07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Sunday, January 25, 2015

செல் விருந்தோம்பி வருவிருந்து காத்திருத்தல்

அன்பின் சக பதிவர்களெ ! 

இன்றுடன் முடியும் வாரத்திற்கு (25.01.2015 ) ஆசிரியப் பொறுப்பேற்று பதிவுகள் இட்ட சக  பதிவர் சகோதரி மனோ சாமிநாதன்   தான் ஏற்ற பொறுப்பினை சரி வர முழு மனதுடன் நிறைவேற்றி - நம்மிடமிருந்து விடை பெறுகிறார்.

இவர் இட்ட பதிவுகள் : 007
அறிமுகப் படுத்திய பதிவர்கள் : 078
அறிமுகப் படுத்திய பதிவுகள் : 084 ( சுய அறிமுகம் உள்ளிட்ட ) 
பெற்ற மறுமொழிகள் : 300
பெற்ற தமிழ் மண வாக்குகள் : 040
வந்து பார்வையிட்ட சக பதிவர்கள்  : 1296

நாளை முதல் துவங்கும் வாரத்திற்கு   ஆசிரியப் பொறுப்பினை ஏற்க அன்புடனும் ஆர்வத்துடனும்  சகோதரி கலையரசி  இணக்கம் தெரிவித்துள்ளார்.  

காரைக்கால் இவர் பிறந்த ஊர்.  இப்போது இருப்பது புதுவையில்.தேசிய வங்கியொன்றில் சீனியர் எழுத்தராகப் பணியாற்றுகிறார். இவரது கணவரும் வங்கியில் வேலை செய்கிறார்.  இவருக்கு ஒரு மகனும் ஒரு மகளூம் உண்டு.   இருவருக்கும் திருமணமாகிவிட்டது. 

இவருக்குப் பிடித்த விஷயங்கள்.  உள்ளத்தனையது உயர்வு என்பதில் மிகுந்த நம்பிக்கை உண்டு.  இயற்கையில் மனமொன்றி ரசிப்பது தோட்ட வேலை இவை பிடித்த பொழுதுபோக்குகள். 

2011 ல் ஊஞ்சல் வலைப்பூ துவங்கி இதுவரை 94 பதிவுகள் மட்டுமே எழுதியிருக்கிறார்,

சாரல்,  உயிரோசை, பதிவுகள் போன்ற இணைய இதழ்களில் இவரது படைப்புகள் வெளி வந்துள்ளன.

சகோதரி மனோ சாமிநாதனை வாழ்த்தி வழி அனுப்புவதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன்.

சகோதரி கலையரசியினை வாழ்த்தி வரவேற்று மகிழ்கிறேன்

நாளை 26.01.2015 முதல் வலைச்சர ஆசிரியப் பொறுப்பினை ஏற்று திறம்பட ஒரு வாரத்திற்கு ( 01.02.2015 வரை ) பல சிறந்த பதிவர்களை அறிமுகப் படுத்துவார் என எதிர் பார்க்கிறேன்.

சகோதரி கலையரசியினை  வலைச்சர ஆசிரியப் பொறுப்பில் அமர்த்துவதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன்.

நல்வாழ்த்துகள் மனோ சாமிநாதன்

நல்வாழ்த்துகள் கலையரசி 

நட்புடன் சீனா

24 comments:

  1. சோதனை மறுமொழி

    ReplyDelete
    Replies
    1. உங்கள் வாழ்த்துக்கும் வரவேற்புக்கும் மிக்க நன்றி சீனா சார்! என்னால் இயன்ற அளவு ஆசிரியர் பணியினைச் செய்வேன் என உறுதி கூறுகிறேன்.

      Delete
  2. சகோதரி கலையரசி அவர்களை வாழ்த்தி வரவேற்கிறேன்...

    வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. உங்கள் வாழ்த்துக்கும் வரவேற்புக்கும் மிக்க நன்றி தனபாலன் சார்!

      Delete
  3. மனதை நெருடுவதைப் போன்ற அருமையான ராகங்களை தினமும் நம்முடன் பகிர்ந்ததோடு மட்டுமன்றி, பாடல்களையும் பகிர்ந்து, வலைப்பதிவர்களை அறிமுகப்படுத்தி தன் பணியை சிறப்பாகச் செய்து மேற்கொண்டு முடித்த திருமதி மனோ சுவாமிநாதன் அவர்களுக்கும், தங்களுக்கும் வலைச்சர குழுவினருக்கும் நன்றி. கலையரசி அவர்களின் எழுத்துக்களைக் காணக் காத்திருக்கிறோம். நன்றி.

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி சார்!

      Delete
  4. இன்றுடன் நிறைவுபெறும் இந்த வார வலைச்சர ஆசிரியர் பணியினை இசை மழையினை பொழிய வைத்து வித்யாசமாக செய்து விடைபெறும் திருமதி. மனோ சாமிநாதன் அவர்களுக்கு நம் பாராட்டுக்கள் + நல்வாழ்த்துகள்.

    அன்புடன் VGK

    ReplyDelete
  5. நாளை முதல் ஒருவார வலைச்சர ஆசிரியராகப் பொறுப்பேற்க உள்ள திருமதி. ஞா. கலையரசி அவர்களை வலைச்சரம் என்ற ‘ஊஞ்சல்’ இல் அமர வைத்து, உற்சாகமாக ஆட்டிவிட்டு, வரவேற்கிறோம்.

    என் கனவு நனவானதில் எனக்கு மிக்க மகிழ்ச்சி, சீனா ஐயா.

    திருமதி. கலையரசி அவர்களே .... வருக ! வருக !! வருக !!!

    தங்களின் ஒருவார வலைச்சர ஆசிரியர் பணி மிகச்சிறப்பாக அமைய என் நல்வாழ்த்துகள்.

    அன்புடன் கோபு

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் கோபு சார்,
      உங்கள் இனிய வாழ்த்துடனும் ஆசியுடனும் வலைச்சர ஆசிரியர் பதவியை ஒரு வாரத்துக்கு மனமுவந்து ஏற்கிறேன்.
      என்னைப் பரிந்துமைக்கு உங்களுக்கு என் முதல் நன்றி!
      நன்றியுடன்,
      ஞா.கலையரசி

      Delete
  6. அன்புக்குரிய ஸ்ரீமதி மனோ சாமிநாதன் அவர்கள் மிகச் சிறப்பாக வலைச்சரத்தை நடாத்தினார்கள்.. மனமார்ந்த பாராட்டுகள்!..

    தொடந்து - பணியேற்க வரும் திருமதி. கலையரசி அவர்களுக்கு நல்வரவு!..

    வாழ்க நலம்!..

    ReplyDelete
    Replies
    1. வரவேற்புக்கு மிக்க நன்றி துரை சார்!

      Delete
  7. ஆசிரியப்பணியேற்ற‌தற்கு இனிய வாழ்த்துக்கள் கலையரசி!

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்துக்கு இனிய நன்றி சகோதரி ஒரு வாரம் இன்னிசை மழை பொழிந்து மிகவும் அருமையாகத் தொகுத்தளித்தீர்கள். உங்கள் அளவுக்கு என்னால் இயலுமா எனத் தெரியவில்லை. மிகவும் நன்றி!

      Delete
  8. வலைச் சரம் வேல் கொண்டு
    கலைத் தமிழ் பகை வென்று
    திருமலை போல் புகழ் குன்றாது
    திருமதிகலையரசி வருக! வருகவே!

    (சிறப்புற அரும்பணி அளித்திட்ட
    திருமதி மனோ சாமிநாதன் அவர்களை
    நன்றி பகன்று விடை செய்வோம்!

    நன்றியுடன்,
    புதுவை வேலு
    WWW.KUZHALINNISAI.BLOGSPOT.FR

    ReplyDelete
    Replies
    1. கவிதை பாடி வரவேற்கும் தங்களுக்கு என் நன்றி!

      Delete
  9. வாழ்த்துக்கள் கலையரசி அவர்களே.

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்துக்கு மிகவும் நன்றி கவிப்பிரியன்!

      Delete
  10. வாழ்த்துக்கள் கலையரசி

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்துக்கு மிகவும் நன்றி ஜோதிஜி சார்!

      Delete
  11. கடந்தவார ஆசிரியர் திருமதி. மனோ சாமிநாதன் அவர்களுக்கு விடைபெறலும், இந்தவாரம் வலைச்சரம் தொடுக்க வரும் திருமதி. கலையரசி அவர்களை வருக, வருக என வரவேற்கிறேன்
    தமிழ் மணம் – 4
    அன்புடன்
    தேவகோட்டை கில்லர்ஜி அபுதாபி.

    ReplyDelete
    Replies
    1. வரவேற்புக்கும் மிகவும் நன்றி கில்லர்ஜி சார்!

      Delete
  12. சிறப்பான இசையோடு அறிமுகங்கள் செய்த அம்மாவுக்கும்...
    இந்த வாரம் கலக்க வரும் கலையரசி அக்கா அவர்களுக்கும் வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  13. இவ்வார வலைச்சர ஆசிரியர் பொறுப்பினை ஏற்றுள்ள தங்களுக்கு இனிய வாழ்த்துகளும் வரவேற்புகளும் அக்கா.

    ReplyDelete
  14. சென்ற வார ஆசிரியருக்குப் பாராட்டுகள்.

    இந்த வார ஆசிரியருக்கு வாழ்த்துகள்.

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது