பூக்கின்ற புதனில் வலைப்பூக்களின் கதைப்பூக்களால் வலைச்சரம் தொடுக்கின்றேன்....கதை கேட்க வாரீகளா..!
உலகின் முதல் கதை சொல்லி...அம்மா.....
அம்மாக்களிடமிருந்தே கதை ஆரம்பிக்கின்றது..குழந்தைக்கு ஒரு வாய் சோறூட்ட
விளைகின்ற கதைகளுக்கு முடிவே இல்லை...கதைகள் கற்பனைகளை விண்ணைத்தொட
வைக்கின்றது....இயற்கையாய் நடக்க முடியாதவைகள் அனைத்தும் கதைகளில் எளிதாக
நடக்கும்...
சிறு வயதில் பேய்க்கதைகள் சொல்லும் சௌந்தர் அண்ணனைச்சுற்றியே எப்போதும் காதைப்பொத்திக்கொண்டு சூழ்ந்திருப்போம்....
அவர் கூறிய ஒரு கதையில் பேய் ஒன்று கருப்பாய் காலின்றி பறக்கும்... இரவில் கழிப்பிடம் செல்லும்{அப்பல்லாம் பாத்ரூம்லாம் இருக்காது}ஒருவர் திரும்பும் சமயத்தில் ஒரு குரல் சுண்ணாம்பு தா, சுண்ணாம்பு தாவென அதுவும் பெண்குரல் அழைக்க இவர் பயந்து கொண்டு விரைவாக வந்து வீட்டின் கதவை ,பெரிய மரக்கதவு சாத்திக்கொண்டு நிம்மதி மூச்சு விட்டாராம். அந்த பேயோ சாவித்துவாரத்தில் ஆள்காட்டி விரலை நீட்டி சுன்ணாம்பு கொடுவென்க ..இவர் அலறி புடைத்து ...வேகமாகச் சென்று பாக்கு வெட்டியால் அந்த விரலை வெட்டினாராம்...எனக்கூறிவிட்டு...
பட்டென்று எங்கள் முகத்துக்கு நேராக ... அது தான் இது என எரிந்த விறகு குச்சியைக்காட்டுவார் ...அய்யோன்னு அலறிக்கொண்டு ஒடுவோம் எல்லோரும்..அன்று எல்லோர் கனவிலும் சுண்ணாம்பு கேட்கும் குரல் ஒலிக்கும்....பிறகென்ன ஒரே அழுகை தான்...கதைக்கேட்க போவியான்னு திட்டிக்கிட்டே அம்மா திருநீறு பூசிவிட்ட நாள்களும் உண்டு....
இருந்தாலும் மீண்டும் மறுநாள் கதைக்கேட்க அண்ணனைச்சுற்றி....வருவோம்...இப்பவும் சாவித்துவாரம் அக்கதையையும் அந்த அண்ணனையும் நினைவில் ஆழ்த்திக்கொண்டுள்ளது...
மறக்க முடியாமல் மனதில் நிற்கும் சிறுவயது கதை இது....
நம் வலைப்பூக்களின் கதைப்பூக்களால் வலைச்சரம்தொடுத்துள்ளேன் இன்று. உங்களின் பார்வைக்காக காத்திருக்கின்றன...
*இன்றைய நிகழ்வாய் நான் எழுதிய கதை....நிலவு தேயும் நேரம்
*கிராமிய மணதோடு பதிவுகளை எழுதும் கிராமத்து கருவாச்சியின் காதல் கதை
*லிப்டில் நடக்கும் திகில் கதை இது....
*என் எழுத்துக்கள் - இனிமையான, கலாச்சாரம் சார்ந்த இல்லறங்கள் கொண்ட, சிந்தையில் ஆயிரம் எண்ணங்களுடய சங்ககால தமிழ் உலகம் - இதனை மறுபடி உயிர்ப்பிக்க வேண்டி சமர்ப்பிக்கப்படுகின்றன.என்று தன்னை அறிமுகம் செய்யும் சாகம்பரியின் மௌனத்தின் மற்றுமொரு பக்கமாய்
*சீன லெஷ்மி,மலாய் லெஷ்மி என மனதில் பதிய வைக்கும் கதையாய் சிங்கப்பூரிலிருந்து..எழுதுகின்றார் கமலகானத்தில்..நுகத்தடி
*தரம் வாய்ந்த எழுத்தாளர்களைப்பற்றி அறிந்து கொள்ள உதவும் அழியாச்சுடர்கள் வலைப்பூவில் ஒரு கதை .ஏறக்குறைய எல்லா எழுத்தாளர்களும் இங்கு உள்ளனர்....
*சுகாவின் திருவண்ணாமலைக்கு போன கதை...யாருடன் தெரியுமா நம்ம இசைஞானி இளையராஜா கூடதான்....
*எழுத்தாளர் ஜெயமோகன் எழுதிய அறம் கதைத்தொகுப்பு கமலஹாசன் அவர்களால் ஒருமுறை டி.வியில் அறிமுகம் செய்யப்பட்டது...உடனே வாங்கிப்படித்தேன்...இன்னும் அதில் உள்ள யானை டாக்டர் மனதை விட்டு நீங்காமல்...இவரின் கதையாய்
*எழுத்தாளர் எஸ் ராமக்கிருஷ்ணன் அவர்களின்” சொந்தக்குரல்”சிறுகதை குறித்த கவிஞர் பிச்சினிக்காடு இளங்கோவின் குரல்...எழுத்தாளரின் பதிவில்
*
- கவிதையில் தொடங்கிச் சிறுகதை, புதினம், கட்டுரைகள், அகராதி, பதிப்பு, தொகுப்பு என எதையெதையோ செய்து கொண்டிருப்பவன். மாணவர்களின் மனங்கவர்ந்தவனாக இருக்க விரும்பும் தமிழ் இலக்கியம் பயின்ற அரசுக் கல்லூரி ஆசிரியன் என தன்னை அறிமுகம் செய்து கொள்ளும் எழுத்தாளராய் பெருமாள் முருகன்.இவரின் பதிவில்
- ..சூழலை .உற்றுநோக்கும் எவரும் கதையின் கருவை உருவாக்கலாம்...தொன்மைக்காலத்தில் ஒருமுடியை,வெட்டப்பட்ட நகத்துண்டை வைத்து ஓவியங்களும் ,சிலைகளும் செய்ததாக கதை உண்டு...கதைகள் வாழ்நாள் முழுதும் நம்முடன் பயனிப்பவை.....கதைகளின் ஊடேயான இன்றைய பயணம் முடிந்தது...
- மீண்டும் நாளை சந்திப்போமா...!
|
|
அழகான பதிவு சகோதரி! ஆம் அம்மாதன் முதல் கதைசொல்லி....இப்போது எஸ்ரா அவர்கள் கதை சொல்லுதல் பற்றி விரிவாகவே எழுதியும், நடை முறையில் அதைச் செய்தும் வருகின்றார். அவரைப் பற்றிச் சொல்லியது மிகவும் சந்தோஷமாக இருக்கின்றது!
ReplyDeleteஅறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்! தங்களுக்கும்!
மிக்க நன்றி சகோ...
Deleteஇன்றைய அறிமுகங்களுக்கு எமது வாழ்த்துக்கள்.
ReplyDeleteபயத்துடன்
கில்லர்ஜி
ஹாஹா....நன்றி சார்..
Deleteகதை சொல்லும் களங்கள்..
ReplyDeleteஇன்றைய அறிமுகங்களுக்கு நல்வாழ்த்துக்கள்!..
மிக்க நன்றி சார்.
Deleteவணக்கம் தோழி!
ReplyDeleteகதைகேட்டே நாம்களித்த காலம் வருமோ?
விதையிட்டு விட்டீர் விளித்து!
இன்றைய கதை கூறும் தளங்களும் அருமை!
அறிமுகங்கள் அனைவருக்கும் உங்களுக்கும்
இனிய நல் வாழ்த்துக்கள்!
வணக்கம் மா...மனம் நிறைந்த நன்றி..
Deleteகதையா..என வாசித்து...பயந்து...ரசித்து விட்டு கதைகள் சொல்லோர் தளம் விரைகிறேன் தோழி.
ReplyDeleteஅறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
வணக்கம்மா மனம்நிறைந்த நன்றி...
Deleteஅனைவருக்கும் வாழ்த்துக்கள்...
ReplyDeleteநன்றி சார்.
Deleteஅருமையான அறிமுகங்கள் ...
ReplyDeleteவாழ்த்துக்கள்
த.ம ஐந்து
ReplyDeleteஆஹா மிகமிக நன்றி...உஸ் ....அப்பாடா....ஒரு ஓட்டு வாங்குறது இம்பூட்டு கஸ்டமாருக்கே...சகோ
Deleteகதையைப் படித்ததும் எனக்கு மனத்தில் திகில் எழுந்தது நிஜம்.... கதைகளைப் படிக்கிறேன்... நன்றி
ReplyDeleteநன்றிமா
Deleteநன்றி சார்.
ReplyDelete
ReplyDeleteவணக்கம்
தமிழ்மணம் 6
வணக்கம் அய்யா..மிக்க நன்றி...
Delete