07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Monday, February 6, 2012

என் பெயர் மதுமதி


       வலையுலக வாசகத் தோழமைகளுக்கும் என்னை பின்தொடரும் தோழமைகளுக்கும் நான் பின் தொடரும் தோழமைகளுக்கும் எனது அன்பான  வணக்கம்.இந்த வார வலைச்சர ஆசிரியராக எனக்கு பதவி உயர்வு கொடுத்த திரு சீனா ஐயாவுக்கும் தோழர் தமிழ்வாசி பிரகாஷ் மற்றும் தமிழ் ப்ரியன் ஆகியோருக்கு நன்றி..

 என் பெயர் மதுமதி

"அதோ போகிறான் பார் அவன் பெயர் பெயர் மதுமதி"
       என்று நான் ஒரு பாதையில் செல்லும்போது எதிர்பாதையில் செல்ல எத்தனிக்கும் ஆயிரம் பேரில் யாரோ ஒருவர் என்னைச் சுட்டிக்காட்ட
வேண்டும்..அதுதான் இந்த உலகில் வாழ்வதற்கான அர்த்தம் என்று நினைப்பவனாக நாளடைவில் மாறிப்போனவன் நான்.. ஆனால் "என் பெயர் மதுமதி" என்று என்னை நானே சுட்டிக்கொள்ளும் படி தலைப்பிட்டிருக்கிறேன். அதற்கு காரணம் நான் மதுமதியென்று முதலில் நான் நம்ப வேண்டும். என்னை நான் சொல்ல வேண்டும்.. பிறகுதானே அவன் பெயர் மதுமதி என்று ஊர் சொல்லும்."நீ யாரென்று முதலில் நீ காட்டு பிறகு உன்னை யாரென்று ஊர் காட்டும்" என்று எனக்கு நானே அடிக்கடி சொல்லிக் கொள்வதுண்டு. படைப்பை படைக்கும் முன்னரே தான் ஒரு படைப்பாளி என்று தன்னைத் தானே பிரகடனப் படுத்திக்கொண்டால் தான் படைப்பே முழுமை பெறுகிறது..
       இதை எதற்கு ஆரம்பித்திலேயே குறிப்பிடுகிறேன் என்றால்  வலையுலகத்தில் வட்டமிட்டபோது நிறைய நல்ல கவிஞர்களையும் கட்டுரையாளர்களையும் காண முடிந்தது.. வலைப்பூ ஆரம்பித்துவிட்டோம் என்பதற்காக கவிதையோ கட்டுரையோ எழுதிவிட முடியாது..
கவிதைகளையும் கட்டுரைகளையும் எழுதலாம் என்று எண்ணியே வலைப்பூ   ஆரம்பிக்கிறோம் .. நல்ல கவிதைகளை எழுதிக் கொண்டிருக்கும் சில தோழர்கள்  இது கவிதை தானா என்று கருத்துரை வரும் வரை சந்தேகத் தோடே காத்திருக்கிறார்கள்.கவிதை மாதிரி என்று அதற்கு சிலர் தலைப்பிட்டிருக்கிறார்கள்.கவிதை தான் அதில் என்ன சந்தேகம்.. நாமே சந்தேகப்பட்டு அதை கவிதை மாதிரி என்று குறிப்பிட்டால் அதை வாசிக்க வருபவரின் மனதிலும் அது குடியேறும். அது கவிதை தான் என்று அதை படைத்தவன் முதலில் நம்ப வேண்டும்.அதன் பின்பே படிப்பவன் நம்புவான்..
           புதுக்கவிதைக்கு ஏது வரைமுறை.அது பன் முகங்களில் அல்லவா வெளிப்படும்.பொதுவாக இயற்கையையும் இன்ன பிற விசயங்களையும் ரசிப்பவன் படைப்பாளி ஆகிறான்.அப்படித்தான் நாமெல்லாம் படைப்பாளியாகியிருக்க முடியும்.ரசிப்புத் தன்மையும் ரசித்ததை அழகாக சொல்லும் தன்மையும் போதும் ஒரு நல்ல படைப்பாளிக்கு.படைப்பு என்பது அற்புதமான விசயம்.நான் படைப்பாளி என்று தன்னை முழுமையாக நம்பினவனே படைத்தலில் வென்றிருக்கிறான்.முதலில் நாம் படைப்பாளி என்று மார் தட்டுவோம் அந்த சத்தம் கேட்டு நமது படைப்புகள் எழுந்து நிற்கட்டும்..வலையுலகம் வந்த நாள் முதல் மனதில் இருந்தது. அதனால் சொல்லவேண்டியதாகி விட்டது.தவறிருப்பின் மன்னிக்கவும்.

நானும் என் தூரிகையும் அதன் தூறலும்..

           நான் என் தலையெழுத்தை நம்பாமல் என் கையெழுத்தை  நம்பிக்கொண்டிருப்பவன். திராவிடத்தந்தை பெரியாரை ஈன்றெடுத்த மஞ்சள் மாநரமாம் ஈரோட்டில் தான் எனது தாய் என்னையும் ஈன்றெடுத்தாள் என்று சொல்லிக்கொள்வதில் பெருமைப்படுகிறேன்றேன்..

திராவிடத் தந்தை

           என் பள்ளிப்படிப்பு கிறித்தவப் பள்ளியில் தான் என்றாலும் ஐயா வீட்டின் அருகாமையில் பள்ளி இருந்ததனால் என்னவோ திராவிட கொள்கைகளைப் பின்பற்றியே வளர்ந்தேன்..ஐயாவின் வரலாற்றை அனைவரும் அறிந்து
கொள்ள வேண்டுமென ஆசைப்பட்டே ஈரோட்டு சூரியன்  என்ற தலைப்பில் எனது தளத்தில் கவிதை நடையில் ஐயாவின் வரலாற்றை எழுதி வருகிறேன். எளிமையான நடையில் வாசிக்க ஏதுவாக இருக்கும்.
"ஏனுங்க அம்மணி தெங்க போயிட்டாரு உங்கூட்டுக்காரரு"
"அதை யேனுங்க மாமா கேட்கறீங்க.நான் ஏதோ கோவத்துல நாலு வார்த்த சொல்லிப்போட்டேன்..எதிர்கட்சி தலைவரு விஜயகாந்த் மாதிரி கோவமா கோழி கூப்பட வூட்டவுட்டு வயலு பக்கமா போனாரு பழய சோத்துக்கு கூட இன்னும் வல்ல .அப்படியே வயக்காட்டு பக்கமா போனீங்கன்னா அம்மணி கூப்புடுதுன்னு அந்த மனுசங்கிட்ட சொல்லிப்போடுங்க மாமா"
"ஆமா அம்மணி நீ என்ன சொன்னாலும் மன்மோகன் சிங்கு மாதிரியே தலையாட்டிக்கிட்டே இருக்கனும்ங்குற. அவந்தான் என்ன பண்ணுவான்"
        இப்படி கொஞ்சிப் பேசும் கொங்குத் தமிழிலே எதார்த்தமாக அரசியல் கலந்திருக்கும்.இந்த பேச்சைத்தான் நானும் கற்றேன்..பேசினேன்.. வாசித்தேன்.. நேசித்தேன்.. சுவாசித்தேன்..கொங்கு தேசத்தின் மையமான ஈரோட்டில்தான் இப்படியான பேச்சுக்களை இன்னும் கேட்க முடியும்.அதை நீங்களும் கேட்க ஆசைபட்டுதான் வாராவாரம் அம்மணியும் சின்ராசும் நாட்டு நடப்பை அலசும் கொக்கரக்கோ எழுதி வருகிறேன்..
          பள்ளி பருவத்தில் எழுத ஆரம்பித்து ஆசிரியர்களால் கண்டிக்கப்பட்டாலும் நான் பயின்ற கல்லூரி முதல்வர் மற்றும் பேராசியர்கள் போன்றோரின் ஊக்குவிப்பால் தான் என் எழுத்தை ஊர் அறிந்தது என்று சொல்லலாம்.
         ''தலையெழுத்திலோர் பிழையெழுத்து'' என்ற நூலை நான் பயின்ற ஈரோடு ஸ்ரீ வாசவி கல்லூரியே பதித்து வெளியிட்டு என்னை கவிஞனென ஊருக்கு உரைத்தது.எங்கு சென்றாலும் என்னை அடையாளம் காட்டிய எனது கல்லூரிக்கு நன்றி சொல்வதை மறப்பதில்லை. நான் அவ்வப்போது வலையில் எழுதி வரும் கவிதைகளைக் காண செல்லும் வழி பூட்டியிருக்கிறது பூட்டைத் திறந்து உள்ளே நுழையுங்கள்..பூட்டு.
          நான் க்ரைம் கதை மன்னன் ராஜேஷ்குமாரின் தீவிர வாசகனாக இருந்து அவரைப் போலவே நாவல் எழுதும் ஆர்வம் ஏற்பட்டு முதலாவதாக எழுதிய "வந்துவிடு காயத்ரி"என்ற க்ரைம் கதையை பிரசுரம் செய்து என்னை மாத நாவலாசிரியராக அறிமுகம் செய்த குமுதம்-மாலைமதிக்கு இவ்வேளையில் நன்றியை சொல்லிக் கொள்கிறேன்.கடந்த செப்டம்பர் மாதம் வெளியான ராணி முத்துவில் நான் எழுதிய உயிரைத் தின்று பசியாறு க்ரைம் நாவலை எனது வலையில் வாராவாரம் தொடராக எழுதி வருகிறேன்.இதுவரை நான்கு அத்தியாயங்கள் முடிந்திருக்கின்றன.


ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன்மகனைச் 
சான்றோன் எனக்கேட்ட தாய்

          என்று ஐயன் சொன்னதைப் போல என் தாய் என்னைக் காணும் காலங்கள் தான் ஓடிக் கொண்டேயிருக்கிறது.எட்டிப் பிடித்து விடலாம். எங்கே போய்விடப் போகிறது.எனக்கும் மற்றவர்களைப் போல பிரபலமான குறட்பாக்கள் மட்டும்தான் மனப்பாடமாகத் தெரியும்.ஆனாலும் ஐயன் சொன்னதைத் திருப்பி நானும் வள்ளுவக் கவிதை  என கவிதை நடையில் புரியும் வண்ணம் சொல்லிக் கொண்டுதானிருக்கிறேன்.

             இடையில் திரைப்படத்திற்கு பாடல் எழுத வேண்டும் என்ற ஆசையை என்னிடம் வெளிப்படுத்திய எனது எழுதுகோல் என்னை திரைத்துறையை நோக்கித் துரத்தியது..சொந்த நடையில் கவிதை எழுதிக்கொண்டிருந்த நான் சந்த நடைக்கு எழுத ஆயத்தமானேன்..மண்ணுலகை விட்டுச் சென்ற பாடகி சொர்ணலதா அவர்களின் குரலில்தான் என் முதல் திரைப்படப்பாடல் பதிவாகி வெளிவந்தது...மூன்று படங்கள் வெளிவந்து மூன்றும் தன் முகவரியை இழந்ததால் என் முகவரியும் தெரியாமற்போயிற்று.தற்போது நான்கு படங்களில் பணியாற்றி வருகிறேன்.வரட்டும் பார்ப்போம் வெற்றி எப்போது அரவணைக்கிறது என்று..
          நான் எழுதிய பாடல்களில் ஒரு பாடலின் இணைப்பை மட்டும் இங்கே தருகிறேன்.                                   தீபா மரியம் குரலில் எனது வரிகள் . ஒரே ஒரு வெற்றிப் பாடலைக் கொடுத்துவிட்டு இன்னும் அடையாளம் காணப்படாத படங்களில் நான் எழுதிய பாடல்களை அடையாளம் காட்டுகிறேன்.


          சோர்ந்து விழும்போதெல்லாம் மீசைக்காரனின் இந்த வரிகள்தான் புதிதாய் எம்மை பிறக்கச் செய்கிறது.

அடுத்த அறிமுகப் படலம்

"க'விதை'கள் விளைந்து கிடக்கின்றன"


                          நன்றி..
            மீண்டும் சந்திப்போம்..
                       மதுமதி  
         தூரிகையின் தூறல்  

58 comments:

  1. அழகாகச் சொன்னீர்கள் கவிஞரே... படைப்பாளி தன்னம்பிக்கையுடன் உரத்துச் சொன்னால்தான் படைப்புகள் ஜொலிக்கும். நிச்‌சயம் ஒரு நாள் திரைவானில் ஜொலித்து சிகரம் தொடுவீர்கள் நீங்கள் என மனதார வாழ்த்துகிறேன். இனி தொடரவிருக்கும் உங்களின் அறிமுகங்களுக்காக ஆவலுடன் காத்திருக்கிறேன்!

    ReplyDelete
  2. வலைச்சரம் தொடுக்க வந்த
    முழுமதியே!
    உம் முகவுரை உரைக்கவந்த
    மதுமதியே!
    அறிமுகப் படல வாசத்தில்
    மதிமயங்கிப் போனேன்!!

    இனிமையுற வலைச்சரம் தொடுத்திட
    என் மனமார்ந்த வாழ்த்துக்கள் நண்பரே.

    ReplyDelete
  3. நதிக்கரையை அறிமுகம் செய்துள்ளீர்கள்
    ஆழம் புரிந்து கொள்ளமுடிகிறது
    பாடல் வர்கள் அருமை
    நீங்கள் வென்றுதான் ஆகவேண்டும்
    ஆத்திகர் வழியில் சொன்னால் விதி அப்படி
    பெரியார் வழியில் சொன்னால் மதி அப்படி
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  4. தொடக்கமே தங்களின் தன்னம்பிக்கைக் காட்டுகிறது
    வலைச்சரப் பணிக்கு என்
    வாழ்த்துக்கள்!
    தொடருங்கள் தொடர்வேன்!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  5. அசத்தலான சுய அறிமுகம் தோழா....

    வாழ்த்துக்கள். தொடருங்கள்....

    ReplyDelete
  6. தன்னம்பிக்கையும் , ரசனை மனோபாவமும் தேவை என்றது
    அருமை . திரைப்பாடல் இனிமை . இதம். வாழ்த்துக்கள்!
    மதுமதியின் பெயர்க்காரணம் எதிர்பார்த்தேன்.

    ReplyDelete
  7. மிகவும் அழகான அறிமுகப்படலம்.
    ரசிக்கும் படியாக எழுதியுள்ளீர்கள்.

    வலைச்சரத்தில் இந்த வார ஆசிரியர் பொறுப்பேற்றதற்கு என் அன்பான வாழ்த்துக்கள். பாராட்டுக்கள்.

    எது செய்தாலும் அதை மிகச்சிறப்பாகவே செய்வீர்கள் என்ற முழு நம்பிக்கை எங்களுக்கு எப்போதும் உண்டு.

    அன்புடன் vgk

    ReplyDelete
  8. வாழ்த்துக்கள் நண்பரே....

    ReplyDelete
  9. வாழ்த்துகள் .. கலக்குங்கள்

    ReplyDelete
  10. வாழ்த்துக்கள் கவிஞர் சார். கலக்குங்கள்!!!

    ReplyDelete
  11. மேலும் மேலும் உயர என் மனமார்ந்த வாழ்த்துகள்

    ReplyDelete
  12. கலக்கல் ஆரம்பம் மாப்ள!...வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  13. முதலில் நாம் படைப்பாளி என்று மார் தட்டுவோம் அந்த சத்தம் கேட்டு நமது படைப்புகள் எழுந்து நிற்கட்டும்..
    உண்மைதான் நண்பரே தங்கள் எழுத்துக்கள் என் போன்றவர்களை எழுந்து நிற்க வைக்கிறது .
    பெரியார் வழியில் தொடர வாழ்த்துக்கள் .

    ReplyDelete
  14. மிகவும் அழகான அறிமுகப்படலம்.
    ரசிக்கும் படியாக எழுதியுள்ளீர்கள்.

    வலைச்சரத்தில் இந்த வார ஆசிரியர் பொறுப்பேற்றதற்கு என் அன்பான வாழ்த்துக்கள். பாராட்டுக்கள்.

    ReplyDelete
  15. கணேஷ்..

    உங்கள் வாழ்த்துகளுக்கும் என் மீதான நம்பிக்கைக்கும் நன்றி ஐயா.

    ReplyDelete
  16. மகேந்திரன்..

    உங்கள் வாழ்த்துகளுக்கு நன்றி தோழர்..

    ReplyDelete
  17. ரமணி..

    உங்கள் வாழ்த்துகளுக்கும் என் மீதான நம்பிக்கைக்கும் நன்றி ஐயா.

    ReplyDelete
  18. புலவர் ராமானுசம்..

    மிக்க நன்றி ஐயா..

    ReplyDelete
  19. தமிழ்வாசி பிரகாஷ்..

    நன்றி தோழர்..

    ReplyDelete
  20. ஸ்ரவாணி..

    மிக்க மகிழ்ச்சி..பெயர்க்காரணம் இன்னுமொரு சந்தர்ப்பத்தில் சொல்கிறேன் சகோதரி..

    ReplyDelete
  21. வை.கோபால கிருஷ்ணன்..

    உங்கள் வாழ்த்துகளுக்கும் என் மீதான நம்பிக்கைக்கும் நன்றி ஐயா.

    ReplyDelete
  22. சசிகுமார்..

    நன்றி தோழர்..

    ReplyDelete
  23. என் ராஜபாட்டை..

    நன்றி தோழர்..

    ReplyDelete
  24. ஷக்திபிரபா..

    நிச்சயமாக சகோதரி..

    ReplyDelete
  25. தனசேகரன்..

    நன்றி தோழர்..

    ReplyDelete
  26. விக்கியுலகம்..

    ஆமாம் தோழர்.நன்றி..

    ReplyDelete
  27. சசிகலா..

    மிக்க மகிழ்ச்சி தோழி..

    ReplyDelete
  28. லட்சுமி அம்மாள்..

    உங்கள் வாழ்த்துகளை பெற்றுக்கொண்டேன் அம்மா.

    ReplyDelete
  29. தன்னம்பிக்கை மிளிரும் வரிகளோடு ஒரு அசத்தலான அறிமுகப் பதிவு. இந்த நம்பிக்கையே இன்னுமின்னும் வெற்றிப்படிகளில் ஏற்றும். மனமார்ந்த வாழ்த்துக்கள் மற்றும் பாராட்டுக்கள்.

    ReplyDelete
  30. வாழ்த்துக்கள். தொடரருங்கள் உங்கள் பணியை உங்கள் பாணியில் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்

    ReplyDelete
  31. வாழ்த்துகள் மதுமதி சார்.

    ReplyDelete
  32. ரசிப்புத் தன்மையும் ரசித்ததை அழகாக சொல்லும் தன்மையும் போதும் ஒரு நல்ல படைப்பாளிக்கு.படைப்பு என்பது அற்புதமான விசயம்.

    அருமையான அறிமுகங்களுக்கு வாழ்த்துகள்...

    ReplyDelete
  33. அழகான தெள்ளத்தமிழில் அறிமுகம் தொடருங்கள் தொடருகிறோம்

    ReplyDelete
  34. வாழ்த்துக்கள் நண்பரே...

    ReplyDelete
  35. வணக்கம் பாஸ் இந்தவாரம் நீங்களா ஆசிரியர் பாராட்டுக்கள்
    கலக்குங்க

    திரைப்பட துறையில் தாங்கள் மேலும் வளர வாழ்த்துக்கள் பாஸ்

    ReplyDelete
  36. அருமையான தொடக்கம், வரும் சுவையான வாரத்துக்குக் கட்டியம் கூறி நிற்கிறது.வாழ்த்துகள்.

    ReplyDelete
  37. நல்ல துவக்கம் நண்பரே...

    உங்களது பாணியில் அறிமுகங்களை எதிர்பார்க்கிறேன்....

    ReplyDelete
  38. வியபதி

    கவியழகன்

    நன்றி..

    ReplyDelete
  39. கீதமஞ்சரி.

    உங்கள் வாழ்த்துக்கும் பாராட்டுக்கும் நன்றி..

    ReplyDelete
  40. ஸ்டார் ராஜன்

    இராஜேஸ்வரி

    நன்றி..

    ReplyDelete
  41. வீடு சுரேஸ்..

    சேகர்..

    நன்றி.

    ReplyDelete
  42. ரத்னவேல்..

    கே.எஸ்.ராஜு

    நன்றி...

    ReplyDelete
  43. சென்னை பித்தன்..

    மிக்க மகிழ்ச்சி ஐயா..

    ReplyDelete
  44. வெங்கட் நாகராஜ்..

    நிச்சயம் நல்ல அறிமுகங்களைக் கொடுக்கிறேன்..நன்றி..

    ReplyDelete
  45. வாழ்த்துக்கள் தொடருங்கள்.. ஆவலோடு எதிர்ப்பார்க்கிறோம் உங்களின் அறிமுகங்களை.

    ReplyDelete
  46. வெற்றிக் கனி கிட்டும் நாள் தூரத்தில் இல்லை.அயர்விலா உழைப்பு,சோர்விலா முயற்சி. முடிவு வெற்றி தவிர. வேறொன்றில்லை. வாழ்த்துக்கள் .

    ReplyDelete
  47. வலைச்சர ஆசிரியருக்கு வாழ்த்துகள்.... நல்ல துவக்கம்....

    தங்கள் பணி சிறப்பாக அமையட்டும்....

    ReplyDelete
  48. ரியாஸ்..

    காளிதாஸ் முருகையா..

    கோவை டூ தில்லி..

    மிக்க நன்றி..

    ReplyDelete
  49. //நான் படைப்பாளி என்று தன்னை முழுமையாக நம்பினவனே படைத்தலில் வென்றிருக்கிறான்.//
    உண்மைதான். சரியாகச் சொன்னீர்கள். தன்னை நம்புகிறவன் தான் உலகை வெல்கிறான்.

    அறிமுகமே அற்புதம்.என்னைப் போன்றோர்களுக்கு தெரியாத, தங்களின் பன்முகங்களை அறிமுகப்படுத்தியதற்கு நன்றி. இவ்வார வலைச்சர ஆசிரியர் பணி சிறக்க வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  50. வே.நடனசபாபதி..

    வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க மகிழ்ச்சி ஐயா.

    ReplyDelete
  51. ஈரோடு என்னோட சின்ன வயசு நினைவுகளில் பெரிய பங்கு வகிக்கும் ஊர், வா.ஊ.சி பார்க், பிருந்தாவன் கார்டன்ஸ், ஆஞ்சநேயர் கோவில், காவேரி ஆறு, கிறிஸ்டி ஜோதி ஸ்கூல், திண்டல் மலை எல்லாமும் சுத்தி இருக்கோம். அழகான ஊர். இப்ப எங்க போகணும்னு ஆசைன்னு கேட்டா மனதில் தோன்றும் ஊர். கொங்கு தமிழ் காதில் இனித்தது... நல்லா எழுதி இருக்கீங்க, நன்றி...;)

    ReplyDelete
  52. அப்படியா தோழர் மிக்க மகிழ்ச்சி..நன்றி.

    ReplyDelete
  53. மிக்க மிக்க வாழ்த்துகள் வாரம் சிறப்படைய வாழ்த்துகள் வாழ்த்துகள்.
    வேதா. இலங்காதிலகம்.

    ReplyDelete
  54. அருமையான அறிமுகம்....

    முத்தான கவிதைகள்....

    தொடக்கமே இத்தனை அற்புதம் என்றால் இனி தொடரப்போகும் வைர வரிகளும் சொல்லவும் வேண்டுமோ...

    உண்மையே மதுமதி சார்....

    வலைச்சர ஆசிரியர் பொறுப்பேற்றதற்கு என் அன்பு வாழ்த்துகள்பா...

    ReplyDelete
  55. கோவைக் கவி..

    மகிழ்ச்சி சகோதரி..நன்றி..

    ReplyDelete
  56. மஞ்சுபாஷிணி.

    மகிழ்ச்சி சகோதரி..நன்றி..

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது