07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Monday, February 20, 2012

வலைச்சரத்தில் தமிழ்பேரண்ட்ஸ்



வணக்கம் அன்பிற்கினிய பதிவுலக உறவுகளே..இந்தவார வலைச்சர ஆசிரிய பணியை முதல் பதிவாய் சுய அறிமுகத்துடன் தொடங்குகின்றேன்.இந்த வாய்ப்பினை நல்கிய பின்னூட்டப் பிதாமகன் சீனா ஐயா அவர்களுக்கு மிக்க நன்றி.என்னை அவரிடம் அறிமுகம் செய்து வைத்த பதிவுலக நண்பர் தமிழ்வாசி பிரகாஷ் மற்றும் நிர்வாகி தமிழ்ப்பிரியன் அவர்களுக்கும் மிக்க நன்றி.

நான் சம்பத்குமார் .சொந்த ஊர் தேனி மாவட்டம் கம்பம்.தற்சமயம் கோவையில் தனியார் ஆட்டோமொபைல் ஒர்க்ஷாப்பில் ஸ்பேர் பார்ட்ஸ் மேனேஜராக பணிபுரிந்து வருகின்றேன்.பணிச்சுமை போக கிடைக்கின்ற நேரங்களில் நான் கற்றதையும் பெற்றதையும் வாழும் தலைமுறைக்கும் வருங்கால தலைமுறைக்கும் பகிர்ந்து விட்டுச் செல்ல தமிழ் வலையுலகில் எனது கவிதை கிறுக்கல்களோடு பகிர்ந்து வருகின்றேன்.கடந்த ஜூலையில் பதிவுலகில் தமிழ்பேரன்ட்ஸ் வலைத்தளம் ஆரம்பித்து இன்று வரை சுமார் 130 பதிவுகளை கடந்து இன்னும் பயணித்துக் கொண்டிருக்கின்றேன்.சென்ற செப்டம்பர் முதல் CUTEPARENTS என ஆங்கிலத்தளமும் ஆரம்பித்து அதிலும் பதிவுகளை தொடர்ந்து கொண்டுள்ளேன்.பதிவுகளில் பெரும்பாலும் குடும்ப உறவுகளில், பெற்றோர்கள் குழந்தைகளை வளர்ப்பதில் உள்ள விஷயங்களை பதிவாக பகிர்ந்து கொண்டிருக்கின்றேன்.

மழலை சமுதாயம் கோலோச்சுகின்ற சமயம் தொலைக்காட்சிகளிலும் ஊடகங்களிலும் அவர்களின் பங்கேற்பு அபரிமிதமாகவே உள்ளது.விளையாட்டு மற்றும் ஏனைய துறைகளிலும் கூட அவர்களின் திறமைகள் மற்றும் ஆர்வங்கள் எல்லாமே வியப்பைத்தருகின்றன.எனினும் நமது நாட்டில் எந்த அளவிற்க்கு மழலை சமுதாயம் முன்னேற்றம் கண்டுள்ளதோ அந்த அளவிற்க்கு பின்னடைவும் கண்டுவருகின்றது என்பது மறுக்க முடியாத உண்மை.இதனை அதிகரித்து வரும் குழந்தைகள் கடத்தல்,நரபலி,ஆசிரியர் மாணவர் உறவு முறிவு போன்றவற்றில் இருந்து நன்கு உணரமுடியும்.தவறான உறவுகளில் பிறக்கும் குழந்தைகளிலிருந்து பெண் சிசு கொலைகள் வரை இன்று சர்வ சாதரணமாகவே சமுதாயத்தில் நிகழ்ந்து கொண்டிருக்கும் அல்லது கேட்டுக் கொண்டிருக்கும் அன்றாடச் செய்திகளாகிவிட்டன.குழந்தைகளின் வாழ்க்கை ஆரம்பத்திலிருந்தே நெருக்கடிகளுக்கும் பயமுறுத்தல்களுக்கும் ஒடுங்கி வாழும்நிலைக்கு தள்ளப்பட்டு விடுவதால் அவர்களின் வளர்ச்சியில் தீவிரவாதமும் வன்முறையும் கூடவே வளர்ந்துவிடுகிறது.


குழந்தைகளின் வளர்ப்புமுறை சரியில்லையென்றால் அவர்களின் பாதை தவறாகப் போய்விடுகிறது.அதே சமயத்தில் அவர்களின் வழிகாட்டல் சரியாக இருந்தால் சாதனைகளாக மாறிவிடுகின்றன.

இனி பதிவுகளின் பூச்சரம் 

படிப்பு ஒருவரை முழு மனிதனாக்குகிறது. கலந்துரையாடல் ஒரு மனிதனை தயார்படுத்துகிறது.ஆனால் எழுதுதல்தான் ஒரு மனிதனை ஒரு நுட்பமான, சரியான மனிதனாக்குகிறது.குழந்தைகளின் எழுத்தாற்றல் திறனை மேம்படுத்துவது எப்படி ? என்ற பதிவில் காணலாம் 

குழந்தையை ஈன்றெடுத்து வளர்ப்பதில் பெற்றோகளின் மனப்போங்கை வைத்து ஐந்து வகைகளாக பிரிக்கலாம் அவர்களை பார்த்துவிட்டு வாங்களேன்.

பள்ளியிறுதித் தேர்வு நெருங்கிவிட்டது.வாழ்க்கையில் சாதனை புரிய அடித்தளமாய் விளங்கப் போகும் இந்த தேர்வு நேரத்தில் குழந்தைகள் படிப்பதற்காக பெற்றோர்கள் செய்யவேண்டியவை. 

வளரும் குழந்தைகளின் எதிர்காலத்திற்காக நாம் தர வேண்டிய மிகப்பெரிய சொத்து தான் என்ன ? இங்கு சென்று பார்த்து விட்டு வரலாமே 

குழந்தைகளை இயல்பாக வாழவிடுங்கள். இயந்திரமாக அல்ல. சுதந்திரமாக வாழவிடுங்கள். அடிமையாக அல்ல. பாசத்தையும், பந்தத்தையும் புறம்தள்ளும் குதிரைப் பந்தயம் இனி நமக்கு வேண்டவே வேண்டாம்.மொத்தத்தில் அவர்கள் என்ன பந்தயக்குதிரைகளா ? 

பல பெற்றோர்கள் வீட்டில் அப்பா அம்மாவாக இருப்பதில்லை. டீச்சராக மாறி எப்போதும் எதைப்பற்றியாவது பாடம் நடத்திக் கொண்டே இருக்கிறார்கள். எப்போது பார்த்தாலும் எதையாவது கற்றுக்கொடுத்துக்கொண்டே இருக்காதீர்கள். குழந்தைகளுக்கு ஒவ்வொன்றையும் கற்றுத் தரும்போதும் அதை அவர்களாக கற்பதிலிருந்து நாம் தடை செய்கிறோம் என்பதை மறந்துவிடாதீர்கள்.வேண்டாமே இந்த ஆசிரியர்ப்பணி 

நம் குடும்பத்தில் ஒன்றிற்க்கு மேற்பட்ட குழந்தைகள் இருந்தால் போதும்.விடியற்காலையில் எழுவதிலிருந்து இரவு தூங்கப்போகும் வரை வீட்டையே அமர்கள்ப்படுத்திவிடுவார்கள்.இது மாதிரி சண்டையிடும் குழந்தைகளை சாமளிக்கும் வழிகள்



வரைந்ததில் கவர்ந்த கவி வரிகள் சில : 

தூங்க நினைத்து முகம் புதைக்கும் போது 
எஞ்சின் தடதடப்பில் கனவு மறந்து போயிருக்கும்....!


வாழைத் தோட்டங்கள் விழித்திருந்தன
புலர்ந்த போதுவெளிரிய நிலா
வயல் நீரில் தேய்ந்துபோனது..!



தீர்க்கமாய்த் தீர்மானித்தேன்…வாழ்க்கையைத்
தருகிற கொடி ஒன்று வரும்வரை
கொடிகள் தைப்பதைத் தள்ளி வைக்கலாமென்று….


அம்மாவின் அணைப்பிலிருந்து நீங்கிய நினைவில்
அழுதும் வந்தவுடனே தூங்கியும்
கனிவாய்க் குறுகுறுப்பாய் நோக்கியும் ...


என் தாய் கொடுக்கத் தவறிய முத்தங்களையும்…!
என் மனைவியிடம் அரைமனதுடன் பெற்ற
அந்தரங்க முத்தங்களையும்…! விட...



இவ்வளவு போதும் என்று நினைக்கின்றேன்.எனது படைப்புகளை தவறவிடாமல் வாசித்து தளத்தில் உறுப்பினராக உள்ள அனைத்து நல் இதயங்களுக்கும் இந்த நேரத்தில் நன்றியை தெரிவிக்கின்றேன்.புதிய உறுப்பினர்களை வருக வருக என அன்போடு அழைக்கின்றேன்

தமிழ் தளத்திற்க்குச் செல்ல : தமிழ் பேரன்ட்ஸ்

ஆங்கிலத் தளத்திற்க்கு செல்ல : Cute Parents

நன்றி நண்பர்களே ! நாளைய தினம் பதிவுலகில் பதிவெழுத வரும் ஒவ்வொருவருக்கும் கண்டிப்பாய் உதவப்போகும் பதிவிகளின் வழியே உங்களை சந்திக்க வருகின்றேன்.

நட்புடன் நலம் நாடும்
சம்பத்குமார்

58 comments:

  1. வாழ்த்துக்கள் மாப்ள!

    ReplyDelete
  2. வணக்கம் நண்பா,
    நலமா?
    அருமையான அறிமுக விளக்கத்தோடு வலைச் சரத்தின் ஆரம்ப பதிவினைக் கொடுத்திருக்கிறீங்க.
    இந்த வாரம் பூரா தங்கள் மழலை மொழியால் எம் போன்ற வாசக உள்ளங்களைக் கட்டிப் போடப் போகின்றீர்கள் என்பதற்கு சாட்சியாய் இப் பதிவே உள்ளது!

    தொடர்ந்தும் ஜமாயுங்க.

    வாழ்த்துக்கள் நண்பா.

    ReplyDelete
  3. சரியான வளர்ப்பு இல்லாத குழந்தைகளே! இந்த நாட்டில் தீவிரவாதிகளாகவும்,குற்றவாளிகளாகவும் பரிணாமிக்கிறார்கள் என்பது சத்யமான வார்த்தை. இராமனுக்கு அனில் உதவியது போல இந்த நாட்டுக்கு ஒரு நல்ல கருத்தை தூவிகிறீர்கள் வளர்வது நல்ல சமுதாயமாக இருக்கும்.உங்கள் பணி வலைசரத்திலும் சிறக்க வாழ்த்துகிறேன்!

    ReplyDelete
  4. @ விக்கியுலகம் said...
    //வாழ்த்துக்கள் மாப்ள!//

    மிக்க நன்றி மாம்ஸ்

    ReplyDelete
  5. @ நிரூபன் said...

    வாங்க நிரூ..நான் நலம்.நீங்க நலமா ?

    வருகைக்கும் வாழ்த்திற்க்கும் மிக்க நன்றி

    ReplyDelete
  6. @ வீடு K.S.சுரேஸ்குமார்

    வாங்க சுரேஸ் வருகைக்கும் வாழ்த்திற்க்கும் மிக்க நன்றி

    ReplyDelete
  7. வாழ்த்துக்கள் ! அசத்துங்க சார் !

    ReplyDelete
  8. @ திண்டுக்கல் தனபாலன் said...
    //வாழ்த்துக்கள் ! அசத்துங்க சார் !//

    வருகைக்கும் வாழ்த்திற்க்கும் மிக்க நன்றி நண்பரே

    ReplyDelete
  9. Vazhthukkal....
    Sambath.....

    Thodarnthu kalakkunga....
    Kathirukirom....

    Nalla samuthaayathai
    uruvaakkuvom.....

    ReplyDelete
  10. வாங்க சம்பத்.... அறிமுக இடுகை கலக்கறிங்க... இனிதே தொடர வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  11. //NAAI-NAKKS said...

    Nalla samuthaayathai
    uruvaakkuvom.....//

    அய்யா என்ன சொன்னீங்...!!

    ReplyDelete
  12. 'வலையுலக டாக்டர். மாத்ருபூதம்' சம்பத் வாழ்க!!

    ReplyDelete
  13. அசத்தல் அறிமுகம் .குழந்தையில் இருந்து ஆரம்பமாகும் தங்கள் அறிமுகம் இனிதே தொடர வாழ்த்துக்கள் .

    ReplyDelete
  14. வருக! வருக!! சிறந்த பதிப்பு தருக!!!

    ReplyDelete
  15. வலைச்சரத்தில் கோலோச்ச வாழ்த்துக்கள் நண்பரே!

    ReplyDelete
  16. வலைச்சர வாசகர்களே..!!

    இனி வலைச்சரத்திலும் வசந்தகாலத்தை எதிர்பார்க்கலாம்..!!

    மழலைமொழி கேட்கலாம்..!!

    உங்கள் மனபாரமும் குறையும்.!!

    இந்த வார வலைச்சரத்தை தொடுக்கும் நண்பர் சம்பத் குமாரும் ஒரு குழந்தைப்போலவே.. !!

    குழந்தைக்குணம் கொண்ட என் அன்புக்குரிய பதிவர் திரு.சம்பத்குமார் தொடுக்கும் வலைச்சரப் பதிவுகளும் அவ்வாறே இனிமையானதாகவே இருக்கும்..!!!


    *****

    இனிதே தொடர எனது வாழ்த்துக்கள்.!!!

    ReplyDelete
  17. அருமைப் பதிவு வாழ்த்துகள்

    ReplyDelete
  18. வணக்கம் தோழர்..நல்லதொரு அறிமுகம்..இந்த வாரத்தை சிறப்பாய் எடுத்துச் செல்ல வாழ்த்துகள்.

    ReplyDelete
  19. அறிமுகமே அசத்தல் கலக்குங்க சம்பத்

    ReplyDelete
  20. வாழ்த்துகள் சகோ.

    ReplyDelete
  21. @ NAAI-NAKKS said...

    மிக்க நன்றி நண்பரே

    ReplyDelete
  22. @ ! சிவகுமார் ! said...
    //'வலையுலக டாக்டர். மாத்ருபூதம்' சம்பத் வாழ்க!!//

    வணக்கம் சிவா..நான் டாக்டரெல்லாம் கிடையாது ஹி ஹி ஹி

    ReplyDelete
  23. @ தமிழ்வாசி பிரகாஷ் said...
    //வாங்க சம்பத்.... அறிமுக இடுகை கலக்கறிங்க... இனிதே தொடர வாழ்த்துக்கள்.//

    வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி பிரகாஸ்

    ReplyDelete
  24. @sasikala said...

    //அசத்தல் அறிமுகம் .குழந்தையில் இருந்து ஆரம்பமாகும் தங்கள் அறிமுகம் இனிதே தொடர வாழ்த்துக்கள் .//

    வாழ்த்துக்கு நன்றி சகோதரம்

    ReplyDelete
  25. @ வா.கோவிந்தராஜ், said...

    //வருக! வருக!! சிறந்த பதிப்பு தருக!!!//

    தங்களின் வரவேற்புக்கு மிக்க நன்றி நண்பரே

    ReplyDelete
  26. @ Abdul Basith said...

    //வலைச்சரத்தில் கோலோச்ச வாழ்த்துக்கள் நண்பரே!//

    வாங்க சகோ..வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி

    ReplyDelete
  27. @ தங்கம் பழனி said...

    மிக்க நன்றி நண்பரே

    ReplyDelete
  28. @ பன்னிக்குட்டி ராம்சாமி said...

    //வாழ்த்துகள் பாஸ்...!//

    வருகைக்கும் வாழ்த்திற்க்கும் நன்றி நண்பரே

    ReplyDelete
  29. @ DhanaSekaran .S said...

    //அருமைப் பதிவு வாழ்த்துகள்//

    மிக்க நன்றி நண்பரே

    ReplyDelete
  30. @ மதுமதி said...

    //வணக்கம் தோழர்..நல்லதொரு அறிமுகம்..இந்த வாரத்தை சிறப்பாய் எடுத்துச் செல்ல வாழ்த்துகள்.//

    வணக்கம் தோழரே

    வருகைக்கும் வாழ்த்திற்க்கும் மிக்க நன்றி

    ReplyDelete
  31. @ஆரூர் மூனா செந்தில் said...

    //அறிமுகமே அசத்தல் கலக்குங்க சம்பத்//

    வணக்கம் செந்தில் அண்ணா

    வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி

    ReplyDelete
  32. @ Prabu Krishna said...

    //வாழ்த்துகள் சகோ.//

    வருகைக்கும் வாழ்த்திற்க்கும் மிக்க நன்றி சகோ

    ReplyDelete
  33. வாழ்த்துக்கள் தொடர்ந்து நல்ல அறிமுகங்களைத் தருவீர்கள் என்ற ஆவலில் தொடர்கின்றேன் கலக்குங்க சகோ!

    ReplyDelete
  34. ஆரம்பமே அசத்துகிறது....

    வலைச்சரத்தில் சிறப்பான தங்கள் பணி தொடர நான் வாழ்த்துகிறேன்.....

    ReplyDelete
  35. உங்கள் பதிவுகள் அனைத்தும் என் போன்ற பெற்றோருக்கு பயனுள்ளதாக இருக்குமென நம்புகிறேன். வாழ்த்துக்கள்

    ReplyDelete
  36. வாழ்த்துகள் நண்பா .. கலக்குங்கள்

    ReplyDelete
  37. @ தனிமரம் said...
    //வாழ்த்துக்கள் தொடர்ந்து நல்ல அறிமுகங்களைத் தருவீர்கள் என்ற ஆவலில் தொடர்கின்றேன் கலக்குங்க சகோ!//

    நிச்சயம் ஆவலை பூர்த்தி செய்ய முயற்சிக்கின்றேன் சகோ

    வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி

    ReplyDelete
  38. @ கவிதை வீதி... // சௌந்தர் // said...

    //ஆரம்பமே அசத்துகிறது....

    வலைச்சரத்தில் சிறப்பான தங்கள் பணி தொடர நான் வாழ்த்துகிறேன்.....//

    வாழ்த்திற்க்கு மிக்க நன்றி நண்பரே

    ReplyDelete
  39. @ Rathnavel Natarajan said...

    //வாழ்த்துகள்.//

    மிக்க நன்றி ஐயா

    ReplyDelete
  40. @ "என் ராஜபாட்டை"- ராஜா said...

    //வாழ்த்துகள் நண்பா .. கலக்குங்கள்//

    நன்றி ராஜா அவர்களே

    ReplyDelete
  41. ஆசிரியர் பணிக்கு வாழ்த்துக்கள்,சம்பத்குமார்.

    ReplyDelete
  42. @ RAMVI said...

    //ஆசிரியர் பணிக்கு வாழ்த்துக்கள்,சம்பத்குமார். //

    வாழ்த்துக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி சகோ..

    ReplyDelete
  43. வாழ்த்துகள் நண்பரே...

    ReplyDelete
  44. நல்ல தொடக்கம். வாழ்த்துகள்.

    ReplyDelete
  45. @ ராஜா MVS said...

    //வாழ்த்துகள் நண்பரே...//

    வருகைக்கும் வாழ்த்திற்க்கும் மிக்க நன்றி

    ReplyDelete
  46. @ சித்திரவீதிக்காரன் said...

    //நல்ல தொடக்கம். வாழ்த்துகள்.//

    வருகைக்கும் வாழ்த்திற்க்கும் மிக்க நன்றி நண்பரே

    ReplyDelete
  47. புதிய பொறுப்புக்கு வாழ்த்துகள் சுய அறிமுகம் நல்லா இருக்கு.

    ReplyDelete
  48. ஆரம்பமே அசத்தல்...

    வாழ்த்துக்கள் சகோ

    ReplyDelete
  49. //@ ஆமினா said...
    ஆரம்பமே அசத்தல்...

    வாழ்த்துக்கள் சகோ//

    மிக்க நன்றி சகோ

    ReplyDelete
  50. குழந்தைகளின் வளர்ப்புமுறை சரியில்லையென்றால் அவர்களின் பாதை தவறாகப் போய்விடுகிறது.அதே சமயத்தில் அவர்களின் வழிகாட்டல் சரியாக இருந்தால் சாதனைகளாக மாறிவிடுகின்றன.//

    உண்மைதான்.

    உங்கள் தமிழ்பேரண்ட்ஸ் தளத்தைப் படிக்கும் ஆவலை தூண்டிவிட்டு விட்டது, உங்கள் அறிமுக பதிவு.

    ReplyDelete
  51. தங்கள் வலையுலக அறிமுகம் சிறப்பு வாழ்த்துகள்.
    வேதா. இலங்காதிலகம்.

    ReplyDelete
  52. @ கோமதி அரசு said...
    ////குழந்தைகளின் வளர்ப்புமுறை சரியில்லையென்றால் அவர்களின் பாதை தவறாகப் போய்விடுகிறது.அதே சமயத்தில் அவர்களின் வழிகாட்டல் சரியாக இருந்தால் சாதனைகளாக மாறிவிடுகின்றன.//

    உண்மைதான்.

    உங்கள் தமிழ்பேரண்ட்ஸ் தளத்தைப் படிக்கும் ஆவலை தூண்டிவிட்டு விட்டது, உங்கள் அறிமுக பதிவு.////

    மிக்க நன்றி சகோதரி

    ReplyDelete
  53. @ kovaikkavi said...

    //தங்கள் வலையுலக அறிமுகம் சிறப்பு வாழ்த்துகள்.
    வேதா. இலங்காதிலகம்.//

    மிக்க நன்றி சகோதரி

    ReplyDelete
  54. பணி சிறக்க வாழ்த்துக்கள் நண்பரே..

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது