07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Sunday, January 18, 2015

செல்விருந்தோம்பி வரு விருந்து காத்திருத்தல்

அன்பின் சக பதிவர்களெ ! 

இன்றுடன் முடியும் வாரத்திற்கு (18.01.2015 ) ஆசிரியப் பொறுப்பேற்று பதிவுகள் இட்ட சக  பதிவர் கவிப்ரியன்    தான் ஏற்ற பொறுப்பினை சரி வர முழு மனதுடன் நிறைவேற்றி - நம்மிடமிருந்து விடை பெறுகிறார்.

இவர் இட்ட பதிவுகள் : 007
அறிமுகப் படுத்திய பதிவர்கள் : 036
அறிமுகப் படுத்திய பதிவுகள் : 055
பெற்ற மறுமொழிகள் : 124
பெற்ற தமிழ் மண வாக்குகள் : 045
வந்து பார்வையிட்ட சக பதிவர்கள்  : 1239

நாளை முதல் துவங்கும் வாரத்திற்கு   ஆசிரியப் பொறுப்பினை ஏற்க அன்புடனும் ஆர்வத்துடனும்  சகோதரி மனோ சாமிநாதன்  இணக்கம் தெரிவித்துள்ளார்.  

இவருக்குச் சின்னஞ்சிறு வயதிலிருந்தே கூடப்பிறந்தவைகள் இசையும் ஓவியமும் வாசிப்பும்! இளம் வயதில் எழுதும் ஆர்வத்தை அப்போதைய ஆனந்த விகடன் ஆசிரியர் திரு.பரணீதரனும் சாவி ஆசிரியர் 'சாவி'யும் ஊக்குவித்ததால் சில சிறுகதைகளும் ஓவியங்களும் இவரால்  படைக்க முடிந்தது. அதன் பிறகு கிட்டத்தட்ட நாற்பது வருடங்கள் பாலைவன நாட்டில் வாழ்க்கை தொடர்கின்றது.. 10 வருடங்களுக்கு முன் இவரது மகன் மேல்படிப்பிற்காக அமெரிக்கா செல்ல ஆயத்தமான நிலையில் அந்த பிரிவுத்துயரை மறந்து பொழுது போக்கவென்று ஒரு தளத்தில் சமையல் தொடர் ஒன்றைத்தொடங்கித் தந்து சென்றார். 

[http://www.mayyam.com/talk/forumdisplay.php?25-Indian-Food]

கணினி பற்றி அதிகம் தெரியாத நிலையில் ரொம்ப சாதாரணமாய் ஆரம்பித்த அந்தத் தொடருக்குக் கிடைத்த வரவேற்பு இவருக்கு பத்து இலட்சத்திற்கும் மேல் பார்வையாளர்களை ஈட்டித் தந்தது.  பல நூறு சமையல் குறிப்புகளை எழுத உற்சாகம் ஊட்டியது. கிடைத்த அனுபவங்களும் ஆர்வமும் இவருக்கென்று www.manoskitchen.blogspot.com என்ற சமையல் தளமும் உணர்வுகளுக்கும் எழுத்து தாகத்திற்கும் ஒரு வடிகாலாய் ' முத்துச்சிதறல்' என்ற தளமும் துவக்க வைத்தன. பிறந்த நாடு என்ற  புகுந்த நாடும் கற்றுக்கொடுத்த அனுபவங்கள் நிறைய. அவைகளில் சில அவ்வப்போது பதிவுகளாய் உருவாகின்றன.

இச்சிறு அறிமுகம் போதுமென நினைக்கிறேன்.

நண்பர் கவிப்ரியனை வாழ்த்தி வழி அனுப்புவதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன்.

சகோதரி மனோ சாமிநாதனை நாளை - 19.01.2015 முதல் வலைச்சர ஆசிரியப் பொறுப்பினை ஏற்று திறம்பட ஒரு வாரத்திற்கு ( 25.01.2015 வரை ) பல சிறந்த பதிவர்களை அறிமுகப் படுத்துவார் என எதிர் பார்க்கிறேன்.

சகோதரி மனோ சாமிநாதனை வருக வருக என வரவேற்று வலைச்சர ஆசிரியப் பொறுப்பில் அமர்த்துவதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன்.

நல்வாழ்த்துகள் கவிப்ரியன்

நல்வாழ்த்துகள் மனோ சாமிநாதன்

நட்புடன் சீனா

=================================================================================

25 comments:

  1. இவ்வார வலைப்பதிவருக்கு நல்வரவு. தங்களது பதிவுகளைக் காண ஆவலோடு காத்திருக்கிறோம். அவ்வப்போது இவரது பதிவுகளை நான் படித்துள்ளேன்.

    ReplyDelete
    Replies
    1. அன்பு நன்றி உங்களுக்கு! உங்களின் வரவேற்பு சிறப்பான பதிவுகளைக் கொடுக்க வேண்டுமென்ற என் ஆவலை மேலும் உற்சகப்படுத்துகின்றது!

      Delete
  2. சோதனை மறுமொழி

    ReplyDelete
  3. Welcome Mrs. Mano Shamynathan ...
    By
    Devakottai Killergee Abu Dhabi

    ReplyDelete
    Replies
    1. இனிய வரவேற்பிற்கு அன்பு நன்றி கில்லர்ஜி!

      Delete
  4. விடைபெற்றுச் செல்லும் சகோதரர் கவிப்ரியன் அவர்களுக்கு நன்றியும், வலைச்சரம் பொறுப்பேற்க வந்திருக்கும் சகோதரி மனோ.சாமிநாதன் அவர்களுக்கு வாழ்த்துக்களும் தெரிவித்துக் கொள்கிறேன்.
    த.ம.2

    ReplyDelete
    Replies
    1. இனிய வரவேற்பிற்கு அன்பு நன்றி சகோதரர் தமிழ் இளங்கோ!

      Delete
  5. சகோதரி மனோ சாமிநாதன் அவர்களுக்கு நல்வரவு!..

    ReplyDelete
    Replies
    1. வரவேற்பு வாசகங்களுக்கு அன்பார்ந்த நன்றி சகோதரர் துரை.செல்வராஜ்!

      Delete
  6. வாசிக்கும் நேசிப்பை
    வார்த்தெடுத்து
    ஓவியமாய் தீட்டி வரும்
    ஒட்டகத்து தேசத்தின்
    ஒளி நிலவு!
    சகோதரி "மனோ சாமி நாதனே"
    வருக! வருக!
    அருந்தமிழை ஆன்ந்தமாய்
    அள்ளித் தருக! தருக!
    நன்றியுடன்,
    புதுவை வேலு,
    www.KUZHALINNISAI.BLOGSPOT.FR

    ReplyDelete
    Replies
    1. கவிதையில் வரவேற்பு! மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன் புதுவை வேலு!

      Delete
  7. நன்றி கவிப்ரியன் அய்யா அவர்களே!
    வலைச்சரத்தின் வாசத்தை நுகர்கின்ற நுட்பத்தை
    நீவீர் இட்ட பதிவுகளே பறை சாற்றியது.

    நட்புடன்,
    புதுவை வேலு
    www.kuzhalinnisai.blogspot.fr

    ReplyDelete
  8. வரவேற்பிற்கும் வாழ்த்துக்களுக்கும் வாய்ப்பு அளித்தமைக்கும் சகோதரர் சீனா அய்யா அவர்களுக்கு மனங்கனிந்த நன்றி !!

    ஆசிரியப்பணியை வெற்றிகரமாகவும் அழகாகவும் முடித்து விடை பெறும் சகோதரர் கவிப்ரியனுக்கு அன்பு வாழ்த்துக்கள்!!

    ReplyDelete
  9. நாளை முதல் மீண்டும் வலைச்சர ஆசிரியராகப் பொறுப்பேற்க இருக்கும் திருமதி. மனோ சுவாமிநாதன் அவர்களுக்கு என் மனம் நிறைந்த பாராட்டுக்கள் + அன்பான இனிய நல்வாழ்த்துகள்.

    வருக ! வருக !! வருக !!!

    அன்புடன் VGK

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்துக்களுடனும் பாராட்டுக்களுடனும் வரவேற்ற‌மைக்கு சகோதரர் வை.கோபாலகிருஷ்ணன் அவர்களுக்கு அன்பு நன்றி!!

      Delete
  10. சகோதரி மனோ சாமிநாதன் அவர்களை மகிழ்ச்சியுடன் வரவேற்கிறேன்... வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. இனிய வரவேற்பிற்கு அன்பு நன்றி தனபாலன்!

      Delete
  11. தமிழ் மணம் 4
    தற்போது தஞ்சாவூரா ? இல்லை சார்ஜாவா ?

    ReplyDelete
    Replies
    1. இப்போது தஞ்சையில் தான் இருக்கிறேன். மார்ச் முடிய தஞ்சையில் தான்!

      Delete
  12. வாழ்த்துக்கள் சகோதரி.

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்துக்களுக்கு அன்பு நன்றி கவிப்ரியன்!

      Delete
  13. வணக்கம் மனோ அக்கா!

    முத்துச் சிதறிட மொட்டவிழும் வாரமிது!
    கொத்தாகப் பூக்குமெனக் கூறு!

    வலைச்சர வாரம் சிறக்க வாழ்த்துகிறேன் அக்கா!

    ReplyDelete
    Replies
    1. கவிதைப்பூக்களால் மலர்ச்சரம் தொடுத்து வாழ்த்துக்கள் கூறியதற்கு மனங்கனிந்த நன்றி இளமதி!

      Delete
  14. இவ்வார வலைச்சர ஆசிரியராக இரண்டாவது முறையாக பணியேற்கும் திருமதி மனோ சாமிநாதன் அவர்களை வருக என வரவேற்கிறேன்.

    ReplyDelete
  15. இனிய வரவேற்பிற்கு அன்பு நன்றி!

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது