07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Sunday, October 19, 2014

செல்விருந்தோம்பி வருவிருந்து காத்திருத்தல்

அன்பின் சக பதிவர்களே
இன்றுடன் முடியும் வாரத்திற்கு ஆசிரியப் பொறுப்பேற்று பதிவுகள் இட்ட அருமை நண்பர் மகேந்திரன் பன்னீர் செல்வம்  தான் ஏற்ற பொறுப்பினை சரி வர முழு மனதுடன் நிறைவேற்றி - நம்மிடமிருந்து விடை பெறுகிறார்.

இவர் இட்ட பதிவுகள் : 007
அறிமுகப் படுத்திய பதிவர்கள் : 039
அறிமுக படுத்திய பதிவுகள் : 048
பெற்ற மறுமொழிகள் : 077
வருகை புரிந்தவர்கள் :
பெற்ற தமிழ் மண வாக்குகள் : 37 

நாளை முதல் துவங்கும் வாரத்திற்கு   ஆசிரியப் பொறுப்பினை ஏற்க அன்புடனும் ஆர்வத்துடனும்  சே.குமார்   இணக்கம் தெரிவித்துள்ளார்.  

தேவகோட்டைக்கு அருகில் இருக்கும் பரியன்வயல் என்ற கிராமத்தில் சேதுராமன்-சிவகாமியின் ஆறாவது மகனாகப் பிறந்தவர்.  படித்தது எம்.சி.ஏ., தற்போது அபுதாபியில் பணி புரிகிறார்.. அன்பான மனைவி (நித்யா) அறிவான பிள்ளைகள் (ஸ்ருதி, விஷால்) என் வாழ்க்கையின் சந்தோஷங்கள். மனசு என்ற வலைத்தளத்தில் தொடர்ந்து எழுதி வருகிறார்..

இவரை எழுத்தாளனாக்கிப் பார்த்தவர் இவரது கல்வித் தந்தை பேராசிரியர். முனைவர். மு.பழனி இராகுலதாசன், இவரின் முயற்சியால்தான் குமார் எழுத ஆரம்பித்தார்.  எழுத்து இவருக்குப் பிடிக்கும்... ஆனால் எழுத ஆரம்பித்ததில் இருந்து இரண்டு முறை நீண் ட விடுமுறை விட்டு பின் தொடர ஆரம்பித்தார். குறிப்பாக வலைப்பூ ஆரம்பித்த பின்னர்தான் தொடர்ந்து எழுத ஆரம்பித்தார்.

இவருக்கு சிறுகதைகள் எழுதுவது ரொம்பப் பிடிக்கும். அதுவும் இவரது  தேவகோட்டைப் பேச்சு வழக்கில்தான் இவரது சிறுகதைகள் இருக்கும். இவரது  முதல் கவிதையான 'ஒரு கட்-அவுட் நிழலுக்கு கீழே'  கல்லூரியில் படிக்கும் போது தாமரையில் வெளிவந்து திரு.பொன்னீலன் அவர்க்ளின் பாராட்டைப் பெற்றது.

தினபூமி-கதைபூமி, உதயம், பாக்யா, சுபமங்களா, தினமணிக் கதிர், தினத்தந்தி குடும்பமலர், மங்கையர் சிகரம் என பல பத்திரிக்கைகளில் கதை, கவிதைகள் வெளிவந்திருக்கின்றன. வெளிநாட்டு வாழ்க்கை என்று ஆனபோது பத்திரிக்கைகளுக்கு அனுப்புவது குறைந்து விட்டது. இருப்பினும் தற்போது அதீதம், சிங்கப்பூர் கிளிஷே என்ற மின்னிதழ்களில் கதைகள் வெளியாகியிருக்கின்றன. வம்சி நடத்திய சிறுகதைப் போட்டியில் கருத்தப்பசு என்ற சிறுகதை தொகுப்பிற்கு தேர்வாகி 'காக்கைகள் துரத்திக் கொத்தும் தலைக்குரியவன்' என்ற சிறுகதைத் தொகுப்பில் இடம்பெற்றுள்ளது. வெட்டி பிளாக்கர்ஸ் சிறுகதைப் போட்டியில் 'நினைவின் ஆணிவேர்' முதல் பரிசைப் பெற்றது. பரிசுத் தொகை கிடைக்கவில்லை என்றாலும் அனைவரின் பாராட்டையும் பெற்றது.

மனசில் 'கலையாத கனவுகள்' என்ற முதல் தொடர்கதையை எழுதி ஓரளவுக்கு வெற்றி பெற்றார். தற்போது இரண்டாவது தொடராக 'வேரும் விழுதுகளும்' என இவரது  வட்டார வழக்கில் பேச்சு வழக்கில் ஆரம்பித்து சிறப்பான வரவேற்பை பெற்றிருக்கிறார்.. இவருக்கு இந்த வருடத்திலாவது சிறுகதைத் தொகுப்பு கொண்டு வர எண்ணம் இருக்கிறது. அதேபோல் குறும்பட எண்ணமும் இருக்கிறது. இறைவன் நினைத்தால் எல்லாம் நடக்கும்.

வலை கொடுத்த நட்புக்களும்  உறவுகளும் வாழ்வில் தொடர்ந்து வரவேண்டும் என்று இறைவனைப் பிரார்த்திக்கிறார்..

நாளைய வலைச்சர ஆசிரியப் பொறுப்பினை ஏற்கும்  சே.குமாரினை வருக வருக - ஆசிரியப் பொறுப்பேற்று ஒரு வார காலத்திற்கு சிறந்த பதிவர்களையும் அவர்களது சிறந்த பதிவுகளையும்  அறிமுகம் செய்யும் பதிவுகளைத்  தருக எனக் கூறி வாழ்த்துவதில்  பெரு மகிழ்ச்சி அடைகிறேன்.


நல்வாழ்த்துகள் மகேந்திரன்

நல்வாழ்த்துகள் குமார் 

நட்புடன் சீனா

34 comments:

 1. This comment has been removed by the author.

  ReplyDelete
  Replies
  1. This comment has been removed by a blog administrator.

   Delete
  2. அன்பின் ஐயா...

   வணக்கம்.

   இங்கு இருக்கும் பின்னூட்டங்களும் மகேந்திரன் அண்ணா இட்ட பதில்களும் நீக்கப்பட்டிருக்கின்றனவே...

   Delete
 2. This comment has been removed by a blog administrator.

  ReplyDelete
  Replies
  1. This comment has been removed by a blog administrator.

   Delete
 3. Replies
  1. This comment has been removed by a blog administrator.

   Delete
 4. This comment has been removed by a blog administrator.

  ReplyDelete
  Replies
  1. This comment has been removed by a blog administrator.

   Delete
 5. This comment has been removed by a blog administrator.

  ReplyDelete
  Replies
  1. This comment has been removed by a blog administrator.

   Delete
 6. This comment has been removed by a blog administrator.

  ReplyDelete
  Replies
  1. This comment has been removed by a blog administrator.

   Delete
 7. This comment has been removed by a blog administrator.

  ReplyDelete
 8. Replies
  1. This comment has been removed by a blog administrator.

   Delete
 9. This comment has been removed by the author.

  ReplyDelete
  Replies
  1. This comment has been removed by a blog administrator.

   Delete
 10. This comment has been removed by a blog administrator.

  ReplyDelete
 11. This comment has been removed by a blog administrator.

  ReplyDelete
 12. This comment has been removed by a blog administrator.

  ReplyDelete
 13. என்னாச்சு எல்லா கமெண்டுக்கும்?????

  ReplyDelete
 14. வாங்க குமார் அண்ணா! சிறப்பான பணி மகேந்திரன் சார்:)

  ReplyDelete
  Replies
  1. வாங்க சகோதரி...

   எல்லாப் பின்னூட்டங்களும் என்னாச்சு என சீனா ஐயாதான் சொல்ல வேண்டும்...

   வந்தாச்சு... எப்படி ஒரு வாரத்தை கொண்டு செல்வது என்பதுதான் பயமா இருக்கு...

   Delete
  2. இனிய வணக்கம் சகோதரி மைதிலி மற்றும் சகோதரர் குமார்...
   இங்கே பதிவாகி இருக்கும் கருத்துக்கள் அழிக்கப்பட்டு இருக்கின்றனவே என்று
   கவலை வேண்டாம். அழிக்கப்பட்ட கருத்துக்கள் என்னை அறிமுகம் செய்கையில் வந்தவை. ஒருவேளை சீனா ஐயா வேலைப்பளு காரணமாக பழைய பதிவை திருத்தி போட்டிருக்கலாம். அதன்பின்னர் அறிந்து கருத்துக்களை மட்டும் அழித்திருக்கலாம்.

   Delete
  3. வணக்கம் அண்ணா...
   அப்படியா... தகவலுக்கு நன்றி.

   Delete
 15. வருக வருக எமதருமைச் சகோதரரே....
  ஐயா... சொன்னார் உங்களைப்போன்று வெளிநாட்டில் இருப்பவர் தான் அடுத்த ஆசிரியர் என்று
  நானும் உங்களைத்தான் கணித்திருந்தேன்... நல்வாழ்த்துக்கள் சகோதரரே...
  கலக்குங்க...
  காத்திருக்கிறேன் உங்களது மணமிக்க வலைச்சர ஆரங்களைத் தரிசிக்க...

  என்னுடைய ஏழு நாட்களையும் வானவில்லின் வண்ணமாக மாற்றி கருத்துரைத்த அத்தனை
  உள்ளங்களுக்கும் அன்பார்ந்த நன்றிகள்.

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் அண்ணா....

   வேலையின் காரணமாக அவசர அவசரமாக இரண்டு நாள் மூன்று நாள் இடுகைகளை சேர்த்துப் படித்தேன்... மன்னிக்கவும்...

   தாங்கள் அளவுக்கு சிறப்பாக செய்வதென்பது கடினமே....
   அருமையாகச் செய்தீர்கள் வாழ்த்துக்கள்.

   Delete

  2. சகோதரர் குமார்... என்னைவிட நீங்கள் சிறப்பாக செய்வீர்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. பட்டைய கிளப்புங்க ...

   Delete
 16. வாழ்த்துக்கள் மனசு ஐயா குமார் அவர்களுக்கு கலக்கல் தான் இனி...

  ReplyDelete
  Replies
  1. தங்கள் வாழ்த்துக்கு நன்றி சகோதரரே...

   Delete
 17. வருக.. வருக.. என்று தங்களை வரவேற்கிறேன்..
  தங்கள் பணி சிறக்க நல்வாழ்த்துக்கள்...

  ReplyDelete
  Replies
  1. ஐயாவின் வாழ்த்துக்கு நன்றி.

   Delete

தமிழ் மணத்தில் - தற்பொழுது