07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Saturday, December 20, 2014

சனி, சங்கீதாவுக்கு விரதம் – ஏழாம் அறிவு (A.R. முருகதாஸ் 2011)

 
தமிழ் வாழ ! அந்தத் தமிழோடு நாமும் வாழ !
நேற்று.... இதுவே எனக்கு குழப்பமாகியது...
ஞானி ஸ்ரீபூவு போனதும் வாத்தியார் அனைவரும் கோரஷாக பாடினார்கள் கேட்டுக்கிட்டியா ? எதாவது குண்டக்க மண்டக்க கேள்வி கேட்டே.... ? இனி கேட்பே ? இனி கேட்பே ? இனி கேட்பே ? ()நீதிமன்றத்தில் சொல்வார்களே அதே மாதிரி சொன்னார்கள் இதில் ஒண்ணாம் வகுப்பு வாத்தியார் என்ன செய்தார் தெரியுமா ? போனவருட பகையை மனதில் வளர்த்துக்கொண்டே வந்திருக்கிறார் அவருக்கு ஞானி ஸ்ரீபூவு என்னை அறைந்தது அவருக்கு 75 ரூபாய் சம்பளம் கூட்டியது போன்ற மகிழ்வு நேராக வந்தார் எனது அத்தை மகள் பிரியாவதிக்கு சடங்கு சுத்தும்போது பார்த்திருக்கிறேன் அதைப்போல என்னை மூன்று சுற்று சுற்றி வந்தவர் திடீரென போட்டார் பாருங்க ஒரு ஆட்டம் டண்டனக்கும், டணக்கும்... னக்கும்... டண்டனக்கும், டணக்கும்... னக்கும்... டண்டனக்கும், டணக்கும்... னக்கும்... ஸ்கூலில் வாத்தியாரின் ஆட்டத்தைப்பார்த்து அனைவரும் கொல் எனசிரிக்க நான் முடிவு கட்டினேன் இவர்கள் அனைவரையும் ஒருநாள் கொல்லவேண்டும் நிச்சயம் ஒருநாள் ஐயா மாதிரி, அப்பா மாதிரி பெர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்சா மீசையை வளர்த்து மீசையாலேயே இவங்களைப்பூராம் குத்திக்கிழிக்கனும் (நண்பர்களே மீசையை எதற்காக பெரிதாக வளர்த்தேன் 80தின் சரித்திரம் இதுதான்) இதற்காக அன்றிலிருந்து பாக்டம்பாஸ் 20, 30, 40, 50, 60, வரை வாங்கிப்போட்டு வளர்க்க ஆரம்பித்தேன் சரி மற்றவர்கள் சிரிக்கட்டும் அது ஆணவச்சிரிப்பு பொன்னம்மா அவள் ஏன் ? சிரிக்கிறாள் குழப்பம் மிகப்பெரிய குழப்பமாகியது அன்றிலிருந்து சாப்பிடும் போது காமராஜர் போட்ட கோதுமை களியை சாப்பிட மட்டுமே வாயைத்திறக்க ஆரம்பித்தேன் காரணம் அந்தக்களியின் சுவை இப்போது நினைத்தாலும் இனிக்கும் ஆனால் ? இந்த அறையின் வலியைவிட சட்டீர் என்ற ஒலி எனது காதுகளில் ஒலித்துக்கொண்டே... இருக்க கடைசியில் இதுக்கெல்லாம் காரணமான பிள்ளையார் மீது கோபம் வந்தது அன்றிலிருந்து என்னை வறுத்து எடுத்த பிள்ளையாரை வெறுத்து விட்டேன் அவரை வணங்குவதில்லை வருடத்தில் ஒருநாள் அவரை வணங்குவேன் அது விநாயகர் சதுர்த்தி அன்று பிள்ளையாரின் வயிற்றில் சொருகப்படும் 3 பைசா அல்லது 5 பைசாக்களை எடுக்க ஊரணியோ, ஆழமான கிணறுகளோ எதுவானாலும்10 பேர் குதித்தாலும் சரி கிணற்றில் குதித்து பிள்ளையாரின் வயிற்றைக்கிழித்து காசு எடுப்பது இதே கில்லர்ஜி மட்டுமே கிணற்றில் குதித்த விசயம் வீட்டுக்கு தெரிந்து மாலை வீட்டுக்கு வந்ததும் கிடைக்கும் சட்டீர் சட்டீர்கள் இந்தக்கணக்கில் சேர்க்க வேண்டாம் அது வருடக்கணக்கு பிள்ளையாரை  எல்லாக்கடவுளையும் போல இவரையும் கும்பிட வேண்டியதானே ! இவரை மட்டும் ஏன் ? பெரியப்பான்னு சொல்லனும் ? குழப்பத்தை தீர்க்க, பேச்சிமுத்து சித்தப்பாவிடம் கேட்கலாமா ? வேண்டாம், நேற்றுதான் கடையில் பஜ்ஜி எடுத்து திண்ணதற்கு பிச்சி எடுத்து விட்டார், மாரிமுத்து சித்தப்பாவிடம் கேட்கலாமா ? வேண்டாம் அவர் கோபம் வந்தால் ? மாறிமாறி குத்துவார், களஞ்சியம் சித்தப்பாவிடம் கேட்கலாமா ? அவர் லாஞ்சி வேலைக்கு லால்குடி போயிட்டாரே, அப்பத்தா கல்லாப்பருந்திடம் கேட்போம் வீட்டுக்கு வந்து அப்பத்தாவிடம் ஆதி முதல் அங்கம் வரை எல்லாம் சொன்னேன் கேட்டுக்கொண்ட அப்பத்தா மடியில் படுக்கப்போட்டு வாயில் அதிரசத்தை ஊட்டிக்கொண்டே வாத்தியார்கள்ட்ட அப்படியெல்லாம் கேள்வி கேட்ககூடாது அவங்களை மதித்து நடக்கனும் மாதா, பிதா, குரு, தெய்வம் இதுல வாத்தியாரு கடவுளுக்கு முன்னாடியே வந்துடுறாரு அதுனாலே நீ அவங்களுக்கு கடவுளுக்கு கொடுக்கிற மரியாதையை அவுங்களுக்கும் கொடுக்கனும் அசதியில் காரணம் வலியின் ஒலியும், ஒலியின் வலியும் அப்பத்தா சொல்வதை கேட்டுக்கொண்டே.......... உறங்கி விட்டேன்.
(சுபம்)
CHIVAS REGAL சிவசம்போ-
இத்தனைபேர், அறைஞ்சதுக்கு ஆரம்ப காரணம் உங்க ஐயா ஞானி ஸ்ரீபூவுதான் உங்க அப்பாவுக்கும், பெரியப்பாவுக்கும் நித்தீஷ், ரித்தீஷ் இப்படி LATTEST  பேரா வச்சிருந்தா ? இவ்வளவு பிரட்சினை வந்துருக்காது.
சிவாதாமஸ்அலி-
ஏண்டா, குடிகார மட்டை 1925 லஏதுடா ? இந்த பேரெல்லாம்.
 
 இதோ ஞானி ஸ்ரீபூவு அவர்களின் கொள்ளுப்பேத்தியின் மகன் M. ரித்தீஷ் (வயது இன்று 6 மாதம்13 நாட்கள் 5 மணிநேரம் 36 நிமிடம் 21 நொடிகள்)
  காணொளி.
வணக்கத்துடன் உங்கள் கில்லர்ஜி.
எனக்கு கார் ஓட்டுவதோடு இன்னொன்று பிடிக்குமென...
சொன்னேன் ஓட்டிக்கொண்டே வீடியோ எடுப்பது ஆம்
ஒருகையில் கேமரா மறு கை பழக்கதோஷம் மீசையை....
அப்படியானால் ஸ்டேரிங் பிடிக்க அதற்க்குத்தான்
இறைவன் கொடுத்த கால்கள் இருக்கிறதே ஆம்
நான் கால்களால் ஓட்டுவது வழக்கம் சுமார் 120. KM
 தொடர்ந்து கால்களால் வண்டி ஓட்டியிருக்கிறேன்
எனது நண்பர்களுக்கு தெரியும் விரைவில்
கில்லர்ஜியில் இதன் குறிப்புகளை காணலாம்.
இந்தியாவில் ? சைக்கிள் ஒழுங்கா ஓட்டத்தெரியாது
காணொளி.
 
  லிமாம்பூத் லிமா
இவரைப்பற்றி அறிமுகப்படுத்துவது எனக்கு வேண்டாத வேலையே காரணம் எல்லோராலும் அறியப்பட்டவர் எமிரேட்ஸில் (அல்)ஷார்ஜாவில் வாழ்கிறவர் இவரைப்பற்றி எழுத நினைக்கும்போது எனக்கு உகாண்டா நாட்டு பழமொழி ஒன்று ஞாபகத்திற்கு வருகிறது அதன் விளக்கம் எழுதலாம் ஆனால் ? என்னையே நான் கேவலப்படுத்துவது போல அர்த்தம் வருகிறதே... ஆகையால் வேண்டாமே.... (அதைக்கொஞ்சம் சொல்லுங்க ? ஜி) யாரு ? பகவான்ஜியா ? எனக்குத்தெரியும் உங்களுக்குத்தான் இப்படி கேட்கத்தோனும் இவர் பதிவுகளோடு, சமையல் குறிப்புகளோடு, சித்திரம் வரையும் கலையும் அறிந்த பன்முக கலைஞர் எமக்கு இன்னும்கூட ஐயமாகத்தான் இருக்கிறது இது சித்திரமா ? புகைப்படமா ? என்று ஆம் இது உங்களுக்கு மட்டுமல்ல ஐயம்பட்டியில் வாழும் ஐயாச்சாமிக்குகூட ஐயம் வருமெ80தில் எமக்கு ஐயமில்லை இவர் சுவாமி ஐயப்பன் உருவம் வரைந்தால் ? எப்படி இருக்கும் ? என நினைத்துப்பார்க்கிறேன், இவர் ஐயா ஞானி ஸ்ரீபூவு உருவம் வரைந்தால் ? எப்படி இருக்கும் ? என நினைத்துப்பார்க்கிறேன் இவரை நான் அறிமுகப்படுத்துவதற்க்கு ஒரு சுயநலமும் உண்டு அதாவது எனக்கு ஒரு உதவி தேவை (நினைச்சேன்) யாரு ? சொக்கனா ? எனக்குத்தெரியும் இது நீங்கதானு... ஆம் எமது சுயநலத்திலும் பொது நலமே.. (இப்படி வேறயா?) யாரு ? துளசி அகத்தார்களா ? எனக்குத்தெரியும் காலம் பூராம் உங்க லொள்ளு தாங்க முடியலையே ஆம் அம்மா நான் எனது அம்மையப்பன் இருவரின் பெயர்களிலிருந்து பகுதி பெயர்களை திருடி மீனாம்பதி என்றொரு என் உள்ளத்தை தொட்ட கதையொன்று எழுதி வைத்துள்ளேன் இதற்கான புகைப்படம் என்மனம் திருப்தியடையும்படி கிடைக்கவில்லை தங்களின் திருக்கரங்களால் வரைந்து தருவீர்கள் என நம்பி ஆத்மார்த்தமாய் இதன் மூலம் அறைகூவல் விடுகிறேன் பென்சிலால் ஒரு அவுட்லைன் வரைந்தால் போதும் அதுதான் இதற்க்கு பொருந்தும் என்னைத்தொடர்பு sivappukanneer@gmail.com கொள்வீர்கள் என நம்புகிறேன் நண்பர்களே அம்மா திருமதி. மனோ சாமிநாதன் அவர்கள் வரைந்த ஓவியத்தை COPY எடுத்து இதில் வெளியிட முடியும் ஆனால் ? அது முறையாகாது ஆகவே கீழே கிளிக்கலாமே... (பூவை கிழிக்கலாமா ?) ஹலோ அது கிழி நான் சொல்றது கிளி-க் (எது பச்சைக்கலரா சோலந்தூர் சோசியர் சோனைமுத்து வச்சுருப்பாரே.. அதுவா ?) யோவ், கீழே சொடுக்குயா.... போதுமா ?


லிமாம்பூத் அனிம்
தனியொரு மனிதனுக்கு உணவில்லை என்றால் ஜகத்தினை அழித்திடுவோம் என்றான் சகோதரி செல்லம்மா புருஷன். தனியொருவர் கோயிலுக்குள் போகமுடிய வில்லையெனில் கோவில் எதற்க்கு ? குளம் எதற்க்கு ? அதை முழுகி விடலாமே... என்கிறார் இவர், ஏன் ? கீழே சொடுக்குக.
குருதிக்கறை படிந்த சிங்கள பௌத்த குருமார்களுக்கு புத்தபெருமானின் புனிதப் பல்லைப் பாதுகாக்கும் அருகதை இன்னும் இருக்கிறதா ? என்றும் கேட்கிறார் அகச் சிவப்புத் தமிழ் என்னைப்போலவே (?) அழகிய பெயர் கொண்ட ஆக்ரோஷமான பதிவுகள் கொட்டிக் கிடக்கின்றது... எனது இனிய நண்பர் திரு. இ.பு.ஞானப்பிரகாசன் அவர்களின் பதிவுகளை காண கீழே சொடுக்குக...


லிமாம்பூத் பிதோ
சத்தியத்திற்க்கு கட்டுப்பட்ட கத்தி எத்தி விட்டால் நெத்தியில குத்தி நிற்கும். இது ஞானி ஸ்ரீபூவு வாக்கு. சமூகத்தில் நிலவும் மூடப்பழக்க வழக்கங்களை இழுத்து மூடவேண்டுமென கொந்தளிதிருந்தார் (?) அது மட்டுமில்லை போலிச்சாமியார்கள், நிர்வாணச்சாமியார்கள் இவர்களைப்பற்றி எழுதியதைப் படிக்கும்போது.... நித்தி போன்றவர்களை குத்தி கிழித்தாலென்ன ? என்று நண்பர் திரு. துளசிதரன், நண்பர் திரு. சொக்கன் அவர்கள், நண்பர் திரு. சாமானியன் அவர்களுக்கு மட்டுமல்ல தங்களுக்கும் தோன்றும், எனக்கு எப்படித்தோன்றும் ? ஹி.. ஹி.. இப்படித்தான் குந்தியானந்தா மதவிசயங்களை அனாயாசமாக விளாசியிருந்தார் (?) குழறுபடிகளை கண்டு குமுறியிருந்தார் (?) மேலோட்டமாக பார்க்கும்போது சற்று யோசிக்கத் தோன்றும் துணிந்து உள்ளே போய் பார்த்தால் அத்தனையும் உண்மைதான் என்றே தோன்றியது ஒவ்வொரு விசயங்களை அளந்து ஆதாரத்துடன் எழுதியவர் பசியைப்பற்றியும் அதன் நன்றியைக்குறித்தும் அழகாக எழுதியவர் (இது 1997-லில்) இவர்மீது எனக்கு சிறிய கோபமும் உண்டு சிறிது காலம் மறைமுக வாழ்க்கை வாழ்ந்தாலும் திரும்பி வந்தவர் நம்மிடமும் மறைத்து விட்டாரே 80தே அது, பரவாயில்லை நண்பர் திண்டுக்கல் தனபாலன் சொல்வதுபோல் இதுவும் பேக்ல போகும்... இவர்தான் காமக்கிழத்தனாய் இருந்து கிழித்தது போதுமென்று நினைத்து மூடர் கூடங்களை மூடவேண்டுமென புறப்பட்டு போய் அனைத்து வேலைகளையும் முடித்து மூடிவிட்டு பசியாறி  நமக்கு பசியாற்ற வந்த பரமசிவம் போல திரும்பி இருக்கிறார் எனது ஆரம்பகால பதிவுகளில் இவரது கருத்துகளை மிகமிக ரசிப்பேன் அவர்தான் எனது இனிய நண்பர் திரு. பசி பரமசிவம் அவர்களின் பதிவை காண கீழே சொடுக்குக.


லிமாம்பூத் வாலோ
சொற்களை கட்டுவது கவிதையல்ல... விற்பனைக்கு விரைவதும் கவிதையல்ல... என்று ஆதங்கப்படுகிறார் இந்தக்கவிஞர் வேறு எதுதான் ? கவிதை எனக்கேட்கிறீர்களா ? மூங்கில் காற்றில் இசைத்து கானம் பாடுகிறார் முண்டாசுக்கவிஞனாக முழக்கமிடுகிறார் இந்தக்கவிஞர் முழுவதும் படிக்க வேண்டுமா ? அது மட்டுமல்ல வலைப்பூ நண்பர்களுக்கு டெக்னிக்கல் பிரட்சினை ஏதுமிருந்தால் உடனடியாக சரி செய்து தருகிறார் இவருக்கு தொலைபேசியில் அழைத்தால் போதும் அது இரவு 3 ¾ மணியாயிருந்தாலும் இவரை அழைக்கலாம் வாருங்கள் தோழர்களே... அவர்தான் எமது நண்பர் திரு. டி.என்.முரளிதரன் அவர்களின் பதிவைக்காண கீழே சொடுக்குக


லிமாம்பூத் சியாம்
மரம் வளர்ப்போம் மனித குலம் துளிர்ப்போம் என்று செவிட்டில்  சட்டீர் (இங்கும் சட்டீரா ? அவ்வ்வ்வ்வ்வ) என அறைந்து அறை கூவலிடுகிறார் இவர் மரத்துக்கும் மனிதனுக்கும் என்ன ? தொடர்பு 80 எல்லோருக்கும் புரியாதே.. குறிப்பாக என்னைப்போன்ற பாமரனுக்கு புரியாதே... உள்ளே போய் படித்தாலே விபரம் கிடைக்கும் ஆகவே உள்ளே போங்களேன் (ஜெயிலுக்குள்ளேயா ?) இல்லேங்க.. பதிவுக்குள்ளே போங்களேன்னேன் (பதிவுக்குள்ளே போகச்சொல்றே... லிங்கா எங்கேயா ?) இங்கே பாருங்க சினிமாக்காரங்களை ஞாபகப்படுத்தாதீங்க எனக்கு நெஞ்சு பொறுக்காது சொல்லிப்புட்டேன் (யோவ், இணைப்பைக்கொடுயா... ஏய்யா ? இப்படிக்கொல்றே ?) ஓ... அது,வா அதான் அது அதாங்க கீழே கைதி நம்பர் மா3 இருக்கே.. அதை சொடுக்குங்க..
தன்னனன்னே  நானனன்னே.....
தனனானே  தானனன்னே...........
தன்னன்னே நானனன்னே......
தனனானே  நானே நன்னானே......
என்ன ? இப்படி பார்க்கிறீங்க... நான் அழகா (?) பாடுனதையா ? நான் பாடுனதுக்கு காரணம் தெரியனுமா ? இனிய தோழி திருமதி. MALATHI. K அவர்களின் பதிவைக்காண கீழே சொடுக்குங்க...
ஞானி (ஸ்ரீபூவு அல்ல)


அனிம்னபு
பணம் இல்லையேல் சனம் சொல்லும் நீயொரு பிணம் இது ஞானி ஸ்ரீபூவு வாக்கு. ஆம் ஒரு மனிதன் கையில் பணம் இருக்கும்போதும், பணம் இல்லாதபோதும் அவன் இருப்பதெப்படி ?
பலரும் பலவகைகளில் இருப்பார்கள்,
நான் எப்படி ? இருப்பேன் தெரியுமா ?
எப்படி ?
மாப்ளே நீ சொல்லேன்...
ய்யேன் நீ சொல்லேன்...
மாமு நீ சொல்லேன்...
ய்யேன் நீ சொல்லேன்...
நைனா நீ சொல்லேன்...
ய்யேன் நீ சொல்லேன்...
நானே சொல்லவா ?
(யோவ், இப்ப சொல்றியா ? இல்லை கம்ப்யூட்டரை க்ளோஷ் பண்ணவா ?)
சரி, சரி. நானே சொல்றேன்...
சரி சொல்லித்தொலை.
நான், நானாகத்தான் இருப்பேன்.. எப்பூடி ?
? ? ?
நண்பர்களே... இவர்கள் எப்படி ? என்பதை தான் படித்த ஆங்கில நாவலை மொழி பெயர்த்து நமது அழகிய தமிழில் தந்துள்ளார் எமது நண்பர் திரு. தமிழ்வாசி பிரகாஷ் அவர்களின் பதிவைக்காண கீழே சொடுக்குக..


அனிம்னபூத் இஷா
தென்றல் காற்று வீசும் போது கவிதை படித்து இருக்கிறீர்களா ? நான் படித்திருக்கிறேன் இங்கல்ல ! எனது இனிய இந்தியாவில் அது ஒரு தனிப்பட்ட சுகம் உங்களுக்கும் வேண்டுமா ? இதோ இந்தப்பதிவரின் கவிதையும் சுகம் தருமே ஆம் பழகுவதற்க்கு கலகலப்பானவர் நான்கூட இவரின் தளம் போய்த்தான் கவிதை எழுதுவது எப்படியென ? கற்றுக்கொண்டு வருகிறேன் இவர் சொல்கிறார் எதையும் கற்க கசடற என்று இவரிடம் வாட் இஸ் யுவர் நேம் ? என்று கேட்டால், மை நேம் ஈஸ் சசிகலா என்றும் சொல்கிறார் பெயரைக்கேட்டவுடன் பெரிய இடத்து வில்லங்கமோ ? (இப்பத்தான் பல்லுப்புடுங்கியாச்சே.... அவ்வ்வ்வ்வ்வ்) என அஞ்ச வேண்டாம் நன்றாக கவிதை எழுதுவார் SORRY எழுதுகிறார் அவர்தான் எமது இனிய தோழி திருமதி. சசிகலா அவர்கள் 


அனிம்னபூத் டலவா
சாமி இல்லாத ஊருமில்லை, சாமி, யாருமில்லை இது ஞானி ஸ்ரீபூவு வாக்கு. எங்கும் சாமியார்களின் ஆட்டம், அவர்களைத்தேடி மக்கள் கூட்டம், பிறகு எல்லாவற்றையும் சுருட்டிக்கொண்டு அவர்கள் ஓட்டம், மக்களுக்கு இவர்கள்மீது ஏன் ? இந்த நாட்டம். என்று கேட்கிறார் பாறையில் அரும்புகளை மலரவிட்ட பதிவர் பேராசையே மனிதனை ஏமாளியாக்கி விடுகிறது. போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து இதை மக்கள் உணர்ந்தால் ? எத்தனை ஆனந்தாக்கள் வந்தாலும் கூத்தாட முடியாது என்றும் வலியுருத்துகிறார் எனது இனிய நண்பர் மணப்பாறை திரு. அ.பாண்டியன் அவர்களின் பதிவைக்காண கீழே சொடுக்குக.


அனிம்னபூத் தட்லோ

சைக்கிள் கேப் கிடைச்சா, சைக்கோவைவும் ஓட்டு இது ஞானி ஸ்ரீபூவு வாக்கு. நடைவண்டி ஓட்டுனவங்களை பார்த்து இருப்பீங்க, சைக்கிள் ஓட்டுறவங்களை பார்த்து இருப்பீங்க, பைக் ஓட்டுறவங்களை பார்த்து இருப்பீங்க, ஆட்டோ ஓட்டுறவங்களை பார்த்து இருப்பீங்க, கார் ஓட்டுறவங்களை பார்த்து இருப்பீங்க, லாரி ஓட்டுறவங்களை பார்த்து இருப்பீங்க, பஸ் ஓட்டுறவங்களை பார்த்து இருப்பீங்க, ரயில் ஓட்டுறவங்களை பார்த்து இருப்பீங்க, ஃபிளைட் ஓட்டுறவங்களை பார்த்து இருப்பீங்க, கப்பல் ஓட்டுறவங்களை பார்த்து இருப்பீங்க, ஏன் ? ராக்கெட் ஓட்டுறவங்களை கூட பார்த்து இருப்பீங்க, ஆனா ? அரசியல்வாதிகளை ஓட்டுறவரை பார்த்து இருக்கீங்களா ? அது இவர்தான் ஜாலியான ஆசாமி எந்த இடத்தில எது கிடைச்சாலும் ஓட்டிருவாரு அதுக்கு சக்கரம் தேவையில்லை, ஸ்டேரிங் தேவையில்லை ஒரு புள்ளி கிடைச்சாலும் அதுல ஒரு பல்லி வரைஞ்சு சகுனம் பார்த்து சங்கு ஊதிடுவாரு.. அப்படியொரு பதிவாளர் அமெரிக்காவுல இருந்துகிட்டு ஒபாமாவுக்கே ஆலோசனை கொடுப்பாரு போல... இவர் சொல்கிறார் அவர்கள் உண்மைகள் என்று. யாரைச் சொல்கிறார் ? என்று கேட்கிறீர்களா ? மோ(ச)டி மஸ்தான் வேலை செய்பவர்களைத்தான், அவர்தான் நல்லவரு, வல்லவரு, திரு. மதுரை தமிழன் அவர்களின் பதிவைக்காண கீழே சொடுக்குக.

இன்றைய கொசுறு

 
 
நண்பர்களே, சமீபத்தில் எனது புகைப்படமும், எனது சிறிய பேட்டியும் தினமலர் நாளில் வந்தது தாங்கள் அறிந்ததே இதற்க்கு முன் இந்த U.A.E நாட்டில் AL-KHALEEJ 2002 Sep 20 ல் வெளிவந்த நாளிதழில் வந்தது இதில் பலநாட்டு மனிதர்கள் இருக்கிறார்கள் இதில் தி கிரேட் இந்தியன் தமிழன் ஒருவனே உண்டு அதுதான் மூன்றாவது நபராக வெள்ளைச்சட்டையில் கருப்பு டை கட்டி நிற்க்கும் உங்கள் கில்லர்ஜி அகலமான புகைப்படத்தை பத்திரிக்கைகாரர்கள் ஒடுக்கிப்போட்டிருப்பதால் எல்லோரும் உயரமாக இருப்பது போல் தெரிகிறது.
 

நன்றி
அன்புடன்
என்றும் உங்கள்
Devakottai KILLERGEE Abu Dhabi
(கில்லர்ஜி தேவகோட்டையான்)
அன்பு இதயங்களுக்கு ஒரு ’’ப்ளாஷ் நியூஸ்’’ எனது வலைப்பு கில்லர்ஜியில் ப்ளாஷ் நியூஸ் தொடங்கப்பட்டு இருக்கிறது ஒருநாள் ஐயன் வள்ளுவனின் திருக்குறளும், மறுநாள் பையன் கில்லர்ஜியின் தெருக்குரலும் ஒலிக்கும் 80தை மகிழ்ச்சியுடன் அறியத்தருகிறேன்
தற்போது எமது வலைப்பூ கில்லர்ஜியில் இன்றைய வாழ்க்கைச் சூழலைப்பற்றி எழுதியிருக்கிறேன் அவசியம் படிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன் அன்றைய மனிதர்கள். நன்றி. 
நாளை எனது கடைசி பதிவு
 
வாழ்க ! தமிழ்.

* * * * * * * * * * * * * * * * * *


 

87 comments:

  1. வணக்கம்
    கில்லர்ஜீ
    அறிமுகங்கள் மிக அசத்தலாக உள்ளது அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள் அதிலும் ஆரம்பத்தில் சொல்லிய கதை நன்று..சிறப்பாக தொகுத்து வழங்கிய தங்களுக்கு பாராட்டுக்கள் தொடருகிறேன் பதிவுகளை.
    த.ம2
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. முதல் கருத்துக்கு நன்றிகள் ரூபன் படித்து விட்டீர்களா ? காரணம் மறுநொடியே போட்டு விட்டீர்களே,,,, தில்லை அகத்தார் படித்துக்கொண்டு இருக்கிறார்கள் தகவல் வந்தது நன்றி

      Delete
  2. ஹப்பா ஒரு வழியா முடிச்சீங்களா....சட்டார்னு...அடிய....

    கொள்ளுப்பேரன் ரித்தீஷ் க்யூட்.....

    ஸ்பீடா வண்டி ஓட்டிக்கிட்டு அங்கருந்து எங்கள என்ன நோட்டம்? பார்த்துக்கிட்டே ஓட்டுறீங்க....அத கொஞ்சம் இங்க நம்மூர்ல ஓட்டிக் காட்டுங்களேன்......ஹஹஹஹ

    அப்பத்தா ரொம்ப அழகா இருக்காங்க...

    ஹேய் எப்படிபா உங்க கவசமான தொப்பி இல்லாம ஃபோட்டோ ஷேக்குங்க எல்லாம் தலைய கவர் பண்ணிக்கிட்டு இருக்கும் போது...தொப்பி இல்லாம பார்க்கும் போது யாரோ மாதிரி இருக்கு நண்பரே! நல்ல காலம் மீசை இல்லாம இருந்துருந்துச்சுனா தேட வேண்டியிருக்கும் உங்கள....ஹஹ

    அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. வாங்க, வாங்க ஏன்? இன்னும் அடிவாங்கனும்னு ஆசையா ?
      கொள்ளுப்பேத்தியின் மகன் எப்படி ? கொள்ளுப்பேரனாவான் ?
      நான் பார்ப்பது யாரைத்தெரியுமா ? போலீஸ் வண்டி வருதானு புடிச்சாங்கே பெணால்ட்டிதான்
      நம்ம ஊர்லதான் சைக்கிளே ஓட்டத்தெரியதே...
      நான் அழகுனா அப்பத்தாவும் அழகாத்தானே இருக்கனும்.
      வருகைக்கு நன்றி.

      Delete
  3. சனிக்கிழ்மை சங்கீதானு போடுவீங்கன்னு தெரியும் ஆனா சொல்லல அப்புறம் நீங்க யார போடறதுனு தேடுவீங்கல்லா அதா...

    ReplyDelete
    Replies
    1. இப்படி ஒரு சமாளிப்பா ?

      Delete
  4. வணக்கம்
    இரண்டு வலைப்பூக்கள் எனக்கு புதியவை அறிமுகம் செய்தமைக்கு நன்றி ஜீ


    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  5. நண்பரே,

    அப்பாடா... ஒரு வழியா.... படிச்ச எங்களுக்கே காது ஙொய்யிங்குது !....

    கொள்ளுப்பேரன் ரித்தீஷ் கொள்ளை அழகு !

    மனமார்ந்த வாழ்த்துக்கள். உங்களுக்கென்ற பாணியில் மிக சிறப்பான முறையில் இந்த வார வலைச்சர தொகுப்பை வழங்கினீர்கள்.

    உங்கள் அப்பத்தா ஆசியில் நீங்கள் இன்னும் பல உயரங்கள் தொட நட்பான வாழ்த்துகள் ! வலைப்பூ அறிமுக அன்பு உள்ளங்களுக்கும் !

    ( 35 கிலோ ஐஸ்கட்டியா.... ஜீ ! ஆல்ப்ஸ் மலையையே பெயர்த்து கொண்டவந்தேன்... உங்க ஊரு வெயிலில எல்லாம் உருகி மீதி 35.... ஈபில் டவர் லிப்ட்டுக்கு பதிலா இப்ப ஏணி வச்சிருக்காங்களே... சேதி தெரியாதா ?! )

    நன்றியுடன்
    சாமானியன்
    saamaaniyan.blogspot.fr

    ReplyDelete
    Replies
    1. இன்னுமா கேட்குது ? கொள்ளுப்பேரன் அல்ல கொள்ளுப்பேத்தியின் மகன்
      வாழ்த்தியமைக்கு நன்றி நண்பரே,,
      நண்பரே நான் கேட்டது நான் லரும் பொழுது மையத்தில் லிப்ட் அமைத்துக்கொண்டு இருந்தார்கள் அது முடிந்து விட்டதா ? என்பதைத்தான்.

      Delete
  6. திங்கள் முதல் சனிவரை தனி பாணி. நகைச்சுவையுடன் அறிமுகம். பாராட்டுக்கள்.

    ReplyDelete
    Replies
    1. முதன் முறையாக எமது பதிவைக்காண வந்த தங்களை வரவேற்கிறேன் நன்றியோடு.

      Delete
  7. அசத்தல் வாரம்! இதுவரை ஒரு எதிர்பார்ப்புடன் இப்படி வலைச்சரத்தை விடாமல் தொடர்ந்ததே இல்லையாக்கும், கேட்டோ!!!!

    இனிய பாராட்டுகளும் வாழ்த்துகளும்.

    நல்லா இருங்க.

    ReplyDelete
    Replies
    1. வருக வாழ்த்தியமைக்கு நன்றி நாளை எனது கடைசி பதிவுக்கும் வருக

      Delete
  8. இன்றும் என் சொந்த பந்தங்கள் என் நண்பர்கள் நிறை பேர் அறிமுகம் செய்யப்பட்டுள்ளனர். எல்லோர் சார்பாகவும் கில்லர்ஜி அண்ணாவிற்கு நன்றி@நன்றி! நன்றி!

    ReplyDelete
    Replies
    1. ஆடிக்கும், அமாவாசைக்கும் ஆடி அசைந்து வரும் தங்களுக்கும் எமது சிறப்பு நன்றிகள்

      Delete
  9. வாரம் முழுவதும் அருமையான அசத்தல் அறிமுகங்களுடன்
    வலைச்சர ஆசிரியர்பணியினை மிகவும் சிறப்புடன் செய்து வருகிறீர்க ள் நண்பரே
    தங்களுக்கு நேரம் எப்படி கிடைக்கிறது என்பதுதான் புரியவில்லை
    வாழ்த்துக்கள் நண்பரே

    ReplyDelete
    Replies
    1. வருக நண்பரே அதையெல்லாம் அலைபேசியில் சொல்கிறேன் நண்பரே... இருப்பினும் உழைப்பு கடினமே நான் நினைத்தது போலில்லை ஏதோ சமாளித்து விட்டேன் வருகைக்கு நன்றி

      Delete
  10. குட்டி செல்லம் அழகு...

    // 120. KM தொடர்ந்து கால்களால் // ஜி அசத்துறீங்க...!

    அறிமுகம் செய்த விதத்தை சொல்லவா வேண்டும்...? அட்டகாசம்...! அனைவருக்கும் வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. எப்பொழுமே குட்டிச்செல்வங்கள் அழகு தானே நண்பா,,,

      ஆனால் ? நம்மூரில் சைக்கிளே ஓட்ட முடியவில்லையே வாழ்த்தியமைக்கு நன்றி,

      Delete
  11. என்னையும் அறிமுகப்படுத்திப் பாராட்டிய மிக்க பெருந்தன்மை கொண்ட தங்களுக்கு என் நன்றி கில்லர்ஜி.

    தங்களிடம் பாராட்டுப் பெற்ற அனைத்து உடன்பிறப்புகளுக்கும் என் வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. வருக நண்பரே தொடந்து கில்லர்ஜிக்கு,,, எம்மிடம் மறைத்து விட்டீர்களே நண்பரே....

      Delete
  12. ஒவ்வொரு நாளும் தாங்கள் அணுகிய முறை நீங்கள் எங்களுக்கு அருகில் இருப்பதுபோன்ற உணர்வை ஏற்படுத்தியது.
    வலியின் ஒலியும், ஒலியின் வலியும் அப்பத்தா சொல்வதை கேட்டுக்கொண்டே.......... உறங்கி விட்டேன் என்று கூறியுள்ளீர்களே, அது உங்களுக்கு மட்டுமல்ல எங்களுக்குமே. முதன்முதலாக தொடர்ந்து அனைத்து நாள்களிலும் உங்களது பதிவுகளைத் தான் வலைச்சரத்தில் படித்தேன். (முன்னர் பல முறை முயற்சித்தபோதிலும் பல காரணங்களால் தொடர முடியாமல் தவித்துள்ளேன்) தொடர்ந்து நீங்கள் எழுதி சாதனைகள் புதிய வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. வருக முனைவரே நான் இந்த அளவுக்கு எழுதியிருப்பதற்க்கு காரணமானவர்களில் தாங்களும் ஒருவர் ஆம் என்னிடம் வித்தியாசமாக எதிர்பார்ப்பதாக சொல்லி, சொல்லி என்னை உசுப்பேற்றி என்னை இப்படி ஆக்கி விட்டீர்கள் இந்த விசயங்களைக் குறித்து நான் ஒரு பதிவிடுவதாக இருக்கிறேன் நண்பரே... வருகைக்கு நன்றி

      Delete
  13. அப்பத்தா அழகா கதைய முடிச்சுட்டாங்களே..
    உங்கள் பேரனா? அழகு!
    வாழ்த்துகள் சகோ, இந்த வாரம் வலைச்சரம் களைகட்டியது :)

    ReplyDelete
    Replies
    1. கதை இப்படி முடிவது தானே அழகு
      ஆம் எனக்கும் பேரன் முறையே.... சகோதரரின் மகளுடைய குழந்தை வருகைக்கு நன்றி

      Delete
  14. ஏ... ஐயா.. ஞானி ஸ்ரீபுவு!?...
    தலை சுத்திப் போச்சுங்க சாமீ!..

    ராத்திரி வேலை பாத்துட்டு வந்த வந்த மயக்கம் தீர்றதுக்குள்ளே -
    மறுபடியும் மயக்கம்!..

    என்னா வேகம்!.. என்னா விவேகம்!?..

    வாழ்க வளமுடன்!..

    அன்பின்
    துரை செல்வராஜூ
    (6.37 Am.)

    ReplyDelete
    Replies
    1. வருக நண்பரே நன்றி ஓய்வெடுத்து நாளையும் வாருங்கள் எமது கடைசி பதிவுக்கு....

      Delete
  15. அன்புள்ள ஜி,

    வணக்கம்.

    ‘ சனி’(பகவான் அல்ல)யன் மிகவும் பிடித்திருக்கிறது நண்பரே!
    ஐயா மாதிரி, அப்பா மாதிரி பெரிய மீசை வைக்க ஆசை வைத்த ஆசை தெரிந்தது. அப்பத்தாவை படமாய் தங்கக் காசு மாலையோடு காட்டியது தங்களின் குடும்பப் பின்னனி தெரிந்தது... மூத்தவர்களுக்கு கொடுக்கும் முதல் மரியாதையும் தெரிந்தது. ஞானி ஸ்ரீபூவு அவர்களின் கொள்ளுப்பேத்தியின் மகன் M. ரித்தீஷ் சிரிக்கச் சொல்லி அழகாய் காணொளி மூலம் காட்சியது நன்றாக இருந்தது.

    காரோட்டிக்கொண்டே வீடியோ எடுப்பது...கால்களால் ஓட்டுவது வழக்கம்...தங்களின் சாகசச் செயலைச் சொல்லியிருந்தீர்கள். இனிமேல் வேண்டாம் இந்த விபரீத விளையாட்டு! முத்துச் சிதறில் பூவையும் புஷ்பத்தையும் அழகான ஓவியத்தைக் கண்டு இரசித்தேன்.
    அய்யா திரு. இ.பு.ஞானப்பிரகாசன்‘ சிங்கள...பௌத்த வெறித் தீ ’ கண்டு உள்ளம் துடித்தேன்.
    திரு. ’பசி’ பரமசிவம் அவர்களின் நன்றி கொன்ற ’பசி’ படித்தறிந்தேன்.
    நண்பர் திரு. டி.என்.முரளிதரன் அய்யா அவர்களின் ’எது கவிதை?’ என்று சொன்னது கண்டு தெளிந்தேன்.
    திருமதி.மாலதியின் 2030 கள் கண்டு மரம் காக்க நானும் வேண்டி நின்றேன்.
    திரு. தமிழ்வாசி பிரகாஷ் அவர்களின் ‘பணம்’ இல்லாத போதும் இருக்கின்றபோதும் இருக்கும் நிலையை எண்ணி மகிழ்ந்தேன்.
    சகோதரி திருமதி.சசிகலா அவர்கள் தென்றலாகி ‘கற்க கசடற’ கவிதையை வியந்து பார்த்தேன்..
    திரு. அ.பாண்டியன், எங்க ஊர்த் தமிழன் அய்யாவின் பகுத்தறிவு சிந்தனை நேசித்தேன்.

    திரு. மதுரை தமிழை வாசித்தேன்.

    தாங்கள் தமிழ்த்தாயிடம் பெற்ற
    பேற்றை யோசித்தேன்.
    தங்களை நேசித்தேன்...
    கவிதையை யாசித்தேன்...
    தமிழைப் பூசித்தேன்.

    -நன்றி.

    ReplyDelete
    Replies
    1. வருக மணவையாரே.. வருகை தந்து தெள்ளத்தெளிவாக விளக்கவுரை தந்தமை கண்டு வியந்தேன் தங்களின் அறிவுரையை ஏற்றேன் நண்பரே...

      நாளை வலைச்சரத்தில் நான் கோர்க்கும் எமது கடைசி பூவையும் நுகர வருக வருகவென வரவேற்கிறேன்

      Delete
  16. ஆஹா இந்த வாரம் வலைச்சரத்தில் எங்கள் சகோ கில்லாடி தாங்கள் தான் என்பதை மறந்து இத்தனை நாடகள் வராமல் இருந்து விட்டேன். பணிச்சுமை கொஞ்சம் அதற்காக மன்னிக்கவும். இன்று தென்றலின் அறிமுகம் என சகோதரர் ரூபன் கொடுத்த தகவலுக்கு நன்றி தெரிவித்து. அறிமுகப்படுத்திய தங்களுக்கு நன்றி கூறிவிட்டு போக வந்தததில் எத்தனை ஆச்சரிய செய்திகள் காத்திருக்கின்றன. ஆமாம் 120 கி.மீ காலால் வண்டி ஓட்டியது போன்ற தகவல்கள் ... வாழ்த்துக்கள். தொடருங்கள்.

    ReplyDelete
    Replies
    1. ஏன் ? என்மீது கோபமா ? அழகாக கில்லர்ஜியை கில்லாடி னு மாத்துறீங்க.... நன்றி கூற மட்டும்தான் வரு‘’ ஹையா‘’ எப்படி 120 க்கும் மேலே தொடரவா ?

      Delete
  17. ஓவ்வொரு நாளும் பதிவர்கள் அறிமுகத்தோடு , குடும்பத்தினர் அறிமுகமும் அருமை அண்ணா ! 7 நாள் போனதே தெரியலை !

    ReplyDelete
    Replies
    1. 7 நாள் போனது தெரியலையா ? ஏன் ? சூரியன் லீவுல போயிட்டானா ? நன்றி

      Delete
  18. அறிமுகப்பதிவர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
    உங்க அப்பத்தா அழகாய் இருப்பதோடு,அழகா கதையை முடித்து வைத்திட்டாங்க. ரித்தீஷ் கியூட் ஆ இருக்கிறார். அசத்துறீங்க ஆசிரிய பணியில். வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கு நன்றி நான் அழகாக இருக்கும் போது அப்பத்தாவும் அழகாகத்தானே இருக்கனும்
      ரித்தீஷை பாராட்டியமைக்கும் நன்றி

      Delete
  19. வணக்கம் சகோதரரே!

    இன்றைய பதிவும் ( சங்கீதாவும் )அருமை.! கடைசியில் பெரியப்பா, சித்தப்பாவில் ஆரம்பித்து அப்பத்தாவில் முடித்து விட்டீர்கள். மாதா, பிதா, குரு, தெய்வத்தின் சிறப்பை கதையின் முடிவில் உணர்ந்து கொண்டோம். ( அதற்கு நீங்கள்தான் எத்தனை சட்டீர், சட்டீர் வாங்கி ஒத்துழைப்பாய் இருந்திருக்கிறீர்கள். ஆனால் பிள்ளையாரை ஏன் பெரியப்பான்னு ௬ப்பிடனும்? அந்த குழப்பம் மட்டும் தீரவேயில்லை! அய்யோ! மறுபடியும் முதல்லேயிருந்தா.....? உன்னை...பல்லை கடிக்கும் சத்தம் கேட்கிறது.. சரி! சரி! உங்கள் அப்பத்தாவும் இனிப்புடன் கதையை முடிவுக்கு கொண்டு வந்து தங்களை நல்லவராக மாற்றியிருக்கிறார்கள். சரி! இனி அதை மறப்போம்!) அப்பத்தா அமைதி நிறைந்த முகத்துடன், அழகாயிருக்கிறார். அவரின் ஆசிகள் உங்களுக்கு மட்டுமல்ல, அனைவருக்கும் கிட்டட்டும்.

    குழந்தை ரித்தீஷ் மிகவும் அழகு... நீண்ட ஆயுளுடன் வளமாக வாழ வாழ்த்துக்கள்..!

    அனைவரின் அறிமுகமும், வழக்கம் போல் அசத்தல் நடையுன் பிராகாசித்தது. அனைவருக்கும், வணக்கங்களும், வாழ்த்துக்களும்..!

    தங்கள் சாகசங்கள் சற்றே பயமளிக்கின்றன. இருப்பினும் துணிச்சல்களுக்கு பாராட்டுக்கள்..

    அனைத்து நாட்களும், அழகாக வலைச்சரத்தைத் தொகுத்தளித்த தங்கள் ஆர்வத்திற்கு பாராட்டுக்களுடன் வாழ்த்துக்கள். ஒரு வாரம் போனதே தெரியவில்லை! மிக அருமையான நாட்கள் என எண்ண வைக்கிறது.

    நன்றியுடன்,
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete
    Replies
    1. வாங்க, தமாஷுக்காக எவ்வளவுதான் எழுதினாலும் முடிவில் நல்லதொரு செய்தியை கொடுப்பவனே நல்ல எழுத்தாளன் மாதா, பிதா, குரு, தெய்வத்தின் சிறப்பை இன்றைய தலைமுறைக்கு நாம்தானே சொல்லவேண்டும்
      தங்களை நல்லவராக மாற்றி இருக்கிறார்கள் அப்படியானால் முன்பு நான் அயோக்கியன் 80போல் இருக்கிறதே...
      வாழ்த்தியமைக்கு நன்றி
      பேரனை வாழ்த்தியமைக்கு நன்றி
      நாளைதானே கடைசி நாள்
      நன்றி

      Delete
  20. கில்லர் சகலகலா வல்லர்! யாரும் நிகர் இல்லர்!

    ReplyDelete
    Replies
    1. ஆஹா புலவரே உமது வாக்கு பலித்து விட்டது

      ஆம் முதல் பதிவில் வந்து //வாழ்த்துகள் பாராட்டு குவியட்டும்// என்றீர்கள் அது பலித்து விட்டது மிக்க மகிழ்ச்சி ஐயா.

      நாளையும் வரவும் கடைசி பதிவு நன்றி

      Delete
  21. கதை, காணொளி, அறிமுகங்கள் அசத்தல். நீங்களும் பன்முக திறமை உடையவர் என்பதை அறிந்து கொண்டேன்.
    வலைச்சர ஆசிரியர் பணியை சிறப்பாக செய்து விட்டீர்கள்.
    வாழ்த்துக்கள்.
    இன்று இடம் பெற்ற அனைத்து பதிவர்களுக்கும் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. தங்களின் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி

      Delete
  22. கடைசில இப்படி பிள்ளையார் மேலேயே வெறுப்பா? கடைசி பகுதியில அடி வாங்காம தப்பிச்சுட்டீங்க. இன்னைக்கு ரெண்டு கண்ணத்துலேயும் அடி வங்கியிருப்பீங்கன்னு, அதை படிக்கணும்னு ஆசை ஆசையா வந்த என்னைய இப்படி ஏமாத்திட்டீங்களே?

    குழந்தை கொள்ளை அழகு.
    இன்றைக்கு அறிமுகம் ஆன அனைத்து நண்பர்களுக்கும் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. வாங்க, பொய்யானவரே... நல்ல மனசு உங்களுக்கு இறைவன் இன்னும் இரண்டு பெண் குழந்தைகளை கொடுக்கட்டும்னு இறைவனை வேண்டிக்கிறேன்

      குழந்தையை வாழ்த்தியமைக்கு நன்றி

      Delete
  23. இன்றைய வலைச்சரத்தில் தங்களால் சிறப்பிக்கப்பட்ட வலைப்பதிவர்கள் சகோதரி முத்துச்சிதறல் – மனோ சாமிநாதன், அகச்சிவப்புத் தமிழ் இ.பு.ஞானப்பிரகாசன், ’பசி’ பரமசிவம், மூங்கிற் காற்று டி.என்.முரளிதரன், ஆசிரியை K. மாலதி, தமிழ்வாசி பிரகாஷ், கவிஞர் தென்றல் சசிகலா, மணவை ஆசிரியர் அ. பாண்டியன், அவர்கள் உண்மைகள் சகோதரர் மதுரைத் தமிழன் – ஆகிய அனைவரும் தமிழ் வலையுலகில் சிறப்பானவர்கள். இன்றும் எழுதிக் கொண்டு இருப்பவர்கள்.

    த.ம.9
    (ஒவ்வொரு நாளும். ஒவ்வொரு பதிவர் பெயரின் கீழும் ஏதோ ஒரு மொழியில் (மலாய் என்று நினைக்கிறேன்) உள்ள சிறு குறிப்பை தமிழில் சுட்டிக்காட்டி எழுதி இருக்கிறீர்கள். அவற்றிற்கான அர்த்தம் என்னவென்று பொருள் தெரியாத என்னைப் போன்றவர்களுக்கு நாளைய பதிவில் தெரிவிக்கவும்)

    ReplyDelete
    Replies
    1. வருக நண்பரே நாளை கண்டிப்பாக சொல்வேன், நன்றி

      Delete
  24. குட்டிம்மா அழகு. திருஷ்டி சுத்திப் போடச் சொல்லுங்க...
    அறிமுகங்கள் அருமை.
    வாழ்த்துக்கள் அண்ணா...

    ReplyDelete
    Replies
    1. வருக நண்பரே சொல்லி விடுகிறேன் நன்றி

      Delete
  25. டணக்கும்... னக்கும்... டண்டனக்கும், டணக்கும்... னக்கும்... டண்டனக்கும், டணக்கும்... னக்கும்..---இப்பவே வாழ்த்தச் சொல்லி விடுகிறேன்.....வாழ்க! வளர்க!! வாழ்த்தக்கள்!!!

    ReplyDelete
    Replies
    1. என்ன நண்பரே நாளைய பதிவு முடிஞ்சு போனதும் அடிங்க நன்றி

      Delete
  26. ஒவ்வொரு நாளும் சிறப்பான முறையில் வித்தியாசமான தொகுப்பில் முகவுரையே அசத்தலாக முதல் நாள் ஆரம்பித்து சஸ்பென்ஸாகவே தொடர்ந்து.... இன்று அதன் ரகசியத்தை முடித்து வைத்துவிட்டீர்கள் ஜீ..

    எல்லோரிடமும் வாங்கின அடி பத்தாதென்று ஞானியே அடித்துவிட்டாரா.. அப்ப இனி வெற்றி தான்....

    ஞானியின் கொள்ளுப்பேரன் ரித்தீஷ் செம்ம க்யூட்....

    நீங்க பாட்டு பாடிக்கொண்டே வண்டி ஓட்டுவதை பார்த்தேன்.. அருமை ஜீ..

    அறிமுகப்படுத்தப்பட்ட அனைத்து நண்பர்களுக்கும் சிறப்பாக ரசனையாக அவர்களை அறிமுகப்படுத்தி தொகுத்திருக்கிறீர்கள்..

    முடிவுரையில் அப்பத்தா படம் போட்டு அசத்தி விட்டீர்கள். அப்பத்தாவின் நல்லாசி என்றென்றும் உங்களுக்கும் பிள்ளைகளுக்கும் கிடைத்துக்கொண்டே இருக்கும் ஜீ.

    இன்றைய வலைச்சர தொகுப்புக்கும், சிறப்பான அறிமுகப்படுத்தப்பட்ட நண்பர்களுக்கும் ஜீ அவர்களுக்கும் மனம் நிறைந்த அன்பு வாழ்த்துகள்.

    த.ம.8

    ReplyDelete
    Replies
    1. வாங்க எப்படியும் முடித்துதானே ஆகனும்

      எது அடி வாங்கியது வெற்றியா ?

      குவைத்துக்கு போயிட்டா ? உறவு முறைகள் மறந்து போகுமா ஞானி ஸ்ரீபூவு வின் கொள்ளுப்பேத்தியின் மகன்தான் ரித்தீஷ் மனசுலாயோ

      பாடுறதை கேட்கத்தானே முடியும் பார்க்க எப்படி முடியும் ?

      அப்பத்தாவை வம்புக்கு இழுத்தமைக்கு நன்றி

      நாளைக்கும் வந்துருங்க....

      Delete
    2. அதானே.. வந்தாச்சே.... சின்னப்பிள்ளையில் நாம் வாங்கும் அடிகள் நம்மை நல்வழி படுத்த தான் என்பதை உணர்த்தியதை சொன்னேன்பா... குவைத் மட்டுமல்ல நம் நாட்டை விட்டு எங்கு சென்றாலும் உறவு முறைகள் மறந்து போகாதுப்பா... கோயில்கள் போய் முடித்ததும் அடுத்து நாங்கள் ஓடுவது சொந்தங்களை பார்க்கவே... ம்ம்ம்ம்ம் மனசிலாயி மாஷே... :)

      பாடுறதை கேட்கவும் செய்தோம்.... காணொளியில் பார்க்கவும் செய்தோமாக்கும்..

      அப்பத்தாவின் அன்பும் ஆசியும் என்றென்றும் உண்டு உங்களுக்கு..

      நாளை என்ற இன்றைக்கு வந்தாச்சு ஜீ.

      Delete
    3. இந்த மாதிரி தெளிவாக எழுதினால்தானே எனக்கு புரியுது.

      Delete
  27. மன்னித்துவிடுங்கள் ஜீ. த.ம. 8 அல்ல 11

    ReplyDelete
    Replies
    1. இதில் மன்னிப்பு எதற்க்கு.

      Delete
  28. #இவர்தான் ஜாலியான ஆசாமி எந்த இடத்தில எது கிடைச்சாலும் ஓட்டிருவாரு #
    மதுரை தமிழன் மட்டுமா ஓட்டுறாரு ,நீங்களும் அழகா ஓட்டுறீங்க ...காரைக் கூட !

    ReplyDelete
    Replies
    1. வாங்க பகவான்ஜி நான் நடை வண்டியே நல்லா ஓட்டுவேனே....
      நன்றி

      Delete
  29. வேலைப்பளுவின் காரணமாக தாமதம்.

    அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

    அயராத உழைப்பிற்கு வாழ்த்துக்கள்.

    நேற்று மகன், இன்று பேரன்...அறிமுகம் செய்தமைக்கு நன்றி.

    பேரன் வீடியோவில் .... அழகு
    தம 12

    ReplyDelete
    Replies
    1. வாங்க வருகைக்கு நன்றி

      பேரனை வாத்தியமைக்கு நன்றி

      நாளையும் கண்டிப்பாக வருக...

      Delete
  30. என் வலைத்தளத்தை என் ஓவியத்தோடு இங்கே அறிமுகம் செய்திருப்பதற்கு மனம் நிறைந்த நன்றி சகோதரர் கில்லர்ஜி!

    ஓவியம் வரைந்து தரவேன்டும் என்று கேட்டுள்ளீர்கள்! நிச்சயம் வரைந்து தருகிறேன். நான் தற்போது தஞ்சை வ‌ந்திருக்கிறேன். உங்களுக்கு ஈமெயிலில் விபரம் எழுதுகிறேன். இது சரியான ஈமெயில் விலாசம் தானா? பெயரைப்பார்த்தால் பயமாக இருக்கிற‌து! அதனால் தான் கேட்கிறேன்!

    ReplyDelete
    Replies
    1. வருக தங்களது வரவு நல்வரவாகுக

      நல்லது நலமுடன் திரும்பி வாருங்கள் ஒன்றும் அவசரமில்லை எனது மெயில் ஐடிதான் என்னைப் போலதானோ என் ஐடியும் இருக்கும். நன்றி

      Delete
  31. என்னை அறிமுகப்படுத்தியற்கு நன்றி. அதை எனக்கு தகவலாக தந்த ரூபனுக்கும் உங்களுக்கும் எனது நன்றிகள்.

    ReplyDelete
  32. சைக்கில் கார் பஸ் ரயில் விமானம் ஓட்டி இருப்பதை எல்லோரும் முன்பே பார்த்து இருப்பார்கள். ஆனால் கில்லர்ஜீ இப்படி மதுரைத்தமிழனை ஒட்டி இருப்ப்தை இப்பதான் எல்லோரும் பார்த்து இருப்பார்கள்

    ReplyDelete
    Replies
    1. இதுகூட நல்லாத்தான் இருக்கு நண்பா.

      Delete
  33. //ஒரு புள்ளி கிடைச்சாலும் அதுல ஒரு பல்லி வரைஞ்சு சகுனம் பார்த்து சங்கு ஊதிடுவாரு//
    ஆமாங்க இப்படி சொல்லி நல்லா ஏற்றிவிடுங்கள் அதுக்கு அப்புறம் மதுரைத்தமிழன் இந்தியாவிற்கு வந்தால் அரசியல் தலைங்க எனக்கு சங்கு ஊதி விடுவார்கள்

    ReplyDelete
    Replies
    1. அப்படியெல்லாம் பயப்படாதீங்க நண்பா, நாங்க இருக்கோம்.
      (நீங்க இருப்பீங்க, நான் இருக்கனுமே ? அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்)

      Delete
  34. //ஒரு புள்ளி கிடைச்சாலும் அதுல ஒரு பல்லி வரைஞ்சு சகுனம் பார்த்து சங்கு ஊதிடுவாரு//

    என்னை சிரிக்க வைத்தன இந்த வரிகள்.... ஒரு சிறு வரியானலும் மிக அருமையாக எழுதி இருக்கீங்க கில்லர்ஜி. நன்றி

    ReplyDelete
    Replies
    1. பாராட்டிற்க்கு நன்றி நண்பரே....

      Delete
  35. வெளியூர் சென்றிருந்ததால் கம்மென்ட் போட முடியவில்லை
    என்ன வேகம்! .அசத்திட்டீங்க கில்லர் ஜி. என்னோட பழைய பதிவையும் படிச்சு அறிமுகப் படுத்தினதுக்கு நன்றி

    ReplyDelete
    Replies
    1. வருக பாரதீயின் முகம் படைத்த பாவலரின் கருத்துரைக்கும், பாராட்டிற்க்கும் நன்றி

      Delete
  36. சகோ எனை அறிமுகப்படுத்தியதற்கு நன்றி, தங்களின்ன்நன்றிஉரையை
    படித்துவிட்டுத்தான் இங்கு வந்தேன் இப்போ கருத்துப்போடுவதற்காக
    அங்குசெல்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. வாங்க, வாங்க, லேட்டாக வந்தாலும் லேட்டஸ்டாக கருத்துரை போட்டீங்களே...... நன்றி

      Delete
  37. \\இங்கே பாருங்க சினிமாக்காரங்களை ஞாபகப்படுத்தாதீங்க எனக்கு நெஞ்சு பொறுக்காது சொல்லிப்புட்டேன் \\ You don't like Cinema people!!

    ReplyDelete
    Replies
    1. வாங்க, நண்பா எனது எழுத்துகளிலேயே புரியுமே தாங்கள் என்னை தொடராததால் தங்களுக்கு என்னைப்பற்றி தெரியவில்லை. வருகைக்கு நன்றி.

      Delete
  38. எல்லோரையும் அழகாக அறிமுகப்படுத்தியிருக்கீங்க... வாழ்த்துக்கள்.... உங்க கொள்ளுப் பேத்தியின் குழந்தை எள்ளுப் பேரன் கரெக்டா... அவனுக்கும் வாழ்த்துக்கள்....

    ReplyDelete
    Replies
    1. வாங்க, வருகைக்கு நன்றி எள்ளுப்பேரன் சரிதான் ஆனால் ? எனக்கில்லையே.... ஞானி ஸ்ரீபூவுக்குதானே எள்ளுப்பேரன் எனக்கு பேரன் OK

      Delete
  39. வணக்கம் சகோதரர்
    சும்ம்மா ஆத்து ஆத்துனு ஆத்தியிருக்கீங்க. ரீத்தீஸ்க்கு திருஷ்டி சுற்றிப் போட்டாச்சா? ஒரு வாரம் செம்ம கலக்கலாக போயிருக்கு. நான் தான் வர முடியவில்லை. முதலில் அதற்காக மன்னிக்கவும் சகோ. என்னையும் அறிமுகம் செய்தமைக்கு என் அன்பு நன்றிகள் குறிப்பாக என் இனிய நண்பர் என்று குறிப்பிட்டமைக்கு. அப்பத்தா செம அழகு ம்ம்ம் இந்த காலத்துல அப்படி ஒரு பொண்ணு எங்க கிடைக்குது சும்ம்மா... தாமததிற்கு மன்னித்து விட்டீர்கள் என்று நம்புகிறேன். மிக்க நன்றி சகோ..

    ReplyDelete
    Replies
    1. இனிய நண்பரின் வருகைக்கும், கருத்துரைக்கும் நன்றி தொடக்கநாளும், முடிவு நாளும் என முடிவு கட்டி வந்தமைக்கு நன்றி நண்பரே...

      Delete
  40. உங்கள் பாராட்டு மிகுந்த பரிந்துரைக்கு மிக்க நன்றி நண்பர் கில்லர்ஜி அவர்களே! இத்துடன் மூன்றாவது முறையாக 'வலைச்சர'த்தில் இடம் பெறுகிறேன்! மிக்க மகிழ்ச்சி!

    ReplyDelete
    Replies
    1. வருக நண்பரே,,,, மூன்றாவது முன்னூறாக வாழ்த்துகள் நண்பரே...

      Delete

தமிழ் மணத்தில் - தற்பொழுது