07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Thursday, February 16, 2012

கவிதையும் கதையும்

நமக்குத் தொழில் கவிதை, நாட்டிற் குழைத்தல்
 இமைப்பொழுதுஞ் சோரா திருத்தல் - உமைக்கினிய
மைந்தன் கண நாதன் நங்குடியை வாழ்விப்பான்;
சிந்தையே!  இம்மூன்றும் செய்.

              கவிதை எழுதும் பதிவர்கள் அதிகம் எனவே எண்ணுகிறேன். நான் கல்லூரியில் படிக்கும்போது எழுதும் கவிதைகள் அனைத்தும் எனக்கு சிறந்ததாகத் தோன்றினாலும் அதனை வாசிக்கவோ, விமர்சிக்கவோ யாருமில்லை. ஆனால் வலைப்பூவில் நண்பர்கள் வட்டமும் அதிகம், உற்சாகப்படுத்துவோரும் அதிகம். அதனால் தைரியமாக கவிதை எழுதுகிறேன். இன்றைய வலைச்சரத்தினை கவிதையாகவும் கதையாகவும் தொடுக்கலாம் என எண்ணுகையில் எத்தனை கவிதைகள் மண்டிக்கிடக்கின்றன. சிறந்த கவிதைகள் பல இருந்தாலும் நான் படித்தவற்றில் சில உங்கள் பார்வைக்கு. 


           முதலில் தோழி ஹேமாவின் கவிதையான பொல்லாத கடவுள். கனவில் கூரை பிய்வதனை வைத்து அழகான கற்பனையுடன் கவிதையை வடித்திருக்கிறார்.

          சசிகலாவின் தண்ணீரின் தாகம். தண்ணீரின் தேவையை வலியுறுத்தும் கவிதை.அப்பாவி தங்கமணியின் மருதாணி நினைவுகள் வாசித்துப்பாருங்கள். சின்னவயதில் அம்மா இட்ட மருதாணியின் ஞாபகம் கட்டாயம் வரும்.


         களையெடுத்துப் படிக்க வைக்கும் அம்மாவுக்காக காதல் வேண்டாம் என்று சொல்கிறார் கவிதைவீதி சௌந்தர். பதிவுலகில் எல்லோரும் கவிஞர்களே என்று சொல்கிறார் ரமணி சார்.


"சீர்மிகு கவிகள் செய்ய

சிந்தனை அதிகம் வேண்டாம்

கூர்மதி அதுவும் வேண்டாம்
குழப்பமும் சிறிதும் வேண்டாம்" 

என்று அருமையாக உரைக்கிறார்.

          என்.விநாயகமுருகனின் ஜப்திக்கு வந்த வீட்டில் நடக்கும் சோக நிகழ்வினை படம் பிடித்துக் காட்டுகிறார்.



          மாய உலகம் ராஜேஷினை அவ்வளவு எளிதாக யாரும் மறந்துவிட முடியாது. மகாகவி பாரதியாரின் பாடல் வரிகளை நமக்கு ஞாபகமூட்டி செல்கிறார். அவருக்கு இது சமர்ப்பணம்.

        நிலாமகளின் செவிக்குணவு. ஒரு குழல் விற்பவனின் மனநிலையை நம்முன் நிறுத்துகிறார்.

பெற்றோரை தம்
"பிடிவாதத்தால் மசிய வைக்கும்
குழந்தைகள்
சூழ்ந்தனர் அவனை
இன்றிரவு உறங்கலாம்
அவனும்
                     நிறைந்த வயிறுடன்" அற்புத வரிகள்.

        கௌசல்யாவின் அதேதான்

அஞ்சல் முகவரியில்
நீ எழுதிய எனது பெயரிலும்
காதலை தேடுகிறேன்!!!

வாசிக்க சுவராஸ்யமாக உள்ளது.


        குணாதமிழின் தாவரத்தின் உணர்வுகளை உணரசெய்யும் தாவரங்கள் பேசுகின்றன . எனக்கு மிகவும் பிடித்த கவிதைகளில் ஒன்று.சின்ன குழந்தைகள் சுவர்களில் கிறுக்கும் கிறுக்கல்கள் கூட அழகுதான் என நான் நினைத்து வரைந்த பிஞ்சுவிரலின் பென்சிலோவியம் . வேடந்தாங்கல் கருனின் ராத்திரி நேர இம்சையில் ஒரு ஆக்ஸிடண்டில் இறந்த ஒரு மனிதனின் சோகம். ஸ்ரீமதியின் பின்னிரவு மழையில் நனைந்து பாருங்கள். கவிதை போல சுகமானது.

         கதை எழுதுவது அவ்வளவு எளிது என்று எனக்குத்தெரியவில்லை. நான் முதலில் எழுதிய கதை மொக்கராசுவின் கட்டில். ஒரு மனிதன் கட்டில் மேல் கொண்டிருக்கும் காதலை வர்ணிக்க முயற்சித்தேன். அது சோக முடிவினைத் தந்தாலும் அதிகம் ரசிக்கப்பட்ட ஒரு கதை. ஆனால் இரண்டு கதைகள்தான் முயற்சித்தேன்.

        பல முன்னனி எழுத்தாளர்களின் அற்புதமான கதைகளைப் படிக்க அழியாச்சுடர்கள் பக்கம் வாருங்கள்.   எனக்கு மிகவும் பிடித்த தி.ஜானகிராமனின் முள்முடி கதை அதில் உள்ளது. கல்லூரிக் காலங்களில் நான் மிகவும் ரசித்து படித்த கதைகளில் இதுவும் ஒன்று.

        கதையினைப் பற்றி சொல்லும்போது வை.கோபாலகிருஷ்ணன் ஐயாவைப்பற்றி சொல்லாமல் இருக்க முடியாது. தினமலர் போட்டிக்காக அவர் எழுதிய என் உயிர்தோழியில் பாட்டியும் பேத்தியின் சிந்தனையுமாக இருக்கும் ஒரு கதை. மற்றொன்று ஜாதிப்பூ. ஒரு பூ விற்கும் பெண்மணியினைப் பற்றிய கதை. இதில் சுவராஸ்யமான திருப்பமும் உள்ளது.

       ஷைலஜாவின் அரங்க பவன் கதையில் ஒரு மனிதரின் விடாப்பிடியான சுபாவத்தினை அழகான கதையாக வடித்துள்ளார். படித்துப் பாருங்கள். பிடித்துப்போகும்.

      ஸாதிகாவின் அதிர்ஷ்டக்காரி. தாழ்வு மனப்பான்மையுள்ள ஒரு மணப்பெண்ணைப் பற்றிய கதை. ஒரு கணவன் மனைவிக்குமிடையே நடக்கும் கோபியின்   24/5 சிறுகதையினை வாசியுங்கள்.ஒரு கணவனின் பாசத்திற்கு ஏங்கும் மனைவியின் கதை. முடிவும் நன்று.


       சிறுவர் உலகத்தினை புரிந்து கதை எழுதும் ஒரு வலைப்பூ காஞ்சனா ராதாகிருஷ்ணனின் சிறுவர் உலகம்.மூத்தோர் சொல் மதிப்போம் கதை சிறுவர்கள் மூத்தோர்களை மதிக்க கற்றுக்கொடுக்கிறது.


அறிமுகம் :
 1.சசிகலா எழுத்தில் உலாவர தென்றல் வாசியுங்கள். விதவிதமான   கவிதைகளில் நம்மை கிறங்கடிக்கிறார்.
 2. மாலதியின் சிந்தனைகள் ஒரு அருமையான வலைப்பூ. அவர் வரைந்த மரண சாசனம் கவிதை அருமையாக உள்ளது.
     படங்கள் அனைத்தும் கூகுள் தேடலில் கிடைத்தவை. இம்புட்டு தூரம் வந்தாச்சு. மறந்திடாம தமிழ்மணத்தில் வாக்கும் உங்கள் அருமையான கருத்துகளையும்  இடுங்கள். 
      

22 comments:

  1. அருமையான பதிவர்களையும் அவர்களுடன் என்னையும்
    ஒருவராக இணைத்து அறிமுகம் செய்தமைக்கு
    மனமார்ந்த நன்றி
    அறிமுகம் செய்யப்பட்ட அனைவருக்கும்
    அழகாக அறிமுகம் செய்த தங்களுக்கும்
    மனமார்ந்த வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. அருமையான அறிமுகங்கள்! நல்ல தொகுப்பு! அவசியம் படித்துப் பார்க்கிறேன்.

    ReplyDelete
  3. Thankyou திரு விச்சு
    வலைப்பூவில் எழுதுவதை சிலகாலம் மறந்திருந்தேன் இப்படி உங்களைமாதிரி சிலர் கவனித்துப்பெருமைப்படுத்துவதால் மேலும் எழுத ஆர்வம் உண்டாகிறது நன்றி.
    மற்றவர்கள் படைப்புகளையும் உங்கள் மூலம் வாசிக்க இருக்கிறேன்.

    ReplyDelete
  4. ம‌கிழ்வும் ந‌ன்றியும்! அறிமுக‌ப்ப‌டுத்த‌ப்ப‌ட்ட‌ அனைவ‌ருக்கும் வாழ்த்துக‌ள்!!

    ReplyDelete
  5. வலைப்பூ அறிமுகத்திற்கு நன்றி.தாங்கள் அறிமுகப்படுத்திய மற்ற தளங்களையும் அவசியம் பார்க்கிறேன்.

    ReplyDelete
  6. Nice collection of blogs... Some are new to me... Many thanks for including mine as well... :)

    ReplyDelete
  7. என்னை அறிமுகப்படுத்தியமைக்கு மிக்க நன்றி.

    ReplyDelete
  8. அறிமுகங்களை வாசிப்பதும் சுவை தான் புது அறிமுகஸ்தர்களிற்கு வாழ்த்துகளும், தங்களின் பணிக்கும் வாழ்த்துகள்.
    வேதா. இலங்காதிலகம்.

    ReplyDelete
  9. அருமையான அறிமுகங்கள்! நல்ல தொகுப்பு!
    வாழ்த்துகள்.

    ReplyDelete
  10. // கதையினைப் பற்றி சொல்லும்போது வை.கோபாலகிருஷ்ணன் ஐயாவைப்பற்றி சொல்லாமல் இருக்க முடியாது. தினமலர் போட்டிக்காக அவர் எழுதிய என் உயிர்தோழியில் பாட்டியும் பேத்தியின் சிந்தனையுமாக இருக்கும் ஒரு கதை. மற்றொன்று ஜாதிப்பூ. ஒரு பூ விற்கும் பெண்மணியினைப் பற்றிய கதை. இதில் சுவராஸ்யமான திருப்பமும் உள்ளது.//

    என்னையும் என் இரு சிறுகதைகளையும் இன்று தாங்கள் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியதற்கு என் மனமார்ந்த நன்றிகள்.

    அடையாளம் காணப்பட்டுள்ள மற்ற பதிவர்களுக்கும் என் அன்பான வாழ்த்துகள்.

    ReplyDelete
  11. தமிழ்மணத்தில் 2 ஆவது வாக்கு என்னுடையது. இப்போது தான் கண்டு படித்து வாக்கு அளித்துவிட்டேன்.
    தங்கள் தகவலுக்காக மட்டுமே.
    அன்புடன் vgk

    ReplyDelete
  12. எதிர்பாராத ஒரு மகிழ்ச்சி...! எனது கவிதையை இங்கே அறிமுகம் செய்தமைக்கு மிக்க நன்றிகள்.

    பிற அறிமுகங்களில் சிலரின் கவிதை படித்திருக்கிறேன்...தவறவிட்ட தளங்களை இனி படித்துவிடுகிறேன்.

    அறிமுகங்கள் அனைவருக்கும் என் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  13. அருமை வாழ்த்துகள்

    ReplyDelete
  14. அருமையான பதிவர் அறிமுகம்.

    தொடருங்கள்... தொடர்கிறோம்.

    ReplyDelete
  15. இவர்களில் பல பதிவர்களையும் குறிப்பிடப்பட்ட பதிவுகளையும் முன்பே அறிந்திருக்கிறேன் என்பதில் எனக்குப் பெருமையாக உள்ளது. தொடரும் பதிவுகளில் தங்கள் உழைப்பும் ஆர்வமும் தெரிகிறது. பாராட்டுகள் விச்சு. குறிப்பிடப்பட்டப் பதிவர்களுக்கு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  16. நல்ல அறிமுகங்கள். அனைவருக்கும் பாராட்டுகள்.

    ReplyDelete
  17. அறிமுகங்கள் அருமை நண்பா..

    எனது வலையையும் அறிமுகம் செய்தமைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்..

    ReplyDelete
  18. இன்றைய அறிமுகங்களுக்கு எனது வாழ்த்துகள்..சிறப்பான பணி தொடரட்டும்.வாக்கிட்டேன்.நன்றி

    ReplyDelete
  19. அருமையான பதிவர்களையும் அவர்களுடன் என்னையும்
    ஒருவராக இணைத்து அறிமுகம் செய்தமைக்கு மனமார்ந்த நன்றி.
    தினம் தினம் வண்ண வண்ண பூக்களோடு வளம் வரும் தங்கள் பணி தொடர வாழ்த்துக்கள் .

    ReplyDelete
  20. மிக்க மகிழ்ச்சி விச்சு என்னையும் வரிசைக்குள் சேர்த்தமைக்கு.மற்றைய கவிஞர்களுக்கும் என் வாழ்த்துகள் !

    ReplyDelete
  21. வலைச்சரத்தில் என்னை அறிமுகப் படுத்தியமைக்கு உளம் கனிந்த பாராட்டுகளும் நன்றியும் .

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது