாத்திரையாகிவிட்டது. ஏராளமான வலைப்பூக்களை படித்தாலும் வலைச்சரத்தின் தலைப்பிற்கு பொருத்தமாக சிலவற்றை மட்டுமே தேர்ந்தெடுக்க முடிந்தது என்பதில் எனக்கு மிகுந்த வருத்தம் உண்டு.

          இந்த பெரிய பொறுப்பை எனக்களித்த மதிப்பிற்குரிய திரு.சீனா ஐயா அவர்களுக்கு என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். என்னை ஊக்கப்படுத்திய மதிப்பிற்குரிய திரு.வை.கோபால கிருஷ்ணன் அவர்களுக்கும், ஊக்கமூட்டி கருத்துக்களை பதிந்த மதிப்பிற்குரிய  திரு.ரத்னவேல் ஐயா அவர்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

         உடல் நலம் பாதிக்கப்பட்டு மீண்டு வந்த நிலையிலும் இங்கு வந்து வாழ்த்தி கருத்து பதிந்த மதிப்பிற்குரிய புலவர் 
சா இராமாநுசம்
அவர்களுக்கும் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

         புதிதாக பள்ளிக்கு வந்த சிறுமியை புன்னகைத்து அழைத்து அருகில் அமர்த்தி பயம் விலக்கும் மூத்த மாணவர்களைப் போல் தங்கள் கருத்துரையின் மூலம் அபயம் தந்த மூத்த பதிவர்கள் - வல்லி சிம்ஹன் மேடம், மனோ சாமிநாதன் மேடம், ஆசியா மேடம், சகோதரி கோவைக்கவி, திரு.ரமணி சார், திருப்பூர். ஜோதிஜி., திரு.வெங்கட் நாகராஜ், சகோ.அமைதிச்சாரல், சகோ.ஷைலஜா, காஞ்சனா மேடம், திரு.எம்.கே.முருகானந்தம் ஆகியவர்களுக்கு நன்றி தெரிவிக்கிறேன்.
 
        அன்புத் தோழி ராஜேஸ்வரி, பிரியத்திற்குரிய ராஜி, கீதமஞ்சரி கீதா , மதுரகவி ரமாரவி, ஆச்சி ஆச்சி திருமதி.ஸ்ரீதர் ,குட்டி சுவர்க்கம் ஆமீனாஆகியோருக்கு என் அன்பை தெரிவித்துக் கொள்கிறேன்.
       
         நம்முடைய தோழி பரிசு பெற்றால் கை குலுக்கி பாராட்டு தெரிவிப்பது போல தோழமையுடன் கருத்துக்களை பகிர்ந்த திரு.சண்முகவேல்,  சகோ..மகேந்திரன், திரு.சூரியஜீவா, திரு.சத்ரியன், தமிழ்வாசி பிரகாஷ், மதுரைத்தமிழன், திரு.கருன், திரு.நம்பிக்கை பாண்டியன், மாய உலகம் ராஜேஷ், தமிழ் உதயம் ரமேஷ், பிரபாதாமு, மிடில்கிளாஸ்மாதவி, சகோ.ரெவரி, பரிவை.குமார், முனைவர்.இரா.குணசீலன், அமைதி அப்பா, ராஜபாட்டை ராஜா, கவிப்பிரியன், விச்சு,எம்,ஆர், கோகுல்,   மதன்மணி, அரசன்,கல்பனா, பொன்மலர், ஆயிஷா அபுல், ஹேமா, நிஜாமுதீன், போளூர் தயாநிதி, தமிழ்க்காதலன், தங்கம் பழனி ,ஷீ-நிஷி.ஆகியோருக்கு என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்

வலைச்சரத்தில் வந்து வாழ்த்தி பாராட்டி ஊக்கப்படுத்திய அத்தனை நல் நெஞ்சங்களுக்கு என் இதயபூர்வமான  நன்றியை தெரிவித்து வாழ்த்து கூறி விடை பெறுகிறேன். வணக்கம்.

    

இதயபூர்வமான  நன்றி!
    

46 comments:

  1. ஒரு வாரம் வலைச்சரத்தை தன் கையில் எடுத்து பதிவர்களையும், சிறந்த இடுகைகளையும் உங்கள் பார்வைக்கு ஏற்றபடி வரிசையாக தொகுத்து சிறப்பாக எமக்களித்த உங்களுக்கு நன்றி.

    ReplyDelete
  2. ஒவ்வொரு நாளும் முன்னுரைகளை எழுதி அடுத்ததாக இடுகைகளை அறிமுகப்படுத்தி ஒரு வித்யாசமான சரத்தை தொகுத்து வழங்கி இருந்தீர்கள். மீண்டும் வலைச்சர ஆசிரியர் வாய்ப்பு உங்களுக்கு கிடைக்க வேண்டும் என விரும்புகிறேன்.

    ReplyDelete
  3. ஏழுநாட்கள் போனதே தெரியவில்லை..
    பொழுதுகளின் இயல்புகளை ரசித்து
    நடைபோட்டதால்...
    தங்கள் பணிய செவ்வனே அழகுறச்
    செய்திருக்கிறீர்கள் சகோதரி...

    வலைச்சர வரலாற்றில் உங்கள் பங்கு
    என்றும் என்றென்றும் நிலைத்திருக்கும்.

    அறிமுகமான அனைத்து பதிவர்களுக்கும்
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  4. வாரம் முழுவதுமே நல்ல முன்னுரைகள் தந்து நல்முத்துகளைப் பகிர்ந்த உங்களுக்கு நன்றி.

    ஆசிரியர் பணியைச் செம்மையாய் நிறைவு செய்தமைக்கு வாழ்த்துகள்.

    ReplyDelete
  5. அருமையாக ஒரு வாரம் சென்றது.
    "நண்பர் விச்சுவின் வலைப்பூவில் முதியோர் பற்றிய இந்த பதிவை படியுங்கள். பாசத்திற்கு ஏங்கும் பாட்டி"
    - மிக்க நன்றி. வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  6. தங்கள் பாட்டி நிச்சயமாக பிரபஞ்சத்தில் ஓர் ஒளிரும் நக்ஷத்திரமாகவே ஜொலித்துக் கொண்டிருப்பார்கள் என்று நான் நினைக்கிறேன்.

    அவர்களுக்கு என் மானஸீக நமஸ்காரங்கள்.

    எவ்வளவு ஒரு அருமையான கருத்தை தன் அருமைப்பேத்திக்குச் சொல்லியிருக்கிறார்கள்!

    அதைத் தாங்கள் மனதில் வாங்கிக்கொண்டு எவ்வளவு அருமையாக இன்று எங்களுடன் பகிர்ந்து கொண்டுள்ளீர்கள்!!

    //பகல் முழுவதும் வேலை முடித்து மேற்கு வாசல் மறைந்திடும்
    பரிதியின் பசிக்கு உணவாக கடவுள் தரும் சோற்று உருண்டை நிலா!//

    //சூரியனுக்கே உழைத்தால்தான் சாப்பாடு என்று உழைப்பின் முக்கியத்துவத்துவத்தை பாட்டி போதித்திருப்பது மட்டும் புரிகிறது.//

    ரொம்ப ரொம்ப சொக்கிப்போனேன், இந்த வரிகளைப் படித்ததும்.

    தங்கள் கற்பனைகள் தினமும் எல்லையில்லாமல் வானம் தாண்டிச் செல்வதாக் உள்ளன. மனமார்ந்த பாராட்டுக்கள். vgk

    ReplyDelete
  7. அருமையான உத்தியுடன் சிறப்பான பணி.வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  8. தரமான பதிவாளர்களை அறிமுகப்படுத்தி அமுதசுரபி போல அள்ளிதந்த பேராசிரியர் சகாம்பரி அவர்களுக்கு நன்றி. ஏழுநாட்கள் போனதே தெரியவில்லை.விடைபெறும் நேரம் வரும்போதும் சிரிப்பினில் நன்றி சொல்லி விடை பெறுவோம் மீண்டும் இங்கோ அல்லது உங்கள் வலைதளத்திலோ சந்திப்போம். வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன் ( Nothing GREAT was Ever achieved without enthusiasm )

    ReplyDelete
  9. //நம்மை மார்பிலும் தோளிலும் சுமந்து கைப்பிடித்து நடத்தி உலகில் வாழத்தகுதியான உயிராக ஆக்கியவர்களுக்கு நாம் அன்பையும் ஆறுதலையும் தர வேண்டிய நேரம். உள்ளுறுப்புகளின் செயலாக்கக் குறைவு உடல்நலத்தையும் மனநலத்தையும் பாதிக்கும் நேரம். அவர்களை புரிந்து கொண்டு மகன்/மகளாக இல்லாமல் ஒரு தாதிக்குரிய பொறுப்புடன் கவனித்துக் கொள்வதே சரியான அணுகுமுறை என்பது என் கருத்து. //

    இதைவிட அழகாக வேறு யாரால் சொல்லிப் புரிய வைக்க முடியும்?

    தங்கள் கருத்து அனைவருக்கும் நல்லதொரு போதனை.

    ஒருசிலராவது இதைப்படித்து அதன்படி புரிந்து கொண்டு நடந்தால், உங்கள் முயற்சிக்கு வெற்றியே! vgk

    ReplyDelete
  10. //1. மதிப்பிற்குரிய திரு.வை.கோபாலகிருஷ்ணன் அவர்களின் வலைப்பூவில் இல்லறம் நல்லறமாகும் கருத்தை வலியுறுத்தி நிறைய அழகிய சிறுகதைகள் உள்ளன. குடும்பத்தின் பெரியோரின் மேன்மை மிக்க எண்ணங்களை போற்றும் இந்த சிறுகதை எனக்கு மிகவும் பிடித்த ஒன்று.
    முதிர்ந்த பார்வை//

    மிகச்சிறந்ததோர் அறிவாளியாக, கல்வித் துறையில் பொறுப்பு மிக்க பேராசிரியையாக, அதுவும் ஒரு துறைக்கே HOD யாகத் திகழும் தங்களிடம் இவ்வாறு ஒரு பாராட்டுப்பெற, நான் என்ன தவம் செய்தேனோ? என நினைக்கச் செய்து விட்டீர்கள். மிக்க நன்றி. ரொம்ப சந்தோஷம், மேடம்.

    ReplyDelete
  11. //நம்மை மார்பிலும் தோளிலும் சுமந்து கைப்பிடித்து நடத்தி உலகில் வாழத்தகுதியான உயிராக ஆக்கியவர்களுக்கு நாம் அன்பையும் ஆறுதலையும் தர வேண்டிய நேரம்//

    மிகவும் வேண்டிய கருத்தை வலைச்சரம் மூலம் வலியுறுத்தியது சிறப்பு.

    மிகவும் மதிப்பு வாய்ந்த கருத்தை சொல்லியது போல் மதிப்பு மிக்க பதிவர்கள் வலம் வந்திருக்கிறார்கள் மதிப்பிற்குரிய திரு வை கோபாலகிருஷ்ணன் அவர்களின் தொடக்கத்துடன்.

    வீட்டிற்கு வந்த பிரியத்திற்குரிய உறவு ஒன்று ஊருக்கு கிளம்பும் பொழுது தொண்டை அடைப்பது போல் இருக்கிறது இன்று.வழியனுப்ப மனமற்று தெருமுனை வரை கை பிடித்து நானும் தங்களுடன்....

    ReplyDelete
  12. இன்றைய அனைத்து அறிமுகங்களும் வழக்கம் போல் மிக அருமையாக உள்ளன. அனைவருக்கும் என் மனமார்ந்த பாராட்டுக்கள். வாழ்த்துக்கள்.

    இந்த ஒரு முழு வாரமும் தங்கள் பணியை மிகச் சிறப்பாகச் செய்து முடித்துள்ளீர்கள். பாராட்டுக்கள்.

    அதற்குள் ஒரு வாரம் முடிந்து போனதே என்ற வருத்தமே ஏற்படுகிறது.

    சிலகால இடைவெளிக்குப்பின் தங்களுக்கே மீண்டும், வலைச்சர ஆசிரியராக வாய்ப்புகள் தந்தால் இன்னும் பல பயனுள்ள அறிமுகங்களைத் தந்து சாதனை புரிவீர்கள் என்பதில் சந்தேகமே இல்லை.

    ஒரு வார வாய்ப்பு என்பதைத் தங்களுக்கு மட்டும் ஸ்பெஷலாக ஒரு மாதமாகக் கூடத் தரலாம். அவ்வளவு விஷய ஞானம் உள்ளவராகத் தெரிகின்றீர்கள்.

    இந்த என் விருப்பத்தை வலைச்சரக் குழுவினரும், முக்கியமாக நம் மரியாதைக்கும், மதிப்புக்கும் உரிய உயர்திரு சீனா ஐயா அவர்களும், தங்கள் கவனத்தில் ஏற்றிக்கொள்ள வேண்டுமாய் இதன் மூலம் பகிரங்கமாகக் கேட்டுக்கொள்கிறேன்.

    தாங்களும் தங்கள் குடும்பத்தினரும் இன்று போல் என்றுமே, மிக மகிழ்ச்சியாக வாழவும், மிகப்பயனுள்ள மனநலம் மற்றும் மனித நேயம் சம்பந்தமான வாழ்வியல் கட்டுரைகளை வழங்கவும், வேண்டி அன்புடன் ஆசீர்வதிக்கிறேன்.

    பிரியமுள்ள vgk

    ReplyDelete
  13. நன்றி நவிதல், விடைபெறுதல் என்ற பகுதியில் தங்கள் தனித்தன்மையைக் காட்டி விட்டீர்கள். ஒருவரையும் விட்டு விடாமல், அரவணைத்துச் சென்றுள்ள உங்களின் அன்பை, பண்பை, பாசத்தை நன்கு உணர முடிகிறது.

    திருமதி ராஜி அவர்கள் வெகு அருமையாகக் குறிப்பிட்டுள்ளது போல, ஏதோ நம் நெருங்கிய உறவு ஒன்று நம்மை விட்டு வெகு தூரம் பிரிந்து செல்ல ஆகாயவிமானப் பயணம் மேற்கொள்வது போலவும், நாங்கள் Send off கொடுக்க வந்து விமான நிலையத்தில், காத்திருப்பது போலவும் ஒருவித உணர்வை ஏற்படுத்துகிறது என்பதே உண்மை.

    நன்றி, நன்றி, நன்றி ! vgk

    ReplyDelete
  14. சில வேளை ஒரே கணத்தில் வருடங்களைக்கூட கடக்க முடியும். இது போன்ற காலப்பயணங்கள் மிக அவசியம். அது கடந்து போன தோல்விக்கு மயிலிறகு வருடல் தந்து ஆசுவாசப்படுத்தலாம் அல்லது செய்த தவறுகளுக்கு அக்னி குளியல் நடத்தி புடம் போடலாம். இந்த நேரத்து மந்திரம் - என்னிலிருந்து நான் பிரிந்து என்னை புரிந்து கொண்டு தவறுகளை திருத்த மீண்டும் நானாகினேன்.

    தனிமையும் மெளனமும் உண்மையும் புதைந்திருக்கும் அழகான வரிகள்!

    இந்த வாரம் முழுவதும் உங்களின் கருத்துச் செறிவு மிக்க எழுத்தில், இயற்கை அழகு ததும்ப அனைத்து பொழுதுகளிலும் வலம் வந்து எங்களையும் நெகிழ வைத்து விட்டீர்கள்.
    வெற்றிகரமாக ஆசிரியர் பணியை நிறைவேற்றிய உங்களுக்கு என் இதயங்கனிந்த வாழ்த்துக்கள் சாகம்பரி!!

    ReplyDelete
  15. சிறப்பான, பயன்தரும் தொகுப்புகள். வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  16. அன்பு சோதரி
    வணக்கம்
    வலைச்சரத்தில் என்னை அறிமுகப் படுத்தியுள்ள தங்களுக்கு
    என் உளங்கனிந்த நன்றியைத்
    தெரிவித்துக் கொள்கிறேன்
    ஏற்ற பணிதனை மிகவும் சிறப்பென பலரும் போற்ற ஆற்றி
    யுள்ளீர் நன்றி!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  17. அருமையான பகிர்வுகள், கலகல ப்ரியா லகலகலகலக மட்டும் என்ன ஆனார் என்ற சிந்தனையுடன் விடைபெறுகிறேன்,

    ReplyDelete
  18. வயோதிகம் பற்றிய அரிய கருத்துகளுக்கு நன்றி மேடம்.
    அறிமுக பதிவுகள் அனைத்தும் அருமை.வாழ்த்துக்கள்.ஒருவாரம் போனதே தெரியவில்லை.அழகிய எழுத்தில் எங்களை கட்டிப்போட்டுவிட்டீர்கள்.

    ReplyDelete
  19. "" சூரியனுக்கே உழைத்தால்தான் சாப்பாடு என்று உழைப்பின் முக்கியத்துவத்துவத்தை பாட்டி போதித்திருப்பது மட்டும் புரிகிறது'''

    உழைப்பின்
    உன்னதத்தை
    உயர்வை
    உண்மையை
    உலகறியச் செய்யும் வார்த்தைகள்
    அற்புதம்

    நன்றி சகோதரி
    என்னை உங்களின்
    எழிலான
    எழுச்சியான
    எழுத்தில்
    அறிமுகப் படுத்தியமமைக்கு

    ReplyDelete
  20. அப்படியே அன்பையும் பரிமாறிக் கொண்டு கைப்பிடி உருண்டையாக நிலாச்சோறும் சாப்பிடலாம்.


    அன்புடன் பரிமாறிய
    அருமையான விருந்துக்கு
    பாராட்டுக்கள். வாழ்த்துக்கள்..

    ReplyDelete
  21. அட - அதற்குள் ஒரு வாரம் முடிந்து விட்டதா ? பலே பலே ! வாசகர்கள் தமிழ் வாசி - மற்றும் வை.கோ எல்லாம் இன்னும் ஒரு வாய்ய்பு அளிக்க வேண்டுமெனக்கோடிக்கை வைத்திருக்கிறார்கள். ம்ம்ம்ம் - நல்லதொரு நாளில் இன்னும் ஒரு வாய்ப்பு அளிப்போம். நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    ReplyDelete
  22. அனுபவமிக்க பதிவு அருமை..

    எனது பதிவையும் அறிமுகம் செய்தமைக்கு நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

    ReplyDelete
  23. வாழ்த்திற்கு மிக்க நன்றி தமிழ்வாசி பிரகாஷ்.

    ReplyDelete
  24. நன்றி சகோ.மகேந்திரன். தங்களைப் போன்றோரின் கருத்துக்கள் தந்த ஊக்கம்தான் இந்த பணியை வெற்றிகரமாக முடிக்க முடிந்தமைக்கு காரணம்.

    ReplyDelete
  25. வருகைக்கும் பாராட்டிற்கும் மிக்க நன்றி திரு.வெங்கட் நாகராஜ்..

    ReplyDelete
  26. மிக்க நன்றி திரு.விச்சு.

    ReplyDelete
  27. எத்தனை மனமார்ந்த கருத்துரைகள்....! மிக்க நன்றி சார்.

    என் தாயார் வீட்டிற்கு நான் செல்லும்போதெல்லாம் எனக்கு நாள் முழுக்க விருந்துப்பச்சாரம் நடக்கும். கிளம்பும்போது தாம்பூலத் தட்டு வைத்து நிறைவாக தருவார்கள் - அதில் புது ஆடைகள் முதல் அனைத்தும் இருக்கும். பிறகு அப்பாவிடம் சொல்லி கொஞ்சம் பணம் பெற்றுத் தருவார்கள். வழியனுப்பும் போது அப்பாவிற்கும் தெரியாமல் என் கைகளில் பணம் திணிக்கப்படும் ( அப்பாவும் தருவார் மறுக்காமல் வாங்கிக்கொள் என்று வேறு சொல்வார்கள்).

    ஏதும் குறைவில்லாமல் முழுமையாக செய்ய வேண்டும் என்று நினைத்து முழுமையடைய முடியாமல் நிற்கும் தாயுள்ளம் போல தங்களின் கருத்துரைகள் எனக்குத் தோன்றுகின்றன.

    மிகுந்த மகிழ்ச்சியுடன் மன நிறைவுடன் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன் VGK சார்.

    ReplyDelete
  28. தொடர்ந்து கருத்து பதிந்து ஊக்குவித்தமைக்கு மிக்க நன்றி திரு.சண்முகவேல்.

    ReplyDelete
  29. கண்டிப்பாக சந்திப்போம். மிக்க நன்றி மதுரைத் தமிழன்.

    ReplyDelete
  30. பிரியத்திற்குரிய ராஜி உடன் வந்து அன்பை தெரிவிப்பதற்கும் ரொம்ப ரொம்ப நன்றி.

    ReplyDelete
  31. இந்த வாரம் முழுவதும் உங்களின் கருத்துச் செறிவு மிக்க எழுத்தில், இயற்கை அழகு ததும்ப அனைத்து பொழுதுகளிலும் வலம் வந்து எங்களையும் நெகிழ வைத்து விட்டீர்கள்.
    //மிக்க நன்றி மனோ மேடம். தங்களைப் போன்றோரின் கருத்துரைகள் சிறந்த வழிகாட்டுதலாக அமைந்து என்னை உற்சாகப்படுத்தின.

    ReplyDelete
  32. மிக்க நன்றி திரு.நிஜாமுதீன்.

    ReplyDelete
  33. @ புலவர் சா இராமாநுசம்
    மிக்க நன்றி ஐயா. தங்களின் மேலான கருத்துரை ஊக்கம் தருகிறது.

    ReplyDelete
  34. ஒவ்வொரு அறிமுகத்தையும் கவனித்து கருத்துரையிட்டு சிறப்பித்ததற்கு மிக்க நன்றி திரு.சூரியஜீவா

    ReplyDelete
  35. ..
    தொடர்ந்து வருகை தந்து என்னை உற்சாகப்படுத்தியதற்கு மிக்க நன்றி ராம்வி.

    ReplyDelete
  36. வருகைக்கும் பாராட்டிற்கும் மிக்க நன்றி திரு.ராஜகோபாலன்

    ReplyDelete
  37. அன்புடன் பரிமாறிய
    அருமையான விருந்துக்கு
    பாராட்டுக்கள். வாழ்த்துக்கள்..
    //அன்புத் தோழி ராஜேஸ்வரிக்கு மிக்க நன்றி.

    ReplyDelete
  38. வித்தியாசமான வலைச்சர வாரத்தை வழங்கி விடை பெரும் உங்களுக்கு பாராட்டுக்கள்!

    ReplyDelete
  39. வருகைக்கும் பாராட்டிற்கும் மிக்க நன்றி ஐயா

    இந்த வலைச்சரப் பணியை எனக்கு அளித்து பதிவுலகத்தில் இன்னும் ஒரு பரிமாணத்தை பெற்றுத்தந்தமைக்கு மிக்க நன்றி ஐயா. மகிழம்பூச்சரத்தில் பதிவிடுவதைப் போலவே முழு சுதந்திரத்துடன் என்னுடைய கருத்துக்களை பதிய முடிந்ததையும் எண்ணி மகிழ்கிறேன். வலைச்சரத்தின் பெருமைக்கு ஒரு குறைவும் வந்துவிடக்கூடாது என்று கவனத்துடன் செயல்பட்டதற்கு பரிசாக தங்களின் இந்த கருத்து என்னை மகிழ்விக்கிறது.

    //நல்லதொரு நாளில் இன்னும் ஒரு வாய்ப்பு அளிப்போம். //
    மகிழ்ச்சி ஐயா. மீண்டுமொரு வாய்ப்பளித்தால் பிரிதொரு நாளில் வலைச்சரத்தினை தொடுக்க முயற்சிக்கிறேன்.

    ReplyDelete
  40. மிக்க நன்றி முனைவர்.திரு.குணசீலன்.

    ReplyDelete
  41. மிக்க நன்றி திரு.கோகுல்.

    ReplyDelete
  42. அருமையான முன்னுரையும்
    மிக அருமையான பதிவர் அறிமுகமுமாக
    தங்கள் வலைச்சர ஆசிரியர் பணி அருமையாக இருந்தது
    தொடர்ந்து சந்திப்போம்,வாழ்த்துக்கள்

    ReplyDelete
  43. மேடம் :
    தங்கள் அறிவிப்பு மெயில் பார்த்தவுடன் உங்களைப்பற்றி தெரிந்துகொள்ள தங்களின் அறிமுக இடுகைகளைத் தேடி படித்தேன்.முதன் முதலில் நீங்கள் ஆசிரியர் என்று தெரிந்தபோது ஏற்பட்ட மரியாதை கலந்த பயம் மீண்டும் அதிகரித்தது போல உள்ளது.

    நேரம் கிடைக்கும்போது மற்ற இடுகைகளை படிக்கிறேன்.எனது பதிவை அறிமுகப்படுத்தியமைக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.பெரியவர்களை நாமும்,நம்மை பெரியவர்களும் அன்பும் நட்புள்ளத்துடனும் பேணுதல் சிறப்பாக இருக்கும்.

    தயிர்சாதம் பாத்தவுடன் சாப்பிடத் தூண்டுகிறது.இதோ எழுமிச்ச ஊறுகாயோட வருகிறேன்.தங்கள் அன்பில் நெகிழ்கிறேன்.

    ReplyDelete
  44. மேடம் வாழ்த்துக்கள் ! என்னை அறிமுகம செய்து ,இந்த பதிவு அனைவரையும் சென்று அடைய உறுதுணையாக இருந்தது,கனத்த இதயத்துடன் தான் எழுதினேன் !தங்களுக்கும் இது மனசை கனக்க வைத்துள்ளது!!
    இங்கும் சென்று பாருங்க !
    http://udtgeeth.blogspot.com/2010/11/blog-post_30.html
    இந்த இரண்டு பதிவுகளும் என் மனசை மிகவும் பாதித்த உண்மை சம்பவங்கள்!

    http://udtgeeth.blogspot.com/2011/06/blog-post_20.html

    ReplyDelete
  45. ரெம்ப நன்றிங்க சாகம்பரி...;) I'm honoured...

    ReplyDelete
  46. மிக்க நன்றி சகோதரி. இதை வாசிக்கத் தவறி விட்டேன்.இன்று தான் நேரம் கிடைத்தது.நன்றாக சுவைத்தேன் இறை ஆசி கிட்டட்டும்.
    வேதா. இலங்காதிலகம்.
    http://www.kovaikkavi.wordpress.com

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது