07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Thursday, January 15, 2015

ஒடிஸாவைப் பற்றி கொஞ்சம்...



கிட்டத்தட்ட எட்டு வருடங்களாகிறது இந்த ஒடிஸா மாநிலத்திற்கு வந்து. இன்னும் இந்த மாநிலத்தை முழுமையாக சுற்றிப் பார்க்கவில்லை. ஒடிய மொழியையும் முழுவதுமாக கற்க முடியவில்லை. இடையில் ஒரு சில வருடங்கள் கர்நாடகத்தில் பணி புரிந்தாலும் இங்குதான் அதிக நாட்கள் இருக்க நேரிட்டது. இங்கு வாழ்ந்த அனுபவங்களை தொடராக எழுதலாம் என்று முயன்று அது பாதியில் நிற்கிறது. ஒடிஸா வாழ்பனுவங்கள் பற்றிய முதல் பதிவு கலிங்கநாடும் கலிங்க நகரும்

கன்ஜம் மாவட்டம் பிரம்மபூரில் மூன்று வருடங்களுக்கு ஒரு முறை படா பஜாரில் நடக்கும் மாபுடி தாக்குராணி என்கிற விழா மிகவும் பிரத்தி பெற்றது. ஒவ்வொரு தெருவிலும் சாமி சிலைகளை நிறுவி ஒரு வார காலத்துக்கு வழிபாடு நடக்கும். ஜே ஜே வென்று ஜனத்திரள் கூடும்.


பிரம்ம்பூரிலிருந்து சுமார் 35 கி.மீ.தொலைவில் உள்ள தாரா தாரிணி கோவிலும் மிகவும் பிரபலமானது. மலை மேல் உள்ள இந்த கோவிலுக்கு மிகவும் செங்குத்தான ஆயிரத்திற்கும் மேற்பட்ட படிக்கட்டுகளை கடந்துதான் போகவேண்டும்.
பிரம்மபூரிலிருந்து புவனேஸ்வர் செல்லும் என்.எச்.5 தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி சிலிகா என்கிற ஆசியாவின் மிகப்பெரிய உப்புநீர் ஏரி கடல் போல பரவிக்கிடக்கிறது. ஏரியினிடையே சிறு சிறு தீவுகளும் கோவிலும் அமைந்திருப்பது சுற்றுலா பயணிகளை வெகுவாகக் கவர்கிறது.
அடுத்து உலகப்புகழ் பெற்ற பூரி ஜகந்நாதர் கோவில். தென்னிந்திய கோவில்களைப் போலல்லாமல் பிரத்யேகமான பிரம்மாண்ட கோவில் அமைப்பு. லட்சக்கணக்கானவர்கள் கூடும் பூரி ரத யாத்திரை இங்கே மிக முக்கியமான நிகழ்வு.
புவனேஸ்வரில் உள்ள லிங்கராஜர் ஆலயமும் புகழ் வாய்ந்தது. இந்தக்கோவிலும் பூரி ஜகந்நாதர் கோவிலும் ஒரே காலத்தை கொண்ட கட்டிட அமைப்புடையவை.

அசோகச் சக்ரவர்த்தி இந்த நாட்டின் மீது படையெடுத்து பல்லாயிரக்கணக்கான உயிர்கள் மாண்டு ரத்த ஆறு ஓடுவதைப் பார்த்து மனம் வருந்தி இனி எந்த நாட்டின் மீதும் படையெடுப்பதில்லை என்று முடிவு செய்து புத்த மதத்தைப் பரப்புவதைக் குறிக்கோளாய்க் கொண்டு மனம் மாறியதும் இந்தப் பூமியில்தான்.
 
அடுத்து கலைகளின் உச்சம் என கொண்டாடப்படும் கொனார்க்கில் உள்ள சூரியனார்க் கோவில். பிரமிப்பு என்ற ஒற்றை வார்த்தையில் அதை அடக்கிவிடமுடியாத அற்புதம் இந்த கொனார்க் சூரியனார்க் கோவில். இத்தனை நுண்ணிய வேலப்பாடுகள் அதுவும் கல்லில் இன்றைய கணிணி யுகத்திலும் கூட சாத்தியமில்லை என்றே நினைக்கிறேன்.
இது தவிர தசரா, துர்கா பூஜை, காளி பூஜை, போன்றவை இங்கு கொண்டாடப்படும் பிரபலமான பண்டிகைகள்.

இனி இன்றைய அறிமுகங்களைப் பார்ப்போமா...

அதீதக்கனவுகள் தளத்தின் ராதாகிருஷ்ணனின் நகைச்சுவைப் பதிவைப் பதிவான 'பொய்யான மனிதர்களின் கூடாரம்' கடவுளும் பக்தனும் பேசிக்கொள்ளும் அருமையான பதிவு.  

சுடுதண்ணி தளத்தில் இணையத்தில் எச்சரிக்கையாக எப்படி செயல்படுவது என்பதைப் பற்றி தொடர் பதிவு இருக்கிறது. எல்லாம் தெரிந்தவர்கள்கூட சில நேரங்களில் தவறுகள் செய்து விடுகிறார்கள். முன்னேப்பதையும் விட சுய மோகம் எல்லோரிடத்திலும் அதிகரித்திருக்கிறது. தன்னைத்தானே வித விதங்களாக புகைப்படத்தை எடுத்து முகநூலிலும் வலைத்தளங்களிலும் பதிவு செய்வது அதிகரித்திருக்கிறது. அதன் விளைவுகளையும் விபரீதங்களையும் அழகாக எடுத்துரைக்கிறது இந்த இணையம் வெல்வோம் என்கிற எச்சரிக்கைப் பதிவு.

அக்கம் பக்கம் தளத்தின் அமுதா கிருஷ்ணா ஆண் அழகு என்ற பதிவில் ஆண் எப்போதெல்லாம் அழகாகத் தெரிகிறான் என்பதை மிகவும் அழகாக சொல்லிச்செல்கிறார். //அதிகாலை பனியில் நனைந்தபடி கோலம் போடும் பெண்ணிற்கு துணைக்கு நிற்கும்போது\\ இந்த வரிகளைப் படித்துவிட்டு இன்று காலை வீட்டம்மா கோலம் போடும்போது அருகில் நின்று ரசித்துக்கொண்டிருந்தேன் என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன்.

விஜய் மகேந்திரனின் தளத்தில் ப்ரியா தம்பி அவர்கள் எழுதிய பதிவான டாய்லட் கிடைக்குமா ப்ளீஸ்... -ஐ கொஞ்சம் படித்துப்பாருங்கள். // அடிப்படைத் தேவையான கழிவறை வசதி கூட செய்து கொடுக்க வக்கில்லாத அரசாங்கங்கள் தான் இலவசங்களை இன்று அறிவித்துக் கொண்டிருக்கின்றன. ஆண், பெண் யார் ஆட்சி செய்தாலும் பெண்களின் பிரச்னைகள் யாருக்கும் உறைப்பதில்லை\\ இந்த வரிகள் உண்மையிலேயே சாட்டையடி.

பெருமாள் முருகனின் மாதொரு பாகன் சர்ச்சை அவரின் அறிக்கைக்குப் பின் முடிவுக்கு வந்த நிலையில், அந்த அறிக்கை வருத்தத்தையே கொடுக்கிறது. அவரின் எழுத்தை நான் வாசித்தது கிடையாது என்றாலும் ஒரு எழுத்தாளர் முடங்கிப் போவது ஜீரணிக்க முடியாத விஷயம். சர்ச்சைக்குரிய பக்கங்களை நீக்கிவிட்டு வெளியிட ஒப்புக்கொண்ட பின் 'பெருமாள் முருகன் இறந்துவிட்டான்' என்ற அவரின் வேதனையான வாக்குமூலம் வலியை ஏற்படுத்துவதைத் தவிர்க்க முடியவில்லை. இது தொடர்பான ஒரு பதிவு ஆம்னிபஸ் தளத்தில் பெருமாள் முருகன் எழுத்தைப் பேசுதல் என்ற தலைப்பில் நட்பாஸ் எழுதியதைப் பாருங்கள். 

மீண்டும் நாளை சந்திப்போம். 

அன்புடன்,
கவிப்ரியன்

22 comments:

  1. ஒடிஸா பற்றிய நிகழ்வுகளுடன் இன்றைய அறிமுகங்களும் அருமை அவர்களுக்கு எமது வாழ்த்துகளோடு தங்களுக்கு பொங்கல் நல்வாழ்த்துகளும்... தமிழ் மண இணைப்புடன் வாக்கு ஒன்று.

    ReplyDelete
  2. முதல் வருகைக்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி கில்லர்ஜி.

    ReplyDelete
  3. "ஒடிஸா பற்றிய ஓர் பார்வை" மிகவும் அருமை!
    இன்றைய பதிவாளர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்!
    சிறக்கட்டும் கவிப்ரியரின் ஆசிரியப் பணி.
    அனைவருக்கும் தமிழர் திருநாள் வாழ்த்துக்கள்.
    நன்றியுடன்,
    புதுவை வேலு

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி புதுவை வேலு அவர்களே.

      Delete
  4. ஒடிசாவை பற்றிய தகவல்கள் அருமை! சிறப்பான பதிவர்களை அறிமுகம் செய்தமைக்கு நன்றி!

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி சுரேஷ் அவர்களே.

      Delete
  5. அனைவருக்கும் அன்பின் இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள்!..

    ReplyDelete
    Replies
    1. தங்களின் வாழ்த்திற்கு மிக்க நன்றி துரை செல்வராஜ் அவர்களே.

      Delete
  6. ஒடிஸா பற்றி அறிந்தேன்...

    அனைவருக்கும் + உங்களுக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி தனபாலன் அவர்களே.

      Delete
  7. இந்த சாமிகளைப் பார்த்தாலே சிரிப்பு வருகிறது இதென்ன இப்படி ஒரு அலங்காரம் :)
    த ம 5

    ReplyDelete
    Replies
    1. எனக்கும் ஆரம்பத்தில் வேடிக்கையாகத்தான் பட்டது பகவான்ஜி. தங்களின் வருகைக்கும் வாக்கிற்கும் மிக்க நன்றி.

      Delete
  8. ஒடிசா தான் சரியான பெயரா? நான் ஒரிசா என்றல்லவா இவ்வளவு நாட்கள் நினைத்துக்கொண்டிருந்தேன். ஒடிசா பதிவு நன்றி. இனிய பொங்கல் நல்வாழ்த்து!

    ReplyDelete
    Replies
    1. ஒரிஸா தான் இப்போது ஒடிஸா என்று மாற்றப்பட்டுவிட்டது. நம் மெட்ராஸ் சென்னை அனது போல. தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி.

      Delete
  9. வணக்கம்
    அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள் தொடருகிறேன் பதிவுகளை. அழகிய படங்கள்.
    தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் தங்கள் வாழ்த்திற்கும் மிக்க நன்றி ரூபன் அவர்களே.

      Delete
  10. ஒடிசா பற்றிய குறிப்புகள் நன்று. புவனேஷ்வர் மட்டும் வந்ததுண்டு - அலுவல் விஷயமாக. மற்ற பகுதிகளுக்கும் வரவேண்டும் - நேரம் கிடைக்கும்போது.

    இன்றைய அறிமுகங்களுக்கு வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கு மிக்க நன்றி வெங்கட் நாகராஜ் அவர்களே.

      Delete
  11. ஒடிசா பற்றி புதியன பல அறிந்தேன். நன்றி. வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. நன்றி டாக்டர் ஜம்புலிங்கம் அவர்களே.

      Delete
  12. ஒடிசா தகவல்கள் அருமை. அங்கு பீச்சில் கடல் உள் வாங்கி மெதுவாக மீண்டும் ஓடி வரும் அழகும் நடக்கும்.....5 மைல்கள் வரை கடல் உள்வாங்கி ஓடி வரும்.....அடிக்கடி நிகவும் ஒரு நிகழ்வு....

    அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்! புதிய தளங்கள் பல அறிகின்றோம்....

    ReplyDelete
    Replies
    1. நன்றி துளசிதரன் அவர்களே.

      Delete

தமிழ் மணத்தில் - தற்பொழுது