07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Tuesday, October 21, 2014

தமிழா... தமிழா...

லைச்சர ஆசிரியனாய் முதல் நாள் என் அறிமுகமாய் எழுதிய பகிர்வுக்கு தங்கள் கருத்துக்களை மாலையாக்கிய உறவுகளுக்கு நன்றி.
********
 லைப்பூவில் தினம் தினம் புதிய பதிவர்கள் வந்தாலும்... நிறையப் பேர் நிறைய விஷயங்களைப் பகிர்ந்தாலும் நம் தாய்த்தமிழைப் பகிர்வதற்கென்றே சில பதிவர்கள் இருக்கிறார்கள். இவர்களில் பெரும்பாலானோர் ஆசிரியர்கள். இன்றைய வலைச்சரத்தை அலங்கரிக்கப் போகிறவர்கள் தமிழ் பற்றி எழுதும் சிறப்பான பதிவர்கள்தான்.

தமிழ் என்றதும் ஞாபகத்தில் வருவது தமிழாசிரியர்கள்தான். பள்ளி முதல் கல்லூரி வரை இவர்களை ஐயா என்றுதான் அழைப்போம். பள்ளியில் படிக்கும் காலத்தில் ஐயாக்கள் எல்லாம் வேஷ்டி சட்டையில்தான் வருவார்கள். கூடுதலாக ஒரு ஜோல்னாப் பையும் இருக்கும். அவர்களைப் பார்த்தாலே தமிழாசிரியர் என்பது சொல்லாமல் தெரிந்துவிடும். ஆனால் கல்லூரிக்குப் போனபோது வேஷ்டி கட்டிய ஐயாக்களைப் பார்க்க முடிவதில்லை. எல்லோருமே பேண்ட்தான். வீட்டில் வேஷ்டியுடன் தரையில் அமர்ந்து எழுதும் எங்க பழனி ஐயாவைக் கூட கல்லூரியில் வேஷ்டியில் பார்க்க முடியாது.

இப்ப நம்ம நண்பன் எந்தக் கல்லூரியில் தமிழ் படித்தானோ அதே கல்லூரியில் ஆசிரியனாய்... இவனெல்லாம் எப்பவும் பேண்ட்தான்... படிக்கும் போது இவன் யாப்பு, மொழி, இலக்கியம் அது இதுன்னு என்னென்னவோ சொல்லுவான். கவிதையெல்லாம் எழுதுவான். நமக்கு தமிழ் என்பது ஏட்டளவில் மட்டுமே... அதிக ஈடுபாடெல்லாம் கிடையாது.. இப்ப மட்டும் இருக்கான்னு கேக்கப்படாது. ஏதோ நெல்லுக்கு இரைத்த நீர் பில்லுக்குக் கிடைப்பது மாதிரி வலைப்பூக்களில் பகிரப்படும் தமிழில் சிலவற்றைப் படித்து நம்ம தமிழ் அறிவை அப்ப அப்ப அருகம்புல்லாட்டம் வளர விட்டுக்கிறதுதான்... சரி... சரி... எதுக்கு இப்ப அதையெல்லாம் கிண்டிக்கிட்டு வாங்க நண்பனைக் கிண்டுவோம்.

சத்தியமாச் சொல்றேங்க... இவன் தமிழாசிரியராய் ஆவான்னு நினைக்கவே இல்லை. ஏன்னா பி.எட். முடிச்சிட்டு சிங்கப்பூருக்குப் போயிட்டு ரெண்டு மூணு வருசத்துக்கு அப்புறம் ஊருக்கு வந்தான். எம்.ஏ. பண்ணியவன் அடுத்து எம்.பில்லுன்னு சொன்னான். நம்மனால எம்.சி.ஏ.வுக்கு மேல எம்ப முடியலை.. அப்புறம் முனைவர் பட்டம் பெற்றான். இன்னைக்கு பேராசிரியராய் இருக்கிறான். வாயுள்ள பிள்ளை பிழைச்சிக்கும்ன்னு பெரியவங்க இவனை மாதிரி ஆளுகளைப் பார்த்துத்தான் சொல்லியிருப்பாங்க போல... எப்படிப்பட்ட ஆளையும் பேசியே காரியம் சாதித்துவிடுவான். மாணவர் மத்தியில் நல்ல பேர் எடுத்து வச்சிருக்கான். அது போதும்ல்லங்க.

சரி மற்ற கதைகளை நாளை பேசுவோம்... இனி பதிவர்களைப் பற்றி பார்க்கலாம். இவர்களை எல்லாம் அறிமுகம் செய்கிறேன் என்று சொன்னால் அது தவறு... இவர்களுக்கு அறிமுகம் தேவையில்லை... இலக்கியத்தரம் வாய்ந்த சில நல்ல தளங்களை இங்கு பகிர்கிறேன்.

முனைவர் நா.இளங்கோ அவர்கள் தமிழ் ஆய்வில் புதிய பரிமாணங்களைத் தேடும் களம்... என்று சொல்லி இரண்டு வலைத்தளத்தில் எழுதுகிறார். முதலாவது தளமான முனைவர் நா. இளங்கோ என்ற வலைத்தளத்தை 2007- ல் ஆரம்பித்து மொத்தமே நான்கு பகிர்வுகளைத்தான் பகிர்ந்திருக்கிறார். நான்குமே வரலாற்றுப் பகிர்வுகள்தான். மற்றொரு வலைத்தளமான முனைவர் நா. இளங்கோ - மலையருவியில் தொடர்ந்து எழுதி வருகிறார்.

முனைவர் நா. இளங்கோவில் புறநானூறும் பழந்தமிழர் மானஉணர்வும் - மீள் வாசிப்பு என்ற பகிர்வில்... 
"சற்றேறக்குறைய ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் தமிழகத்தில் வாழ்ந்த புலவர்கள் பலரால் பல காலங்களில் பல சூழ்நிலைகளில் பாடப்பட்ட புறப்பொருள் பற்றிய நானூறு பாடல்களின் தொகுப்பே புறநானூறு என்னும் சங்கத்தமிழ் நூலாகும். இதனைத் தொகுத்தோரும் தொகுப்பித்தோரும் இன்னார் என்று தெரியவில்லை" என்று சொல்லி மேலும் விவரிக்கிறார். 

முனைவர் நா. இளங்கோ - மலையருவியில் அறிவியல் தமிழ் அறிஞர்கள் என்ற பகிர்வில் 
"இந்தியாவின் மூத்த பொதுடைமை இயக்கத் தலைவர். பெரியார் முதலான தமிழகத்தின் முற்போக்கு இயக்கத் தலைவர்கள் அனைவருக்கும் முன்னோடியாக மதிக்கப்படுபவர். எளிய தமிழில் அறிவியலை எழுத்தில் பேச்சிலும் தமிழ்மக்களுக்கு எடுத்துரைத்த தம் அரும்பணியால் அறிவியல் தமிழின் பிதாமகனாகப் போற்றப்படுபவர்..." என்கிறார் 

 

******

ண்ணபிரான் ரவிசங்கர் அவர்கள் மாதவிப் பந்தல் என்ற தளத்தில் எழுதுகிறார். நிறைய விஷயங்களை எழுதியிருக்கிறார். ஆனால் வலைப்பூவில் பகிர்வு தவிர மற்ற எல்லா எழுத்துக்களுக்குமே மங்கலான கலர் கொடுத்திருப்பதால் பதிவைத் தேடிப்பிடிப்பது சிரமமாக இருக்கிறது. பத்தி பத்தியாக எழுதாமல் சிறு சிறு குறிப்புகளைப் போல எழுதினாலும் எல்லாப் பதிவுமே நீண்ட பதிவுகளாக இருக்கின்றன. நிறைய விஷயங்களைப் பேசுகிறார்.

இவர் 'கள்'ளுண்ட தமிழ்: வாழ்த்துக்களா? வாழ்த்துகளா என்ற பகிர்வில்

“சொன்னா நம்ப மாட்டீங்க! சங்க காலத்தில் இது = அஃறிணைக்குத் தான் பயன்படுத்துறது வழக்கம்; யானைகள் - பூனைகள் | ஆனா உயர்திணை? தோழியர் - பாவையர். தோழிகள் -ன்னு அப்பறமாத் தான் வந்துச்சி:) இன்னிக்கி... எம்.எல்.ஏ-க்கள், எம்.பி-க்கள் ன்னு...சகலருக்கும் பயன்படுத்தறோம்:))” அப்படின்னு இன்னும் நிறையச் சொல்கிறார். 

 
  ******

கோதரி. கிரேஸ் பிரதிபா அவர்கள் தனது தேன் மதுரத் தமிழ்  என்னும் தளத்தில் தமிழ் அமுது பருகத் தருகிறார். ‘துளிர் விடும் விதைகள்’ என்ற நூலை மதுரை வலைப்பதிவர் மாநாட்டில் வெளியிடும் சகோதரிக்கு வாழ்த்துக்களை இப்பவே தெரிவிச்சிடலாம். இவர் ஐங்குறுநூற்றுப் பாடல்களுக்கு அழகான விளக்கம் தருகிறார்.

இவர் தனது மார்போடு தழுவியவள் வருந்துவது ஏன்? என்ற பகிர்வில் "மாரி கடி கொளக் காவலர் கடுக.." என்று தொடங்கும் பாடலுக்கான விளக்கத்தில் இப்படிச் சொல்கிறார்.

"பெரும் மழை பெய்யும்பொழுது காவல்காக்க விரைந்து வரும் காவலரை ஏமாற்றி நண்டு வெண்மையான முளைகளை அறுக்கும். அத்தகைய வயல்களையுடைய ஊரைச் சேர்ந்தவன் மார்பைத் தழுவிக்கொண்ட உன் மகள் இடையில் தேமல் தோன்றுமாறு வெளிருவது ஏன் தாயே என்று தோழி செவிலித்தாயிடம் கேட்கிறாள்." 

 

 ****** 

ங்கள் பக்கத்து மாவட்டக்காரரான ஐயா முத்து நிலவன் அவர்களைத் தெரியாதவர்கள் இருக்க மாட்டார்கள் என்று நினைக்கிறேன். திரு. லியோனி அவர்களின் பட்டிமன்றப் பேச்சாளர்களில் ஒருவர். மிகச் சிறந்த இலக்கியவாதி... சமீபத்தில்தான் தனது மூன்று முத்தான புத்தகங்களை வெளியிட்டார். தனது வலைப்பூவான வளரும் கவிதையில் நிறைய விஷயங்களைப் பகிர்வார்.

நாம் படித்த 'அரிச்சந்திரன் கதை' சரியான கதை தானா? என்ற பகிர்வில் ஐயா அவர்கள்

அரிச்சந்திரன் வாய்மையைக் காப்பாற்றுவதற்காகத் தன் நாட்டையே இழந்தது மட்டுமல்ல, மனைவி, மக்களையெல்லாம் இழந்தான். அப்படியும் தன் வாய்மையை மட்டும் இழக்கவில்லை... அப்படி இருக்கணும் என்று நம்குழந்தைகளுக்குச் சொல்லும்போது நான் மிகவும் தயங்குவேன்..." என்கிறார். ஏன்? முழுப்பகிர்வையும் படியுங்கள்... புரியும்... 

 
 ******

ணித ஆசிரியரான கரந்தை ஜெயக்குமார் ஐயா அவர்கள் தனது பெயரிலேயே வைத்திருக்கும் தளத்தில் தமிழ் அழுதுடன் பல நல்ல விஷயங்களையும் விரிவான பகிர்வாகத் தருகிறார். மதுரை வலைப்பதிவர் மாநாட்டில் ‘கரந்தை மாமனிதர்கள்’ என்ற புத்தகத்தை வெளியிடும் ஐயாவுக்கு இப்பவே வாழ்த்தைச் சொல்லிக்கிறேன்.

இரு தினங்களுக்கு முன்னர் பகிர்ந்த தில்லையாடி என்ற பகிர்வில்

"ஆண்டு 1914. தென்னாப்பிரிக்கா. ஜோகனஸ்பர்க். அதை வீடு என்று கூற முடியாது, ஒரு குடிசை. அக்குடிசையினுள், கிழிந்த பழையத் துணியினைப் போலத்தான், அப்பெண் கிடக்கிறார். எலும்புகளும், எலும்புகளை மூடிய தோலும் மட்டுமே மிச்சமிருக்கினறன. குழி விழுந்த கண்கள். அவ்வப்பொழுது ஏற்படும் சிறு சிறு அசைவுகள் மட்டுமே, அப் பெண்ணின் உடலில், இன்னமும் உயிர் இருக்கிறது என்பதை உணர்த்துகின்றன." இப்படி ஆரம்பிக்கிறார்... யாரைப் பற்றிச் சொல்கிறார் என்பதை அவரது தளத்தில் சென்று வாசியுங்கள்... 

 
 ******

ன்னைப் பற்றிய குறிப்பில் மறைமலையடிகள், பாவாணார், பெருஞ்சித்திரனார், வ.சுப.மாணிக்கம் வழியில் தமிழ் பயின்றவன் என்று சொல்லும் முனைவர் மு. இளங்கோவன் அவர்கள் தனது பெயரிலேயே எழுதி வரும் வலைப்பூவில் தமிழ் பற்றி நிறைய அறியத் தருகிறார்.

இவரது இதுவன்றோ தமிழாராய்ச்சி என்ற பகிர்வில்

"தமிழர்கள் சித்த அறிவியல் முறைகளை தற்கால முறைகளின்படி ஆராய்ந்து உலகிற்கு பரப்ப வேண்டும். இதன் ஒரு படியாக, அமெரிக்காவில் தெற்கு கரோலினா மருத்துவப் பல்கலைக் கழகத்தில் ஒரு ஆராய்ச்சி செய்யப்பட்டுள்ளது." எனச் சொல்கிறார். 

இன்று இங்கு பகிர்ந்தவர்களின் தளங்களுக்குச் சென்று தமிழமுது பருகி வாருங்கள் நாளை பாவையரின் கவிதைகளைப் பாங்குடனே படிக்கச் செல்வோம்.

அதுவரைக்கும் உங்களை யாரு சும்மா விட்டா இந்தப் பாட்டைக் கேளுங்க... 
தமிழுக்கும் அமுதென்று பேர்


அப்படியே நம்ம மதுரை வலைப்பதிவர் மாநாடு 2014 நிகழ்ச்சி நிரலையும் பார்த்துட்டுப் போங்க...


 -'பரிவை' சே.குமார்.

45 comments:

 1. சிறந்த (தமிழ்) அறிமுகங்கள் குமார். தொடருங்கள்.

  ReplyDelete
  Replies
  1. வாங்க ஸ்ரீராம் அண்ணா....
   தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

   Delete
 2. சிறப்பான அறிமுகங்கள்... அனைவருக்கும் வாழ்த்துக்கள்...

  ReplyDelete
  Replies
  1. வாங்க தனபாலன் சார்....
   தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

   Delete
 3. முக்கியமான அவரவர் பதிவுகளின் சிறந்த வரிகளோடு அறிமுகங்களின் இணைப்பு அருமை...

  ReplyDelete
 4. என்னையும் வலைச்சரத்தில் அறிமுகம் செய்தமைக்கு நன்றி நண்பரே
  தங்கள் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. வாங்க ஜெயக்குமார் ஐயா...
   தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

   Delete
 5. சிறந்த அறிமுகங்கள்....வாழ்த்துகள்

  ReplyDelete
  Replies
  1. வாங்க சகோதரி...
   தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

   Delete
 6. தமிழ் பற்றி எழுதும் சிறப்பான பதிவர்களுக்கு வாழ்த்துக்கள்.

  ‘துளிர் விடும் விதைகள்’ என்ற நூலை மதுரை வலைப்பதிவர் மாநாட்டில் வெளியிடும் கிரேஸ் பிரிதிபா அவர்களுக்கு வாழ்த்துக்கள்.

  மதுரை வலைப்பதிவர் மாநாட்டில் ‘கரந்தை மாமனிதர்கள்’ என்ற புத்தகத்தை வெளியிடும் கரந்தை ஜெயக்குமார் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.

  மதுரை பதிவர் சந்திப்பு விழா சிரப்பாக நடைபெற வாழ்த்துக்கள்.

  ReplyDelete
  Replies
  1. வாங்க கோமதி அம்மா....
   தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

   Delete
  2. உங்கள் வாழ்த்திற்கு நன்றி கோமதியம்மா.

   Delete
 7. தங்களுக்கும், தங்கள் குடும்பத்தினர்உறவினர்கள், நண்பர்கள் அனைவருக்கும்
  அனைவருக்கும் இனிய தீபாவளி திருநாள் வாழ்த்துக்கள்
  புதுவை வேலு

  ReplyDelete
  Replies
  1. வாங்க சகோ. யாதவன் நம்பி....
   தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
   தங்களுக்கும் இனிய தீபாவளி வாழ்த்துக்கள்.

   Delete
 8. சிறப்பான அறிமுகங்கள்...
  அனைவருக்கும் அன்பின் இனிய நல்வாழ்த்துக்கள்..

  ReplyDelete
  Replies
  1. வாங்க செல்வராஜூ ஐயா....
   தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
   தங்களுக்கும் இனிய தீபாவளி வாழ்த்துக்கள்.

   Delete
 9. அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

  ReplyDelete
  Replies
  1. வாங்க சகோ. நேசன்....
   தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

   Delete
 10. தமிழ் கூறும் நல்லுலகில் தமிழ்பதிவாளர்களின் அறிமுகம் அருமை! வாழ்த்துக்கள்!

  ReplyDelete
  Replies
  1. வாங்க சுரேஷ் ஐயா...
   தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

   Delete
 11. எல்லாரும்தான் வலைபதிவில் தமிழில் பதிவுகள் எழுதுறோம். ஆனால் நீங்க மேலே குறிப்பிட்டவர்களின் , தமிழார்வம், தமிழ்ப் படைப்புகள், தமிழ்த்தாயின் கவனத்தையே எளிதில் ஈர்க்கும் அளவுக்கு உயர்தரமானதுனு சொல்லலாம்.

  ReplyDelete
  Replies
  1. வாங்க சகோ. வருண்...
   தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

   Delete
 12. வணக்கம்
  குமார் அண்ணா.

  சிறப்பான தொகுப்புக்கள் பகிர்வுக்கு நன்றிஅறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்
  தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள்

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
  Replies
  1. வாங்க சகோ. ரூபன்...
   தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

   Delete
 13. நமது உயிர் மொழியான தமிழின் புகழ் பரப்பும் பல தளங்களின் இணைப்புகளை அழகாய், தொடுத்தீர்கள் திரு. குமார், இன்றைய
  வலைச்சரத்தில். வாழ்த்துக்கள்!

  ReplyDelete
  Replies
  1. வாங்க நிஜாமுத்தீன்...
   தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

   Delete
 14. சிறப்பான பதிவர்கள்.... அனைவருக்கும் வாழ்த்துகள்.

  ReplyDelete
  Replies
  1. வாங்க வெங்கட் அண்ணா...
   தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

   Delete
 15. பொறுப்பான தொடக்கம் நண்பரே! எங்கோ இருந்து கொண்டு எல்லாவற்றையும் கவனித்துக்கொண்டிருக்கிறீர்களே? ரொம்ப மகிழ்ச்சி.. என்னை அறிமுகப்படுத்தி எழுதியதற்கும், நல்ல பிற நண்பர்களின் பொறுப்பான தளங்களை அறிமுகப்படுத்தி எழுதியதற்கும். நல்ல தொடக்கம். நன்றி வணக்கம்.

  ReplyDelete
  Replies
  1. வாங்க நிலவன் ஐயா...
   தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

   Delete
 16. வலைச்சரம் குடும்பத்தினர் வலைச்சரம் வாசகர்கள் எல்லோருக்கும்
  இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
  http://yppubs.blogspot.com/2014/10/blog-post_21.html

  ReplyDelete
  Replies
  1. வாங்க யாழ்பாவணன்...
   தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

   Delete
 17. அனைவருக்கும் அன்பின் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்..

  ReplyDelete
 18. அனைவருக்கும் என் உளம் நிறைந்த அன்புகலந்த தீபாவளி வாழ்த்துக்கள் ,

  ReplyDelete
  Replies
  1. வாங்க ஐயா...
   தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

   Delete
 19. இனிய தீபாவளி திருநாள் நல்வாழ்த்துகள்.

  ReplyDelete
  Replies
  1. வாங்க அம்மா...
   தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

   Delete
 20. மிகச் சிறந்த அறிமுகங்கள் நண்பரே! அனைவருக்கும் எங்கள் வாழ்த்துக்கள்!

  ReplyDelete
  Replies
  1. வாங்க துளசி சார்...
   தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

   Delete
 21. அறிமுகப் பதிவு அருமை! மேலும் புதிய முறை நன்று! வாழ்த்துகள்!

  ReplyDelete
  Replies
  1. வாங்க ஐயா...
   தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

   Delete
 22. வாங்க ஐயா...
  தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

  ReplyDelete
 23. வணக்கம் சகோதரரே.
  அருமையான பதிவர்களுடன் என்னையும் சேர்த்து அறிமுகப்படுத்தியதற்கு மகிழ்வுடன் மனமார்ந்த நன்றிகள்! ஒவ்வொருவரைப் பற்றியும் அறிமுகம் கொடுத்து பதிவைப் பற்றி சிறிது எழுதி இணைப்புக் கொடுத்திருப்பது நன்று.
  என் புத்தக வெளியீட்டையும் குறிப்பிட்டு வாழ்த்தியதற்கு உளமார்ந்த நன்றி சகோ. தாமதமான பதிலுக்கு மன்னிக்கவும். மதுரையில் சந்திக்கலாம்.

  ReplyDelete
  Replies
  1. வாங்க சகோதரி...
   வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
   மதுரை சந்திப்புக்கு வர ஆசைதான்... வெளிநாட்டு வாழ்க்கை நினைக்கும் நேரத்தில் விடுமுறை கிடைப்பதில்லையே...

   Delete

தமிழ் மணத்தில் - தற்பொழுது