07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Thursday, February 12, 2015

தூ.......தூ.......போ......போ.........!


வலைச்சரம் நான்காம் நாள்



சமையல் சாப்பாடு என்றால் என்ன அவஸ்தை பாருங்கோ. பேசாம சங்கீதம் பாடப் போயிடலாமா அப்படின்னு தோணறது. எல்லாம் அக்கரை பச்சை தான். சங்கீதம்னு நினைச்சாலே எனக்கு எங்க தமிழ் வாத்தியார் கேதாரேஸ்வர சர்மாவும், எங்கள் பக்கத்து வீட்டில் இருந்த சித்ரா தாசரதி தம்பதியும் தான் நினைவிற்கு வருவார்கள்.

முதலில் சர்மா ஸார்: பள்ளிக்கூடத்துல படிக்கறச்சே எங்க பள்ளி வளாகத்துக்குள்ளேயே சாயங்கால வேளைகள்ல காலக்ஷேபம், சங்கீத கச்சேரி நடக்கும். எனக்கு நன்றாக நினைவு இருப்பது டி.எஸ். பாலக்ருஷ்ண சாஸ்த்ரிகளோட தியாகராஜ ராமாயணம்தான். தியாகராஜரோட கீர்த்தனங்களை வைத்து இராமாயணம் சொல்லுவார். அப்போல்லாம் ஹரிகதைஎன்று ஒரு பாணி. நின்றுகொண்டே கதை சொல்லுவார்கள். ஹரிகதை உட்கார்ந்து சொல்லப்படாதோ? ஊஹூம். நின்னுண்டேதான் சொல்லணுமாம். கால்கடுக்க நின்னுண்டே சொல்லுவார். பாடல்கள் எல்லாம் ரொம்ப நன்றாகப் பாடுவார். ஸ்வரராக சுதா ரஸஎன்று கணீரென்று சங்கராபரணம் ஆரம்பித்தால் கூட்டம் பின்-ட்ராப் சைலன்ஸ்.

எங்கள் சர்மா ஸார் சொல்லுவார்: சங்கீத வித்வான்கள் எல்லாரும் பாடும்போது கையை ஆட்டி ஆட்டி இட்லிக்கு அரைப்பார்களாம்; அம்மில குழம்புக்கு அரைப்பார்களாம்; யந்திரத்துல உப்புமாவிற்கு உடைப்பார்களாம். குடுமியை (நான் சொல்வது அறுபதுகளில்) ஆட்டிண்டு ஆட்டிண்டு அவர்கள் பாடுவதே பெரிய காமெடி என்பார். அவர்கள் செய்வது போல செய்தும் காட்டுவார். எங்களுக்கு அவர் செய்வது ரொம்பவும் சிரிப்பாக இருக்கும். ததரின.......என்று இரண்டு கைகளையும் நீட்டிக் கொண்டு ஒரு கையால் உரல்ல அரைப்பார். இன்னொரு கையால் தா.....நா...என்று மாவைத் தள்ளி விடுவார். எங்களுக்கு சிரிப்பு பொங்கும். ஒரு பாடகர் நிரவல் செய்வது போல அவர் பாடிக் கேட்கவேண்டும்.
தூ.....ஊ..........ஊ........தூ..........தூ..!.
தூ......ஊ....ஊ....தூ.......!
போ....ஓ.......போ....போ....!
போ......ஓ.....போ.....!
நா......நா....நா.......!
ஆ........யே......
என்று அவர் பாடப் பாட  நாங்கள் எல்லாம் வயிற்றைப் பிடித்துக் கொண்டு பள்ளிக்கூடமே அதிரச் சிரிப்போம். தூது போனாயேஎன்பதை அந்தப் பாடகர் இப்படி நிரவல் செய்வார் என்பார் சர்மா ஸார்.

இன்றைய சிறப்பு வலைப்பதிவாளர்கள்


நம் எல்லோருக்குமே தெரிந்த ஒரு இணையதளம் தமிழ்மணம் அதன் தோற்றம் வளர்ச்சி பற்றி இங்கே படியுங்கள்.
காசியின் வலைப்பதிவுகள்
தமிழ்மணம் தோற்றம், வளர்ச்சி

*********
கைகள் அள்ளிய நீர் சுந்தர்ஜி பிரகாஷ் அவர்களின் வலைப்பூ. முகநூலில் அதிகம் எழுதும் இவர் இனி தனது இந்த வலைப்பூவிலும் எழுதப் போவதாக அறிவித்திருக்கிறார். மிக நல்ல விஷயம்.

இரண்டு ‘ம்’ களுக்கு நடுவில் என்ன நடக்க முடியும்? படியுங்கள் புரியும்.

எல்லோரையும் தங்களது முதுமையைப் பற்றி நினைக்க வைக்கும்.

********



என் மூச்சும் பேச்சும் என்றென்றும் தமிழமுதே!
என் எழுதுகோல் பீச்சும் எண்ணத்தின் வீச்சுமதுவே!
என்கிறார் கீதமஞ்சரி என்ற வலைத்தளத்தில் எழுதுகிறார் திருமதி கீதா மதிவாணன்
ஆஸ்திரேலியாவின் அதிசயங்கள் கருப்பு அன்னங்கள்
எழுத்தாளர் திரு பெருமாள் முருகனுக்காக எழுதப்பட்ட மலையாளக் கவிதையின் மொழி பெயர்ப்புக் கவிதை இது:
சமீபத்தில் இவரது புத்தகம் ‘என்றாவது ஒருநாள்’ (மொழிபெயர்ப்பு சிறுகதைகள்- ஆஸ்திரேலிய காடுறை மாந்தர்களின் வாழ்க்கைக் கதைகள்) --- மூல ஆசிரியர் ஹென்றி லாசன் (ஆஸ்திரேலியா) அகநாழிகை வெளியீடாக வந்திருக்கிறது.

*******************

அமுதவன் பக்கங்கள் – இவரைத் தெரியாதவர்கள் இணைய உலகில் இல்லை. பல பிரபல பத்திரிக்கைகளிலும் எழுதுபவர். இவரது என்றென்றும் சுஜாதா மிகவும் பிரபலமான புத்தகம்.
சூப்பர் சிங்கர் ஜூனியர் சில சிந்தனைகள்
எட்டு போட்டு நடை பயிலுங்கள் http://amudhavan.blogspot.com/2012/12/blog-post_25.html


**********************

ரங்கன் மன மின்வான் என்னும் வலைத்தளத்தில் எழுதுபவர் ஸ்ரீரங்கம் மோகனரங்கன். இவர் தொடாத விஷயங்களே கிடையாது எனலாம். ரவீந்திரநாத் தாகூரிலிருந்து Ayan Rand வரை எல்லோருடைய படைப்புகளையும் படித்து தானும் ரசித்து நம்மையும் ரசிக்க வைப்பவர்.
சிறுகதை என்றால் என்ன என்று சொல்லுகிறார். கதை சிறுத்து

யாரு ஸார் இவரு? விவேகானந்தரை ஒரு ஆட்டோ ஓட்டுனருக்கு இவர் என்ன எளிமையாக அறிமுகம் செய்து வைக்கிறார், படியுங்கள்.
உண்மையாக இருக்குமோ? சிந்திக்க வைக்கும் முல்லா கதை.

*************

‘சும்மா’ என்ற வலைத்தளத்தில் எழுதும் தேனம்மை. சாட்டர்டே போஸ்ட் – தேனம்மை லக்ஷ்மணின் பதிவில் பல சாதனையாலர்களைத் தெரிந்து கொள்ளலாம். இதோ திருமதி பத்மா மணி பற்றிய பதிவு.
நமது பதிவுலக சகலகலாவல்லி திருமதி கீதா சாம்பசிவமும் இந்த சாட்டர்டே போஸ்டில் எழுதியிருக்கிறார். இவரது பதிவு இதோ

***********


கோவைக்கவி திருமதி வேதா இலங்காதிலகம் நவீன பார்த்தசாரதி(யாரைச் சொல்லுகிறார்?) யுடன் சென்றது எங்கே என்று தெரிந்துகொள்ள படியுங்கள் இதை  
வேதாவின் ஆத்திச்சூடி
பேரன் வெற்றிக்காக இவர் பாடும் சிறுவர் பாடல்கள் 


*************


அந்தமான் தமிழ் நெஞ்சம் என்ற பெயரில் வலைத்தளம் வைத்திருக்கும் திரு கிருஷ்ணமூர்த்தி.
அப்பாவை திட்டிபுட்டு அப்புறம் சமாதானம் ஆவது எல்லாம் அந்தக் காலத்திலிருந்தே நடக்கும் சேதி போலெ.. சாமான்யன்கள், நாமெல்லாம் விதிவிலக்கா என்ன? என்ன சொல்ல வருகிறார் என்று மேலே படியுங்கள்.

******************

சொல்லுகிறேன் என்ற வலைப்பதிவில் காமாக்ஷிமா எழுதும்
அன்னையர் தினப்பதிவு  அவரது அன்னையின் நினைவுகளை நமக்குக் கண்முன் கொண்டுவந்து நிறுத்துகிறது. அப்பா இறைவன் திருவடி அடைந்தபின் அந்தக் குடும்பத்தை இவரது அம்மா தனியாக நிர்வகித்ததையும், பேரன் பேத்திகளை வளர்த்துக் கொடுத்ததையும் நெகிழ்வாகப் பகிர்ந்து கொள்ளுகிறார்.

**********************

இல்லத்தரசியின் பார்வையில் அறிவியல் திருமதி மகாலக்ஷ்மி எழுதும் வலைத்தளம்.
நாம் தினசரி பயன்படுத்தும் இண்டக்ஷன் ஸ்டவ், மைக்ரோவேவ் அடுப்பு முதலியன பற்றியும், குறட்டை, வாய்த்துர்நாற்றம் என்று பல விஷயங்களைப் பற்றி அழகான தமிழில் விளக்குகிறார்.
அடுப்படியில் இருக்கும் பிசாசு என்று யாரைச் சொல்லுகிறார் என்று படித்துப் பாருங்கள்.

*****************


என்ற பெயரில் வலைத்தளம் வைத்திருக்கும் ஆமருவி திரு தேவநாதன்
இவர் எழுதும் பல பதிவுகள் நம்மை உருக வைக்கின்றன. சிந்திக்க வைக்கின்றன.

**************

கடைசிபெஞ்ச் என்ற வலைத்தளத்தில் பாண்டியன் திரைப்பட அனுபவம், 
(நிறைய) புத்தக விமரிசனம் என்று சிறப்பாக எழுதி வருகிறார். ஜெமோ
வின் விசிறி. பெயர் தான் கடைசி பெஞ்ச். பதிவுகள் தரத்தில் முதல் ராங்க்!

 ராஜீவ்காந்திகொலைவழக்கு - புத்தக விமரிசனம் 

**********************
Musings of a small town boy என்ற வலைத்தளத்தில் ஆங்கிலம் தமிழ் இரண்டு மொழிகளிலும் எழுதும் ராகவன்,  ஆன்மீகப் பதிவுகளும் எழுதுகிறார்.

ராசிபலன் இது குட்டிகதை அல்ல என்கிறார்.
புதிய பறவை சினிமாவிற்கும், கணிதத்திற்கும் சம்மந்தம் உண்டா? இந்தக் கதையைப் படித்துத் தெரிந்து கொள்ளுங்கள்!

நாளை சந்திக்கலாம்!


                                                            

49 comments:

  1. பழைய நினைவுகளை நினைவுகூர்ந்தமையறிந்து மகிழ்ச்சி. புதிய பதிவர்களுக்கு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. வாங்க டாக்டர் ஐயா!
      வருகைக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி!

      Delete
  2. தமிழ்மணத்தைப் பற்றி ஆளாளுக்கு பதிவு எழுதிக் கொண்டிருக்கிறோம் ஆனால் அதன் ரிஷிமூலம் அறிந்தோமில்லை. பலரையும் அறிமுகப் படுத்தும் தமிழமண வரலாற்றை இப்போதுள்ளவர்களுக்கு அறிமுகப்படுத்தியது நீங்கள் தான் ரஞ்சனி அம்மா.தமிழ்மணம் பற்றி பலமுறை தேடி இருக்கிறேன். ஆனால் காசிராஜன் அவர்களின் வலைப் பக்கம் என் கண்ணில் படவில்லை . அந்தத் தொடரை படித்துமுடித்து விட்டேன். நன்றி

    ReplyDelete
    Replies
    1. வாங்க முரளி!
      தமிழ்மண வரலாற்றை எனக்கு அறிமுகப்படுத்தியது திரு ஜோதிஜி தான். உங்கள் நன்றி அவருக்கு.
      வருகைக்கும், கருத்துரைக்கும் நன்றி!

      Delete
  3. http://thiruvarangan.blogspot.com/ https://andamantamilnenjan.wordpress.com/ http://amaruvi.com/

    மூன்று தளங்கள் புதியவை... நன்றி அம்மா...

    அனைவருக்கும் வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. வாங்க தனபாலன்!
      உங்களுக்கு புதிய தளங்களை அறிமுகப்படுத்தியதற்கு நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். வருகைக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி!

      Delete
  4. கச்சேரி களை கட்டியது
    இன்றைய பதிவர்கள் அனைவருக்கும் எமது வாழ்த்துக்கள்...
    கில்லர்ஜி

    ReplyDelete
    Replies
    1. வாங்க கில்லர்ஜி!
      வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி!

      Delete
  5. பல தளங்கள் எனக்குப்புதியவை மேடம். இன்றைய அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. வாங்க ஆறுமுகம் அய்யாசாமி!
      மெதுவாகப் படித்துப் பாருங்கள்.
      வருகைக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி!

      Delete
  6. தூ தூ போ போ .. அருமை ரஞ்சனிம்மா. தமிழ் மணம் பற்றி அறிந்தேன். கீதா மற்றும் வலைப்பதிவர்களுக்கு வாழ்த்துகள். :) என் வலைத்தளத்தில் சாட்டர்டே போஸ்டைக் குறிப்பிட்டதற்கு நன்றி. :)

    ReplyDelete
    Replies
    1. வாங்க தேனம்மை!
      ஒரு புதிய முயற்சி உங்கள் சாட்டர்டே போஸ்ட். பலரையும், பல விஷயங்களையும் அறிய முடிகிறதே. அதனால் அதைக் குறிப்பிட்டேன்.
      வருகைக்கும், வாழ்த்துகளுக்கும் நன்றி!

      Delete
  7. இந்தச் சிறியோனையும் குறிப்பிட்ட உங்கள் மேன்மைக்கு நன்றி ரஞ்சனியம்மா. சுந்தர்ஜி ப்ரகாஷ் தான். சுந்தர் ஜி. ப்ரகாஷ் இல்லியே! :-)

    ReplyDelete
    Replies
    1. வாங்க சுந்தர்ஜி.
      தவறுக்கு வருந்துகிறேன். மன்னிக்கவும். சரி செய்துவிடுகிறேன். வருகைக்கும், நன்றி தெரிவித்ததற்கும் நன்றி!

      Delete
  8. ’கைகள் அள்ளிய நீர்’, ’கீதமஞ்சரி’, ’சும்மா’ மற்றும் ’சொல்லுகிறேன்’ ஆகிய வலைத்தளங்களைப் பற்றி சிறப்பித்துச் சொல்லியுள்ளது எனக்கு மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. அனைவருக்கும் + தங்களுக்கும் என் மனம் நிறைந்த பாராட்டுக்கள் + நல்வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ கோபு ஸார்!
      வருகைக்கும், பாராட்டுக்களுக்கும், நல்வாழ்த்துக்களுக்கும் நன்றி!

      Delete
  9. ரஞ்ஜனி தூதூ போ நா ஆ யே படித்து மனதில் சிரித்து மாளவில்லை. அன்னையர் தினப்பதிவு பற்றி சிறப்பித்தது
    எல்லா அன்னையர்களுக்குமானது. நன்றி.
    எவ்வளவு பதிவுகளை அரிந்து,தெரிந்து வைத்து சிறப்பிக்கிராய். எல்லோருக்கும் என் அன்பான உபசரிப்பு.
    வாழ்த்துகளுடன். எல்லாப் பதிவுகளையும் பார்க்கிறேன்.
    அன்புடன்

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ காமாக்ஷிமா!
      வருகைக்கும், படித்து சிரித்து மகிழ்ந்ததற்கும் நன்றி!

      Delete
  10. சங்கீத வித்வான்கள் இட்லி மாவு அரைப்பது, குழம்புக்கு அரைப்பது தூது போனாயே என்ற பாட்டை தூ தூ ...போ போ எனப் பாடியது எல்லாமே நல்ல நகைச்சுவை. அறிமுகப்படுத்தியிருக்கும் பதிவுகள் சில மட்டுமே தெரிந்தவை. மற்றவற்றை இனி மேல் தான் படிக்க வேண்டும். அறிமுகப் பதிவர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. வாங்க கலையரசி!
      வருகைக்கும், ரசித்துப் படித்து கருத்துரை போட்டதற்கும் நன்றி!

      Delete
  11. கச்சேரி களை கட்டுதா? பாலக்ருஷ்ண சாஸ்த்ரிகள்தான் இயக்குனர் மௌலியின் அப்பா.

    சரத்தில் தொடுத்துள்ள பதிவுலக நண்பர்களில் அறிந்தவர்களும் உண்டு. அறியாதவர்களும் உண்டு!

    ReplyDelete
    Replies
    1. வாங்க ஸ்ரீராம்!
      பாலக்ருஷ்ண சாஸ்த்ரிகள் ரொம்ப நன்றாகப் பாடுவார். அப்பொழுதே மௌலி நாடகம் போட்டுக்கொண்டிருந்தார்.
      ரொம்பவும் பிரயாசையுடன் தெரிந்த பதிவர்களுடன் புதுப்புது பதிவர்களாகப் போட்டுக்கொண்டிருக்கிறேனாக்கும்!

      வருகைக்கும், கருத்துரைக்கும் நன்றி!

      Delete
  12. தூது போனாயே என்ற ஒற்றை வார்த்தைக்கு பாகவதர் எப்படி அபிநயம் பிடித்துப் பாடுவார் என்பதை நீங்கள் விவரித்திருக்கும் முறை அழகு. என்னுடைய நண்பர் ஒருவர் எம்.டி.ராமனாதன் எப்படி கச்சேரி செய்வார் என்பதை அபிநயத்துடன் காண்பிப்பார். படு சுவாரஸ்யமாக இருக்கும்.
    என்னையும் உங்கள் பட்டியலில் சேர்த்திருப்பதற்கும், சிறப்பித்துச் சொல்லியிருப்பதற்கும் என்னுடைய மனமார்ந்த நன்றி.

    ReplyDelete
    Replies
    1. வாங்க அமுதவன் ஸார்!
      உங்களைப் பற்றியே ஒரு வாரம் முழுவதும் எழுதலாமே. என்னால் முடிந்தது இரண்டு பதிவுகளை மட்டும் போட்டிருக்கிறேன்.
      வருகைக்கும், கருத்துரைக்கும் நன்றி ஸார்!

      Delete
  13. அருமையான வலைப்பக்கங்களை அறிமுகம் செய்து வைத்தமைக்கு நன்றி! தொடரட்டும் உங்கள் நற்பணி! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. வாங்க சுரேஷ்!
      வருகைக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி!

      Delete
  14. இன்றைக்கு இணையத்தில் எழுதிக்கொண்டிருப்பவர்களில் திரு அமுதவன் போன்று நல்ல தமிழில் பாசாங்கு இல்லாமல் எழுதக்கூடியவர்கள் அதிகம் கிடையாது. வீண் குறைகூறல், அலட்டல், புனைவாக சில பொய்களை முன்னிறுத்தும் பாணி இல்லாத எழுத்து அவருடையது. இணையத்தில் என்னைக் கவர்ந்த வெகு சிலரின் எழுத்துக்களில் திரு அமுதவனின் எழுத்துக்களும் அடக்கம். அந்த விஷயத்தில் அவரை நீங்கள் அறிமுகப்படுத்தியதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன்.

    ReplyDelete
    Replies
    1. வாங்க காரிகன் ஸார்!
      நீங்கள் சொல்வது நூற்றுக்கு நூறு உண்மை. நிறைகுடம் அவர்.
      வருகைக்கும், கருத்துரைக்கும் நன்றி!

      Delete
  15. வணக்கம்
    அம்மா

    அறிமுகங்கள் அனைவருக்கு வாழ்த்துக்கள்... சிறப்பாக தொகுத்து வழங்கிய தங்களுக்கு பாராட்டுக்கள் அம்மா.
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. வாங்க ரூபன்!
      வருகைக்கும், பாராட்டுக்களுக்கும் நன்றி!

      Delete
  16. அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. வாங்க பரிவை சே. குமார்!
      வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி!

      Delete
  17. "தூது போனாயே" __ நினைத்து நினைத்து சிரிப்புதான். படித்த எங்களுக்கே இப்படி என்றால் நேரில் பார்த்து, கேட்ட நீங்களெல்லாம் எப்படி மகிழ்ந்திருப்பீர்கள் !

    இன்றைய அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. வாங்க சித்ரா!
      இப்போது நினைத்தாலும் எனக்கு சிரிப்பு தாங்க முடிவதில்லை.
      வருகைக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி!

      Delete
  18. மலரும் நினைவுகள் மிக அருமை. கோவையில் ராமர் கோவிலில் பாககிருஷ்ண சாஸ்திரி அவர்களின் காலக்ஷேபம் கேட்டு இருக்கிறேன்.

    வலைச்சரத்தில் இடம்பெற்ற அனைத்து பதிவர்களுக்கும் வாழ்த்துக்கள் அனைவரும் மிக சிறந்த பதிவர்கள்.
    உங்கள் தேடல் தொகுப்பு மிக அருமை, வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. திரு. பாலகிருஷ்ண சாஸ்த்ரிகள் அவர்கள் முதல் பின்னூட்டத்தில் எழுத்து பிழை ஏற்பட்டு விட்டது.

      Delete
    2. வாங்க கோமதி!
      அவரது பாட்டிற்காகவே கூட்டம் வரும்.
      வருகைக்கும், பாராட்டிற்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி!

      Delete
  19. //நமது பதிவுலக சகலகலாவல்லி திருமதி கீதா சாம்பசிவமும் இந்த சாட்டர்டே போஸ்டில் எழுதியிருக்கிறார். இவரது பதிவு இதோ//

    என்னையும் குறிப்பிட்டிருக்கிறீர்கள். மிக்க நன்றி. இன்றைய அறிமுகங்களில் கீதமஞ்சரியையும், தேனம்மையையும் தவிர மற்றவர்கள் பதிவுகளை அதிகம் படித்ததில்லை. சுந்தர்ஜி பிரகாஷ் இப்போதெல்லாம் எழுதுவதில்லை என்று நினைக்கிறேன். அவர் பதிவில் கருத்துச் சொல்லுவதில் கொஞ்சம் சிரமம் இருந்ததால் படித்தாலும் கருத்துச் சொல்ல முடிந்ததில்லை.:))))

    ReplyDelete
  20. அது சரி, பாலகிருஷ்ண சாஸ்திரிகள் இங்கே எங்கே வந்தார்? :)))) புரியலையே?

    ReplyDelete
    Replies
    1. வாங்க கீதா!
      எங்கள் பள்ளி வளாகத்திலேயே அவரது காலட்சேபம் நடக்கும். அதையும் எங்கள் சர்மா ஸார் கிண்டல் அடிப்பார். அதைத்தான் சொல்ல வந்தேன்.
      சுந்தர்ஜி இனி அவரது வலைத்தளத்திலும் எழுதப் போவதாக முகநூலில் சொல்லியிருக்கிறார்.
      வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி!

      Delete
  21. சர்மா சாரின் நிரவல்.... படிக்கும்போதே நானும் சிரித்துவிட்டேன்.... ஆஹா அற்புதம்.

    இன்றைய அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. வாங்க வெங்கட்!
      இன்னும் கூட எங்கள் வீட்டில் அவரது நிரவலை நான் சொல்லிக் காட்டி சிரிப்பது உண்டு. வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி!

      Delete
  22. ஆஹா... பதிவுலகின் பெரும் ஆளுமைகளோடு நானும் இங்கு அறிமுகப்படுத்தப்பட்டிருப்பதில் அளவிலா மகிழ்ச்சி. மிக்க நன்றி ரஞ்சனிம்மா. பல பதிவர்கள் நான் தொடர்பவர்களே.. அவர்களுக்கும் என் இனிய வாழ்த்துகள். சங்கீத விமர்சனம் வெகு சுவாரசியம்.

    ReplyDelete
    Replies
    1. வாங்க கீத மஞ்சரி!
      வருகைக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி!

      Delete
  23. அனைத்து அறிமுகங்களும் அருமை அக்கா .

    ReplyDelete
    Replies
    1. வாங்க மெக்னேஷ் திருமுருகன்!
      வருகைக்கும், கருத்துரைக்கும் நன்றி!

      Delete
  24. ஒரு சிலர் தவிர ஏனையோ பலர் புதியவர்கள். மிக்க நன்றி சகோதரி! மிக அழகானா வலைத்தளங்களை அறிமுகம் செய்ததற்கு!

    பாடகர்கள் ஜாங்கிரி கூட பிழிவார்கள். வடை தட்டுவார்கள்....ஹஹஹஹாஹ்.... ஆனால் அதை விட அவர்கள் பாட்டுதானே முக்கியம் இல்லையா...அதனால் இந்த சேஷ்டைகள் கொனஷ்டைகள் எல்லாம் பின்னே போய்விடும்....மிக்க நன்றி!

    ReplyDelete
  25. This comment has been removed by the author.

    ReplyDelete
  26. அனைவருக்கும் வாழ்த்துக்கள்!

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது