07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Friday, August 8, 2014

அரட்டைக் கச்சேரி -- 5









கடந்த ஒரு வாரமாகவே சென்னையில் ' நச  நச '  என்று மழைத் தூரல். மழை பெய்தால்   நன்கு பெய்ய வேண்டும். ஆனால் இது என்ன இரண்டுங்கெட்டான் நிலையல்லவா எடுத்திருக்கிறது மழை என்று சலிப்பாக இருந்தது.

ஆனால் செடி கோடிகளுக்கு ஒரே கொண்டாட்டம். செடி கொள்ளாமல் செம்பருத்தி பூக்கள் . சந்தன முல்லையின் வாசனையோ  மாடி எங்கும் பரவிக் கிடந்தது. இந்த சிக்கனமான  பருவமழை இதை மட்டுமா கொண்டு வந்திருக்கிறது. இல்லை நாங்களும் தான் இந்தத் திடீர் மழை தந்த பரிசு என்று கட்டியங் கூறுவது போல், அங்கங்கே இருமல், ஜலதோஷம், ஜுரம்.....டாக்டர் கிளினிக்  வாசல் சொல்லியது.

டாக்டர் என்று சொல்லும் போது  எனக்கு உடனடியாக நினைவிற்கு வருவது திரு முருகானந்தம் அவர்கள்  எழுதும் ஹாய் நலமா? தளம் தான். டாக்டர் மருத்துவக் கட்டுரை எழுதுவதில்  என்ன அதிசயம் என்று உங்களுக்குத் தோன்றலாம். ஆனால், அதை பாமரருக்கும் புரியும் வகையில் எழுதுவதில்  திரு. முருகானந்தத்திற்கு இணை அவரே தான் என்று சொல்ல வேண்டும்.

சர்க்கரை நோய் வராமல் இருக்க வேண்டுமா? அப்படியானால் நீரிழிவு வராமல் தடுக்கும் உபாயங்கள்  படியுங்கள்.

ஒரு லட்சம் வருடங்களுக்குப் பிறகு நம் வழித் தோன்றல்கள்  எப்படி இருப்பார்கள் என்றுத் தெரிந்து கொள்ளுங்களேன்.


அளவோடு காப்பி அருந்த நமக்கு அறிவுறுத்துகிறார். ஏன் என்று  இங்கே பாருங்கள்.

உண்ட களைப்புத் தொண்டனுக்கும் உண்டு . அந்த பகல் தூக்கம் நல்லதா ? கெட்டதா ? என்ன சொல்கிறார் பார்ப்போம்.

குழந்தைகள்  சற்றே வித்தியாசமாக  நடந்து கொண்டால்  எல்லோருக்கும் காட்சிப் பொருளாகி விடுகிறார்கள். ஆட்டிசம் குறைபாடு இருக்கும் குழந்தைகளும் இதற்கு விதிவிலக்கல்ல.ஆட்டிசம் பற்றிய விழிப்புணர்வு  நம் நாட்டில் ஆரம்ப நிலையில் தான் இருக்கிறது.

ஆட்டிசம் பற்றி தெரிந்து கொள்ள திரு.  எஸ்  பால பாரதி அவர்களின் தளத்திற்கு செல்லுங்கள் . உதாரணத்திற்கு இரண்டு சுட்டிகள் தருகிறேன். அந்தத் தளம் முழுதுமே ஆட்டிசத்திற்கு  அர்ப்பணிக்கப் பட்டிருக்கிறது என்றே சொல்லலாம்.
உங்களுக்குத் தெரிந்த  ஆட்டிசக் குழந்தைகளின் பெற்றோர்களுக்கும் தெரியப்  படுத்துங்கள் . அவர்கள் இழந்த நம்பிக்கையை மீட்டெடுக்க உதவியாயிருக்கும்.
ஆட்டிசம்- விரைவாக அறிந்து கொள்ள
ஆட்டிசம் - வரலாறு.

குழந்தைகள்  என்றவுடன் என் சிறு  வயதுப்பருவம் வந்து நினைவில் மோதுகிறது. டிவி, கணினி  எதுவும்  இல்லாத  அந்த நாட்களில்  தாத்தாவிடம் கதைகள் கேட்டது பசுமையாய் இருக்கிறது. இந்தக்காலக் குழந்தைகளுக்கு  நாம் அதை செய்கிறோமா? எங்களுக்கே எங்கே நேரம் என்று சொல்பவர்கள்,

குழந்தைகளுக்கு  கதை சொல்வதால் என்ன நன்மைகள் விளையும் என்று திரு.பாபு நடேசன் அவருடைய  தமிழ் அறிவுக் கதைகள் தளத்தில் சொல்கிறார் .

 செவிடாய் இருந்தால்  வாழ்க்கையின் உச்சிக்கு போய் விடலாமாம். ஆச்சர்யமாய் இருக்கிறதா? படியுங்கள் உங்களுக்கே புரியும்.

கடவுளையே குழப்பிய மன்னார்சாமி  தெரியுமா? தெரியாதா ......அப்படிஎன்றால் அவசியம் இதைப் படித்து உங்கள் வீட்டு வாண்டுகளுக்கும் சொல்லுங்கள்.


கணினி மென்பொருள்  வல்லுனரான இவருடைய தளத்தில் மலை  போல் கதைகள் கொட்டிக் கிடக்கின்றன. வேண்டியதை நாம் படித்துக் கொள்ளலாம்.

இவைகளையும் படித்து சொல்லுங்கள் உங்கள் குழந்தைகளுக்கு
யார் உண்மையான பக்தன்.?
குழந்தைகள்  என்றும் குழந்தைகளே

குழந்தைகளுக்கான கதைகளை  திரு நந்தகுமார் என்பவரும்  சிறுகதைகள்  என்கிற தளத்தில் எழுதி வருகிறார்.
 பொறுமையும், பொறுப்பும் எவ்வளவு முக்கியம் என்பதை இந்தக் கதை மூலம்
தெரிந்து கொள்ளலாம்.
குழந்தைகளுக்கான கதைகளை எப்படி தேர்வு செய்ய வேண்டும் என்றும்  தெரிந்து கொள்ளலாம் வாருங்கள் .

காக்கா நரி கதை தெரியும் உங்களுக்கு. வாங்க கழுகு நரி கதை படிப்போம் .

கொழுகொழு கன்றே  உன் பெயர் என்ன? கதை மீண்டும் படித்து ரசிக்கலாமே !

பதிவை ஆரம்பிக்கும் போது மழைத் தோட்டம் என்று ஆரம்பித்து
குழந்தைகளிடம்  வந்து விட்டேன்.இப்ப தோட்டத்திற்குப்  போவோமா?
தோட்டம் பற்றித் தெரிந்து கொள்ள திரு. சிவாவினுடைய பதிவிற்கு சென்று வீட்டுத் தோட்டம்  போடக் கற்றுக் கொள்வோம் வாருங்கள்.

 ஜுன் மாதத்தில் தோட்டத்தில் என்ன செய்யலாம்? தெரிந்து கொள்ளலாமா.?

தோட்ட உலாவிற்கு சென்றால்  புகைப்படங்களுடன் களை  கட்டும் தளம் இவருடையது என்பதை உணர்வீர்கள் .

உங்கள் வீட்டில் மாடி இருக்கிறதா? மாடியில் தோட்டம் போட்டு , ....செடி வளர்த்து ....... முள்ளங்கி அறுவடை செய்யலாமாம்,சொல்கிறார்.

செடி, தோட்டம் என்றதும் பழங்கள் நினைவிற்கு வந்து விட்டது .பழங்களைவைத்து என்ன செய்யலாம். அட.....
ஃப்ரூட்  சால்ட்  செய்யலாம் என்கிறார் நம் டெல்லிப் பதிவர் திரு. வெங்கட்நாகராஜ். வெள்ளிக்கிழமைத் தவறினாலும், தவறும், இவருடைய ஃபரூட் சாலட் தவறாது.

இவருடைய பயணக் கட்டுரைகளும் வெகு சுவாரஸ்யம்.இவர் மனைவியும் பிரபல பதிவரே.

தம்பதி சமேதராய் பதிவுலகத்தைக் கலக்கி வருகின்றனர் ஆதி- வெங்கட் தம்பதியினர்.திருமதி ஆதியின் கோவை 2தில்லியில்,
மகிழ்ச்சி மேம்பட என்ன செய்ய வேண்டும் என்று  சொல்கிறார்.செய்து தான் பார்ப்போமே.
சுயம்வரத்தில் நானும், பதிவைப் படித்தால், திருமணத்திற்குப்  பெண் கிடைப்பது எத்தனை கஷ்டம் என்று புரியும்.

எல்லோர் பதிவுகளையும்  படித்து விட்டு வாங்க.
நாளை நம் அரட்டைக்  கச்சேரியைத் தொடர்வோம்.


image courtesy--google.

33 comments:

  1. நீரிழிவு நோய் அணுகாமல் தடுக்க என்ன செய்யணும்கறதுல இருந்து இன்றைய பகிர்வுகள் அனைத்துமே மிகமிகப் பயனுள்ளவையா அமைஞ்சிருச்சு. அட்டகாசமான அறிமுகங்கள் பெற்ற அனைவருக்கும் நல்வாழ்த்துகள்.

    ReplyDelete
  2. அருமையான பதிவுகள்..
    நிறைய புது பதிவர்கள் . படிக்க வேண்டும் அனைத்தையும். இன்று இடம் பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
    உங்களுக்கும் வாழ்த்துக்கள். நல்லவற்றை தொகுத்து கொடுத்து இருப்பதற்கு.

    ReplyDelete
  3. நிறைய புது பதிவர்கள் .அருமையான பதிவுகள்..வாழ்த்துக்கள்

    ReplyDelete
  4. இன்றைய அரட்டைக் கச்சேரி - மருத்துவம் மற்றும் பயனுள்ள குறிப்புகளுடன் கூடிய தளங்களின் தொகுப்பு!..

    அறிமுக தளங்களுக்கு நல்வாழ்த்துக்கள்..

    அன்பின் கோமதி அரசு அவர்கள் கூறியதைப் போல -
    நல்லனவற்றை தொகுத்து வழங்கிய தங்களுக்கும் நல்வாழ்த்துக்கள்..

    ReplyDelete
  5. வணக்கம்
    அம்மா.

    இன்றைய வலைச்சர அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள் எல்லாத்தளங்களுக்கும் சென்றுவந்தேன் தொடரும் தளங்கள்தான் அறிமுகம் செய்துவைத்தமைக்கு நன்றிகள் பல.த.ம 2வது வாக்கு
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. உங்கள் கருத்துக்கும் தமிழ் மண வாக்கிற்கும் நன்றி ரூபன்.

      Delete
  6. வலைச்சர அறிமுகங்களுக்கு எனது வாழ்த்துக்களும் அம்மா.

    ReplyDelete
  7. பயனுள்ள தளங்களின் பகிர்வுகளுக்குப் பாராட்டுக்கள்.!

    ReplyDelete
  8. டாக்டர் முருகானந்தம் எழுதும் மருத்துவக் கட்டுரைகளில் சொல்லப்பட்டு இருக்கும் கருத்துக்கள் யாவும் எல்லோரும் புரிந்து கொள்ளும்படி எளிமையாக இருக்கும்.

    புதுடெல்லியில் இருக்கும் வெங்கட்நாகராஜ் புகைப்படக் கலையில் ஆர்வம் மிக்கவர். அவரது பயணக் கட்டுரைகளில் தெளிவான நிறைய படங்களைக் காணலாம். அவரது மனைவி ஆதிவெங்கட் பதிவுகளில் ஒரு குடும்பத் தலைவியின் கருத்துப் பரிமாறல்களைக் காணலாம்.

    நீங்கள் குறிப்பிட்ட மற்றைய தளங்களுக்கு சென்று பார்க்கிறேன்.
    நன்றி!
    த.ம.3




    ReplyDelete
    Replies
    1. உங்கள் விரிவானக் கருத்துரைக்கும், தமிழ் மண வாக்கிற்கும் நன்றி தமிழ் சார்.

      Delete
  9. எனது பதிவுகள் பற்றிய விரிவான விளக்கத்தைத் தந்தற்காக நன்றி
    ஆட்டிசம் பற்றிய எஸ்.பாலபாரதியின் பதிவு மிகவும் பிடித்ததாக இருந்தது.
    ஏனைய அறிமுகங்களும் அருமையாக இருந்தன
    மிக்க நன்றி

    ReplyDelete
    Replies
    1. கருத்துக்கு நன்றி டாக்டர்.

      Delete
  10. இன்று நான் அறிந்திராத புதிய தளங்கள் கிடைத்தன! சென்று பார்க்கிறேன்! சிறப்பான தொகுப்பு! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  11. ஹாய் நலமா? வின் ரெகுலர் வாசகி நான்.
    ஆட்டிசம் பற்றிய் திரு எஸ் பாலபாரதியின் கட்டுரைக்கு எனது தளத்திலும் இணைப்பு கொடுத்துள்ளேன்.
    உடல்நலத்திற்குப் பின் குழந்தைகளின் மனநலம் பேணும் சிறுகதைகள் சொல்லும் தளங்களை அறிமுகப்படுத்தியது மிகவும் பொருத்தம். 'கொழு கொழு கன்னே' நானும் எழுதியிருக்கிறேன், என் செல்வ களஞ்சியமே தொடரில். எத்தனை முறை எத்தனை பாட்டிகள் சொன்னாலும் அலுக்காத கதை இது. மற்ற கதை சொல்லும் தளங்களையும் படித்துப் பார்க்கிறேன்.

    திரு வெங்கட், ஆதி வெங்கட் என்று தம்பதியரின் அறிமுகமும் நன்று.

    பாராட்டுக்கள், ராஜி.

    ReplyDelete
    Replies
    1. உங்களுடைய மிக விரிவான கருத்துரைக்கு நன்றி ரஞ்சனி.

      Delete
  12. பல்வேறு பயனுள்ள தளங்களின் பகிர்வுகளுக்குப் பாராட்டுக்கள்.!

    ReplyDelete
  13. சிறந்த அறிமுகங்கள்
    தொடருங்கள்

    பாபுனையும் ஆற்றல் இருப்பின் போட்டிக்கு வாரும்!
    http://paapunaya.blogspot.com/2014/08/blog-post.html

    ReplyDelete
  14. எனக்கு அறிமுகமான தளங்களும் உண்டு.
    இன்று சில புதிய அறிமுகங்களும் உண்டு.
    பயனுள்ள அறிமுகங்கள் - நன்றி!

    ReplyDelete
  15. எனது வலைச்சர அறிமுகத்திற்கு மிக்க நன்றி. உங்களுக்கு அறிமுகமான பயனுள்ள தகவல்களை மற்றவர்களுக்கும் அறிமுகம் செய்கிறீர்கள். நன்றி - 'தோட்டம்' சிவா

    ReplyDelete
    Replies
    1. கருத்துக்கு நன்றி சார்.

      Delete
  16. இன்றைய அறிமுகங்களுக்கு எங்கள் வாழ்த்துகள். எங்கள் இருவரையும் ஒருசேர வலைச்சரத்தில் அறிமுகம் செய்தமைக்கு மிக்க நன்றிம்மா. இப்போ தான் ரூபன் அவர்களின் தகவல் மூலம் தெரிந்து கொண்டு வந்தேன். ரூபன் அவர்களுக்கு நன்றிகள். எங்களை பற்றி இங்கு குறிப்பிட்ட தமிழ் இளங்கோ ஐயா அவர்களுக்கும், ரஞ்சனிம்மாவுக்கும் மிக்க நன்றி.

    என்னவர் பயணத்தில் உள்ளதால் அவருடைய நன்றிகளையும் இங்கே தெரிவித்துக் கொள்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. கருத்துக்கு நன்றி ஆதி.

      Delete
  17. எங்கள் தளங்களை அறிமுகம் செய்தமைக்கு மிக்க நன்றி ராஜலக்ஷ்மி பரமசிவம் ஜி!

    ReplyDelete
  18. வலைசரத்தில் எம்மை அறிமுகம் செய்தமைக்கு மிக்க நன்றி | தமிழ் அறிவு கதைகள்

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது