07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Sunday, October 26, 2014

நன்றி சொல்ல உனக்கு வார்த்தை இல்லை எனக்கு...வணக்கம்.

கடந்த ஒரு வார காலமாக வலைச்சர ஆசிரியனாய் உங்களுடன் கலந்திருந்தது மனசுக்கு ரொம்பச் சந்தோஷமாக இருந்தது. என்னை எழுத்துலகுக்கு அழைத்து வந்த எனது பேராசான், எழுத ஆரம்பித்த போது திட்டினாலும் அப்புறம் நல்லா எழுதுறான்னு மனசார வாழ்த்திய அப்பா மற்றும் அம்மா, நான் கிறுக்குபவைகளை எல்லாம் நல்லாயிருக்கு என்று சொல்லும் என் மனைவி, பள்ளி செல்லும் முன்னே என் எழுத்துக்கள் வந்த பத்திரிக்கைகளை வீதியெங்கும் காட்டி மகிழ்ந்த அன்பு மகள், எங்கப்பா எழுதுனதுன்னு சொல்லும் செல்ல மகன் என அனைவருக்கும் கண்டிப்பாக நன்றி சொல்லியே ஆக வேண்டும்.

இது என்னையும் எழுத வைத்து உலகளாவிய நட்பைக் கொடுத்த இறைக்கான நன்றி.

நன்றி உனக்குச் சொல்ல வார்த்தை


வலைச்சர ஆசிரியர் பணி குறித்து முதலில் சீனா ஐயா என்னிடம் கேட்டபோது அலுவலக வேலைச் சூழலில் பொறுப்பேற்கும் எண்ணம் இல்லை என்றாலும் அவர் மீது நான் வைத்திருக்கும் மரியாதைக்காகவும் அவர் என் மீது வைத்த நம்பிக்கைக்காகவும் யோசனையோடுதான் ஒத்துக் கொண்டேன்.

காலை 5 மணிக்கு எழுந்து குளித்து அலுவலகம் சென்று தொடர்ந்து 11 மணி நேரங்கள் கணிப்பொறியோடு மல்லுக்கட்டிவிட்டு அறைக்கு வந்து ஊருக்குப் பேசி, சமையல் செய்து சாப்பிட்டுப் படுக்கும் போது மணி இரவு பதினொன்றுக்கு மேலாகிவிடும். இந்தச் சூழலில் தினம் ஒரு பகிர்வு சாத்தியப்படுமா என்ற எண்ணம்தான் மேலோங்கியிருந்தது. ஜோதிஜி அண்ணன் அவர்கள் உன்னைவிட பணிச்சுமையில் நான் இருக்கிறேன். இது போன்ற சந்தர்ப்பங்கள்தான் உன்னை மெருகேற்றும்... செய் என்று சொன்னார்கள். சரி... சென்ற முறை போல் அதிகம் சிரமமின்றி ஓரளவு பகிர்வு தேத்திப் போட்டாப் போச்சு என்றுதான் ஆரம்பத்தில் நினைத்திருந்தேன்.

என்னைப் பொறுத்தவரை எந்த ஒரு காரியத்தையும் செய்கிறேன் என்று சொல்லிவிட்டால் அதை கடமைக்கு செய்யாமல் கடமை உணர்வுடன் செய்ய வேண்டும். இது எங்கப்பா எனக்குச் சொல்லிக் கொடுத்த பாடம். எந்த வேலையைச் செய்தாலும் அதில் நேர்த்தி இருக்க வேண்டும்... முழுத் திருப்தி இருக்க வேண்டும் கடமைக்குச் செய்யக்கூடாது என்பார். அதன்படி நம்பிக்கையை வீணாக்காமல் முடிந்தளவுக்கு நன்றாக செய்ய வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தேன்.

ஒவ்வொரு நாளும் அலுவலகத்தில் இருந்து வந்ததும் முதல் நாள் இரவே எடுத்து வைத்த குறிப்புக்களை வைத்து ஊருக்குப் பேசிக் கொண்டே பதிவு எழுத ஆரம்பிப்பேன். பூவாக இருக்கும் பகிர்வு மொட்டாகி... காயாகி... கனியாகும் போது இரவு 1 மணியைத் தொட்டு விடும். அதன் பிறகு தூக்கம் கண்ணைக் கட்ட ஆரம்பித்து விடும். அப்படியே வைத்து விட்டு நித்திரையை அணைத்துக் கொள்வேன். மறுநாள் காலை குளித்து வந்ததும் அவசர அவசரமாக பதிவை பகிர்ந்து விட்டு கிளம்பி விடுவேன். மாலை வந்து பதிவருக்கெல்லாம் விவரம் தெரிவித்து பின்னூட்டம் போட்டு விடுவேன். தீபாவளி அன்று மதியம் வந்து விட்டதாலும் வெள்ளிக்கிழமை வார விடுமுறை என்பதாலும் கொஞ்சம் நேரம் கிடைத்தது.

இந்த வாரத்தில் பதிவு இடும்போது அதிகம் பின்னூட்டம் வரவாய்ப்பில்லை என்று தோன்றியது. காரணம் தீபாவளி விடுமுறை, பதிவர் மாநாடு என நம் மக்கள் அனைவரும் ரொம்ப பிஸி. இருந்தாலும் எனக்குக் கிடைத்த வாய்ப்பை உங்கள் மனதில் நிற்கும் வண்ணம் நிறைவாய் செய்திருக்கிறேன் என்று நினைக்கிறேன். கடமையைச் செய் பலனை எதிர்பார்க்காதே என்பதற்கு இணங்க முடிந்தளவு சிறப்பாக செய்திருப்பதாய்த்தான் நினைக்கிறேன்.

ஒவ்வொரு பதிவின் தலைப்பும் ஒரு படப்பாடலின் முதல் வரியாகவும் பதிவுக்குப் பொறுத்தமான பாடலையும் பகிரும் எண்ணம் முதல் பகிர்வை பகிரும் போதுதான் தோன்றியது. அதுவும் நல்லாத்தான் இருந்தது என்று நினைக்கிறேன்.

எனக்கு வலைச்சரத்தில் மூன்றாவது முறையாக வாய்ப்புக் கொடுத்த சீனா ஐயாவுக்கும் மற்றும் தமிழ்வாசி பிரகாஷ், ராஜி அக்கா இருவருக்கும் எனது நன்றிகளை உரித்தாக்குகிறேன். எனது பகிர்வுகளை தொடர்ந்து வாசித்து உங்கள் கருத்துக்களால் எனக்கு ஊக்க உரமிட்ட அனைத்து உறவுகளுக்கும் எனது நன்றியினை சமர்ப்பிக்கிறேன்.

இனி எப்பவும் போல மனசு வலைப்பூவின் மூலமாக உங்களுடன் தொடர்ந்து தொடர்பில் இருப்பேன். மீண்டும் ஒரு சந்தர்ப்பத்தில் உங்களைச் சந்திக்கும் வரை இந்த கிராமத்தானை நினைவில் நிறுத்தி வையுங்கள். முடிந்தால் என்னோட மனசுக்கு வாங்க...

எப்பவும் போல் இன்றும் நன்றி சொல்ல ஒரு பாடல்... கேளுங்கள் ரசிப்பீர்கள்...
நன்றி சொல்ல உனக்குஒரு வாரம் என்னை ஆசிரியனாய் ஆக்கிப் பார்த்த வலைச்சரத்துக்கும் என்னோடு பயணித்த வலை நட்புக்களுக்கும் மீண்டும் நன்றி.
நட்புடன்
-சே.குமார்
பரியன் வயல்
தேவகோட்டை
(இ) அபுதாபி

மனசு வலைத்தளம்.

12 comments:

 1. சிறப்பாக பணியாற்றிமைக்கு வாழ்த்துகள். :) பிள்ளைகள் பற்றிய நெகிழ்வு மிகவும் அருமை குமார். :)

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் அக்கா...

   தங்கள் வாழ்த்திற்கு நன்றி அக்கா....

   Delete
  2. This comment has been removed by the author.

   Delete
 2. சிறப்பான பணிக்கு இனிய வாழ்த்துகள்..!

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் அம்மா...
   தங்கள் வாழ்த்திற்கு நன்றி

   Delete
 3. கடமைக்கு செய்யாமல் கடமை உணர்வுடன் செய்ய வேண்டும். இது எங்கப்பா எனக்குச் சொல்லிக் கொடுத்த பாடம். எந்த வேலையைச் செய்தாலும் அதில் நேர்த்தி இருக்க வேண்டும்... முழுத் திருப்தி இருக்க வேண்டும் கடமைக்குச் செய்யக்கூடாது என்பார். //

  அப்பாவின் வார்த்தையை அழகாய் கடைபிடித்தீர்கள்.
  அப்பா எழுதிய கதை, கட்டுரைகள் பிறருக்கு காட்டி மகிழும் குழந்தைகளின் குதூகலம் மனநிறைவை தருகிறது.
  குடும்பம் நம் எழுத்தை அங்கீகாரம் செய்தால் தான் தொடர்ந்து எழுத உற்சாகம் பிறக்கும்.
  குடும்பத்தினர்களுக்கு நன்றி சொல்வது மிக அவசியம்.

  வேலைகளுக்கு இடையில் கொடுத்த ஆசிரியர் பணியை சிறப்பாக செய்த உங்களுக்கு வாழ்த்துக்கள் குமார்.

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் அம்மா..
   தங்கள் வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி

   Delete
 4. பாடல் பகிர்வுகள் அனைத்தும் அருமை.

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் அம்மா...
   தங்கள் வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி

   Delete
 5. சிறப்பாக பணியாற்றிய உங்களுக்கு எனது வாழ்த்துகள்.

  தொடர்ந்து உங்கள் பக்கத்தில் சந்திப்போம்.

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் அண்ணா...
   தங்கள் வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி

   Delete
 6. மீண்டும் சந்திப்போம் :)

  ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது