07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Wednesday, December 31, 2014

ஆமேர் கோட்டையை சுற்றிப் பார்க்கலாமா!



சரம் – மூன்று மலர் - மூன்று

எங்களுடன் நண்பரும் அவரது மனைவி மற்றும் இரண்டு மகள்களும் வந்திருந்தனர். எல்லோரும் அரட்டை அடித்துக் கொண்டே பாதி வழியை கடந்திருந்தோம். அதிகாலையிலேயே தில்லியிலிருந்து கிளம்பி விட்டதால் எல்லோருக்கும் பசி எடுக்கத் துவங்கியது. என்னதான் பயணித்துக் கொண்டே இருப்பது பிடிக்குமென்றாலும், உணவு உட்கொள்ளவும் மற்ற விஷயங்களுக்கும் நடுவில் சற்றே வண்டியை நிறுத்தத்தானே வேண்டியிருக்கிறது. 

ஜெய்ப்பூர் செல்லும் வழியில் உள்ள ஒரு சாலையோர தங்கும் விடுதியில் காலை உணவை எடுத்துக் கொள்ள நினைத்தோம். இங்கு பஃபே முறையில் வேண்டியதை போட்டுக் கொள்ளலாம். பாலுடன் கார்ன்ஃப்ளேக்ஸ், இயற்கையான பழ ரசங்கள், பிரெட்-ஆம்லெட் என்று பலவிதமான உணவுகள் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்தன. Unlimited - எவ்வளவு வேண்டுமானாலும் சாப்பிடலாம் - ஆளொன்றுக்கு 180/- ரூப்யாயோ என்னமோ வாங்கிக் கொண்டார்கள் அப்போது. என்னைப் பொறுத்த வரையில் பயணத்தில் முடிந்த வரை வாய்க்கு பூட்டு போட்டுக் கொள்வேன் என்பதால் நான் பழரசம் மட்டும் அருந்தினேன்….:)

காலை உணவினை முடித்தபிறகு அவ்விடத்தில் மனதைக்கவரும் அழகிய புல்வெளியும், குழந்தைகள் விளையாட ஊஞ்சல் போன்றவையும் இருந்ததால் எல்லோரும் சற்றே இளைப்பாறினோம். குழந்தைகள் ஊஞ்சலில் விளையாட, பெரியவர்கள் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தோம்.

ஆமேர் கோட்டையின் ஒரு பகுதி

தொடர்ந்த எங்கள் பயணத்தில் ”AMER FORT” “AMBER PALACE” என்று சொல்லப்படுகிற ஆமேர் கோட்டையை சென்றடைந்தோம்.

 ஆமேர் கோட்டை-வேறொரு கோணத்தில்...

ஜெய்ப்பூரை சுற்றி பல கோட்டைகள் இருந்தாலும் இந்த கோட்டை புகழ்பெற்றது. ஜெய்ப்பூர் நகரைச் சுற்றி ஒரு பாதுகாப்பு அரண் போல சுற்றுச் சுவர்களை கொண்டது. ராஜா ஜெய்சிங் அவர்களின் காலத்தில் கட்டபட்ட ஆமேர் கோட்டையில் DIWAN I AM, DIWAN I KHAS, SHEESH MAHAL என்று சொல்லப்படுகிற கண்ணாடி மாளிகையும், பலவிதமான அறைகள், அகழிகள் என்று சுற்றிப் பார்க்க நிறைய இருந்தன. பெரிய பானை ஒன்று கவிழ்த்து வைக்கப்பட்டிருந்தன. தங்களது முன்னோர்களை இறப்புக்கு பின் இது போன்ற பானைக்குள் வைத்து புதைத்திருக்கிறார்கள்.

இங்கேயே கோட்டையைச் சுற்றி யானையில் வலம் வரலாம். வெளிநாட்டவர்களும், சுற்றுலா வாசிகளும் என ஏகப்பட்ட கூட்டம். நாங்களும் சுற்றி பார்த்து புகைப்படங்களை எடுத்துக் கொண்டு அங்கிருந்து கிளம்பி ஜெய்ப்பூர் நகருக்குள் வரத் துவங்கினோம்.

சரி இன்றைய அறிமுகங்களைக் கவனிப்போம்! சுற்றிக் காட்டும் ஆர்வத்தில் வலைச்சர ஆசிரியர் பொறுப்பை மறந்தால் எப்படி!

திரைப்படங்கள் குறித்த தனது பார்வை, ஆவிப்பா, அனுபவங்கள் என பல விஷயங்களை பகிர்ந்து கொள்கிறார் எங்கள் ஊரைச் சேர்ந்த கோவை ஆவி.   சமீபத்தில் கோவாவில் நடந்த திரையுலக கொண்டாட்டம் பற்றிய அவரது பதிவு இன்றைய அறிமுகப் பதிவாக! - International Film Festival of India (IFFI 2014) - A short glance

அள்ள அள்ளக் குறையாத ஆன்மீகத் தகவல்கள் வேண்டுமெனில் நீங்கள் வர வேண்டிய இடம் “ஆலோசனை. கண்ணனை நினை மனமே என்று சொல்லும் திருமதி பார்வதி இராமச்சந்திரன் அவர்களின் பதிவு இன்றைய அறிமுகப் பதிவுகளில் ஒன்றாக இங்கே!

திருமதி ராஜலஷ்மி பரமசிவம் அவர்களின் அரட்டை தளம் உண்மையிலேயே பொழுதுபோக்குக்கான பலதரப்பட்ட விஷயங்கள் கொண்ட ஒன்று.  இவர்களின் சில பதிவுகளில் வரும் கதாபாத்திரங்களான ராசியும் விஷ்ணுவும் அலாதியானவர்கள்.  இன்றைய அறிமுகப் பதிவாக உறவுகளுக்கு formula உண்டா? எனும் பதிவினை படித்துப் பாருங்களேன்!

அரசியல், சமூகம், தொழில்நுட்பம், நகைச்சுவை, என்று பலதரப்பட்ட விஷயங்களை அள்ளி அள்ளித் தரும் வலைத்தளம் மதுரைத் தமிழன் அவர்களின் அவர்கள் உண்மைகள் தளம். இவரின் பூரிக்கட்டை மிகவும் பிரபலம்….:) இன்றைய அறிமுகப் பதிவாக முகப்புத்தக நகைச்சுவை பதிவு ஒன்று இங்கே.

முனைவர் ஜம்புலிங்கம் ஐயாவின் தஞ்சைப் பெரிய கோவில் சோழர் கால ஓவியங்கள் குறித்த பகிர்வு இன்றைய மற்றுமோர் அறிமுகப் பதிவாக இங்கே

என்ன நண்பர்களே, இன்றைய அறிமுகப் பதிவுகளை அவர்களது தளத்தில் படித்து, கருத்துரையும் இடலாமே – நீங்கள் இதுவரை படிக்க வில்லையெனில்!

நாளை மீண்டும் சந்திப்போம்,

ஆதி வெங்கட்
திருவரங்கம்.

47 comments:

  1. நோ...நோ... நான் யானைமேல் எல்லாம் ஏறமாட்டேன்....யானை என்னைக் கண்டு பயந்து விடும்! :)))

    இன்றைய சரத்தில் கோர்க்கப்பட்டிருக்கும் நண்பர்களுக்கு வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. நானும் ஏறமாட்டேன் தான்....:)))

      தங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம் சார்.

      Delete
  2. இன்று தங்களுடன் கோட்டையைக் காணும் வாய்ப்பு கிடைத்தது. பயணத்தையும் விடாது தொடர்ந்து, நண்பர்களையும் அறிமுகப்படுத்திக் கொண்டு வருகின்றீர்கள். வாழ்த்துக்கள். என்னை அறிமுகப்படுத்தியமை அறிந்து மகிழ்கின்றேன். நன்றி.

    ReplyDelete
    Replies
    1. அறிமுகப்படுத்த வாய்ப்பு கிடைத்ததில் எனக்கும் மிக்க மகிழ்ச்சி ஐயா.

      தங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் மிக்க நன்றி ஜம்புலிங்கம் ஐயா.

      Delete
  3. தாங்கள் அறிமுகப்படுத்தியுள்ள பதிவர்களில் இருவரின் வலைப்பகங்கள் எனக்கு தெரிந்தவை. மற்றவர்களின் தளத்திற்கு சென்று படிக்கவேண்டும். அனைவருக்கும் வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. தங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் மிக்க நன்றி நடனசபாபதி ஐயா.

      Delete
  4. கோட்டையை சுற்றிப்பார்த்தாச்சு. அப்புறம்?

    அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. அடுத்து இன்றைக்கு எங்களுடன் வந்து குல்ஃபியை ருசித்தீர்களா?

      தங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் மிக்க நன்றி சொக்கன் சகோ.

      Delete
  5. அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. தங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் மிக்க நன்றி தனபாலன் சார்.

      Delete
  6. இனிய சுற்றுலா!.. ஆமேர் கோட்டையை சுற்றி வந்த உணர்வு!..

    சிறந்த தளங்களின் தொகுப்பு!.. அறிமுக நண்பர்களுக்கு நல்வாழ்த்துக்கள்!..

    ReplyDelete
    Replies
    1. பார்க்க வேண்டிய அருமையான கோட்டை இது.

      தங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜூ சார்.

      Delete
  7. என்னை இன்று ஆறிமுகப்படுத்தியதற்கு அமைக்க நன்றி ஆதி. ராசி-விஷ்ணு தம்பதியரின் அறிமுகப்படலத்திற்கும், அத்தம்பதிகளின் சார்பாக நானே நன்றி சொல்லி விடுகிறேனே. இத்தம்பதியர் அடிக்கும் லூட்டி உங்களால் இன்று பலரின் பார்வைக்கு வரும் என்பதில் சந்தேகமில்லை. அதற்கு உங்களுக்கு ஸ்பெஷல் நன்றி..அறிமுகமான அனைத்துப் பதிவர்களுக்கும் என் இனிய வாழ்த்துக்கள்.
    அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!!

    ReplyDelete
    Replies
    1. தங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் மிக்க நன்றி ராஜலஷ்மி அம்மா.

      Delete
  8. எனது தளத்தை இன்று அறிமுகப்படுத்தியதற்கு மிகவும் நன்றி. உங்கள் கையால் அறிமுகமான அனைத்துப் பதிவர்களுக்கும் என் இனிய வாழ்த்துக்கள்.அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!!

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றிங்க மதுரைத் தமிழன்.

      Delete
  9. இன்றும் அருமை.....தொடருங்கள்...தொடர்கிறோம்!ஜெய்ப்பூரை பார்க்கவில்லையே என்கிற ஏக்கத்தை போக்கி விட்டீர்கள்!

    ReplyDelete
    Replies
    1. தொடர்ந்து வருவது குறித்து மிக்க மகிழ்ச்சி ஆர்.ஆர்.ஆர் சார்.

      Delete
  10. பயணக்கட்டுரையுடன் பதிவர்கள் அறிமுகமும் சிறப்பு! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. தங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் மிக்க நன்றி சுரேஷ் சார்.

      Delete
  11. ஆலோசனை தவிர மற்ற எல்லாம் படிக்கும் தளங்கள் தான் நன்றி!! அது அம்பர் கோட்டை என்றல்லவா எனக்கு வழிகாட்டிய ஆசிரியர் சொன்னார்!!

    ReplyDelete
    Replies
    1. சொல்வது ஆமேர் கோட்டை என்று தான்....:)

      தங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் மிக்க நன்றிங்க மைதிலி.

      Delete
  12. எனக்கு புதிய அறிமுகமாக 3 தளங்கள் மிக்க நன்றிங்க. வாழத்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. தங்களுக்கு புதிய தளங்களை அறிமுகப்படுத்தியதில் மிக்க மகிழ்ச்சிங்க சசிகலா.

      Delete
  13. ஆமேர் கோட்டையில யானை மேல ஏறிச் சுத்தலாமா...? எனக்கும் ரொம்ப நாளா அப்படிச் செய்ய ஆசைங்க. (யானை தாங்குமான்னுதான் தெரியல... .ஹி... ஹி... ஹி...) பயணங்கள்ல கூடியவரை வயித்தை லோட் பண்ணிக்கக் கூடாதுங்கற பாலிசில என் இனம் நீங்க. இன்றைய அறிமுகங்கள் அனைத்தும் நன்று. கோவை ஆவி ஊர்ல இல்லாததால அவர் சார்பா உங்களுக்கு என் நன்றி. இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்மா.

    ReplyDelete
    Replies
    1. தாராளமா யானை சவாரி செய்யலாம்...:) நான் தான் யானையைக் கண்டு ஓடும் ரகம்..:)

      தங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் மிக்க நன்றி கணேஷ் சார். (கோவை ஆவி அவர்களுக்கும்)

      Delete
  14. 'ஆலோசனை' குறித்த, தங்களின் அறிமுகத்திற்கு என் மனம் கனிந்த நன்றி!.. அறிமுகம் செய்யப்பட்ட சக வலைப்பதிவர்கள் அனைவருக்கும் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்!.. தங்கள் பயணக்கட்டுரையும் சிறப்பு!.. நண்பர்கள் அனைவருக்கும் என் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!..

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்துகளுக்கு மிக்க நன்றிங்க. தங்களுக்கும், தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.

      Delete
  15. இன்றைய அறிமுகங்களுக்கு வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. தங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி சார்.

      Delete
  16. பயணத்தின் போது பழங்கள் நல்ல உணவுதான்

    ReplyDelete
  17. அறிமுகங்களுக்கு நல்வாழ்த்துகள் :)

    ReplyDelete
    Replies
    1. தங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் மிக்க நன்றி ரிஷபன் சார்.

      Delete
  18. "அன்பும் பண்பும் அழகுற இணந்து
    துன்பம் நீங்கி சுகத்தினை பெறுக!

    அனைத்து வலைச்சரம் வாசகர்களுக்கும்
    இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!
    நட்புடன்,
    புதுவை வேலு,
    www.kuzhalinnisai.blogspot.fr

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி. தங்களுக்கும், தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.

      Delete
  19. //இங்கேயே கோட்டையைச் சுற்றி யானையில் வலம் வரலாம்.//

    யானை மேல் வலம் வந்துகொண்டிருக்கும் பயணக்கட்டுரை அருமை.

    ReplyDelete
    Replies
    1. தங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் மிக்க நன்றி வை.கோ சார்.

      Delete
  20. இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் சகோதரி...
    அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி. தங்களுக்கும், தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துகள் குமார்.

      Delete
  21. காதல் கோட்டை படத்தில் இந்த நீங்கள் சொல்லும் ஆமெர் கோட்டை காண்பிப்பார்கள் என்று நினைக்கிறேன். சரியாய் தெரியவில்லை. ஒட்டகத்தின் மேல் போகவில்லையா? பயணம் சுவாரஸ்யமாகப் போகிறது.

    ReplyDelete
    Replies
    1. காதல் கோட்டையில் வந்திருக்கலாம். தெரியவில்லை அம்மா...:)

      என்னவர் தான் ஒட்டகச் சவாரி செய்தார். நாங்கள் வேடிக்கை தான் பார்த்தோம்....:))) எனக்கு அந்தளவுக்கெல்லாம் தைரியம் கிடையாது...:)

      தங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் மிக்க நன்றி ரஞ்சனிம்மா.

      Delete
  22. அழகாய் இருக்கும் அமர் கோட்டை . நாங்கள் இரண்டு தடவை பார்த்து இருக்கிறோம்.

    இந்த வலைச்சரத்தில் இடபெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. தங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா.

      Delete
  23. This comment has been removed by the author.

    ReplyDelete
  24. ஆமெர் கோட்டை மிக்க அழகாயிருக்கிறது. வலைச்சரத்தில் இடம் பெற்ற தளங்களுக்குப் போய் படிக்கிறேன்.
    அன்புடன்

    ReplyDelete
    Replies
    1. தங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் மிக்க நன்றி காமாட்சிம்மா.

      Delete

தமிழ் மணத்தில் - தற்பொழுது